​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 13 November 2020

சித்தன் அருள் - 960 - தீபாவளி தின நல்வாழ்த்துக்கள்!

வணக்கம்!

அகத்தியர் அடியவர்கள், சித்தன் அருள் வாசகர்கள், அவர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், "தீபாவளி தின நல்வாழ்த்துக்கள்". இனி என்றும் குருவருள் பெற்று, இறையருள் கொண்டு நலமாய் வாழ "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூ சார்பாக வாழ்த்துகிறேன்.

அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு!

"இங்கு கொண்டாடப்படுகிற பண்டிகைகள் எல்லாம், ஒரே எண்ணத்தில் உருவானவை. வாழ்க்கையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை உணர்த்தி, இருப்பவன், இல்லாதவர்களுக்கு கொடுப்பதின் மூலம், ஒரு சமூகத்தில் தர்மம் வளர்ந்தால், அங்கு இறையருள் நிறைந்து நிற்கும். அவன் குடும்பம் நிம்மதியில் வாழும். இன்னும் மேலான தர்மங்கள் ஏதென உரைக்க இறைவன் எங்களுக்கு கட்டளையிடுவார்."

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்...............தொடரும்!

5 comments:

 1. சித்தன் சுருள் வலைப்பூ வாசகர்களுக்கு என் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் .. குறிப்பாக குருநாதர் அகத்திய மைந்தன் திரு அக்னிலிங்கம் அய்யா அவர்களுக்கும் .....

  ReplyDelete
 2. நன்றி ஐயா.
  ஓம் லோபாமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் திருவடிகளே போற்றி.

  ReplyDelete
 3. நன்றி ஐயா
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் திருவடிகள் போற்றி

  ReplyDelete
 5. தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் ஐயா ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete