​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 11 December 2014

சித்தன் அருள் - 203 - குதம்பை சித்தர்!


மாதக் கணக்கில் தவமிருந்து, யாகங்கள் பல செய்து சித்தத்தன்மை அடைந்தவர்கள் பலருண்டு. ஆனால் முப்பத்திரண்டு தத்துவப் பாடல்களில் மிகப் பெரிய சித்ததன்மை பெற்றவர்களில் முதன்மையாக நிற்கிறவர் குதம்பைச் சித்தர்.

இவரது இயற்பெயர் இதுவரையிலும் யாரும் அறிந்திடாத செய்தி என்றாலும், இவருக்கு இந்தப் பெயர் வரக்காரணமே, அவரது காதில் அணியும் ஒரு ஆபரணம்தான்.

பொதுவாக இந்த ஆபரணத்தை பெண்கள்தான் அணிவர். அந்த ஆபரணத்தின் பெயர்தான் குதம்பை.

பிறந்தவுடன் இவரைப் பார்த்த அனைவரும் பெண்மை கலந்த தெய்வீக அம்சம் இருப்பதை உணர்ந்தனர்.  ஆணாக இருந்தாலும், இவரைப் பெண்ணாக எண்ணிப் பாவித்து, பெண்களுக்குரிய ஆடை, அணிகளை அணிவித்து, அக மகிழ்ந்து போனார்கள்.

யாரெல்லாம் இந்தக் குழந்தையைப் பார்க்கிறார்களோ, மறுநாள் அவர்கள் வீட்டில் குதம்பை ஆபரணம் தானாகக் கிடைக்கும். இது எப்படி வருகிறது, யாரால் கொண்டு தரப்படுகிறது என்று நிறைய ஆராய்ந்து பார்த்தனர். கடைசியில் அவர்கள் கண்டுபிடித்தது, இந்தக் குழந்தைதான் அதற்குக் காரணம் என்று தெரிய வந்தது.

ஒருநாள், இந்தக் குழந்தை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பொழுது, ஒரு மகான் வந்தார்.

"உனக்கு ஞானம் பிடிக்குமா, தானம் பிடிக்குமா?" என்று கேட்டார்.

"எனக்கு ஞானம்தான் பிடிக்கும்" என்றது அக்குழந்தை.

"அப்படி என்றால், இந்த இரண்டையும் கற்றுத் தருகிறேன். என் கூட வருகிறாயா?" என்றார்.

"இதோ, இப்பொழுதே வருகிறேன் சுவாமி! இதைவிட எனகென்ன பாக்கியம் வேண்டும்" என்று சொன்ன அந்தக் குழந்தை அவர் பின்னாலேயே சென்று விட்டது.

குழந்தையைக் காணவில்லை என்றதும், பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு எல்லா இடங்களிலும் தேடினர். கடைசியில் அந்த மகானுக்கு முன்னால் ஒரு சிஷ்யனைப் போல் கைகட்டி, பாடம் கேட்கும் பாவனையில், ஊருக்கு வெளியே அத்திமரத்தடியில் அந்தக் குழந்தை அமர்ந்து இருந்தது.

இதைக் கண்டதும் அந்த பெற்றோரும், ஊர் ஜனங்களும், அந்த மகானை தவறாகப் புரிந்து கொண்டு அடிக்கக் கிளம்பினர். தகாத வார்த்தைகளை பேசினார். 

"பிள்ளை பிடித்து நரபலி இடப்போகும் கயவன் இவன்" என்று நாக்கூசாமல் குற்றம் சாட்டினர்.

அப்பொழுது, ஒரு அசரீரி குரல் கேட்டது.

"யாரும் இந்த மகானை துன்புறுத்தாதீர்கள். வார்த்தைகளால் தகாத வார்த்தைகளைச் சொல்லி, அந்த மெல்லிய மனதை காயப்படுத்தாதீர்கள். இவர்தான் இந்தக் குழந்தையின் கடந்த கால குரு! அவரால் தான் இந்த குழந்தை மோட்ச நிலையை அடைப் போகிறது" என்று சொல்லியது.

சிவபெருமான் முன்பொரு காலத்தில் திருவிளையாடல் செய்து காட்டியதுபோல், இந்தக் குழந்தை "குதம்பை சித்தர்" என்னும் பெயர் பெற்று, பெருவாழ்வு வாழப்போகிறது" என்று சொல்லியது.

முதலில் இந்த அசரீரி வாக்கை நம்பவில்லை, யாரோ வேண்டுமென்றே சொல்லியது போல்தான் எண்ணிக் கொண்டனர். 

அப்பொழுது, அந்தக் குழந்தை சட்டென்று ஒரு பாடல் பாடியது.

"வெண் காயமுண்டு, மிளகுண்டு, சுக்குண்டு,
உண்காயம் எதுக்கடி? குதம்பாய் 
உண்காயம் எதுக்கடி?
கொல்லா விரதம், குளிர் பசி நீக்குதல் 
நல்ல விரதமடி, குதம்பாய் 
நல்ல விரதமடி" 

என்று மிகப்பெரிய தத்துவப் பாடலைப் பாடி, அதற்குரிய அர்த்தங்களை, பாமரரும் நல்லபடியாக புரிந்து கொள்ள வேண்டுமென்று, விளக்கத்தோடு சொன்னவுடன், அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் உட்பட அத்தனை பேர்களும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.

அந்த மகான் சிவபெருமானது அம்சம் என்பதும், அந்தக் குழந்தை சித்தனாக போன ஜென்மத்தில் வாழ்ந்ததும், அது முற்றிலும் முடியாத தன்மையினால், இந்த ஜென்மத்தில் பிறந்திருக்கிறது, என்றும் போகப் போக எல்லோருக்கும் தெரிந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்தக் குழந்தை, குதம்பைச் சித்தராக மாறி, பெரும்பாலான நாட்கள் அந்தக் காட்டில் உள்ள அத்திமரப் பொந்துக்குள் நுழைந்து, கடும்தவம் இருந்தது. தெய்வ அம்சம், கருணை பேச்சு, காருண்ய உள்ளம் கொண்ட குதம்பைச் சித்தர் ஏராளமான அதிசயங்களைச் செய்து, பொதுமக்களின் துயரங்களை வியத்தகு முறையில் தீர்த்து வைத்தவர்.

இன்றைக்கும் கூட இவர் தவம் செய்த அத்திமரப் பொந்திலிருந்து, "ஓம் நமசிவாயா நம" என்ற மந்திரக் குரல், அவ்வப்போது ஒலிப்பதாக சொல்லப்படுகிறது. யாருக்கு அந்த பாக்கியம் கிட்டுகிறதோ, அவர்கள் பாக்கிய சாலிகள், என்கிறார்கள். சுமார் முப்பத்திரண்டு பாடல்கள் மூலம் வாழ்க்கையின் அத்தனை தத்துவங்களையும் பெற்று இந்தப் பிறவியின் பயனை அடைந்துவிடலாம்.

"மாங்காய்ப் பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் 
தேங்காய்ப் பால் எதுக்கடி! குதம்பாய் தேங்காய்ப் பால் எதுக்கடி!

என்ற குதம்பைச் சித்தரின் எளிய பாட்டு, இன்றைக்கு ஏகப்பட்ட பேர்களது வாயில் அடிக்கடி முணுமுணுப்பதை காணலாம். இதைவிட ஒரு எளிமையான தத்துவப் பாடலை வேறு எங்கு காண முடியும்.

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்.................... தொடரும்!

7 comments:

  1. வணக்கம் .
    அந்த அத்தி மரப்பொந்து எங்கே
    உள்ளது ? தயவு செய்து
    விளக்கவும் .
    அன்புடன் s v

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha...

    endrendrum ungal pani sevvanae nadakka iraivanai vaendikolkiren...

    thangalal siththanarulai padikum baakyam petravarkal palar...

    nandrigal kodi..

    ReplyDelete
  3. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  4. om sri lobamuthramba sametha sri agatheesaya namaha

    ReplyDelete
  5. agathiyar arul is very fine job for the people please said for benefit details to give the people thank you

    ReplyDelete
  6. அந்த அத்தி மரப்பொந்து எங்கே
    உள்ளது ? தயவு செய்து
    விளக்கவும்

    ReplyDelete
  7. அந்த அத்தி மரப்பொந்து எங்கே
    உள்ளது ? தயவு செய்து
    விளக்கவும்

    ReplyDelete