​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 23 October 2014

ஒரு சிறு வேண்டுதல்!

நம் தமிழ் மொழியில் ஒரு பழ மொழி உண்டு.  யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். அதுபோல், நமக்கு சித்தன் அருளை தந்து, அகத்தியப் பெருமானின் அறிவுரைகளை  வழங்கி சென்ற என் நண்பரின் மறைவு தியதி  இந்த மாதம் 26/10/2014 (ஞாயிற்று கிழமை) அன்று வருகிறது.

வாழ்க்கையின் உலக இன்பங்களில் திளைத்து செல்லும் நமக்கு, அன்மீகப்பாதையில், சித்தர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் ஆசிகளை வாங்கித்தந்து, பலரின் வாழ்க்கையை செப்பனிடுவதே தன் கடமை என்று வாழ்ந்து சென்ற அந்த புண்ணிய ஆத்மாவுக்கு, நினைவார்த்தமாக நாம் அனைவரும் ஏதேனும் ஒரு நல்லது செய்ய வேண்டும், என்பது என் வேண்டுகோள்.  இத்தனை அருளை வாரி வழங்கிய அந்த ஆத்மாவின் நினைவாக, ஒருவருக்கேனும் அன்றய தினம் (26/10/2014) "அன்னதானம்" செய்யுங்கள். அது போதும். இதுவே என் வேண்டுதல். இதை நான் கட்டாயப்படுத்தவில்லை,ஆகவே யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது!

இத்தனை வாரி வழங்கிய அந்த குருவுக்கு செய்வது, அகத்தியப் பெருமானை, மகிழ்விக்கும்.  அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.

ஓம் லோபாமுத்திரா சமேத அகதீஸ்வராய நமஹ!

கார்த்திகேயன்

 

3 comments:

 1. அண்ணா தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  மனம் இருக்கிறது, அகத்திய மகான் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்

  ஓம் சாய் அகத்திசாய நம;

  ReplyDelete
 2. ஓம் லோபாமுத்திரா சமேத அகதீஸ்வராய நமஹ!
  அன்னதானம் செய்வேன்

  ReplyDelete