கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். இக்கோயிலின் சிறப்பு, இங்கே நடைமுறையில் இருக்கும் “பிராது” எனும் வழக்கு பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்றவையாகும்.
பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்பிப்பார்கள். சமர்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர்.
மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது
விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோயில் வேண்டிக்கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்கு கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள் இது சூறைவிடுதல் எனப்படுகிறது. பொதுவாக சூறைவிடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.
பிராது கொடுப்பதுபோல், வேண்டிய விஷயம் நடந்துவிட்டால், கொடுக்கப்பட்ட பிராதை வாபஸ் பெறும் "ராஜினாமா" கொடுப்பதும் இங்கு நிறைவேற்றப்படுகிறது. பிராது கொடுத்தவர், இன்ன தியதியில் இன்ன விஷயத்துக்கு பிராது கொடுத்ததாகவும், கொளஞ்சியப்பர் அருளால் அது நடந்துவிட்டதாகவும், ஆதலால் கொடுத்த பிராதை வாபஸ் பெறுவதாகவும் எழுதி, அதை கொளஞ்சியப்பர் சன்னதியில் கொடுத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து, கொளஞ்சியப்பர் கோவில் இருக்கும் தூரத்திற்கு எத்தனை கிலோமீட்டரோ, அத்தனைக்கு குறிப்பிட்ட தொகையை கோவிலுக்கு கொடுக்க வேண்டும்.
இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, 90 நாட்களுக்கு, பெயர் வைப்பது, ஆடை அணிவிப்பது, பொட்டு வைப்பது, கிடையாது. 90 நாட்களை விரதமாக எடுத்து, இந்த கோவிலுக்கு வந்த பின் தான் அவை செய்யப்படுகிறது.
வேப்பெண்ணெய்யை வாங்கிக்கொடுத்தால், கொளஞ்சியப்பர் சன்னதியில், விபூதியை கலந்து தருவார்கள். அது ஒரு அருமருந்து. உடலில் உள்ள அனைத்து வியாதிக்கும் சிறந்த மருந்தாக பலனளிக்கிறது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Om lobamuthra sametha agasthiyaha namaha.
ReplyDeleteOm sri loba mudra thayar samedha agasthia peruman thiruvadigale potri
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை
ReplyDeleteஐயா அன்பு வணக்கங்கள். ஓம் நம குமாராய! ஓம் சரவணபவ! ஓம் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான் திருவடிகள் போற்றி! அப்பா போற்றி! அம்மாபோற்றி! சேஷாத்ரி ஐயனே போற்றி! ஓம் உமா தேவி அம்மா போற்றி! நன்றி ஐயா , அம்மா.
ReplyDeleteஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏
ReplyDeleteAum Sharavana Bhavaya Namaha
ReplyDelete