அகத்தியர் அறிவுரை!
Sunday, 29 August 2021
சித்தன் அருள் - 1029 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!
Thursday, 26 August 2021
சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!
Monday, 23 August 2021
சித்தன் அருள் - 1027 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை - ஆட்சி எங்களுடையதே!
Sunday, 22 August 2021
சித்தன் அருள் - 1026 - அன்புடன் அகத்தியர் - முத்தம்பட்டி அனுமார் ஆலயம்!
Thursday, 19 August 2021
சித்தன் அருள் - 1025 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
Sunday, 15 August 2021
சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு!
நாகபஞ்சமி அன்று வடிவேலன் உரைத்த பொது வாக்கு.
இடம். அங்காளபரமேஸ்வரி அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் தர்மபுரி.
உலகை ஆளும் என் அப்பன் அம்மையை பணிந்துசொல்லுகின்றேன் கந்தனவன்.(கந்தன்)
ஞானப் பிழம்பை என் தந்தை நிச்சயமாய் வழங்குவான் என்பேன்.
பின் என் தாய் அவள் ஆசிர்வாதமும் பரிபூரணமாக இருக்க அப்பனே பின் நல் முறையாக அனைத்து விஷயங்களிலும் ஜெயமாகும் என்பேன்.
இறைவன் என்றெல்லாம் திரிகின்றார்கள் மனிதர்கள் இறைவன் இறைவன் என்றெல்லாம் திரிகின்ற போது அவரவர் செய்த புண்ணிய பாவங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் அவர்களே மனதில் நினைத்து.
அப்பொழுதுதான் நல் முறையாக அப்பனே தவறு செய்துவிட்டேன் என்று திருந்தி விட்டால் நல் முறையாக ஆசிகள் என்னுடைய ஆசிகள் ஆனாலும் பின் பல புண்ணியங்கள் நல் முறைகளாய் செய்யும் பொழுது அவன் தன் கர்மத்தை அவனே விலக்கிக் கொள்கின்றான். என்பேன்.…
நல் முறையாக மாற்றம் உண்டு
தெரியாமல் செய்கின்ற தவறுக்கு எதனை என்று கூற கர்மா கிடையாது எமதர்மன் அதனை எடுத்துக்கொள்வதில்லை. ஆனாலும் தெரிந்தே செய்கின்ற தவறுக்கு நிச்சயம் கர்மாவினை உண்டு. வருகின்றது வினை.
இதனையும் எவ்வாறு என்பதைக்கூட தெரிந்தும் இதற்கும் கூட விமோசனம் உண்டு என்பேன் எதனையும் என்பதைக்கூட எவ்வாறு என்பதையும் கூட இறைவனை வகுத்துக்கொண்டு இறைவனை நினைத்துக் கொண்டால் அக் கர்மவினை பின் பின் சம அளவில் நல் முறையாக இறைவன் எடுத்துக்கொண்டு நல் முறையாகவே இவ்வுலகத்தில் வாழவைப்பான் என்பேன். அதனால் தான் இறை பலங்கள் அனைத்திற்கும் தேவை என்பதைக்கூட நான் நிச்சயமாய் சொல்வேன் என்பேன்.
ஆனாலும் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மனிதனுக்கு மாய வலையே மிஞ்சும் என்பேன். மாய வலையில் சிக்கிக் கொள்வான் எவ்வளவு புத்திகள் இருந்தும்.
ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் நிச்சயமாய் பின் ஐந்து அறிவுகள் அனைத்திற்கும் இருக்கும் என்பதை கூட யான் அறிவேன் ஓர் அறிவை பின் பின் மிகவும் கடுமையாக வைத்திருக்கின்றான் எதனால் பின் என்றால் மனிதன் உண்மை நிலையை அறிந்து புண்ணியங்கள் செய்து நல் முறையாக பிறவிக் கடலை தேற்றும் என்று ஆனாலும் அவ் அறிவை தவறாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் மனிதன் இப்பொழுதும் கூட இனிமேலும் கூட.
இதனைப் பயன்படுத்திக் கொண்டாலே அதன் மூலமே அழிவு ஏற்படும் என்பதை மனிதனுக்குத் தெரிவதில்லை.
நின்ற பொழுதும் இதனையும் ஆறாவது அறிவை நல் முறைகள் ஆகவே பயன் படுத்தி இதனைத்தான் பின் அனைத்தையும் கடந்து வந்தால் பின் அறுபடையினை(கந்தனின் ஆறுபடைவீடு) தரிசித்து விடலாம் என்பது கூட உண்மை என்பேன்.
என்னை காண முடியும் என்பேன் ஆனாலும் மனிதன் எவ்வாறு என்பதும்கூட முட்டாளாகவே வாழுகின்றான்.
நல் முறைகளாக மக்களுக்கு தெளிவுகள் தெளிவுகள் இனி மேலும் பிறக்காவிட்டால் அப்பனே மனிதன் அவனே அவன் தன் போக்கிலே சென்று அழித்து விடுவான் மந்திரங்கள் பல உபதேசங்கள் செய்து செய்து ஆனாலும் மனிதர்கள் எண்ணங்கள் பின் உயர்வாக இல்லாதபோது அவை எல்லாமே வீண் என்பேன்.
நல் முறைகள் ஆகவே விளக்கம் தந்து நான் ஏற்றுவேன் நல் முறைகள் ஆகவே இத்திருத்தலத்தில் (அங்காளபரமேஸ்வரி அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் தர்மபுரி) இதை திருத்தலம் என்றே சொல்லலாம் அவ்வளவு பக்திகள் சக்திகள் இங்கே நிறைந்திருக்கின்றது என்பேன். இதனைத்தான் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்று.
இதனால் அன்புடன் நல் மனதாய் எதனையும் என்பதைகூட அன்பை மட்டும் செலுத்தினால் நாங்கள் வருவோம்.
இவ்வுலகம் நிலையில்லாதது என்பதை கூட மனிதன் தெரிந்து கொள்வதில்லை. ஆனாலும் அதை தெரிந்து விட்டால் நாங்கள் (மனிதர்கள் )கூட நிரந்தரம் இல்லை என்பது தெரிந்து விடும்.
இதனைத் தெரிந்து விட்டால் ஓடோடிச் சென்று இறைவனிடத்தில் சரணடைந்து விடுவான் மனிதன் ஆனால் மனிதன் எண்ணங்களோ பின் நிலையற்று நிலையற்றவையே தேடிச் செல்லுகின்றது ஆனால் அப்படி தேடி தேடி செல்ல அவன் தனக்கு மனக்குழப்பங்கள் மன வருத்தங்கள் வந்துகொண்டே இருக்கும்.
ஒன்றை மட்டும் சொல்கின்றேன் இறைவா அனைத்தும் நீயே என்று பின் அவனிடத்தில் விட்டுவிடு பின் அனைத்தும் நடக்கும் என்பேன்.
அதைவிட்டுவிட்டு நல் முறைகளை அதைச் செய்கிறேன் இது நடக்கும் இதைச் செய்கிறேன் அது நடக்கும் அவை வேண்டும் இவை வேண்டும் என்று சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் கிடைக்காது என்பேன்.
இறைவன் மனிதனுக்கு கஷ்டத்தை தருவதை கூட மனிதனுக்குத் தெரிவதில்லை கஷ்டத்தின் மூலம் அனுபவத்தை பெற வேண்டுமே தவிர பின் மனக்குழப்பங்கள் ஆகிவிடக் கூடாது என்பேன் அப்படி மனக்குழப்பம் ஆகிவிட்டால் அவன் வாழ்க்கை வீணாகிவிடும் இதனால் தான் கஷ்டம் வரும்பொழுது இறைவா இறைவா என்று அழைத்தாலே போதுமானது கஷ்டங்கள் பகுதியாய் குறைந்துவிடும் என்பேன்.
ஆனாலும் மனிதன் அழைப்பதில்லை.
நல் முறைகள் ஆகவே அனைத்தும் நிறைவேறும் என்பேன் இவ்வுலகத்தில் படிப்படியாக ஏற்றங்கள் அதனால்தான் அகத்தியனும் சரி முறையாக நல் முறையாக மக்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கின்றான். யானும் பக்கபலமாக என் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் போராட்டத்தில் இருந்து மீட்க கடைசிவரை என் தாயவளும் என் தந்தை அவனும் துணையாக இருந்து உயர்வை நோக்கி பின் எவ்வாறு உயர்வை எவ்வாறு உலகத்தில் பெறவேண்டுமா பெறச் செய்வோம் யாங்கள். நிச்சயம் கூட. சத்தியம் கூட.
நல் முறைகள் ஆகவே மனிதன் நிலையை ஆராய்ந்து பார்த்தால் தேடி வருபவர்கள் எவ்வாறு என்பதையும் கூட மேன்மையான நல் எண்ணங்களோடு தேடி செல்ல வேண்டும்.
உண்மைகளை நினைக்கும்பொழுது நல் முறையாய் புண்ணியம் செய்பவர்களுக்கு மட்டுமே இவ்வுலகத்தில் இனி இடமுண்டு. அதனால் தான் சொல்கின்றேன் ஒவ்வொருவரும் சிறு புண்ணியமாவது தர்மங்கள் செய்திருந்தால் மட்டுமே இறைவன் தேடி வருவான்.
நில்லாததை நில் என்று சொல்பவன் தான் மனிதன்.
மனிதன் இதற்கு தகுதி படைத்தவனா?? என்பதை நினைத்தால் பின் மேலோங்கும் என்பேன் அநியாயங்கள் அக்கிரமங்கள் இன்றளவும் கூட நடந்து கொண்டு இருக்கின்றது.
பின் பின் எவ்வாறு என்பதையும் கூட போலி வருடங்கள் போலியான வருடங்கள் செல்லச் செல்ல போலியான மனிதர்கள் இன்று என் தலத்திற்கு வருகின்றார்கள் முருகா முருகா என்று போலி பக்தியும் காட்டுகிறார்கள்.
ஆனாலும் இதனை கண்டு கொள்ள இறைவனுக்கு சிலை தானே என்று கூட சிலர் எதனையும் என்றுகூட நினைக்க தெரியாமல் ஓடிவிடுகிறார்கள் ஆனாலும் அவர்களைத் தான் நாங்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் என்பது மெய்.
இதனையும் கூட முன்னிறுத்தி பார்க்கும் பொழுது அப்பனே இதனையும் ஒன்றும் இல்லை உலகில் உலகில் பின் மனிதன் நினைத்து விட்டால் இறை பலத்தோடு அனைத்தும் சாதித்துவிடலாம். ஆனாலும் பின் மனிதன் பின் நின்ற பொழுதெல்லாம் மனதிற்கு தேவையானதே தான் வாழவேண்டும் என்றே கேட்கின்றான் இவ்வாறு கேட்கும்பொழுது அவன்தனுக்கு நிச்சயம் கிடைக்காது அவனுக்கு அதிர்ஷ்டங்கள் இருந்தாலும் கூட சில நேரங்களில் அவன்தனுக்கு கொடுத்து பின்பு நாங்கள் எடுத்து விடுவோம்.
மற்றவர்களுக்காக அனைவரும் நல் முறைகள் ஆகவே மற்றவர்களுக்காக உழைக்கின்றவன் எங்களுடைய அருளை எப்பொழுதும் பெறுவான் இதைத்தான் யான் செப்புகின்றேன். இதனை தெரிந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதனை கூட.
நல் முறைகள் ஆகவே இன்னும் சில உண்மைகளை தெரிவிக்கின்றேன்.
நின்று கொண்டிருக்கும் நல் முறைகளாய் யான் எப்பொழுதும் எங்கு என் வீடுகளிலும் எப்பொழுதும் நின்று கொண்டிருப்பேன் நின்று கொண்டிருப்பேன் எதனால் என்பதைக்கூட மனிதனுக்குத் தெரிவதில்லை தெரிவதில்லை இதனையும் சூட்சுமத்தை அறிவிக்கின்றேன் இப்பொழுதே எதனை என்றும் மனிதன் என்னிடத்தில் கேட்கும்பொழுது பின் நல் முறைகள் ஆகவே ஆசீர்வாதம் ஆசிர்வாதங்கள் கொடுத்து அனுப்புகின்றேன் ஆனாலும் அதனை பயன்படுத்தாமல் தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு அனைத்தையும் இழந்து பின் நல் முறைகள் ஆகவே மீண்டும் தேடி வருகின்றான் அதனால்தான் யான் சொன்னேன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் நின்றபடி . நின்றபடியே பார்த்துக் கொண்டேதான் இருப்பேன் எப்போதும் கூட கடைநாள் வரையிலும்கூட.
ஆனாலும் நல் முறைகள் ஆகவே என் தந்தை அமர்ந்து கொள்வான். அமர்ந்து கொள்வான் என்பதை கூட பின் பின் நல் முறைகள் ஆகவே அனைத்தும் கூறும்பொழுது, பின் உனது கர்மாக்கள் கழியட்டும் கழியட்டும் என்று கூட பின் கர்மத்தை கஷ்டங்களைக் கொடுத்து அழித்து கொண்டு இருப்பான் என் தந்தை.
ஆனாலும் பின் நல் மனதாய் என் தந்தைக்கு பிடித்துவிட்டால் ஏற்றங்கள். பின் உயர்ந்தோர். பிடித்தவாறு மனிதர்கள் எவரும் இல்லை என்பேன், என் தந்தைக்கு.
ஆனாலும் இனிமேலும் வருவார்கள் நான் சிவனின் குழந்தை! முருகனின் குழந்தை! அகத்தியன் குழந்தை! என்று. ஆனால் அவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர நாங்கள் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை.
எதை என்றும் எதனை என்றும் கூட தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நாங்கள் தரிசனம் தருவோம். செய்வோம். நிச்சயம் செய்வோம் என்பதைக்கூட இதனை திரும்பவும் உரைக்கின்றேன்.
பின் பின் எவ்வாறு என்பதையும் கூட தொழுது நிற்கும் பொழுது யானே அறிவேன் பின் இறைவனே நீ என்னிடத்தில் வந்து விடு என்று கூறி விட்டால் நானே நிச்சயம் வந்துவிடுவேன் என்பதுகூட உண்மை ஆனால் மனிதர்கள் இதுபோல் யாரும் அழைத்ததில்லை மகனே.
இதனை நல் முறைகள் ஆகவே பயன்படுத்தி, பயன்படுத்தி முருகன் நல் முறைகள் ஆகவே யான் என்பேன் எனது பல ரூபங்களில் இருக்கின்றது சுப்பிரமணியர் என்பதிலும் கூட இதிலும் கூட ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கின்றது அடங்கி உள்ளது என்பேன் சுப்பிரமணியன் என்பதைக்கூட எவ்வாறு நின்று தொழுது பார்த்தால் இதில் சூட்சுமமான விஷயம் உள்ளது. இதனை கண்டுபிடித்து விட்டால் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு கஷ்டம் என்பதே வராது என்பேன்.
அதனால்தான் முதலில் சு என்பதை எடுத்துக் கொண்டார்கள் என்பேன்.
இதிலும் நன்கு உணர்ந்து சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே பின் பின் பின் எந்தனையும் நல் முறைகள் ஆகவே பிடித்துக் கொண்டு பின் வருடங்களுக்காவது நல் மனதோடு நல் மனதோடு நவ முறை அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு( ஒரு வருடத்தில் ஒன்பது முறை ஆறுபடைவீடு தரிசனம்) சென்று விட்டால் அவன் தனக்கு பிரம்மாவும் மனமிரங்கி பின் விதியையே மாற்றி விடுவான் என்பதையும் கூட சுப்பிரமணி என்கின்றார்கள்.
ஆனாலும் இச் சூட்சுமத்தை இதுவரை மனிதர்கள் அறிந்ததே இல்லை இன்று வரையிலும் கூட.
நல் முறைகள் ஆகவே பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஈசனின் சக்திகள் நல் முறைகள் ஆகவே, என் தாய் அவளும் நல் முறைகள் ஆகவே இந்த பூலோகத்தில் சுற்றி திரிவாள் என்பேன். மேன்மேலும் நல் முறையில் ஆகவே அனைத்தும் செய்வித்து எவ்வாறு என்பதை உணர்ந்து அனைத்தும் நிறைவேற்றி வைக்கும் சக்திகள் கூட, என் தாய் என் தந்தை நல் முறைகள் ஆகவே தருவார்கள் மனிதர்களுக்கு மனிதர்களுக்கு தரும் பொழுதும் அதன் பலத்தை அறியாமல் அதன் தகுதியை இழந்து விடுவார்கள் மனிதர்கள்.
இதனால் தான் சொன்னேன் கற்றவை கற்றபடியாகவே நிற்க வேண்டுமே ஆனாலும் இதனை மனிதர்கள் கற்றதோடு மட்டும் ஓடிவிடுகிறார்கள் இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்பேன்.
நல் முறைகள் ஆகவே மனமிரங்கி யான் சொல்ல வந்தேன் இப் புண்ணியங்கள் பெறும் பொழுது. புண்ணியங்கள் பெற்று பெற்று நல் முறையாக எங்களை வணங்குபவர்களை முதலில் யாங்கள் புண்ணியம் தேட வைப்போம் புண்ணியம் தேடி தேடி அலைந்து திரிந்தால் யாங்கள் காட்சி அளிப்போம் இக்கலியுகத்தில்.
நான் நிச்சயமாய் காட்சியளிப்பேன்.என் பக்தர்களுக்கு ஆனாலும் எங்களுக்கு நல் முறைகள் ஆகவே எங்களுக்கு தகுந்தவாறு மனிதன் நடக்க வேண்டும் என்பேன், என்பதுதான் மெய்.
ஆனாலும் யாரும் நடப்பதில்லையே அதனால் தான் யாரும் எங்களை காணுவதும் இல்லை.
இதனை கூட யானும் சொல்லிவிட்டேன் எங்களை பார்ப்பதற்கு எவ்வாறு என்பதையும் கூட உத்தரவிட வேண்டும் என்பதைக்கூட இதனை நடத்தி கொண்டு புண்ணியம் செய்து கொண்டு இருந்தால் நிச்சயம் என் தரிசனம் கிடைக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில்.
பின் நல் முறைகள் ஆகவே என் தாயவளும் என் தந்தையவனும். சற்று நிதானத்துடன் தான் செயல்படுவார்கள். ஆனாலும் தண்டனைகள் உண்டு இதனையும் நான் சொல்லி விடுகின்றேன். இப்பொழுது முதன்முறையாக இப்பிறப்பில் செய்யும் தவறுகள் அடுத்த பிறவி எடுக்கும்பொழுது பல பாவங்கள் வினைக்கு ஏற்ப பிறவிகள் பின் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை கூட விதியில். ஆனாலும் என் தந்தையோ கிரகங்களை அழைத்து நல் முறையாகவே பரிசளித்து விட்டான் கிரகங்களே மனிதர்களில் இந்த ஜென்மத்தில் இந்த ஜென்மத்தில் செய்யும் தவறுகளுக்கு இப்பொழுது நீங்கள் உடனடியாக தண்டனை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பதைக்கூட கூறிவிட்டான் இதுதான் உண்மை அதனால் தான் சொல்கின்றேன் பின் தவறுகள் செய்து விட்டு பின் என் தந்தையை வணங்கினால் நல் முறைகள் ஆகவே பின் நிச்சயமாய் இப்பிறவியில் செய்த தவறுகளால் இப் பிறப்பிலேயே அடி நிச்சயம் பலமாக உதிரும் என்பேன்.
நல் முறைகளாக சம்பந்தங்கள் பல உண்டு சம்பந்தங்கள் பெற்ற பின்புதான் யான் வாக்குகளாக சொல்கின்றேன் இன்றளவும் நல் முறையாக ஆசிகள்.
வடிவேலன் உரைத்த பொது வாக்கு முற்றிற்று.
Thursday, 12 August 2021
சித்தன் அருள் - 1023 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
கருட பகவான் மேலும் வினவினார்.
"ஹே! பரமாத்மா! ஒருவன், மனத்தூய்மையோடு, தானதர்மங்களைத் தன கையாலேயே செய்வானாயின் அதனால், அவன் அடையும் பயன் என்ன? அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான் தர்மம் செய்வார்கள் ஆனால் அதனால் உண்டாகும் பயன் என்ன? தான தர்மம் செய்யும் பொழுது முறை தவறாகச் செய்தால் ஏற்படும் பயன் என்ன? இவற்றை திருவாய் மலர்ந்து அருள வேண்டுகிறேன்!" என்றார்.
பரமாத்மா கூறலானார்.
"கலுழனே! மனத்தூய்மை இல்லாமலும், மன உறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ, அத்தனை பயனும் சித்த சுத்தத்தோடு, சாஸ்த்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை தானம் வாங்குவோரும் நல்லவராக வேண்டும்.
ஒருவன் இறந்த பிறகு அவனை குறித்து செய்யப்படும் செய்யப்படும், லட்சம் கோதானங்களுக்கு என்ன பயனோ, அத்தனை பயனும் அவன் இறக்கும் காலத்தில் செய்யும் ஆயிரம் கோதானத்திலேயே கிட்டிவிடும். ஆகையால்தான், கலுழனே! ஒருவன் தனது மரண காலத்திற்குள்ளேயே, கோதானம் முதலிய சிறந்த தானங்களை செய்வது மிகவும் நல்லது என்பதை தெரிந்துகொள்.
தானமும் நல்லதாக இருக்க வேண்டும், தானம் வாங்குவோரும் நல்லவராக இருக்க வேண்டும்.
தானம் கொடுக்கப்படும் இடமும் நல்ல க்ஷேத்ரமாக இருக்க வேண்டும்.
தானம் கொடுப்பவனுடைய மனமும் தூயமையானதாக இருக்க வேண்டும்.
இவை அனைத்துமே, ஒன்று சேர்ந்துவிட்டால், ஒன்று ஒரு கோடி பயனைத்தரும்.
கற்றுணர்ந்த சான்றோருக்கு கொடுக்கப்படும் தானம், நாளுக்கு நாள் விருத்தி அடையும்.
தானத்தை வாங்கிக்கொள்பவர் உத்தமராக இருந்துவிட்டால், தானம் கொடுப்போனுக்கு அதிக புண்ணியம் உண்டாகும்.
விஷத்தைப் போக்கும் மந்திரம், குளிரைப் போக்கும் அக்னியும் தத்தமது சக்திகள் தத்தமது செயல்களால் இழந்து விடுவதுமில்லை. அந்த சக்திகள் குறைவதுமில்லை. அது போலவே, தானம் வாங்கும் உத்தமரும், அவருடைய நற்கர்மத்தாலும், நல்லொழுக்கத்தாலும் குற்றமற்றவராவர்.
உத்தம பயனை அடைய விரும்புவோன், கோதானம் முதலிய தானங்களை செய்யும் பொழுது வேத சாஸ்த்திரங்களை ஓதி உணர்ந்த செந்தண்மை பூண்டு, அந்தணனான உத்தமனுக்கே கொடுக்க வேண்டும்.
வேத ஸ்த்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை கொண்டவனுக்கு கோதனம் கொடுத்தால், அந்த கோதானமே, கொடுத்தவனுக்கு, நரகத்தை கொடுக்கும்.
மேலும் தானம் வாங்குவதற்கே தகுதி இல்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களோடு நரகம் புகுவான்.
ஒரு பசுவை ஒருவனுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும்.
எப்போதாயினும், ஒரு பசுவை பலருக்கு தானம் ஆக கொடுக்க கூடாது.
அப்படிக் கொடுத்து, அந்த பசுவை, தானத்தை வாங்கியவர் அதை விற்று, அந்த தொகையை பங்கு போட்டுக்கொண்டாலும், ஒருவர் ஒரு மாதம் வைத்திருப்பது, மற்றொருவர் அடுத்தமாதம் வைத்திருந்து அனுபவித்துக் கொள்வது, என்று விதித்துக்கொண்டாலும், தானம் கொடுத்தவன், தன் ஏழு தலை முறையினரோடு நெடும்காலம், நரகத்தில் வாசம் செய்வான்.
சாதுக்களிடம், நல்ல பொருட்களை, பக்தி சிரத்தையோடு தானம் கொடுப்பவன், அந்தப்பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனை சந்தேகமின்றி அடைவான். அந்த பயன், பெட்டியில் வைத்து பூட்டிய பொருளாகவே நினைக்கத் தக்கது.
அதிக தனம் உடையவன், இறந்த பிறகு அவனது பிள்ளைகள் அப்பனுக்கென்று பக்தியாகவும், சிரத்தையோடும், மனத்தூய்மையோடும் செய்யும் க்ரித்யங்களால் அவன் அடையக்கூடிய நல்லுலகை விட மேலானதாகிய உலகத்தை, புத்திரனில்லாதவன், தரித்திரனுமாகிய ஒருவன் சொற்ப அளவுடைய தர்மத்தை, தான் வாழும் காலத்தில் தானே தன் கையால் செய்வானாகின், அடைந்து விடுவான்.
கலுழனே! அயலூருக்கு பயணம் செல்பவன், கட்டுசோற்றை, கையிலே கொண்டு செல்வானாகில், வழியிலே, பசி பற்றிய கவலை இல்லாமல் எப்படி செல்வானோ, அவ்வாறே, ஒருவன் உயிரோடு இருக்கும் காலத்தில், அன்னதானம், கோ தானம் முதலிய தானங்களை தன் கையாலேயே செய்துவிடுவானாகில், மரணமடைந்து செல்லும் போது பசி தாகம் எதுவும் அடையாமல், நல்லுலகத்தை சேர்ந்து சுகிப்பான்.
கையிலே கட்டமுதை காட்டிக்கொள்ளாமல் செல்பவன், பசி தாக்கத்தால் வருந்துவதைப் போல, தான தர்மங்களை தான் வாழும் காலத்தில் தன் கையாலேயே செய்யாதவன், இறந்து செல்லும் போது, வழியில் மிகுந்த துன்பம் அடைவான்.
புனிதமான தலத்தில், புண்ணிய தலத்தில் செய்த நல்வினையாகிய நற்கர்மம், நெய் பெய்த அக்னி ஓங்கி வளர்வதை போல பயனாக வளரும்.
புண்ணிய ஷேத்ரமில்லாத எந்த இடத்திலாயினும், புண்ணிய காலமில்லாத எந்த காலமாயினும், விருஷோற்சனம் செய்து, நல்ல ஒழுக்க சீலமில்லாத அந்தணனுக்கு தானம் கொடுத்து விட்டாலும் கூட அந்த விருஷோற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால், உத்தம ஷேத்ரத்தில், உத்தம காலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் என்ன பயன் உண்டோ, அந்த பலன் நிச்சயமாக கைகூடும்.
ஆகையால், ஒரு மனிதன் நற்கதி அடைவதற்கு, முதற் காரணமாக அமைவது விருஷோற்சனம் ஆகும். இன்றிருப்பர், நாளை இருப்பார் என்று எண்ணுவது திடமில்லை. மனித உடல் அநித்தியமாகயால், நல்ல காரியங்களையும், நற்செயல்களையும், நாளை செய்துகொள்ளலாம் என்று நினைக்காமல், நற்கர்மங்களை நினைத்த அன்றே செய்வது நல்லது.
புத்திர பாக்கியமுடையவன், தன் கையால், எந்த ஒரு தருமத்தையும், செய்யாமல், இறப்பானாகில், நற்கதி அடையமாட்டான்.
புத்திரனே இல்லாதவன் நல் வினைகளை செய்து மரிப்பானாகில் நற்கதியை அடைவான்.
யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களை செய்வதை விட, விருஷோற்சனம் செய்வதே உத்தமமான நற்கர்மம் ஆகும்.
கார்த்திகை மாதத்து பௌர்ணமியிலாவது, மற்று எந்த புண்ணிய தினத்திலாவது, உத்தராயண காலத்தில், சுக்ல பட்சத்திலாவது, கிருஷ்ண பட்சத்திலாவது, துவாதசியிலாவது தூய மனத்தோடு உத்தமமான திருத்தலத்தில் நல்ல திதி, யோக நட்சத்திரத்தில், நல்ல முறையில் வேத சாஸ்த்திரங்களை கற்றுணர்ந்த ஒழுக்கமுடைய அந்தணர்களை வருந்தி அழைத்து, சுபம் ஹோமம் முதலியவற்றை செய்வித்து, தன்னை தூயமையாளனாக செய்துகொண்டு, நவகிரகங்களையும் பூசித்து, மாதுர் தேவதைகளை அர்ச்சனை செய்து, பூர்ணாஹுதி கொடுத்து, மஹாவிஷ்ணுவை குறித்து ஸ்ரார்த்தம் செய்து, மந்திர நீரால் ரிஷபக்கன்று ஒன்றை நீராட்டி, ஆடை ஆபரணம் கந்த புஷ்பங்களால், நன்றாக அலங்கரித்து, மேலும், நான்கு ஆண் கன்றுகளோடு அந்த காளை கன்றானது, அக்னியை வலம் வரச்செய்து, வடதிசை நோக்கி நின்று, அந்த ரிஷபக்கன்றை நோக்கி "தர்மமே நீயே ரிஷ்பமானாய்! பிரம்மனாலே ஆதியில் படைக்கப்பட்டாய்!" என்று சொல்லி இறந்தவனுக்காக தானம் செய்தால், அவனை குறித்தும், செய்பவன், தனக்கே செய்து கொள்வானாயின், தன்னை குறித்தும், அதன் வாலில் மந்திர நீர் விட்டு, அந்த நீரை தன கரத்தால் ஏந்தி, தன சிரசின் மீது ப்ரோக்ஷித்து கொண்டு, ஆண் கன்றுகளோடு அந்த ரிஷபக்கன்றையும் விட்டு விட வேண்டும்.
கருடா, இந்த விருஷோற்சனமானது இறந்தவனைக் குறித்து செய்யப்பட்டதே ஆனால், உடனடியாக ஏகாதிஷ்ட ஸ்ரார்தத்தை செய்து விட வேண்டும்.
இறவாத்திருப்பவன், தனக்குத் தானாகவே செய்து கொள்வானாயின், தனக்கு பிரியமாக இருக்கும், நற்பொருட்களை அந்தணருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
விருஷோற்சனம் செய்யாவிட்டால், பிரேத ஜென்மம் பற்றாமல் விடாது. ஆகையால் அந்த விருஷோற்சனம் செய்யாமலேயே, மற்ற நற்கர்மங்களை தனக்குத்தானே செய்து கொண்டாலும் கூட, மரித்த பிறகு புத்திரர் முதலியவர்கள் பற்பல நல் வினைகளை செய்தும் கூட, அவற்றால் எந்தவித பயனும் இல்லை என்று உணர்வாயாக.
ஒருவன் மரித்த 11வது நாளிலாவது, ஷோடச ஸ்ரார்தத்தை, சபிண்டீகரணத்துக்கு முன்னதாகவே செய்து, ததியாராதனம் செய்து பலதானமும் கொடுக்க வேண்டும்.
பருத்தி ஆடையின் மீது, செம்பினால் வட்டில் செய்து வைத்து, அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து, ஆராதனை செய்து, நற்பிராமணனுக்கு அதையும் தானமாக கொடுக்க வேண்டும்.
வைதரணி என்ற நதியை தீ துன்பம் இல்லாமல், காக்கும் பொருட்டு, கரும்பினால் ஓடம்செய்து, வெண்பட்டினால் அதை சுற்றி நெய் ஊற்றிய வெண்கல பாத்திரத்தை அதனுள்ளே வைத்து, ஸ்ரீமன் நாராயணனை அர்ச்சித்து, அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாக கொடுத்தால், நலம் உண்டு.
கருடனே! எள், இரும்பு, பொன், பருத்தி, உப்பு, நவதானியங்கள் ஆகியவற்றையும் தவிர்க்காமல் தகுதி வாய்ந்த அந்தணருக்கு, தானமாக கொடுக்க வேண்டும்.
தானம் கொடுப்பவன், எளியவனாக இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்தாலும் போதுமானது. சக்தியை அனுசரித்து, பொருள் கொடுத்து, தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களுக்கும் தட்சிணையை அதிகமாக கொடுத்து அந்தணரை உவப்புடன் ஏற்கச் செய்ய வேண்டும். சய்யா தானம் வாங்கும் அந்தணனை, இருக்கச் செய்து தானம் செய்வது சிறப்புடையது. புத்திரன் இல்லாமல் இறந்தவனுக்கு பௌத்திரன் முதலியவர்களில் யாராவது செய்தால், நற்கதி உண்டாகும். தன் சக்தியை அனுசரித்து, நித்திய தானம் செய்பவன் யாவனோ, அவன் தன் வாழ்வின் இறுதியில், நற்கதியை அடைவான்.
உடலானது திடமாக இருக்கும் போதே, திருவணை முதலிய ஷேத்ராடனமும், கங்கை யாத்திரையும் செய்ய வேண்டும்.
தாய், தந்தையர் இறந்த பிறகு, ஆண்டாண்டு தோறும், அவர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.
தாய், தந்தை, குரு முதலியவர்களுக்கு தன்னால் இயன்ற புண்ணியத்தை செய்து கொடுக்க வேண்டும்.
கருடா! மரித்தவரை குறித்து கிரியைகளை செய்யும் பொழுது, அந்தணருக்கு, எவன் ஒருவன் பூரி(தக்ஷிணை) கொடுக்கிறானோ, அவன் தான் வேண்டிய நல்லவைகளை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜென்மத்தை அடைய மாட்டான். யோகிகள், சன்யாசிகள், துறவிகள் முதலியவர்கள் எந்த லோகத்தை அடைவார்களோ, அந்த புண்ணிய லோகம் அவனுக்கு கிட்டிவிடும்.
கருடா, ஒருவன் மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியை பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன்" என்று கூறி அருளினார்.
சித்தன் அருள்................தொடரும்!
Wednesday, 11 August 2021
சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!
Monday, 9 August 2021
சித்தன் அருள் - 1021 - சிவபெருமான் சுடலையில் கூத்தாடும் காரணம் என்ன?
- நித்தியம் என்பது தமக்கு அளவிட்ட காலங்கழிய இருத்தலாகும்.
- நைமித்திகம் சிற்சில காரணங்களால் பலர் குழுமி இருத்தலாகும்.
- பிராகிருதம் பிரம கற்பத்தில் ஒழிதலாகும்.
- ஆத்தியந்தம் என்பது இவ்வாறு அழிந்தழிந்துத் தோன்றும் தேகிகள் யாவும் முக்தியடையும்படி சர்வ சங்கார காலத்தில் அண்டாண்ட பிரமாண்டங்களையும் பிரமாதி தேவர்களையும், தானவ, யக்ஷ, கருடாதி கணங்களையும் எல்லாவற்றையும் அழிக்கத் தக்கதாய் பஞ்சபூதங்களில் ஒன்றால் சங்கரித்து, யாவும் அழியும்படி ஒருவனாக நின்று சங்கார கிருத்தியஞ் செய்வேன். அப்போது நீ ஒருத்தியே என் அருகில் இருப்பதால் அச்சமயத்தில் நான் நடனஞ் செய்யவும், நீ என் நடனத்திற்கு ஏற்ப கைத்தாளம் போடவுமாக இருப்போம். அவ்வாறு அந்தப் பெருந்தேவர்களது உடல்கள் விழுந்து கிடக்கும் மயானம் முழுவதும் சுற்றி நடனம் செய்வதால் எனக்குச் சுடலையாடி என்றதொரு பெயர் வழங்கும்.