​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 25 December 2014

சித்தன் அருள் - 205


​நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புகிறோம்.  எங்கள் திருமணம் பிரச்சினை இல்லாமல் நடக்குமா? என்று ஒரு இளம் வயது பெண்ணும், ஒரு வாலிபனும் என்னிடம் வந்து கேட்டனர் 

படித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள் போல் இருப்பதால் தன்னம்பிக்கை, தைரியம் இரண்டும் அவர்களிடம் இருந்தது.

"இருவரது பெற்றோர்களும் இதற்க்கு ஒத்துழைத்தால் பிரச்சினையே இல்லையே?" என்று மேலோட்டமாக எண்ணினேன்.

"பிரச்சினையே இங்குதான் ஆரம்பம்.  என் பெற்றோர்கள் நீண்ட நாட்களாக தனித்தனியாக இருக்கின்றனர். இவளுக்கு தந்தை இல்லை.  எனவே யாரும் முன் வந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க முன் வரவில்லை" என்றான் அந்த வாலிபன்.

"சவுகரியமாக போயிற்று!  உங்களுக்கு வயது இருக்கிறது. தொழில் இருக்கிறது.  பெற்றோரிடம் சொல்லி விட்டு பதிவு திருமணம் செய்து கொள்ளலாமே" என்றேன்.

"முடியாது சார்.  எதற்கும் அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்களேன்" என்றான் அந்தப் பையன்.

நாடியைப் பிரித்தேன்.

"முன் ஜென்ம தொடர்பு  இவர்களது திருமணத்தில் தடையிருக்காது.  ஆசைப்படுவதில் தவறில்லை.  ஜாதி, மதமும் இதில் குறுக்கீடு இல்லை.  ஆனால், எவ்வளவு காலம் தள்ளிப்போட வேண்டுமோ அவ்வளவு காலம் தள்ளிப் போடுங்கள்.  அவசரப்பட்டு முடிவெடுப்பதில் பயனில்லை.  மறு பரிசீலனை செய்து மிகவும் நல்லது" என்று அகத்தியர் மேலோட்டமாமச் சொல்லி விட்டார்.

இந்த வார்த்தைகள் அவர்கள் இருவருக்கும் மன வருத்தத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

"எங்கள் திருமணத்தை எத்தனை நாளைக்குத் தள்ளிப் போடுவது? இதுபற்றி அகத்தியர் சொல்லவே இல்லையா?" என்றாள் அந்தப் பெண்.

நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

"எப்போதைக்கு எப்போது ஒரு பொடியை வைத்து அகத்தியர் இப்படி சொல்லிவிட்டாரோ அப்போது ஏதோ விஷயம் இருக்கிறது என்பது பொருள்.  எனவே ஓராண்டு காலம் தள்ளிப் போடுங்களேன்".

இதற்குள் அந்த வாலிபன் குறுக்கிட்டு, "முடியாது சார்! சீக்கிரமே திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். இதை மாற்ற முடியாது.  ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதற்குரிய பரிகாரங்களைச் சொல்லட்டும்.​, ​அதை நாங்கள் செய்கிறோம்" என்றான் சற்று வேகமாக.

அவன் கேட்டபடி மறுபடியும் அகத்தியரை வேண்டி நாடியைப் படித்தேன்.

"திருமணத்திற்குப் பின்பு என்ன நடக்க வேண்டுமோ, அது இவர்களுக்குள் பல முறை நடந்து விட்டது. இனி ஊரறிய கணவன் மனைவியாக வாழத்தான் விரும்புகிறார்கள். அகத்தியன் பொறுத்திரு என்று சொன்னதற்கு எத்தனையோ காரணம் உண்டு.  பிறக்கின்ற வாரிசு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  அதை உத்தேசித்துத் தான் சொன்னேன்.​ ​இதற்கு பரிகாரம் ஏதும் இல்லை.  பிறகு இவர்களது விருப்பம்" என்று சட்டென்று சொல்லி முடித்துக்கொண்டார்.

அந்த வாலிபனுக்கு பொதுவாக அகத்தியர் நாடி, ஜோதிடம் எதிலும் நம்பிக்கை இல்லை என்பதை நாடி படிக்கும் பொழுதே புரிந்து கொண்டேன்.

"பரிகாரம் எதுவும் இல்லை.  வாரிசு பாக்கியம் மிக நன்றாக இருக்க பொறுத்திரு" என்று அகத்தியர் சொன்னதால் வந்திருந்த அந்த இளம் பெண்ணும் முகத்தை சுளித்துக் கொண்டாள்.

பிறகு வேண்டா வெறுப்போடு கிளம்பிச் சென்றார்கள்.

ஒன்றரை ஆண்டுகள் கழிந்தது.

ஒருநாள் அந்தப் பையனும், அந்தப் பெண்ணும் முகத்தைத் தொங்கப் போட்டு கொண்டு என்னிடம் வந்தனர்.  அவர்கள் திருமணம் செய்து கொண்டதற்கான அடையாளம்​ ​தெரிந்தது.

கலங்கி இருந்த அவர்களது முகத்தைப் பார்த்தவுடன் ஏதோ மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

"சார்! எங்களை மன்னித்து விடுங்கள்.  அகத்தியர் பொறுத்திருக்கச் சொன்னார்.  நாங்கள் அதையும் மீறி மணந்து கொண்டோம்.  அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறோம்" என்றார்கள்.

நான் மௌனமாக இருந்தேன்.

"எனக்கு குழந்தை என்றால் அவ்வளவு உயிர்.  எங்கள் வம்சத்தைச் சேர்ந்த பலருக்கு வாரிசே இல்லை.  ​ஆண் வாரிசு என்பது மிகவும் அபூர்வம்.  ​இதை எல்லாம் நினைத்து ஆசைப்பட்டுத்தான் அவசரப்பட்டு இவளைத் திருமணம் செய்து கொண்டேன்.  எங்களுக்கு குழந்தையும் பிறந்தது.  ஆனால், குழந்தை பிறந்தவுடன் என் தந்தையும் இறந்து போனார்.  இவள் தாயும் இறந்து போனாள்."

"என்ன ஆயிற்று?" நான் கேட்டேன்.

"ஆண் குழந்தையாக பிறந்தது.  சந்தோஷப்பட்டேன்.  ஆனால் அந்தக் குழந்தையின் தலை பூசணிக்காய் அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கிறது.  அதன் உடல் சோம்பி குறுகி எலும்பும் தோலுமாக காணப்படுகிறது. பார்க்க மிகவும் விகாரமாக இருப்பதால், யார் அந்தக் குழந்தையைக் கண்டாலும் வெறுத்துப் போகிறார்கள். எங்களுக்கும் குழந்தை பிறந்த சந்தோஷமே அடியோடு போயிற்று?" என்று அழுதனர்.

"இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?"

"அகத்தியர் வார்த்தையை மதிக்காததால் எங்களுக்கு இந்த சோதனை ஏற்பட்டது.  பார்க்க மிகவும் விகாரமாக இருக்கும் அந்தக் குழந்தையைக் கண்டு தினம் தினம் புண்பட்டுப் போகிறோம்.  ஒரு சமயத்தில் அந்தக் குழந்தையைக் கருணைக்கொலை செய்து விடலாமா? என்று கூடத் தோன்றுகிறது" என்று ​தன் ஆற்றாமையை சொல்லித் தீர்த்தான் அந்தப் பையன்.

"ஆரோக்கியமான குழந்தை வேண்டுமென்றால் பொறுமையாக இரு என்று அன்றைக்கே அகத்தியர் சொன்னார்.  நாங்கள் தான் அவசப்பட்டு விட்டோம். எங்களை மன்னித்து அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் இயல்பான நிலைக்கு வருமா?  இலையா? அல்லது எங்கள் தலை​ ​எழுத்தே இதுதானா? என்று அறிய விரும்புகிறோம்" என்று கண்ணீர் மல்க அவனது மனைவி கேட்டாள்.

நான் நாடியை புரட்டினேன்.

"எதையும் அகத்தியன் சூசகமாகவே சொல்வேன்.  இதை புரிந்து கொண்டு நடந்தால் நிம்மதியாக இருக்கலாம். உங்கள் தலை விதியை மாற்ற அகத்தியனுக்கு என்ன அக்கறை?  தேவையே இல்லை!  எப்போது அகத்தியனை நாடி வந்தீர்களோ, ​அப்போதே அவர்களுக்கு ஏதாவது நல்ல வழியைக் ​காட்ட வேண்டும் என்று தான் அகத்தியன் விரும்புவான்.

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அகத்தியன் பரிந்துரை செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல.  எது நடக்கிறதோ நடக்கட்டும்.  இதில் நான் என்ன சொல்ல வேண்டி கிடக்கிறது? என்று நினைப்பவர்கள் எதற்காக என்னை நாடி வரவேண்டும்?  வர வேண்டாமே! இந்த வகையை சேர்ந்தவன் தான் நீ.

அது மட்டுமல்ல, ஒரு உண்மையை இப்பொழுது சொல்கிறேன்.  உன் தந்தைக்கும், இவளது தாயாருக்கும் தொடர்பு ​ ​உள்ளது.  தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் இருவரும் அண்ணன், தங்கையாக மாறி​ ​விட்டீர்கள்.  இந்த காரணத்தால் தான் உன் தந்தை பெரும்பாலும் சேர்ந்து வாழவில்லை என்று விஷயம் உனக்குத் தெரியாது.

உன் தந்தை இளம் வயதிலேயே பல்வேறு பெண்களோடு தொடர்பு கொண்டு ​கெட்டுப் போனவன்.  திருமண ஆசை காட்டி பல பெண்களுடைய வாழ்க்கையைச் சூறை ஆடியிருக்கிறான்.அதில் பாதிக்கப்பட்டவள்தான் இவளது தாயும்.  இப்போது உன் தாயும் இல்லை.  இவனோட தந்தையும் உயிரோடு இல்லை என்பதால் தான் இந்த விஷயத்தை அகத்தியன் சொல்கிறேன்" என்று சிறிது இடைவெளிவிட்டார்.

"இதை அகத்தியர் முன்பே சொல்லியிருந்தால், நாங்கள் திருமணமே செய்து கொண்டிருக்க மாட்டோமே. இப்படிப்பட்ட விகாரமான குழந்தையும் பிறந்திருக்காதே" என்ற அதிர்ச்சியால் புலம்பினாள் அந்த பெண்.

"ஓராண்டு கழிந்திருந்தால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காதோ?" என்றான் அவன்.

"நடந்தது நடந்து விட்டது.  விரும்பி மணந்து கொண்டீர்கள்.  ஓர் ​ஆண் குழந்தையும் வாரிசாகப் பெற்று விட்டீர்கள்.  செய்த கர்மாவை சில காலம் அனுபவிக்கத்தான் வேண்டும்.  இது அகத்தியரின் சாபம் அல்ல.  விதி.  இதை மாற்றத்தான் அன்றே சூசகமாகச் சொன்னேன்.  யாரும் புரிந்து கொள்ளவில்லை" என்றவர் ​ ​"இன்றைக்கு கூட பலருக்கு அகத்தியர் சொன்னபடி பல நிகழ்வுகள் நடப்பதில்லை என்ற குறையுண்டு.  என்னை மாத்திரமல்ல, என் மைந்தனான இவனையும் குறை கூறித் திட்டவும் செய்கிறார்கள். அதையும் யாம் அறிவோம்.  இந்த நிலை மாறுவதற்கு சில காலம் ஆகும்" என்று ஏதேதோ சொன்னவர்,

"கவலைப்படாதீர்கள்.  விகாரமான உங்கள் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க மேல் நாட்டிலிருந்து நவீன மருத்துவர் ஒருவர் வருவார்.  அன்னவர் மூலம் ஒரு கீறல் வைத்தியம் நடக்கும்.  அதற்கு பிறகு தலை வீக்கம் வடியும்.  முழுமையாக ​வடியாவிட்டாலும் விகாரமாக இருக்காது.  குழந்தையும் உயிர் தப்பிக்கும்.  இதற்கு குறைந்த பட்சம் ஐந்து அல்லது பத்தாண்டுகள் ஆகும்.  அதுவரை பொறுத்திருக்க முடியுமெனில் பொருந்திருக்க" என்று அருள்வாக்கு தந்தார்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் -

அந்தப் பையனை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவனிடம் எந்த வித விகாரமும் இல்லை. புத்திசாலித்தனம், உடல் ஆரோக்கியம் சீராக இருந்தது.  இப்பொழுது அமெரிக்க நாட்டில் கணிப்பொறி துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறான்.

அந்தப் பையனின் பெற்றோர்கள், இப்பொழுது தான் மன நிம்மதியோடு இருக்கிறார்கள்.  அகத்தியரை தினமும் துதிக்கிறார்கள்.

"எங்களது பொறுமையும், நம்பிக்கையும் எங்கள் பையனை ஒரு முழு மனிதனாக மாற்றியிருக்கிறது.  இப்போது எங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கிறது" என்று எல்லோரிடமும் அந்த தம்பதிகள் சொல்கிறார்கள்.

சித்தன் அருள்..................... தொடரும்!

5 comments:

 1. Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!

  ReplyDelete
 2. hi super and helpful messages

  ReplyDelete
 3. hi may i know how to contact u for naadi jothidam. i am interesting to speak with u. My name Raja.B from Chennai. Age 23. My cell number 9042756799/9962727964.

  ReplyDelete
 4. I am suffering a lot in my family life I need to read naadi hothidam from agasthiyar. I already read in kallar in 2013. Pl let me know where this naadi can be read. My mobile is 9677018017

  ReplyDelete
 5. Pls send your address Or Mobile no

  ReplyDelete