​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 25 October 2014

ஒரு செய்தி > ஓதியப்பர் உங்களுக்கு தந்த பரிசு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு தகவல் கிடைத்தது. ஓதியப்பர் மீது பாடப்பட்ட எத்தனையோ பதிகங்கள், பாடல்கள் இருக்கிறது. அவற்றில் ஒன்று "வேல் மாறல்" எனப்படும். இதை தினமும் வீட்டில் கேட்டாலோ, கூட சொன்னாலோ, ஒரு மண்டலம் நிறைவு பெற்றால், நம்மை சுற்றி எப்பொழுதும் ஓதியப்பர் கவசமாக நின்று காப்பாற்றுவார், என்று கூறினார்.  எல்லா தடங்கல்களும் விலகி, உடல் உபாதை இருந்தால் அதுவும் சரி ஆகி, நம் எதிர்பார்ப்பு தர்மத்துக்கு உட்பட்டதாக இருந்தால் உடனே நிறைவேறவும், அவர் அருள் புரிவார் என்று கேள்விப்பட்டேன். நல்ல விஷயம் ஒன்று கேள்விப்பட்டால் விட்டுவிடக் கூடாது. ஆகவே வலைப்பூவில் தேடி, அந்த பதிகத்தை MP3 தொகுப்பு வடிவத்தில் டவுன்லோட் செய்து கீழே உள்ள தொடுப்பில் சேமித்து வைத்திருக்கிறேன்.

எல்லா அடியவர்களும் அதை எடுத்து, உபயோகித்து இறை அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.  யாம் பெற்ற இன்பம் இவ்வையகத்து அன்பர்கள் பெறுக என்கிற எண்ணத்தில் இதை உங்கள் முன், இந்த மகா கந்த சஷ்டியின் போது அகத்தியரின் அன்பு பரிசாக தருகிறேன்.

எல்லோரும் இன்புற்று நலம் பெறுக.  தொடுப்பு (லிங்க்) கீழே உள்ளது.  

கார்த்திகேயன்!

குறிப்பு:- எதனால், இது இப்போது தெரிவிக்கப்பட்டது என்று புரியவில்லை. உங்களில் யாரோ ஒருவருக்காக கூட இருக்கலாம். இதை கேட்பவரின் வேண்டுதலுக்கு ஏற்ப அந்த ஓதியப்பரே நேரடியாக இறங்கி வந்து அருள் புரிய வேண்டி தந்தார் என்று என் மனம் சொல்கிறது.

16 comments:

 1. Read:

  http://kaumaram.com/text_new/velmaral_u.html

  ReplyDelete
 2. Real Video

  Pls click

  https://www.youtube.com/watch?v=5h5hBCz7nC4

  ReplyDelete
 3. http://www.youtube.com/watch?v=5h5hBCz7nC4

  ReplyDelete
 4. அண்ணா, ஓம் சாய் அகத்திசாய நம;

  மிக அற்புதமான பரிசு, கவசமாக இருந்து நம்மை எல்லாம் காப்பாற்றி வருகிறர், நன்றி

  ReplyDelete
 5. அகத்தியர் பாதம் பணிகிறேன்.... அகத்தியர் அடியேனை நல்வழியில் செலுத்துவாராக....

  ReplyDelete
 6. Agaththiyar nmam vazhga... அடியே நல்வழிப்படுத்துவாராக...

  ReplyDelete
 7. Thank you for sharing the link karthikeyan sir. But unable to download due to some problems. Can u suggested alternative for downloading.

  Om Saravanabava
  nalini

  ReplyDelete
 8. Ayya,
  Not able to download the file. I guess it reaches the maximum limit. Can you please update

  ReplyDelete
 9. அகத்தியர் அடியவர்களே. டவுன்லோட் லிங்கில் கிளிக் பண்ணினதும், ஒரு பிளேயர் திறக்கும். அந்த பக்கத்தின் மேலே பார்த்தால் ஒரு டவுன்லோட் பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால், உங்கள் கணினிக்கு டவுன்லோட் ஆகும். சற்று நேரம் எடுக்கும். அவ்வளவுதான்.

  கார்த்திகேயன்!

  ReplyDelete
 10. Try this link also.

  http://www.mediafire.com/listen/jw03kwygu1fcofp/Vel_Maaral_Mahamanthiram.mp3

  ReplyDelete
 11. Please read it

  http://rightmantra.com/?p=14355

  ReplyDelete
 12. வணக்கம் அண்ணா

  வேல் மாறல் மகாமந்திர mp3 பைலில் முதல் 2 நிமிடம் மட்டும் வேல் மாறல் பாடல் உள்ளது. இது சீர்காழி அவர்கள் பாடியது. தயவுசெய்து முழுமையான பாடலை பதிவேற்றவும்

  நன்றி

  ReplyDelete
 13. மிக சரி
  நன்றி

  ReplyDelete
 14. நன்றிங்க சிவா,

  ReplyDelete