​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 7 February 2015

குளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும், இனிய காலை பொழுதாக விடியட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்!

நிறைய படிக்கும் எண்ணம் உள்ள மனதிற்கு, புரிந்துகொகிற வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும். சமீபத்தில், அகத்தியர் பற்றி படித்த பொழுது , அவர் காட்டிய ஒரு எளிய வழியை தெரிந்து கொள்கிற ஒரு வாய்ப்பு கிடைத்தது. யாம், பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டுமே என்கிற எண்ணத்தில் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"சித்தன் அருளில்" "இனிய இல்லற வாழ்விற்கு" என்று ஒரு தொகுப்பு வந்தவுடன், அட! இத்தனை எளிய வழிகள் இருக்கிறதா என்று, படித்து, நடைமுறைபடுத்தி அதன் பயனை உணர்ந்த நான், மேலும் தேடலானேன். அப்பொழுது குளிக்கும் பொழுது சொல்லவேண்டிய ஒரு ஸ்லோகத்தைப் பற்றி அகத்தியப் பெருமான் மிகப் பெருமையாக கூறியதை கீழே தருகிறேன்.

அகமர்ஷணம் என்கிற ஒரு தொகுப்பிலிருந்து, ஒரு ஸ்லோகத்தை அவர் கூறி, இதை குளிக்கும் பொழுது குறைந்தது மூன்று முறை ஜெபித்து வந்தால், "பிரம்ம ஞானம்" ஏற்படும் என்று கூறி இருந்தார். உடனேயே ஒரு அவா. அதை தமிழில், பிரிண்ட் போட்டு, குளிக்கும் அறையில் ஒட்டிவிட்டேன். யாரெல்லாம் அதை பார்த்து விரும்பி சொல்கிறார்களோ, அவர்களுக்கு அதன் பலம் கிடைக்கட்டும் என்கிற எண்ணம் தான். குழந்தைகளை பொருத்தவரை, சிறு வயதிலேயே, மந்திரம் மனதுள் ஏறிவிட்டால், அவர்கள் மனம் எளிதில் செம்மைப்படும். நம்மை போன்றவர்களுக்கு, இப்பொழுதேனும், ஏறினால், நம் வாழ்க்கையை, சமன்படுத்திக் கொள்ளலாம். ஓரளவுக்கு, கவனமும், ஆன்மீகமும் நம்முள் புகுத்துவிட்டால், நாம் தேடுகிற நிம்மதியை, இருக்கும் இடத்திலேயே, நல்ல விஷயங்களை செய்து, கூறி நன்மை அடைந்துவிடலாம்.

"ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிர் அஹமஸ்மி
ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரம்மா அஹமஸ்மி 
யோ அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி 
அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி 
அஹமே வாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹாஹா"

இதை, நகல் எடுத்து, குளிக்கும் அறையில் ஒட்டி வைத்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும், பயன்பெற உபயோகித்து, அகத்தியர் அருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மந்திரம் என்பது, மனதை செம்மைபடுத்தி அதன் திறனை, நமக்கு உணர்த்துவதர்க்காகத்தான். அதை கூறும் பொழுது ஏற்படுகிற அதிர்வலைகள், நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, உடலுக்கு உரத்தை தந்து, புத்தியை தெளிவுபடுத்தும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

13 comments:

 1. Thank you very much for this lovely mantra as told by Agastiar Peruman. Aum Sri Lopamudra Sametha Agasteyaya Namonamaha.

  ReplyDelete
 2. Thank sir for sharing
  om agatheesaya namaha
  om agatheesaya namaha
  om agatheesaya namaha

  ReplyDelete
 3. Ithan porul Thamizhili solla mudiumaa??

  ReplyDelete
 4. "Ardhram jwalathi jyOthirahamasmi | jyOthir jwalathi brahmAhamasmi
  |yOhamasmi brahmAhamasmi | ahamasmi brahmAhamasmi |
  ahamEvAham mAm juhOmi swAhA(ha)||"
  --- mantra 67, yajna nArAyaNa upanishad, yajurvEdha.

  [I am that Supreme Light which shines as the substratum of the liquid element. I am the supreme
  light of Brahman which shines as the inner-most essence of all that exists. In reality, I am the same infinite
  Brahman even when I am experiencing myself as a finite self owing to Ignorance. Now by the onset of knowledge
  I am really the Brahman which is my eternal nature. Therefore I realise this identity by making
  myself, the finite self, an oblation into the fire ("juhOmi swAha-ha") of the infinite Brahman which I am always.
  May this oblation be wellmade.]

  source: https://groups.yahoo.com/neo/groups/ambaa-l/conversations/messages/6363

  ReplyDelete
  Replies
  1. Suresh Sir, Can you please tell me which mantra is the correct version? The one given by Agnilingam ayya who has quoted Agastiar Maharishi or the above Yajuveda text that you have quoted. I have been reciting the mantra given by Agnilingam ayya. Now I am confused.

   Delete
  2. இரண்டுமே ஒன்றுதான். இரு மொழிகள். உங்களுக்கு எது எளிதாக மனதில் நிற்கின்றதோ, அதை தேர்ந்தெடுங்கள்.

   Delete
 5. Thank you very much for sharing this excellent information.

  ReplyDelete
 6. அகமர்ஷண சூக்தத்தின் தமிழ் வரி வடிவம் : -

  ஐம்பூதாக்னி யதுவும் யாமே
  ஐயுருவாக்னி யதுவும் யாமே
  யாமில் யாவும் யாவையும் யாமே
  யாமறிவாவது யாவும் யாமே
  யாமரியாதது யாவும் யாமே
  யாமில் யாமாய் யாமும் உளமே
  யாமே பிரம்மம் ! யாமுள் பிரம்மம்
  யாமில் யாமே யாமா யானோம்!
  யாமில் பிரம்மம் யாகம் பிரம்மம்
  யாமில் ஓமம் யாமே யக்னி
  யாமா யக்னி யானோம் ஜோதி
  யாமே யாக்கம் யாமே யக்னி
  யாக்கை யழியும் யாகத்தீயுள்
  யாமும் பிரம்மம் யாமாய் பிரம்மம்
  யாமே பிரம்மம் யாவும் யாமே..!!

  இது அன்றாடம் கண் விழித்ததிலிருந்து கண் உறங்கும் வரை ... நமது அந்தந்த செயலுக்கான துதிகள்... ஸ்ரீஅகஸ்திய விஜய வெளியீடான “தெய்வீகமாய் வாழும் வழி” புத்தகத்தில் காணலாம்.. புத்தகம் ரூபாய் 20/- புத்தகம் வேண்டுமாயின் இவ்வினைப்பின் முகவரிகளை நாடுக :- http://www.agasthiar.org/store.htm

  ReplyDelete
 7. Last week, I was in Chennai and took a Bhrigu Rishi jeeva nadi reading from Shri RT Selvam of Tiruvottiyur. The humility, depth and advanced aangeegam of Shri Selvam was obvious. Bhrigu Rishi was kind enough to give a long and detailed insight into my problems and remedies therefor. I have no hesitation in recommending that those who are happen to travel to Chennai would benefit from jeeva nadi reading from Selvam. Incidentally, Selvam was closely involved in the recent Bhirgu pooja celebrations at Marudheri.

  ReplyDelete
 8. Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete
 9. Bhrigu rishi jeeva naadi address nd no pl. Tnx

  ReplyDelete
  Replies
  1. Sri RT Selvam
   51/8, Manickam Nagar,
   Ground floor, 4th Cross Street,
   Behind Ajax Bus Terminus,
   Thiruvottriyur, Chennai-600019.
   Cell No:9952026908 / 9976048004

   Delete