அகத்தியர் அறிவுரை!
Monday, 30 November 2020
Saturday, 28 November 2020
சித்தன் அருள் - 965 - அகத்தியர் அருள்வாக்கு!
Monday, 23 November 2020
Sunday, 22 November 2020
சித்தன் அருள் - 963 - அகஸ்தியர் கோவில், வட்டியூர்காவு, திருவனந்தபுரம்!
Saturday, 14 November 2020
சித்தன் அருள் - 962 - அனைவருக்கும் குருவருள் கூடும் நேரம்!
- அகத்தியப்பெருமான், வாரத்தில் மூன்று நாட்கள் (புதன், வியாழன், வெள்ளி) நாடியில் வந்து அருள் வாக்குரைப்பார்.
- அருள்வாக்கு கேட்க விரும்புகிறவர்கள் கீழே தரப்பட்டுள்ள எண்ணில் SMS செய்தியை (உங்கள் பெயர், ஊர் பெயர், செல் நம்பர்) தட்டச்சு செய்து முன் பதிவு செய்ய வேண்டும்.
- முன் பதிவு செய்தபின், தியதி, நேரம் போன்றவையுடன் பதில் பின்னர் வரும்.
- அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் அழைத்து உங்களுக்கான அகத்தியரின் நாடி அருள்வாக்கை போன் வழியாகவே கேட்டுக் கொள்ளலாம்.
- நாடி வாசிப்பவர் பெயர் - திரு.ஜானகிராமன்,
- தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 8610738411
சித்தன் அருள் - 961 - அனைவருக்கும் குருவருள் கூடும் நேரம்!
Friday, 13 November 2020
சித்தன் அருள் - 960 - தீபாவளி தின நல்வாழ்த்துக்கள்!
வணக்கம்!
அகத்தியர் அடியவர்கள், சித்தன் அருள் வாசகர்கள், அவர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், "தீபாவளி தின நல்வாழ்த்துக்கள்". இனி என்றும் குருவருள் பெற்று, இறையருள் கொண்டு நலமாய் வாழ "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூ சார்பாக வாழ்த்துகிறேன்.
அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு!
"இங்கு கொண்டாடப்படுகிற பண்டிகைகள் எல்லாம், ஒரே எண்ணத்தில் உருவானவை. வாழ்க்கையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை உணர்த்தி, இருப்பவன், இல்லாதவர்களுக்கு கொடுப்பதின் மூலம், ஒரு சமூகத்தில் தர்மம் வளர்ந்தால், அங்கு இறையருள் நிறைந்து நிற்கும். அவன் குடும்பம் நிம்மதியில் வாழும். இன்னும் மேலான தர்மங்கள் ஏதென உரைக்க இறைவன் எங்களுக்கு கட்டளையிடுவார்."
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!
சித்தன் அருள்...............தொடரும்!
Thursday, 12 November 2020
சித்தன் அருள் - 959 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில், ஊட்டத்தூர், திருச்சி!
'உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்' என்றெல்லாம் பாடி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். அப்படி ஆலயமாகப் பொலிவு பெற்று இருக்க வேண்டிய நம் உடம்பு சுணக்கமுற்றால் என்னாவது? பழக்க வழக்கங்கள்தான் நம் உடம்பு சுணக்கமுறுவதற்குக் காரணம் என்றால், நம்மால் மாற்றிக் கொள்ள இயலும். கர்மவினை காரணம் என்றால், அவற்றை எங்கே போய் கழிப்பது?
உள்ளத்துப் பிணிகளைப் போக்குபவை ஆலயங்கள். அதே நேரம், நம் உடற்பிணிகளுக்கும் நல்மருந்தாகி, நம் பிணிகளைப் போக்கி, ஆரோக்கியமுடன் திகழச் செய்யும் திருத்தலங்களும் நிறைய உண்டு.
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்.
இந்தத் திருத்தலத்தில் அருளும் இறைவனுக்கு சுத்தரத்தினேஸ்வரர் என்று திருப்பெயர். அம்பாளின் திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி.இந்தக் கோயிலின் சிறப்பம்சம், வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் ஆடல்வல்லான்.
அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனவர் இந்த நடராஜப் பெருமான். கொள்ளை அழகுடன் அருட்காட்சி தரும் இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் தரிசனம் தருகிறார். இவரைத் தரிசித்து, உரிய பூஜைகள் செய்து வழிபட்டால், சிறு நீரகக் கோளாறுகள் நீங்கும் என்று நம்பிக்கை.
பஞ்சநதனக் கல்லால் ஆன இங்குள்ள நடராஜர் பல்வேறு வகையான நோய்களையும் போக்கக்கூடிய வரப்பிரசாதி. குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் அறவே போக்கி அருள்பவர். இதற்கு நேரடி சாட்சியாக, இங்கே வந்து வழிபட்டு, தங்கள் சிறுநீரகப் பிரச்னையிலிருந்து விடுபட்டு, அனுபவபூர்வமாகப் பலன் பெற்ற பலரை நீங்கள் இங்கே பார்க்கலாம்’’
பரிகார பூஜை செய்யும் முறை:-
சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, கோயிலிலேயே கிடைக்கும் வெட்டிவேரை ஒரு கிலோ அளவில் வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகக் கோத்து நடராஜருக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பின்னர், அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, கோயிலில் அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை (5 லிட்டர் கொள்ளளவு உள்ள) ஒரு கேனில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தீர்த்தம் எத்தனை நாட்களானாலும் கெடவே கெடாது என்பது சிறப்பு.
வீட்டுக்குச் சென்றதும், தினமும் இரவில் பிரம்ம தீர்த்தத்தை ஒரு குவளையில் நிரப்பி, அதில் வெட்டிவேர் மாலையில் இருந்து ஒரு துண்டை எடுத்து அந்தத் தீர்த்தத்தில் போட்டு ஊற விடவேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேர்த் துண்டை எடுத்துவிட்டு, அந்த தீர்த்தத்தைப் பருகவேண்டும். இப்படித் தொடர்ந்து 48 நாட்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதீகம்.
பெண்கள் மட்டும் வீட்டு விலக்காகும் நாட்களில், இந்தத் தீர்த்தத்தைப் பருகக் கூடாது. 48 நாட்கள் முடிந்ததும், அந்த வெட்டிவேர்த் துண்டுகளை நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும்.
சிறுநீரகக் கோளாறுகள் என்றில்லை, நமது சகல பிரச்னைகளுக்கும் தீர்வெனும் மருந்து தரும் மருத்துவன் இத்தலத்தின் இறைவனான ஆடல்வல்லான். ஒருமுறை, நாமும் இந்தத் தலத்துக்குச் சென்று, ஐயன் சுத்த ரத்தினேஸ்வரரையும், நடராஜப் பெருமானையும் தரிசித்து, உடற்பிணிகளோடு மனப் பிணிகளும் நீங்கிட வரம் பெற்று வருவோம்.
பார்ப்பதற்கு கருங்கல்லை போன்று தோற்றம் இருந்தாலும் சில தருணங்களில் அந்தக் கல்லானது கரு நீலமாகவும், கரும்பச்சை வண்ணத்திலும் கூட காட்சி தரும். பல கோடி சூரியனின் சக்தியை உள்ளடக்கிய கல்லாக இது சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. இந்த பஞ்சநதன பாறையின் மற்றொரு சிறப்பை கேட்டால் எவராலும் நம்ப முடியாது. இந்தப் பாறையில் இறைவனின் திரு உருவத்தை எவராலும் உளியால் செதுக்க முடியாது என்றும், இறைவனின் திருவுருவம் தானாகவே உருவாகும் என்றும், வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் காணமுடியாத பஞ்சநதன கல்லில் உருவான சிலைதான் ஊட்டத்தூர் நடராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டத்தூரின் மேற்கு திசையில் அமைந்திருக்கும் சோளேஸ்வரம் கோவிலுக்கு ராஜராஜ சோழன் அடிக்கடி வருகை தருவார். ஒருசமயம் மன்னரின் வருகைக்காக, பாதையை சரி செய்யும் சமயத்தில் மண்வெட்டியால் புல்லை வெட்டும் போது, ஒரு இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. பயந்துபோன தொழிலாளிகள் இந்த செய்தியை மன்னனிடம் தெரிவித்தனர். அந்த இடத்தில் இருந்த சிவலிங்கத்தை கண்டுபிடித்து, செய்த பாவத்திற்காக மன்னிப்பும் கேட்டு, அந்த லிங்கத்திற்கு ஊட்டத்தூரில் ரத்தினேசுவரர் திருக்கோவிலை கட்டினார் ராஜராஜ சோழ மன்னர். இன்றும் இத்திருத்தலத்தில் வீட்டிலிருக்கும் லிங்கத்தின் நெற்றியில் வடு தென்படுவது குறிப்பிடத்தக்கது.
புண்ணியநதிகள் தம்முள் எவர் பெரியவர் என்ற போட்டியில் சிவபெருமானிடம் தீர்ப்புக்கு வர, நந்தியை அழைத்து அனைத்து நதிகளையும் குடித்துவிடும் படியும் எந்த நதியைக் குடிக்கமுடியவில்லையோ அதுவே சிறந்தது எனக்கூற, நந்தியெம்பெருமானால் கங்கையைக் குடிக்க முடியாததால் அதுவே சிறந்தது எனத் தீர்ப்பாயிற்று. தாம் குடித்த நதிகளை எல்லாம் வெளியே நந்தியெம்பெருமான் வெளியே விட, அதுவே நந்தி ஆறு என ஆயிற்று.
ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................தொடரும்!
Wednesday, 11 November 2020
சித்தன் அருள் - 958 - ஆலயங்களும் விநோதமும் - அக்னீஸ்வரர் திருக்கோவில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்
இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது.
புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார்.
உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாக பூத்துவந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர, அவற்றைப் பெற்று தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்தமனைவி அம்மலரைச் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர்.
அக்னி பகவான் சிவபெருமானை வழிபட ஏற்படுத்திய அக்னி தீர்த்தம் இன்றும் கிணறு வடிவில் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் வடிவம் உருவில் சிறியது. சிவலிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம்.
இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி உள்ளது. இத்தலம் பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் ஆகும். பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.
இத்தலத்தில் விஷ்ணு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம்.
நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது சிறப்பு ஆகும்.
இத்தலத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி-குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....................தொடரும்!
Monday, 9 November 2020
சித்தன் அருள் - 957 - ஆலயங்களும் விநோதமும் - கொளஞ்சியப்பர் கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம், தமிழ் நாடு!
கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். இக்கோயிலின் சிறப்பு, இங்கே நடைமுறையில் இருக்கும் “பிராது” எனும் வழக்கு பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்றவையாகும்.
பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்பிப்பார்கள். சமர்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர்.
மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது
விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோயில் வேண்டிக்கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்கு கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள் இது சூறைவிடுதல் எனப்படுகிறது. பொதுவாக சூறைவிடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.
பிராது கொடுப்பதுபோல், வேண்டிய விஷயம் நடந்துவிட்டால், கொடுக்கப்பட்ட பிராதை வாபஸ் பெறும் "ராஜினாமா" கொடுப்பதும் இங்கு நிறைவேற்றப்படுகிறது. பிராது கொடுத்தவர், இன்ன தியதியில் இன்ன விஷயத்துக்கு பிராது கொடுத்ததாகவும், கொளஞ்சியப்பர் அருளால் அது நடந்துவிட்டதாகவும், ஆதலால் கொடுத்த பிராதை வாபஸ் பெறுவதாகவும் எழுதி, அதை கொளஞ்சியப்பர் சன்னதியில் கொடுத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து, கொளஞ்சியப்பர் கோவில் இருக்கும் தூரத்திற்கு எத்தனை கிலோமீட்டரோ, அத்தனைக்கு குறிப்பிட்ட தொகையை கோவிலுக்கு கொடுக்க வேண்டும்.
இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, 90 நாட்களுக்கு, பெயர் வைப்பது, ஆடை அணிவிப்பது, பொட்டு வைப்பது, கிடையாது. 90 நாட்களை விரதமாக எடுத்து, இந்த கோவிலுக்கு வந்த பின் தான் அவை செய்யப்படுகிறது.
வேப்பெண்ணெய்யை வாங்கிக்கொடுத்தால், கொளஞ்சியப்பர் சன்னதியில், விபூதியை கலந்து தருவார்கள். அது ஒரு அருமருந்து. உடலில் உள்ள அனைத்து வியாதிக்கும் சிறந்த மருந்தாக பலனளிக்கிறது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Sunday, 8 November 2020
சித்தன் அருள் - 956 - அந்தநாள் >> இந்த வருடம் - 2020 - கோடகநல்லூர்!
- காலையில் பூஜையின் பொழுது, ஒரு விதமான பச்சை நிற ஒளி, கோவிலை சூழ்ந்து நின்றதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
- காலையிலும், மதியத்திலும், அகத்தியர் அடியவர்கள் செய்த அன்னதானத்தில், பெரியவர்கள் கலந்து கொண்டு அன்னம் பாலித்து, பூஜை மிக சிறப்பாக நடந்ததாக கூறி அனைவரையும் ஆசீர்வதித்தனர்.
- மிகுந்த அன்புடன், அடியவர்கள் பூஜை நடத்தியதால், அங்கு வந்திருந்த அனைவருக்கும், அகத்தியரின் அருளாசி கிடைக்கப் பெற்றுள்ளது.
- உழவாரப்பணிகளில் அடியவர்கள், மிகுந்த ஈடு பாட்டுடன் செயல்பட்டது குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
- அத்தனை அடியவர்கள் ஒன்று கூடியும், அமைதி காத்து, பூஜையில் பங்கு கொண்ட அடியவர்களுக்கு, நலம் மிகுந்த ஆசிகள் குருநாதர் உரைத்துள்ளார்.
- பெருமாளுக்கு, பூஜைக்கு, பச்சை கற்பூரம் வாங்கி கொடுத்த அடியவர்கள் அனைவரின் திருஷ்டி தோஷங்களையும், குடும்பத்தில் நலம் விளைய பெருமாள் ஆசிர்வதித்ததாக, அர்ச்சகர் பின்னர் உரைத்தார்.
- மேலும் பெருமாள் அன்றைய பூஜையால், மிகுந்த மன நிறைவுடன் இருந்ததாகவும், அனைவரையும் ஆசிர்வதித்ததாகவும் தகவல்.