​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 6 February 2015

அந்தநாள் > இந்த வருடம் (2015)


அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அவரின் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், என் நண்பரை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள், இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று அங்கு சென்று இருந்து அவர்களின் ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக்கொள்கிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

26/07/2015, ஞாயிற்று கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ தசமி திதி, அனுஷம் நட்ச்சத்திரம் அன்று காலை 11 மணி முதல்.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

27/07/2015, திங்கட்கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ ஏகாதசி திதி (இரவு 9.39 வரை), கேட்டை நட்சத்திரம் (அன்று காலை 11.55 முதல்), சித்தயோகம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

28/07/2015, செவ்வாய்க்கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ த்வாதசி திதி (அன்று இரவு 09.13 வரை), மூலம் நட்சத்திரம் (அன்று மதியம் 12.23 முதல்), சித்தயோகம்-அமிர்தயோகம்.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

09/09/2015, புதன் கிழமை, ஆவணி மாதம், த்வாதசி திதி (காலை 07.31 வரை), பூசம் நட்சத்திரம் (காலை 07.03 முதல்) சித்தயோகம்.

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

25/10/2015, ஞாயிற்று கிழமை, ஐப்பசி மாதம், சுக்லபக்ஷ த்ரயோதசி திதி (அன்று இரவு 10.47 வரை), உத்திரட்டாதி நட்சத்திரம் (அடுத்தநாள் காலை 4.01 வரை), அமிர்த யோகம்.

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

கார்த்திகேயன்!

10 comments:

  1. Aum Agasthiya maharishi namah!!!i

    ReplyDelete
  2. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  3. நன்றி அண்ணா

    ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  4. It was only yesterday, as I was reading Siththan Arul about Karkodaganallur that I was wishing that Karthikeyan Ayya should announce the dates early so arrangements can be made to visit these sacred places and get the blessings of Agastiar Maharishi and all siddhas. It was a surprise for seeing the post this morning. My humble pranams at the lotus feet of Guru Agastiar and deepest gratitude to Karthikeyan Ayya for announcing the dates.

    ReplyDelete
  5. Thanks ayya for updating the dates...really blessed...

    ReplyDelete
  6. Om Agathiar Sitthar thiruvadigal poetry poetry

    ReplyDelete
  7. Om agathisaya nama. thank you karthikeyan ayya. I hope our family will visit all these places with the blessings from our guru thavathiru aarumuga arangamaga thesigar, Ongarakudil,Thuraiyur,Trichy,
    OM SARAVANA JYOTHIYAE NAMO NAMA
    OM SARAVANA JYOTHIYAE NAMO NAMA
    OM SARAVANA JYOTHIYAE NAMO NAMA

    ReplyDelete
  8. I visited Nambi malai and also kargodhaganallur and it was the most beautiful experience. I will write to Karthikeyan Ayya about the trip and how Agastiar Peruman made super arrangements. I am eternally grateful to Agasiar Maharishi.

    ReplyDelete
  9. great experience in oothimalai.thank u karthikeyan

    ReplyDelete
  10. KARTHIKEYAN SIR WAITING TO HEAR ABOUT KARGODAHANALLUR POOJA .I AM WAITING EAGERLY FOR THE POST.

    ReplyDelete