​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 2 May 2026

சித்தன் அருள் - 2203 - கும்பமலை சுந்தரலிங்கனார் கோவில் கும்பாபிஷேகம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கும்பமலை சுயம்பு சுந்தரலிங்கனார் கோவில், லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவில் கும்பாபிஷேகம் 29/05/2026 அன்று  சாப்டூரில் நடை பெறுகிறது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை கீழே சமர்ப்பிக்கிறோம். சென்று பங்குபெற்று, இறை, குருநாதர் அருள் பெறுக!





ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!
   

சித்தன் அருள் - 2202 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2 

நாள் : 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
நேரலை :-  https://www.youtube.com/live/C5OQ5pL4GnY

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.


அம்மையே, அப்பனே, அனைவருக்குமே ஆசிகள். 


கவலையில்லை.  அனைவரையும் உணர்ந்தவன், அறிந்தும் கூட சித்தர்கள். 


இதனால் நல்விதமாகவே, இன்றைய நன்னாளில் (அட்சய திருதியை), நல்விதமாகவே, தேரையன் வந்து வாக்குகள் செப்புவான், பலமாக. 


புதுமையான விஷயங்கள் எல்லாம் சொல்வான். அதை பயன்படுத்திக் கொள்ள நன்று. 


ஏன், எதற்கு என்றால், இவ்வுலகம் மிகவும் மோசமான, பின் அழிவுகளில் தான், வருங்காலத்தில் கூட செல்லும். 


இதனால் நீங்கள் அதை பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் தெளிவுபடுத்தினால், புண்ணியங்கள். புதுமையான விஷயங்கள். 


முதலில் உங்களை நீங்கள் வெல்லுங்கள். 


பின்பு, பின் தானாகவே பிறருக்கும் சொல்லும் பாக்கியம் உங்களுக்கு கிட்டும். இதனால் எதை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா, நீங்களே. தேரையர் வரப்போறாரு. அகத்தியரோட ஆசிகள்.


அடியவர் :- உங்களை முதல்ல வெல்லுங்கப்பா. வென்றதுக்கு அப்புறம் எல்லாம் கிடைக்கும், தானா கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்க. தேரையர் பெருமான் வந்து இன்னைக்கு புதுமையான விஷயங்கள் எல்லாம் வந்து நமக்கு சொல்லித் தருவாங்க அப்படின்னு குருநாதர் அகத்திய பெருமான் சொல்லி இருக்காங்க இப்போ.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே நல்லா சொல்லப்போறாராம், அவர். கேட்டுக்கணும். அவர் என்ன, அதனால அவர் என்ன சொல்றாரோ, தேரையர், அதைப்படி நம்ம செய்வோம்ன்றாரு. 


===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 
===========================

அறிந்தும் ஆதி அண்ணாமலையும், உண்ணாமலை அறிந்தும் வணங்குகின்றேனே குருவானவனை, அகத்தியனை கூட. 

நல் ஏது என்று அறிந்தும் பல வகையில் கூட, பல யுகங்களில் கூட வாழ்ந்த எண்ணற்ற கோடி பின் சித்தர் எதை என்று அறிந்து, அறிந்தும் குருநாதன் சரியாகவே வழிநடத்தி யாம் கற்றுக்கொண்டதை பின் உங்களுக்கும் கற்றுத் தரப்போகின்றேன், குருநாதன் உத்தரவாலே.

அடியவர் :- குருநாதர் அகத்திய பெருமான் அவருக்கு சொல்லிக் கொடுத்ததை, அவருடைய உத்தரவால உங்களுக்கெல்லாம் நான் சொல்லித் தர்றேன்ப்பா சில விஷயங்கள், அப்படின்னு தேரையர் பெருமான் இப்ப வந்து சொல்லி இருக்காங்க நமக்கு.

தேரையர் சித்தர்:- அறிந்தும் எதை, ஏது அறிந்தும் இவை புரிந்தும் குருநாதன் சரியாக பின் உரைத்திட்டு அவை செய்யவில்லை என்றாலும் சில தோஷங்கள் ஏற்பட்டுவிடும். இதனாலே சீடன் வந்து செப்புகின்றேன்.

அடியவர் :- அதாவது குருநாதர் ரொம்ப பெரிய இடத்துல இருக்கிறார், அகத்திய பெருமான் சொல்லி நாம சில விஷயங்களை செய்யல அப்படின்னா, நமக்கு சில தோஷங்கள் வந்துரும். அதனால அவருடைய சிஷ்யனான நான் வந்து சொல்றேன் அப்படின்னு சொல்றாங்க.

தேரையர் சித்தர்:- எதை, புதுமையான விஷயங்களை, ஏது என்று அறிய. ஏனென்றால் காலகட்டத்தில் பல வகையான இன்னல்கள் மனிதனுக்கு தோன்றப் போகின்றது. அதை முதலில் நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள், விவரமாகவே சொல்கின்றேன்.

அடியவர் :- அதாவது நமக்கு நிறைய கஷ்டங்கள் எல்லாம் வரப்போகுது. அதை எப்படி நிவர்த்தி பண்ணிக்கிறதுன்னு சில புதுமையான விஷயங்களை சொல்லப்போறேன். அதை வச்சு நீங்க பயன்படுத்திக்கோங்க அப்படின்றாங்க.

தேரையர் சித்தர்:- அறிந்தும் ஏது என்று புரிய, பின் அனைவரும் பின் அதாவது மயக்கத்திலே உண்ணும், பின் மயக்கத்திலே இதனால் ஒரு பாடலை சரியாக அகத்தியன் குருநாதன் சொல்கின்றானே, பின் முருகனை நோக்கி பாடுங்கள், பின்பு உரைக்கின்றேன்.

அடியவர் :- நம்ம ஐயா ஒரு பாட்டு படிக்க சொல்றாங்க இப்போ.

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் வந்து சாப்பிட்டு மயக்கத்துல இருப்பாங்க.

அடியவர் :-  உண்ட மயக்கத்துல 

சுவடி ஓதும் மைந்தன் :- உண்ட மயக்கத்துல இருப்பாங்க, அதனால….

அடியவர் :-   தெளிவுறதுக்காக ஒரு பாடல்.

சுவடி ஓதும் மைந்தன் :-  பாடுங்க அய்யா.

முருகரைப் பற்றி ஒரு பாடல்.


===========================
# மிக அருமையான “மருதமலை மாமணியே முருகய்யா” பாடல் பாடினார்கள், அடியவர்கள். அவசியம் பின் வரும் இணைப்பில் உள்ள அத பாடலை ஒரு முறை கேளுங்கள்
===========================

பாடகர் அடியவர் :- ( மருதமலை மாமணியே முருகய்யா …அடியவர் :- ) 
பாடல் நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=3h19m51s

அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள்….பாடல் பாடி முடித்த பின்னர் வாக்குகள் ஆரம்பமானது…அடியவர் :- ) 

===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 
===========================

ஆதியான அருள் ஈயும் கந்தனே போற்றி. போற்றியே, அறிந்தும் அனைத்துலகும் காப்பாய். 

மீண்டும், பின் அனைவருக்குமே ஏது என்று புரிய, பின் நலன்கள் ஏற்பட, ஓர் முறை எழுந்து நின்று, மீண்டும் முருகனை நோக்கி பாடுங்கள் பாடலை. ஆடுவான் முருகன். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாருன்னா, எல்லாரும் எழுந்து நில்லு, உலகத்துல இருக்கிற எல்லாருக்காக வேண்டிக்கோங்கன்றாங்க. உலகத்துல இருக்கிற வந்து எத்தனையோ பேருக்கு ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க, வந்து எல்லாருக்காக ஒரு வேண்டுதலை வச்சு மீண்டும் இந்த பாடலை வந்து பாடுங்க; முருகன் விளையாடுவார், அப்புறம் நான் வாக்கு சொல்றேன்றாரு. 

அடியவர்கள் :- ( அனைவரும் எழுந்து நின்று,  மருதமலை மாமணியே முருகய்யா பாடலை மீண்டும் பாடினார்கள்…. முருகப்பெருமான் வந்து ஆடுவார் என்று தேரையர் உரைத்த படி …மேடையில் யாரும் அறியா வண்ணம் ஒரு சிறுவன் முதலில் வந்து நின்று அழகாக ஆடின தருணம் அது…. பின் வரும் நேரலையில் கண்டு களித்து பரவசம் அடையுங்கள் ….)

பாடல் நேரலை :-  https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=3h27m01s

அடியவர்கள் :- ( உலக நன்மைக்காக 1 நிமிடம் தியானம் செய்தார்கள்……அதன் பின்னர் இடைக்காடர் சித்தர் வாக்குகள் உரைத்தார்கள். )

===========================
# அன்புடன் இடைக்காடர் சித்தர் வாக்கு 
===========================


இடைக்காடர் சித்தர்:-   இதைத்தானே நன்கு பின் தெரிவித்துள்ளேனே. அனைவருமே வெற்றிக்காக ஓடிக்கொண்டிருக்க, நீங்களும் வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருங்கள்.

அடியவர் :- இடைக்காடர் வந்திருக்கார்.

சுவடி ஓதும் மைந்தன் :- இடைக்காடர் சொல்லி இருக்காரு, அனைவருமே ஒரு வெற்றிக்காக போயிட்டு இருக்காங்க, ஓடிட்டு இருக்காங்க. அவங்க அவங்க வெற்றியை வந்து பெறுவதற்காக ஓடிட்டு இருக்காங்க வந்து. நீங்களும் ஓடுங்க. 

இடைக்காடர் சித்தர்:-  ஓடியே பக்திக்குள். 

சுவடி ஓதும் மைந்தன் :- பக்திக்குள் ஓடுங்க. 

இடைக்காடர் சித்தர்:-  வெல்லலாமே, அனைத்துமே.

சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வந்து பக்திக்குள்ள ஓட சொல்றாங்க. வெற்றினா என்ன? இங்க பக்தியை தேடி ஓடுங்க. எல்லாத்தையும் வென்றலாம். பக்தியை தேடி ஓடுனா எல்லாத்தையும் வென்றலாம் அப்படின்றாங்க.

இடைக்காடர் சித்தர்:-  அறிந்தும், உங்களுக்கு புதுமையான வாய்ப்பாடை கற்றுக் கொடுக்கின்றேன். அதை கற்றுக் கொள்ளுங்கள், தெளிவு அடையுங்கள்.

அடியவர் :- புதுமையான வாய்ப்பாக நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறோம். அதை நீங்க கத்துக்கோங்க, தெளிவடையுங்க அப்படின்றாங்க.

===========================
# திருஅண்ணாமலையில் மக்களின் செயல்கள் பார்த்து வெறுத்து போன ஜீவ சமாதியாகி உள்ள ஞானியர்களை மீண்டும் எழுப்ப வேண்டும் 
===========================

இடைக்காடர் சித்தர்:- அறிந்துமே, ஏது என்று புரிய, ஏன், எதற்காக அண்ணாமலையிலே, எதற்கு, இவை தன் வாக்குகள் செப்ப வந்தேனே, செப்பினார்களே பல சித்தர்கள். ஏனென்றால் உலகத்தைக் கண்டு கண்டு, மக்களை கண்டு கண்டு, பல ரிஷிகள், குருமார்கள், அறிந்தும் கூட அப்படியே பின் ஜீவ சமாதிகள். அவர்கள் எல்லாம் நிச்சயம் பல பரிசுத்தமான நீங்கள், அதாவது மனிதர்கள், வேண்டி வேண்டி, அனைவருக்காக வேண்டி வேண்டி நின்றால், அவ்வான்மாக்கள் மகிழ்ச்சி பொங்கி, பின் வரும் உங்களையும் ஆசீர்வதிக்கும். அவ்வளவுதான்.

சுவடி ஓதும் மைந்தன் :- மனிதர்கள் வந்து, சித்தர்கள், ஞானிகள் எல்லாம் வெறுத்து போயிட்டாங்களாம். பார்த்து பார்த்து, என்னடா இப்படி இருக்காங்க வந்து, இப்படி இருக்காங்கன்னு சொல்லிட்டு… ஞானிகள் பல தவம் செஞ்ச பல வருஷங்களா வந்து, அவங்க எல்லாம் மனுஷனை பார்த்து வெறுத்துட்டு, வேணடா அப்பான்னு சொல்லிட்டு, அங்கங்க ஜீவ சமாதி ஆயிட்டாங்களாம் மலையில, திருவண்ணாமலையில. ஆனால் நீங்கள் அனைவரும் மனசால ஒன்று கூடி  இறைவனை நாம  பிறருக்காக வேண்டுகின்ற பொழுது, அந்த ஞானிகள் மீண்டும் உயிர் பெறுவார்கள். பரவாயில்லடா, மனுஷர்கள் வந்து இவ்வளவு பக்தியில இருக்காங்க, நம்ம வந்து மக்களுக்கு போய் சேவை செய்வோம்னு திருப்பி வருவாங்களாம். அப்ப நம்ம குறைகள் நீங்கும். 

இடைக்காடர் சித்தர்:-  எதற்காக இவ்வளவு கூட்டு பிரார்த்தனை, எதை என்று புரிய. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, அதாவது ஒன்று கூடி அண்ணாமலையிலே, ஏது என்று கூட, இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றது. அங்கெல்லாம் செய்தால் நிச்சயம், ஏனென்றால் ஒரே ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இடத்தில் கூட, பல ஞானிகள், ஜீவ சமாதிகள், அவர்கள் எல்லாம் தட்டி எழுப்ப வேண்டும். 

இடைக்காடர் சித்தர்:-  அதை நிச்சயம் பின் மக்களே, ஏனென்றால் மக்கள் ஏது என்று புரியாமல், எதை என்று கூற பொறாமை, போட்டி, இன்னும் பல கலகங்கள் (சண்டைகள்), பல வகையிலும் கூட பின் பொய் சொல்லுதல், இவையெல்லாம் பின் சொல்லி சொல்லி கலியுகத்தில் பின் தொடர்கின்ற பொழுது, பின் வெறுத்து விட்டார்கள். 

இடைக்காடர் சித்தர்:-   அவர்கள் எல்லாம் எழுப்புகின்ற பொழுது, அதாவது மனிதன் தன்னைத்தானே உணர்ந்து, இறைநாட்டத்தில் சென்று, அறிந்தும், புரிந்து, ஏது என்று இவ்வளவு பின் பிறருக்காக பின் வாழுகின்ற பொழுது, சித்தர்கள் ஏது என்று புரிய, மீண்டும் அதாவது பல ஞானியர்கள் எழுந்து வந்து உங்களையும் ஆசீர்வதிப்பார்கள். 

இடைக்காடர் சித்தர்:-   பின் அவ் ஆசீர்வாதங்கள் நீங்கள் பெற்று, மற்றவர்களிடதிலும் கூட பின் இன்னும் சக்திகள் கொடுப்பார்கள். அவ்வளவுதான் நிச்சயம் தன்னில் கூட. 

இடைக்காடர் சித்தர்:- இவ்வாறாக பின் உலக நன்மைக்காக ஏது என்று செய்கின்றார்களே என்று அவர்களும் இறங்கிச் செய்வார்கள். அதனால்தான் மனிதன் நினைத்தால் அனைத்தும் செய்ய முடியும். அதனால்தான் மனிதனை வைத்தே மனிதன் பின், எவை என்று புரிய,, பின் ஏற்படுத்துகின்றோம் இறைவனை காண. 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? எல்லாம் மனுஷன் கையில தான் இருக்குதுன்றார் இறைவன். கலியுகத்தை தொடங்குறதுக்கு முன்னே வந்து மனுஷன் மாறிட்டான். எல்லாம் மாயை வந்துருச்சு. மாயையில சிக்கிக்கினாங்க. அழிவு வந்துருச்சு. அதனால அது மாயையில சிக்கி போட்டி, பொறாமை, பொய் சொல்றது, ஏமாத்துறது. இதெல்லாம் வந்து கண்டு கண்டு என்ன சித்தர்கள் என்ன சொல்லிட்டாரு வந்து… இந்த மனுஷனுக்கே நல்லது செய்யக்கூடாதுன்னு சொல்லி நினைச்சுட்டு அவங்க அவங்க அங்கங்க என்ன பண்ணிட்டாங்க ஐயா?

அடியவர் :- வெறுத்து போய் ஜீவ சமாதி அடைஞ்சிட்டாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- ஜீவ சமாதி அடைஞ்சிட்டாங்க. அப்ப நீங்க எல்லாம் ஒன்னு கூடி,  நல்லா பிறருக்காக மனம் கொண்டு, எல்லாருக்காக வேண்டிக்கொள்ளும் பொழுது அவங்க என்ன பண்ணுவாங்களாம்? அவங்களுக்கு தெரியுமாம். பரவாயில்லடா, மனுஷன் திருந்திக்கிறானே, ஏதாவது ஒன்னு செய்வோம்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாங்களாம்?

அடியவர் :- எல்லாம் எந்திரிச்சு வருவாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- எந்திரிச்சு வருவாங்க. நீங்க மக்களுக்காகவும் உங்களுக்கு மட்டும் நல்லது செய்யல, எல்லா மக்களுக்காகவும் நன்மை செய்கிறார். 

இடைக்காடர் சித்தர்:-  ஏது என்று புரிய அனைவருமே தான் தான் வெற்றியை காண ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் வெற்றிக்கான ஏது என்று புரிய ஓடுகின்றீர்களா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருமே தான் தான் வெற்றிக்கான ஓடுகின்றனார், ஓடிக்கொண்டே இருக்கின்றார். ஆனால் நீங்க எங்க ஓடுனீங்க கேட்கிறார். 

இடைக்காடர் சித்தர்:-  அதனால்தான் ஓட வைக்கின்றேன். காலச்சக்கரத்தின் படி. 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களையும் நான் ஒரு சாவியை கொடுத்து ஓட வைக்கிறேன்.

அடியவர் :- காலச்சக்கரத்தில் ஓட வைக்கிறார்.

இடைக்காடர் சித்தர்:-  அறிந்தும் பின் எழுது கோலை எடு 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சுவடி ஓதும் மைந்தன் அங்கு வரை பலகையை எடுத்து வைக்க சொன்னார்கள். ) 

இடைக்காடர் சித்தர்:-  இதைத்தன் சரியாகவே ஜாதக கட்டத்தை இட நன்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( ஜாதக கட்டத்தை எழுத சொன்னார்கள் ) 

===========================
# உலகம் அறியாத சித்தர்கள் ஜோதிட வகுப்பு ஆரம்பம்……
===========================



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!