​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 8 August 2020

சித்தன் அருள் - 890 - ஒரு நாடி அருள்வாக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் ஒரு அடியவர் நாடியில், அகத்தியரை நாடி, தன் தனிப்பட்ட வாழ்க்கையின் விஷயங்களை கேட்டார். அவருக்கும் பதிலளித்து, விளக்கமாக கூறுகையில், பொதுவாக ஒரு சில விஷயங்களை கூறி அதை அனைவருக்கும் தெரிவிக்குமாறு உரைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் எல்லா திருவோண நட்சத்திரத்தன்றும் மஞ்சள்பொடி+பச்சைக்கற்பூரம்+துளசி நீரிலிட்டு "ஓம் ஸ்ரீ மாயமாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை, பூமியில், மரத்தடியில் எல்லாஉயிர்களின் மோக்ஷத்திற்காகவும் வேண்டிக்கொண்டு விடச்சொன்னது ஞாபகம் இருக்கலாம். (சித்தன் அருள் தொகுப்பு - 840 & 859). "என் சேய்கள் செய்த/செய்கிற திருவோண பூசையை இறைவன் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார். ஆசிர்வாதமும் அளித்துள்ளார். பூசையை எல்லா மாதமும் செய்கிறவர்கள் அனைவரும் க்ஷேமமாக, சிறப்பாக வாழ்வார்கள். இத்தருணத்தில், யாம் முன்னரே உரைத்த நீதிகளை இங்கு உரைக்கின்றோம்" எனக்கூறி கீழ்வரும் மூன்று அகத்தியர் இயற்றிய அறிவுரை பாடல்களையும், அனைவரையும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.

அடியவர்களே! இங்கு அடியேனுக்கு ஒன்றுதான் தெரிவிக்க வேண்டியுள்ளது. திருவோண நட்சத்திர உத்தரவை சித்தன் அருளில், தெரிவித்த பொழுது அனைவரும் படித்தார்கள். எனினும், ஒரு சிலரே அந்த உத்தரவை நிறைவேற்றி வருகிறார்கள் என புரிகிறது. இதுவரை செய்யாதவர்களும், வேண்டிக்கொண்டு நிறைவேற்றலாமே! அவர் அருள் கிடைக்குமே.

எனக்கு தாய், தந்தை இருக்கிறார்களே, நான் இதை செய்யலாமா? நான் பெண்ணாயிற்றே, அல்லது மணமாகவில்லையே, இது பிதுர் தர்ப்பணமா, என்கிற கேள்வியெல்லாம் பலர் மனதிலும் ஏழும். இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான். "இல்லை! இது பிதுர் தர்ப்பணம் இல்லை" பொதுவான ஒரு வேண்டுதல். பாருங்கள் துளசி+பச்சை கற்பூரம்+மஞ்சள்பொடி+நீர். இவைதான் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் பிதுர் தர்பணத்திற்கு உபயோகிக்கும், எள்ளு, அரிசி, தர்ப்பை புல் போன்றவை கிடையாது. யார் பெயர் நட்சத்திரமும் கூறுவது கிடையாது. இறைவன் நாமா மட்டும்தான். இதற்குமேல் சொல்வதாகிற்கில்லை.

விருப்பமுள்ளவர்,
சந்தேகம் தெளிந்தவர், 
இறை அருள் பெற விழைபவர்,
அகத்தியர் உத்தரவை சிரம் மேற்கொண்டு நிறைவேற்ற விரும்புபவர்கள்,

எல்லா மாதமும் வரும் "திருவோண" நட்சத்திர தியதியில் (இந்த வருட திருவோண நட்சத்திர நாட்கள் சித்தன் அருள் வலைப்பூவில் மேல்பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) செய்து அருள் பெற்றுக்கொள்ளுங்கள்.
  
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும் 
உத்தமனாய் பூமிதனில் இருக்கவேணும் 
பருவமதிற் சேறு பயிர் செய்ய வேணும் 
பாழிலே மனதை விடான் பரமஞானி 
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி 
வருவார்கள் அப்பனே அநேகங்கோடி 
வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே!

இறைவன் ஒருவன்தான் உண்டு. அவனை வணங்க வேண்டும். நல்லவனாய் பூமியில் வாழ வேண்டும். தக்ககாலத்தில் விவசாய பயிர் செய்ய வேண்டும். தீய வழிகளில் மனதை விடக்கூடாது. உலகில் திருடர்கள் பலர் திரிவார்கள். இன்னும் பாபபீர் வருவார்கள். இனிய வார்த்தைகளால் பேசுவார்கள்.

சாத்தியமே வேணுமடா மனிதனானால் 
சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே 
நித்திய கர்மம் விடாதே, நேமம் விட்டு 
நிட்டையுன்சமாதி விட்டு நிலைபே ராதே 
புத்தி கெட்டு திரியாதே; பொய் சொல்லாதே
புண்ணியத்தை மறவாதே, பூசல் கொண்டு 
கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே, 
கர்மியென்று  நடவாதே, கதிர்தான் முற்றே.

மனிதன் என்றால் வாக்கில் சத்தியம் வேண்டும். பிறரைக் கெடுக்கும் சண்டாளத்தனம் கூடாது. நித்ய கர்மங்களை விசாதே. நியமங்களை விடாதே. சமாதியினின்று வெளிவராதே. நற் புத்தியில்லாமல் அலையாதே, பொய் சொல்லாதே, புண்ணியத்தை மறவாதே. வாக்குவாதம் யாரிடமும் செய்யாதே.

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா 
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா 
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா 
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மை யாமே!

மனதின் உள்ளே பகைகள் (காம குரோத, மத, மாஸ்ச்சர்யங்கள்) நீங்கி, நன்றாயிருந்தால் மந்திரம் சொல்ல வேண்டாம்.மனம் நன்றாக அமைந்தால் வாயுவை உயர்த்துகிற யோகா செய்ய வேண்டாம். மனம் செம்மையானால், வாசியை நிறுத்துகிற பிராணாயாமப்பயிற்சி செய்ய வேண்டாம். மனம் செம்மையானால், நீங்கள் கூறுகிற வார்த்தைகள், மந்திரங்கள், ஞானியின், சித்தனின் வார்த்தைகள் போல், செம்மையாகிவிடும். வாக்கு பலிதம் உண்டாகும். இதன் உட்பொருள், நமது உட்பகைகள், ஆணவம், நீங்கினால், நாம் இறைவனை எளிதாக அடைந்துவிடலாம். தனியான மந்திரங்கள், அதற்கான செயல்கள் போன்றவை வேண்டாம்.

சர்வம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................... தொடரும்!

12 comments:

  1. ஒம் ஈஸ்வராய நமக!
    ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக!

    ReplyDelete
  2. Sir, can u please provide me your email id to contact.

    TK
    Bangalore

    ReplyDelete
  3. ஓம் நம சிவாய நமக
    மாதம் தவறாமல் செய்து வருகிறோம் அய்யனே , அனைத்தும் குரு அகத்திய பெருமானுக்கே சமர்ப்பணம்
    ஓம் அகத்திய குருவே போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம்
    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  4. Thai tanthai arulal pannukiran ayya.om Sri lopamudra samata agastiyar thiruvadi saranam.

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  6. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ... அய்யா வணக்கம். .உங்களுடைய ஈமெயில் முகவரி sgnspk@gmail.com இந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டுமா? அல்லது வேறு ஈமெயில் முகவரி உள்ளதா? தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் குருநாதர் அகத்தியர் சேவையில் அடியேனும் பங்கு பெற விழைகிறேன். நான் குஜராத்தில் இருந்து எழுதுகிறேன். என்னுடைய ஈமெயில் முகவரி deepansiva3@gmail.com. நன்றி ஐயா 🙏🙏🙏

    ReplyDelete
  7. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ. உங்கள் ஈமெயில் முகவரி கிடைத்தது அய்யா மிக்க நன்றி 🙏🙏🙏

    ReplyDelete
  8. அய்யா, வணக்கம் !நீரை செடி அல்லது மரத்தில் விட்டுவிடலாமா?? அல்லது தரை மற்றும் மண்ணில் தான் விடவேண்டுமா. நன்றி !

    ReplyDelete
  9. வணக்கம்! குருநாதர் பூமியில் விட வேண்டும் என உரைத்துள்ளார். செடியின் வேர் பூமியில், பதித்திருந்தால் விடலாம். தொட்டியில் வளரும் செடி இந்த விஷயத்துக்கு உதவாது!

    ReplyDelete
  10. oh nice enakku than innum utharavae varala 6 maasam apparam sonnaru ?(2010) 16 varushgam aachu

    ReplyDelete