​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 22 October 2014

ஓதியப்பர் @ சென்னை!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எல்லோருக்கும் மறுபடியும் "தீபாவளி நல்வாழ்த்துக்கள்".

சில தினங்களுக்கு முன் ஓதியப்பர் சென்னையில் குடிவரப் போகிறார் என்று கூறியிருந்தேன். அதை பற்றிய ஒரு சில தகவல் கிடைத்தது. அதை உங்களுடன் இன்று தீபாவளி தினத்தில் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலில் சென்னையில் பிரதிஷ்டை பண்ணப் போகிற, அவரின் படத்தை கீழே தருகிறேன்.

திரு சிவகுமார் என்கிற ஓதியப்பரின் அடியவர் ஒருவர், பக்தர்கள் துணையுடன் இந்த ஓதியப்பர் சிலையை சென்னை கிழக்கு தாம்பரம் மாடம்பாக்கம் அருகில் பதவஞ்சேரியில் (அகரம் தென்) 'திரிபுரசுந்தரி உடனுறை கயிலைநாதர்' திருகோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டி உத்தரவு வாங்கியுள்ளார். கோவில் கட்டுவது, பிரதிஷ்டை என்றாலே பக்தர்களின் உதவி நிறையவே தேவைப்படும். அதுவும், ஓதியப்பருக்கு என்றால் உடனேயே எப்பாடுபட்டேனும் பங்கு பெற துடிக்கும் பக்தர்கள் இங்குள்ளார். அதை மனதில் கொண்டு, ஒரு புண்ணிய காரியத்தில் பங்கு பெற்று நீங்கள் அனைவரும் அவர் அருள் பெற வேண்டும் என்று எண்ணி இந்த தொகுப்பை, ஓதியப்பரை உங்கள் முன், சமர்ப்பிக்கிறேன். திரு சிவகுமார் அவர்களை மேற் சொன்ன கோவிலில் சென்று கண்டு தொடர்பு கொள்ளுங்கள்.

தவத்திரு சிவகுமார் அய்யா அவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கு பதிவை அளித்துள்ளார்கள். விருப்பமுள்ள அன்பர்கள் திருப்பணி கொடை வழங்கவும், விவரத்தை பதிவு செய்யவும் அய்யன் கோரினார்.

SIVAKUMAR. A
SB A/C NO.: 1590 101 000 27439
IFSC CODE: ANDB0001590
ANDHRA BANK
MADAMBAKKAM BRANCH
CHENNAI 600 126

சென்னையில் வசிக்கும் அன்பர்களே, நம் ஓதியப்பரை, பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கார்த்திகேயன்!:

1 comment:

  1. Thanks for your kind information regarding Othiappar at Chennai. I have sent my small contribution and kindly inform us the contact number of Mr.Sivakumar to get further information regarding Pradhatchanam of Othiappar at Chennai. Once again thank you so much for your excellent inputs regarding Sithars and religious issues. Congrats. Would like to get your contact number also.

    ReplyDelete