இரு தினங்கள் கழித்து, அர்ச்சகரிடம் பேசிய பொழுது அனைவருக்கும் (அர்ச்சகர், கோயில் சிப்பந்திகள் மற்றும் அத்தெருவில் வசிப்போர்) (11 பேர்) கொரோனா தொற்று இல்லை என்று கூறினார். குருநாதர் காப்பாற்றிவிட்டார்.
நான் 25.10.2020 அன்று காலையே கோடகநல்லூர் சென்றேன். அர்ச்சகரிடம் பேசி அபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் பற்றி பேசினோம். அவர் செய்துவிடலாம் என்று கூறினார்.
என்னை குருநாதர் ஏற்பாடுகள் செய்வதற்காகத்தான் நான்கு நாட்கள் முன்னதாகவே அங்கு செல்லும்படி டிக்கெட் கிடைக்க செய்துள்ளார், என்பதை அத்தருணம் உணர்ந்தேன். குருநாதர் திருவடிகளே போற்றி.
29.10.2020 அன்று காலை தாமிரபரணி தாய்க்கு முதலில் தாம்பூலம் கொடுத்த பின், பெருமாளுக்கு அபிஷேக பூஜைகள் ஆரம்பித்தது. அதுவும் வெகு சிறப்பாக நடந்தது என்றே கூற வேண்டும். பூஜைக்கு நிறையவே உதவி செய்த எனது நண்பர் முரளிதரன் அபிஷேகம் நடந்து கொண்டிருந்த போது எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு என்னவென்று விசாரித்தேன். அப்பொழுது அவர் "பெருமாளுக்கு அபிஷேகம் நடந்த போது பெருமாளை அர்ச்சகர் மறைக்கிறாரே என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு, கண் மூடி தியானித்த போது குருநாதர் அகத்திய பெருமான் திருக்கரங்களால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது. என்றார். எனக்கு இத்தனை அருள் செய்வாரா குருநாதர் என நினைத்து, இதை கேட்டதும் ஆடிப்போய்விட்டேன், இந்த ஜென்மத்திற்கு, இது போதும் என தோன்றியது, என புளகாங்கிதமடைந்து கூறினார். குருநாதரின் ஆசியாலும். வழிகாட்டுதலினாலும் பெருமாளுக்கு குருநாதர் செய்யும் அபிஷேகம் இனிது நடந்தது. எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற்றது.
அகத்தியர் அடியவர்களுக்கு சில வேண்டுகோள்.
அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கும் போது, முடிந்த வரை சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
1. மஞ்சள் பொடி கடையில் வாங்காமல், மஞ்சள் கிழங்கு வாங்கி அதற்கென்று இருக்கின்ற அரவை நிலையத்தில் கொடுத்து அரைக்கவும். நான் சென்னையிலேயே மஞ்சள் கிழங்கு வாங்கி அரைத்து எடுத்து சென்றேன். கலப்படம் இல்லாமல் இருக்கும். கஸ்தூரி மஞ்சளும் வாங்கி அரைத்து எடுத்து சென்றேன். கூடிய வரையில் நம்மால் முடிந்த, கலப்படம் இல்லாமல் கொடுக்கக் கூடிய பொருளை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்.
2.பாக்கெட் பால், தயிர் தவிர்க்கலாம். முடிந்தால் பசும்பால் வாங்கி கொடுக்கலாம். நான் முதல் நாள் பசும்பால் வாங்கி தயிர் செய்து கொண்டு சென்றேன். காலை பசும்பால் வாங்கி சென்றொம். இளநீர் கலப்படமில்லாதது, அதை வாங்கி தரலாம். பழங்கள் வாங்கி தரலாம்.
3. பூக்கள்: வாசனையுள்ள பூக்களையே தர வேண்டும். மல்லிகைப்பூ, முல்லை, பன்னீர் ரோஜா போன்றவை தரலாம். தாமரைப்பூ குருநாதருக்கும் பெருமாளுக்கும் மிகவும் பிடித்தமானது. துளசி வாங்கி தரலாம். தாமரை மாலை, மல்லிகைப்பூ மாலை, துளசி மாலை வாங்கப்பட்டது. அர்ச்சனைக்கு துளசி, பன்னீர் ரோஜா, தாமரை வாங்கப்பட்டது. சாமந்தி (வெள்ளை, மஞ்சள்), கனகாம்பரம் மற்ற வகையான வாசனையற்ற ரோஜாக்கள் தவிர்க்கலாம்.
4. பசுநெய் கிடைத்தால் சிறப்பு. கலப்படம் இல்லாத நெய் விளக்கேற்றுவதற்கு வாங்க முயற்சிக்கலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
லட்சுமி, சென்னை.
பூஜை அன்று நடந்த ஒரு சில நிகழ்ச்சிகள் (தகவல் பிறரால் தெரிவிக்கப்பட்டவை) பார்க்கலாம்.
- காலையில் பூஜையின் பொழுது, ஒரு விதமான பச்சை நிற ஒளி, கோவிலை சூழ்ந்து நின்றதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
- காலையிலும், மதியத்திலும், அகத்தியர் அடியவர்கள் செய்த அன்னதானத்தில், பெரியவர்கள் கலந்து கொண்டு அன்னம் பாலித்து, பூஜை மிக சிறப்பாக நடந்ததாக கூறி அனைவரையும் ஆசீர்வதித்தனர்.
- மிகுந்த அன்புடன், அடியவர்கள் பூஜை நடத்தியதால், அங்கு வந்திருந்த அனைவருக்கும், அகத்தியரின் அருளாசி கிடைக்கப் பெற்றுள்ளது.
- உழவாரப்பணிகளில் அடியவர்கள், மிகுந்த ஈடு பாட்டுடன் செயல்பட்டது குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
- அத்தனை அடியவர்கள் ஒன்று கூடியும், அமைதி காத்து, பூஜையில் பங்கு கொண்ட அடியவர்களுக்கு, நலம் மிகுந்த ஆசிகள் குருநாதர் உரைத்துள்ளார்.
- பெருமாளுக்கு, பூஜைக்கு, பச்சை கற்பூரம் வாங்கி கொடுத்த அடியவர்கள் அனைவரின் திருஷ்டி தோஷங்களையும், குடும்பத்தில் நலம் விளைய பெருமாள் ஆசிர்வதித்ததாக, அர்ச்சகர் பின்னர் உரைத்தார்.
- மேலும் பெருமாள் அன்றைய பூஜையால், மிகுந்த மன நிறைவுடன் இருந்ததாகவும், அனைவரையும் ஆசிர்வதித்ததாகவும் தகவல்.
பூஜையையும், அன்றைய நிகழ்ச்சிகளையும் ஏற்று நடத்த முன் வந்த திருமதி.லட்சுமி குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் "சித்தன் அருள்" வலைப்பூவின் சார்பாக நன்றியை/அகத்தியப்பெருமானின் ஆசிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோடகநல்லூர் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
வணக்கம் ஐயா,
ReplyDeleteஅகத்திய பெருமான் ஆசியாலும், தங்களின் வழிகாட்டுதலினாலும் பூசைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.மிகவும் நன்றி ஐயா. சிறு விஷயங்கள் கூட அவ்வப்போது இ மெயிலில் தெரிவித்து பூஜை சிறப்பாக நடக்க, ஏற்பாடுகள் செய்ய உதவிய தற்கு மிக்க நன்றி ஐயா. தங்களின் ஆசிகள் எப்போதும் வேண்டும் ஐயா.
ஓம் லோபாமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான்
திருவடிகளை போற்றி.
ஆஹா அருமை அற்புதம்
ReplyDeleteஓம் அகத்தியர் திருவடிகள்
சரணம் போற்றி போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அகத்தீசாய நம
ReplyDeleteOm lobamuthra sametha agasthiyaha namaha.
ReplyDeleteஐயா அன்பு வணக்கங்கள். குருவின் அருளும் ஆசியும், பெருமாளின் திருப்தியும் ஆசியும் கிடைக்க பெற்ற அடியவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். அனைவரும் எந்த நோய் நொடியும் இன்றி அருளும் பொருளும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள் என்பது திண்ணம் ஐயா. அடுத்த வருடம் அப்பாவின் , பெருமாளின் அன்பும் கருணையும் நமக்கும் கிடைக்க வேண்டும் ஐயா.குருவே சரணம். தாயே சரணம். ஓம் பெருமாள் திருவடிக்கு சரணம். வாழ்க வளமுடன் ஐயா, அம்மா.
ReplyDeletethanks sir next year we will join wiyh you sir
ReplyDeletePure devotion from Lakshmi mam! Hats off mam, we have to learn a lot to show such bhakthi and dedication in whatever tasks we take up. And thanks to Agnilingam ayya for sharing all the details.
ReplyDeleteLakshmi ma'am...How did you go to kodaganallur bycar
ReplyDeleteor public transport?
By train mam
DeleteGreat ma'am...
DeleteOm Agatheesaya Namaha
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏
ReplyDeleteAum Shree Brahanmadhavare Sharanam
ReplyDelete