​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 28 October 2014

கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஞானபீட திருக்கோயிலில் 108 சர்வ தோஷ நிவாரண மகாயாகம்


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஞானபீட திருக்கோயிலில், அகத்தியப் பெருமானின் உத்தரவால், 08/01/2015, வியாழக்கிழமை அன்று சித்தர் நெறியில் 108 சர்வ தோஷ நிவாரண மகாயாகம் நடத்திட தீர்மானித்துள்ளார்கள். சித்தன் அருளுக்கு வந்த அழைபிதழை, அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என தீர்மானித்து, உங்கள் கரங்களில் தந்து, அகத்தியர் சார்பாக உங்களை அழைக்கிறேன்.

எல்லோரும் சென்று யாகத்தில் கலந்து கொண்டு அவர் அருளை பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.

கார்த்திகேயன்  

4 comments:

 1. Ayya we are waiting for your arul.please post the agathiyar arul.today thursday.

  nandri

  ReplyDelete
 2. மிக்க நன்றி ஐயா.. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..

  ஓம் சரவணா பாவ..

  ReplyDelete
 3. தற்போது ஜீவநாடி எங்கு கேட்க முகவரி தாங்கள் அய்யா

  ReplyDelete