​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 5 August 2021

சித்தன் அருள் - 1019 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


கருடாழ்வார் ஸ்ரீமன் நாராயணனிடம், ஒரு மனிதன் இறந்த பிறகு மிகக்கொடியதான பிரேத ஜென்மம் வராமல் ஒழியும் மார்க்கம் எது என வினவினார்.

"மனிதர்கள் இறந்தவுடன் செய்ய வேண்டிய கர்மங்களை பற்றி கூறுகிறேன். கேட்ப்பாயாக. பிரேத ஜென்மத்தை நிவர்த்திக்க விரும்பிய யாவரும், தாம் இறப்பதற்கு முன்பாகவே, தன கையினாலேயே விருஷோர்சர்க்கம் (பசுவும் கன்றும் தானம் அளிப்பது)  செய்தல் வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட யார் இறந்தாலும், அவர் ஆணாயினும், பெண்ணாயினும், அவருக்கு பிரேத ஜென்மம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, கர்மம் செய்பவன் விருஷோர்சர்க்கம்செய்தல் அவசியம். பிரேத ஜென்மம் வராமல் இருக்கும் பொருட்டு, இந்த கர்மத்தை தவிர வேறு கர்மங்கள் செய்வதற்கில்லை. உயிரோடிருக்கும்போதோ, இறந்த பிறகோ, யாருக்காக விருஷோர்சர்க்கம் செய்யப்பட்டதோ, அவனுக்கு பிரேத ஜென்மம் வருவதில்லை. இந்த விருஷோர்சர்க்கம் செய்யாமல் வேறு எந்த வகையான தான தர்மங்களை செய்தாலும், விரதங்களை அனுஷ்டித்தாலும், வேள்விகளை செய்தாலும் பிரேத ஜென்மம் பிடிக்காமல் ஒழியாது!" என்றார் பெருமாள்.

கருடன் பெருமாளை வணங்கி "பகவானே! இந்த விருஷோர்சர்க்கம் இறப்பதற்கு முன்பாயின் எந்த காலத்தில் செய்ய வேண்டும்? இறந்த பிறகாயின், எச்சமயத்தில் செய்ய வேண்டும்? அதனால் ஏற்படும் பயன் என்ன?  தயவு செய்து சொல்லி அருள வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்.

"கருடனே! இறந்தவனை குறித்து, விருஷோர்சர்க்கம் என்பதை செய்யாமல்,  ஸ்ரார்த்தம் முதலிய எதை செய்தாலும் அவற்றால் அவனுக்கு பயன் ஏதும் ஏற்படாது. அவனுக்கு, அவன் மரித்த 11ம் நாளன்று அவனுக்கு விருஷோர்சர்க்கம் செய்யப்படாவில்ல்லையோ அவனுக்கு பிரேத ஜென்மம் நிச்சயம் ஏற்பட்ட தீரும். அது உறுதி. விருஷோர்சர்க்கம் செய்யப்பட்டால், இறந்தவன் பிரேத ஜென்மத்தை அடையாமல், பெரியோர்கள் அடைகின்ற உலகத்தை அடைவான். முக்திதரும் க்ஷேத்ரங்களில் ஏதாவது ஒன்றில் இறந்தவன், எமனால் பீடிக்கப்படாமல், நல்ல உலகத்தை அடைவான். விருஷோர்சர்க்கம் எவனுக்கு செய்யப்பட்டதோ அவனும் அத்தகைய உலகை அடைவான். புத்திரனாவது, மனைவியாவது, பெண் வயிற்று பிள்ளையாவது, பெண்ணாயினும் , விருஷோர்சர்க்கம் செய்யலாம். இறந்தவனுக்கு புத்திரன் இருப்பானாயின், அந்த புத்திரனே, விருஷோர்சர்க்கம், செய்யவேண்டும். வேறு யாரும் அதை செய்யலாகாது" என்றார்.

கருடன் மேலும் அவரை வணங்கி "ஸ்ரீ வாசுதேவா! புத்திரன் முதலிய உரியவர் ஒருவரும் இல்லாதவனும், இல்லாத பெண்ணுமாக ஒருவன் மடிந்தால், அந்த நபருக்குரிய உத்திரகிரியைகளை யார் செய்ய வேண்டும்? இதை பற்றி தெளிவாக விவரிக்க வேண்டும்" என்றார்.

"கருடனே! பிள்ளை இல்லாமல் இறந்தவன், நரகத்தை அடையாமல் நல்லுலகை ஒருபோதும் அடைய மாட்டான். ஆகையால், எத்தகைய அரிய கர்மத்தை செய்தாகிலும், ஆண்மகன் ஒருவனை பெற்றுக் கொள்ளவேண்டும். ஒருவன் தனக்காக நல்வினை எதையுமே செய்து கொள்ளாமல் இறந்தாலும் கூட, அப்படி இறந்தவனுக்கு அவனுடைய புத்திரர்கள், கிருத்யங்களை செய்யாமல் விட்டுவிட்டாலும் அவன் இரவு பகலாக, பசியோடும், தாகத்தோடும், "ஐயோ" என்று கூச்சலிட்டவண்ணம் உலகமெங்கும், நெடும்காலம் வரை அலைந்து, திரிந்து, பிறகு, புழுக்கள், கிருமிகள் முதலியவற்றின் ஜென்மங்களை எடுத்து பிறகு மனித ஜாதியில் கடையோன் வயிற்றில் பிறந்து பிறந்து மரிப்பான். ஆகையால் ஒரு மனிதன் வியாதியால் பீடிக்கப்படுவதற்கு முன்பும், வயோதிகத்தை அடைவதற்கு முன்பும், செயல்கள் ஒடுங்கிப் போவதற்கு முன்பும் தான் நல்லுலகை அடைவதற்கு வேண்டிய ன்சல் வினைகளை செய்யத் தெரிந்தவன், அத்தகைய நற்கர்மங்களை செய்யக் கடவன். அவ்வாறு செய்யாமல், பிறகு செய்துகொள்வோம் என்று ஆலோசிப்பானாயின், அது வீடு தீப்பற்றி எரியும் பொழுது அதை அணைக்க அந்த நேரத்தில் கிணற்றை தோண்டும் முயற்சிக்கு ஒக்கும்." என்று கூறினார்.

சித்தன் அருள்.................தொடரும்!

5 comments:

  1. குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏 குருவே சரணம் 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Lobamudhra samethay Agastheeswararay saranam
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. பசு கன்று தானம் யாருக்கு செய்ய வேண்டும். கோவில்களுக்கு கொடுக்க வேண்டுமா இல்லை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டுமா. அதன் முறைகள் என்ன. விரிவாக சொல்லுங்கள். நன்றி

    ReplyDelete
  5. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete