​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 15 June 2022

சித்தன் அருள் - 1150 - அன்புடன் அகத்தியர் - உச்சிஷ்ட கணபதி, திருநெல்வேலி வாக்கு!






27/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம் : உச்சிஷ்ட கணபதி கோயில் மணிமூர்த்தீஸ்வரம். திருநெல்வேலி மாவட்டம். 

ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

நலமாக!!! நலமாக!!! இத்திருத்தலத்தில் பல அதிசயங்கள் உண்டு !!!என்பேன். உண்டு என்பேன் எதற்காக சிலசில பலத்த கர்மாக்கள் மனிதனுக்கு பின் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது கலியுகத்தில். பின் எதனையென்று கூற.....

ஆனாலும் கர்மாக்கள் சிலவையே (சிறிதளவே) என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் பலத்த எதையென்று கூற உச்சம்பெற்ற... அப்பனே பாவங்கள் அப்பனே ""அஷ்டமா"" எதையென்று கூற அவ் ""அஷ்டமா!!!!!(8 வகையான பெரும் பாவங்கள்) கர்மாக்களை பெற்றவர்கள் எதையென்று கூற நிச்சயம் வாழ்வில் உயர மாட்டார்கள் என்பேன்.

எத்திருத்தலத்திற்கு சென்றாலும்... எதனை என்றாலும் கூட ஒன்றும் செய்ய இயலாது.

செய்ய இயலாது என்பேன்.

அதுமட்டுமில்லாமல் ஏதும் நடக்காது என்பேன்.அவ் அஷ்ட கர்மாக்களை நீக்கினால்தான் மனது தெம்படையும் என்பேன்.

அவை மட்டுமில்லாமல் அனைத்தும் நிறைவேறும் என்பேன். எதையென்று கூற பல பாக்கியங்கள் வந்து சேரும் என்பேன். 

அதனால் எதை என்று கூற அவ் அஷ்டகர்மத்தை வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் நிச்சயம் இறைவனை அடைய முடியாது என்பேன்.

கஷ்டங்கள் தான் கூடிக்கொண்டே இருக்கும். இவையென்று கூற .....

ஆனாலும் இவை தன் முன் ஜென்மத்தில் வந்தவையா??

இந்த ஜென்மத்தில் வந்தவையா?? என்று கேட்டால் நிச்சயம் அனைத்து ஜென்மங்களிலும் இருந்து வந்தவை!! இச் ஜென்மத்திலிருந்தும் வந்தவையே என்பேன். பிறப்பெடுத்தும் கூட....

இதனால் எதை என்று கூற இத்திருத்தலத்திற்கு வந்து கொண்டே சென்று கொண்டிருந்தால் அவ் அஷ்ட கர்மாக்களை அழிக்க முடியும் என்பேன்.

ஆனாலும் அதற்கும் எதை என்று கூற  இவ் பிள்ளையோன்(பிள்ளையார்) வரவழைக்க வேண்டும் என்பேன். இவன் அருள் இல்லாமல் நிச்சயம் இங்கு வர முடியாது என்பேன்.

ஆனாலும் பல மனிதர்கள் இங்கே வந்து வந்து பல அரசர்கள் இங்கே வந்து வந்து உயர்வுகள்  பெற்றடைந்தனர்....

ஆனாலும் சில மனிதர்கள் மாய பிறப்பில்  எதையென்று கூறாத அளவிற்கும் கூட... இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதைக்கூட மக்களின் கணிப்பு என்பதே இங்கு வந்தவர்கள் திடீர்!!! திடீரென்று கூட உயர்வுகள் பெற்றுக்கொண்டே செல்கின்றார்கள். செல்வங்களும் வந்து கூடிக் கொண்டே இருக்கின்றது. நலமுடன் வாழ்கிறார்களே ! ! என்று எண்ணி பலபல செய்கைகள் அற்ற பின் புத்தியில்லாத மனிதர்கள் இதனையும்  கெடுத்து விட்டனர். 

ஆனாலும் இவ் உலகத்தின் முதல் எதையென்று கூற பின்... பின்,  ......"""அ"""" என்ற வடிவில் வந்தவனே கணபதியே!!!! எதையன்றி ஆனாலும் அவந்தன் விடுவானா!! என்ன???

அதனால் நிச்சயம் இக்கலியுகத்தில் எதை என்று கூற  எதனை என்றும் கூறாத அளவிற்கும் கூட வெற்றிகள் உண்டு என்பதற்கிணங்க நிச்சயம் நல்லோர்களை இங்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றான் இன்னமும்கூட!!!!!

அதனால் நல்லோர்கள் தான் நிச்சயம் இங்கு வந்தடைய முடியும் மோட்ச கதியையும் அடைய முடியும். எதையென்று கூற சில கர்மாக்களையும் பின் நீக்கமுடியும். சொல்லிவிட்டேன்.

இதனால் எதை எதை என்று கூற பாண்டியனும் (நெடுஞ்செழியன்) இங்கு வந்து பல பல பெருமைகளை இங்கு நிகழ்த்தினான் என்பேன்.

கட்டபொம்மனும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) எதையென்று கூற... இங்கே வந்து எதையென்று கூற பல பல வழிகளிலும் வழிபட்டு சென்று பல அதிசயங்களை நிகழ்த்தினான் என்பேன்.

எதையென்று கூற ஆனாலும் கர்மாக்கள் எவை என்று விடாமல் சென்று கொண்டு இருக்க ஆனாலும் அவ் கர்மத்தையெல்லாம்... இங்கு நீங்கும்.

இதனால் அஷ்ட கர்மாக்களை நீக்கினால் அஷ்ட சித்துக்களை பெறலாம்....எதையென்று கூற இவ் கணபதியே கொடுப்பான் என்பேன்.

ஆனாலும் அதற்கு தீர்வுகள் கணபதியிடமே உள்ளது....எதையென்று கூற யானும் இங்கு பல தடவை வந்திட்டேன்.எதையென்று கூற பல சித்தர்களும் இங்கு வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள். மறைமுகமாக!!!!

அதனால் நல்லோர்கள் தான் இத்திருத்தலத்தை வந்து அடைய முடியும்!!! மற்ற யாரும் எதை என்று கூற எவ்வாறு நினைத்தாலும் இங்கே வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எதனையுமென்று அறிவதற்கு...

அதனால் இன்னும் பல சூட்சமங்கள் உண்டு எதனை என்று அறியாத அளவிற்கும் கூட வெற்றிகள் உண்டு... அனைவருக்கும் என்பேன்.

இதனால் எங்கெங்கு??? பலப்பல திருத்தலங்களும் அப்பனே...எதையென்று கூற தெரியாத அளவிற்கும் மறைந்து போயிற்று!!!!!!! அப்பனே!

கலியுகத்தில் இத் திருத்தலங்களைப் பற்றி இன்னும் ஏராளம் ஏராளமான வாக்குகளும் காத்துக்கொண்டிருக்கின்றது என்பேன். எதையென்று கூற....

ஆனாலும் ஓர் பிறவியில் எவையென்று கூறும் அளவிற்கு கூட.... பாண்டியன்(நெடுஞ்செழியன்) வரலாற்றைப் பார்த்தால் தோல்வியுற்றதற்காக... ஓர் ரிஷி சொல்லிவிட்டான். இதனால் பல திருத்தலங்களுக்கு அலைந்தான் அலைந்தான் எங்கெல்லாம் அலைந்தான்.

எதனையென்று கூற வெற்றி கொள்ள வேண்டுமே!!!! என்று கூட பல திருத்தலங்களுக்கு அலைந்து திரிந்து ஆனாலும் வெற்றியும் சில நேரங்களில் பெற முடியவில்லை... ஆனாலும் யோசனை!!!! இவையென்று கூட பலமாகவே!!! பலமாகவே!!!!...

"ஈசனை!!! நோக்கி எதையென்று கூறாத அளவிற்கும் கூட பக்திகள் செலுத்தினான்!!!

ஈசனே!!!!  நேரில் எதையென்று எவையென்று கூற ஆனாலும் வந்து கனவில்....எதையென்று ஆனாலும் சிலசில கர்மாக்களையும் நீ பெற்றிருக்கின்றாய்... அதை நிச்சயம் இங்குள்ள பின் திருத்தலத்திற்கு செல்!!! பின் நிச்சயமாய் அங்கே தங்கி "வா!!!! .....

பலக் கர்மங்கள்.. நிச்சயம் அழிந்திடும்.பின்பு வெற்றிகொள்வாய்.உன் பெயர்!!! புகழ்!!! எதையென்று கூற இவ்வுலகத்தில்...பின் உலகம் இருக்கும் வரை நிச்சயம் உன் பெயர் அழியாது.... என்று கூட கூறிவிட்டான். சொப்பனத்திலே!!!!

அதனால் அதை தேடி அலைந்து எதை என்று கூற இங்கே வந்தான்... ஆனாலும் எவையென்று கூற... இப்பொழுதும் கூட அவந்தன்....எதையென்று கூற பெயரும் நிலைத்திருக்கின்றது .

இதனையென்று கூற கண்டு கண்டு மகிழ்ச்சி அடைந்தான். அதனால் எவையென்று கூற பிள்ளையோனும் நேரில் வந்து பல ஆசிகளை தந்தான்.

இதனால் பல மனிதர்களுக்கும் பலப்பல அரசர்களுக்கும் இவற்றின் மூலம் தெரிவித்தான்... இதனால் பலப்பல திருத்தலங்களையும் வடிவமைத்தான் நல் விதமாகவே!!!!

எதையென்று கூற இதனால் அவந்தன் பெயர் கெடவில்லை....எதையென்று கூட எவையென்று கூற  இவ்வுலகத்தை பின் இருக்கும் வரை நிச்சயமாய் அவன் பெயர் நிச்சயம் வரும்!!!!

சொல்லிக்கொண்டே..... இன்னும்! இன்னும் !ஏராளம்! என்பேன்!!

அதனால் சில சில வினைகள் ஆட்கொண்டு ஆட்கொண்டு இருந்தாலும் இங்கு வந்து வணங்குபவர்களுக்கு நல் விதமாகவே கர்மாக்கள் அழிந்துகொண்டே... போகும்!!!.

ஓர் முறை!!!  இரு முறையல்ல!!!! 

பலமுறை வந்தடைய வேண்டும்!!!!!

எதையென்று கூறும் எவை எவை என்று கூறும் அளவிற்கும் கூட இன்னும் வெற்றிகள் தான் உண்டு என்பேன்.

தித்திக்கும்...!!! இவந்தனை வந்தடைந்து விட்டால் இன்னும் ஏராளமான விஷயங்கள் நடக்கக்கூடும்.

ஆனாலும் இதையென்று தெரியாமலேயே பின் கர்மம் செய்து எவையென்று கூற... அனைத்தும் தெரிந்து கர்மா செய்து கொண்டிருந்தாலே இவந்தன் நிச்சயம் விடமாட்டான் என்பேன்.

கர்மா அழிக்கும்!!!  எதையென்று கூற... அழித்து அருள் தரும் இடம் இத் திருத்தலம் என்பேன். எதையென்று கூற ஆனாலும் அப்பனே.... இங்கு உள்ளது நெல்லைப்பன் என்ற திருக்கோயில். ஆனாலும் அதன் அருகே திடீர் திடீரென்று சென்றுவிடுவார்கள். ஆனாலும் அப்பனே அவை எல்லாம் ஆகாது என்பேன்.

இங்கு சென்று நல் விதமாகவே அங்கு வணங்கினால்(முதலில் கணபதி தரிசனம் செய்து விட்டு நெல்லையப்பர் தரிசனம் செய்ய வேண்டும்) இன்னும் அப்பனே....

ஏராளம் என்பேன்... ஏராளம் என்பேன் வெற்றிகள் அதாவது எதை என்று கூற முதலில் இங்குதான் வரவேண்டும் ஆனாலும் பின் காலப்போக்கில் மனிதர்கள் எதை எதையோ சொல்லி பின் மனிதன் தன்மையையே மாற்றி விட்டான்.

ஆனாலும் இதைத் தான் முதலில் யான் செப்புவேன் அப்பனே சொல்லிவிட்டேன்.பின் நெல்லையப்பனை தரிசித்தாலும் அப்பனே எதை எதை என்று கூற சில கஷ்டங்கள் நிச்சயம் வரும்.

அதனால் எப்படி??? வணங்க வேண்டும் என்றால் அப்பனே..... திரும்பவும் சொல்கின்றேன் இங்கு வந்து நல்முறையாக தியானங்கள் செய்து பின்பு அங்கு சென்றால் தான் நிச்சயம் அருள் கிடைக்கும் செப்பிவிட்டேன் அப்பனே.

இன்னும் பல ஏராளம் ஏராளமான வாக்குகளும் எவையெவை என்று கொள்வதற்கிணங்க.. அப்பனே வெற்றிகள் இல்லை அப்பனே இன்னும் இன்னும் இன்னும் எதை எதை அறிந்து இன்னும் பல திருத்தலங்கள் ஒளிந்து ஒளிந்து கொண்டிருக்கின்றன அப்பனே.... அவ் ஒளிந்த கோயில்களையும் எவை என்று கூறும் அளவிற்கும் கூட சித்தர்கள் யாங்களே நிச்சயம் இக்கலியுகத்தில் நல்லோர்களை வாழச் செய்ய ஏற்படுத்துவோம் என்போம்.

அப்பனே எதையன்றி கூற அதனால் அப்பனே பல மனிதர்கள் எதை எதை?எதையோ என்று பொய் சொல்லி அப்பனே அகத்தியன் எதை என்று கூற சித்தர்கள் பெயரைச் சொல்லியும் ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அப்பனே யாங்கள் பல திருத்தலங்களை அப்பனே!! எப்படி வணங்க வேண்டும்?? எதனை நிறுத்த வேண்டும் என்பதைக்கூட அப்பனே சொல்லிவிட்டு வந்து கொண்டிருக்கின்றோம்.

யாங்களே அப்பனே கலியுகத்தில் அப்பனே!! ஏனென்றால் மனிதனை நம்பி நம்பி அப்பனே எதை என்று கூற அப்பனே பாசம் வைத்தார் போல் வைத்து... அப்பனே பின் எதை என்று கூற கர்மாக்களை சேர்த்து விடுகின்றான் அதனால் யாங்கள் எப்பொழுதும் மனிதனை நம்பி விடுவதில்லை சொல்லிவிட்டேன் அப்பனே. 

மீண்டும் சொல்கின்றேன் அப்பனே அகத்தியன்..  இறைவன். இதை என்றெல்லாம் சொல்லி பொய் சொல்லி நடந்து கொண்டு இருக்கின்றான்.

ஆனால் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று எண்ணவில்லை பொருளுக்காகவும் பணத்திற்காகவும் தங்க நகைகளுக்காகவும்... எதையென்று கூற அனைவரும் இப்படி தான் அகத்தியன் பெயரைச் சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.

ஆனாலும் யானும் அமைதியாக இருந்து விட்டேன். ஆனாலும் இனிமேலும் அமைதியாக..........

ஆனாலும் அப்பனே நல்லோர்கள் இவ்வுலகத்தில் வாழவேண்டும் அப்பனே அதுதான் எங்கள் கோரிக்கை.... அதனால்தான் அப்பனே பல பல திருத்தலங்களுக்குச் சென்று அப்பனே அடிமட்டத்தில் இருக்கும் திருத்தலங்களையும் யாங்கள் உயர்த்துவோம்.

இத்திருத்தலம் அப்பனே பலம் மிகுந்ததாகும்!!! என்பேன் ! அப்பனே... பலம் மிகுந்த அருள்களும் தரக் கூடியவன் """" இவ் கணபதி!!

எதையென்று கூற அதனால் நல் மனதாக இங்கு வருபவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் அப்பனே மாற்றம் உண்டு என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே இதை யாரும் கண்டு கொள்வதே இல்லை.

ஆனால் அப்பனே யாங்கள் கண்டுகொள்வோம் அப்பனே... இனிமேலும் அப்பனே இத்திருத்தலத்தை மாற்ற செய்வோம்.... அப்பனே மாற்றியமைத்து.... இன்னும் பல சக்திகளை உருவாக்குவோம் அப்பனே

சக்திகளை உருவாக்கி அப்பனே நலம் பெறச் செய்வோம்  என்பேன் அப்பனே.

அதனால் யாங்கள் இவ்வுலகத்தை திருத்த வேண்டும் என்றால் அப்பனே ஆனாலும் பழைய திருத்தலங்கள் அப்பனே அழிந்து கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது அப்பனே... அதையே  யாங்கள் உருவாக்குவோம். 

ஆனால் மனிதன் பல பல உண்மைகளை தெரியாமல் தன்னிடம் காசு உள்ளதே... எதையென்று கூற எவையென்று கூற சில திருத்தலங்களை எவை என்று கூற தெரியாமலே உருவாக்குகின்றான். ஆனாலும்... அங்கு உள்ளது அப்பனே யான் வீண்!!!!!!!! என்று சொல்லிவிட்டேன்!!

அப்பனே... எதையன்றி கூற...

ஆனாலும் பல திருத்தலங்கள் யாங்களே வடிவமைத்தோம் என்பேன் அப்பனே.... அங்கெல்லாம் எதை என்று கூற வந்தால் சில தரித்திரங்கள் நீங்கும். 

அப்பனே மேன்மை பெறும் அப்பனே...எதையன்றி கூற.....

அப்பனே.... ஒன்றைப் புரிந்து கொண்டீர்களா!!!!!!!

அப்பனே!!!.... எதற்காக நீங்கள் திருத்தலத்தை அமைப்பீர்கள்??????? எதையென்று கூற....எதை எவை என்று கூற உன் கஷ்டத்தால் வந்தவையா???????

 இல்லை....!!!!

எவையென்று கூற.... மற்றவர்கள் பொருளை சம்பாதிப்பதற்கு என்பேன் அப்பனே.

இதை இறைவன் கேட்டானா???!!!!! என்ன!!!!!??

அப்பனே நல்லோர்கள் வாழவேண்டும் இனிமேலும் நிச்சயம் யாங்கள்... வழி வகுத்துக் கொண்டே இருப்போம் அப்பனே!!!

பழைய திருத்தலங்களையும் அப்பனே யாங்களே வடிவமைத்து இன்னும் உயர்த்தச் செய்வோம் அப்பனே..... அப்பொழுது நல்லோர்கள் எல்லாம் வாழ நிச்சயம் வாழ்வார்கள் என்பேன் அப்பனே.

நல்லோர்களை அப்பனே நல்லோர்களை காக்கவே யாங்கள் நிச்சயம்...எதையென்று கூற ஆனால்.... தீயவர்களும் இருக்கின்றார்கள் அப்பனே.

அவர்களும் நிச்சயம் தீயவை செய்து கொண்டிருந்தால்.... அவர்களும் பின்னோக்கிச் சென்று விடுவார்கள்.

நல்லோர்களை காக்க நிச்சயமாய் எஞ்சியுள்ளது என்பேன் அவ் நல்லோர்களை உயர்த்தினாலே போதும்... உலகம் மாற்றமடையும் என்பேன் அப்பனே.

அதனால்தான் அப்பனே பல திருத்தலங்களை பற்றி சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே இன்னும்.... எதை எதை என்று ஏராளம் அதனால் அப்பனே.... இன்னும் எதை என்று கூற அப்பனே இத்திருத்தலத்தை இன்னும் யாங்கள் வடிவமைப்போம் அப்பனே... பல பல செல்வங்களும் இதற்கு தானம் அளித்து நல் விதமாகவே இன்னும்...யாங்களே அதி விரைவிலே உற்பத்தி செய்வோம். இத்திருத்தலத்தின் சிறப்புக்களையும் அப்பனே!!!

நல் விதமாக ஆசிகள் ஆசிகள்.... மற்றொரு வாக்கும் சொல்கின்றேன் ஒரு திருத்தலத்தில் அப்பனே!!!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோயில்.

மணிமூர்த்தீஸ்வரம் 

திருநெல்வேலி 

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம், மணி மூர்த்தீஸ்வரம்,திருநெல்வேலி .627001 

தொடர்பு எண் :09444794200

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் (ஜங்ஷன்)     இருந்து சரியாக 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயச் சிறப்புகள் :-

உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.

ராஜகோபுரத்தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து  ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள இக்கோயிலில்  நாயக்கர்கள், பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன.

இந்தியாவிலேயே ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள்,மூன்று பிரகாரங்கள்,கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயில் என்ற சிறப்பு உடைய ஆலயம்.

இத்திருத்தலத்தில்  உச்சிஷ்ட கணபதி அமர்ந்த திருக்கோலத்தில்விநாயகர் தனது இடப்பக்க மடியில் ஸ்ரீ நீலவாணியை அமர்த்தியபடி அருளுகிறார். ஸ்ரீ நீலவாணி என்பது லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய தேவியரை உள்ளடக்கிய தெய்வமாக கருதப்படுகிறது.

ஆனந்த நிலையில் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் பல்வேறு பலன்களை பெறமுடிகிறது. குறிப்பாக இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விசேஷமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்க ளுக்கு தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது. இதற்காக தேன் கலந்த மாதுளை மாலை மற்றும் தேங்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர் நான்கு கரங்களுடன் யோக நிலையில் அருள் பாலிக்கிறார்.

வற்றாத ஜீவநதியும், வேதங்களில் புகழப்பட்ட புண்ணிய நதிகளில்   ஒன்றான  தாமிரபரணி நதி வடக்கு முகமாக (உத்திர வாஹினி)  ஓடுகின்ற பகுதியில் அமைந்துள்ளது.

திருக்கோயிலின் அருகில் பைரவ தீர்த்தம் என்னும் உன்னதமான தீர்த்தக் கட்டம் உள்ளது.இதில் நீராடி விநாயகரை வழிபடத்  தோஷங்கள் யாவும் நீங்கும்.

தமிழ் வருடப்பிறப்பான  சித்திரை மாதம் முதல் தேதி அன்று சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் அதிசயம் நிகழ்கிறது.

இத்திருக்கோயில் அருகில் பைரவ தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி விநாயகரை வணங்குவது சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றுள்ள திருத்தலம் ஆகும்.

முற்காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் பூசையில் ஒலிக்கப்படும் மணியோசை இங்கே கேட்ட பின் பூசை துவங்குமாம் எனவே தான் மூர்த்தீஸ்வரம் என்ற இவ்வூர் மணிமூர்த்தீஸ்வரம் எனப் பெயர்ப் பெற்றது எனக் கூறப்படுகிறது.

இத்திருத்தலத்தில் அனைவரும் எளிமையாக சென்று வணங்கும் வகையில் அமைத்துள்ளனர்.

எந்த வித மந்திர தந்திரங்களும் தேவையில்லை தன்னை வணங்குவோரை வளம் பெற வாழச் செய்கிறார் இந்த உச்சிஷ்ட கணபதி.

இவருக்கு சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தேங்காய் மாலை சாற்றினால் அனைத்து நன்மைகளும் தருவார் என நம்புகின்றனர் பக்தர்கள்.

அவல், கொழுகட்டை, சுண்டல், அப்பம், தேங்காய், கரும்பு, வாழைப்பழம் முதலியவற்றை நைவேத்தியமாக படைக்கின்றனர்.

திருமண தடை நீங்கவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இங்கே வந்து பிராத்தனை செய்தால் நிச்சயம் பலன் அளிப்பார் உச்சிஷ்ட மகா கணபதி.

உச்சிஷ்ட கணபதி ஆலய அமைப்பு

உச்சிஷ்ட கணபதி ஆலயமானது ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன், கம்பீரமான கொடி மரத்துடன் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

கோவிலை வலம் வந்தால் சிவன், பார்வதி, முருகன் சன்னதிகளும் உள்ளன. கருவறையில் நான்கு திருகரங்களுடன் நீலவாணியை மடியில் அமர்த்தி கொண்டு காட்சி தருகிறார் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.பிரகாரத்தில் 16 வகையான விநாயகர்

உச்சிஸ்ட கணபதி கோயிலின் உள் பிரகாரத்தில் விநாயகர் 16 வடிவங்களுடன் தனிச்சிறப்புகளுடன் அருளுகிறார். குஷி கணபதி (நோய் அகல), ஹரித்ர கணபதி (காரியத்தடை, வியாதி நீங்க), ஸ்வர்ண கணபதி (தங்கம் அடைய), விஜய கணபதி (வெற்றி அடைய), அர்க கணபதி (நவக்ரக தோஷம் நீங்க), குருகணபதி (குருவருள் பெற), சந்தான லட்சுமி கணபதி (நன்மகவு அடைய), ஹேரம்ப கணபதி (அமைதிபெற), சக்தி கணபதி (செயல் வெற்றிபெற), சங்கடஹர கணபதி (தடங்கல் நீங்க), துர்கா கணபதி (துன்பம் நீங்க), ருணஹரண கணபதி (கடன் தொல்லை தீர), ஸ்ரீ வல்லப கணபதி காயத்ரீ (காரிய சித்தி, கணவன் மனைவி அன்பு பெருக), சித்தி கணபதி (முயற்சிகள் வெற்றிபெற), வீர கணபதி (தைரியம் அடைய), சர்வ சக்தி கணபதி (உடற் பலம் பெற) ஆகிய கணபதி சன்னதிகள் உள்ளன.

முற்காலத்தில் பாண்டியர்கள், நாயக்கர்கள் பின் நகரத்தாரால் பராமரிக்கப்பட்டும், திருப்பணிகள் செய்யப்பட்டும் வந்ததற்கு சான்றுகள் கோவிலில் உள்ளன

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஈசான பாகத்தில் அமைந்துள்ள ஒரே விநாயகர் ஆலயம்  இது மட்டுமே.

இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆலயத்திற்கு வரும் வழி :-

ரயிலில் வருபவர்கள் :-  திருநெல்வேலி சந்திப்பு ஸ்டேஷனில் இறங்கி  அங்கிருந்து தச்சநல்லூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறி உடையார்பட்டி பைபாஸ் ரோட்டில் இறங்கி எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகே உச்சிஷ்ட கணபதி ஆலயம் செல்லும் வழி என்று ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.அதனுள் ஒரு 200 அடி தூரத்தில் ஆலயம் உள்ளது.

பஸ்ஸில் வருபவர்கள் :-   திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம்  1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .

காரில் வருபவர்கள்:- மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வடக்கே இருந்து வருபவர்கள் சங்கர்நகர் தாண்டி 5 கிலோ மீட்டரில் தச்சநல்லூர் பைபாஸ் வரும் அதில் இருந்து கன்னியாகுமரி சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றுப் பாலத்துக்கு  சிறிது முன்னால் இடது புறம் வழிகாட்டும் பலகை இருக்கும் அந்த வழியில் வரவும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!

7 comments:

  1. சென்ற வாரம் தரிசித்து வந்தேன் மிக அருமையான திருத்தலம். ஓம் அகதீசாய நமஹ.

    ReplyDelete
  2. ஓம் நமசிவாய ஓம் உச்சிஷ்ட கணபதியே நம அருமையான ஆன்மீக தகவல் அனைவருக்கும் வளம் செழித்து நலம் உண்டாகட்டும் திருச்சிற்றம்பலம்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. திகம்பரா திகம்பரா ஸ்ரீ தத்த திகம்பரா

    தத்தாத்ரேயரும் கணபதியும் ஒரே சக்தியின் வேறு ரூபங்கள்

    ReplyDelete
  5. Humble request for translation in english

    ReplyDelete
  6. குரு உபதேசம் பெற்று மந்திரம் ஜபிக்க முடியாதவர்கள், கீழ்க் கண்ட விநாயகர் துதிப்பாடலை தினமும் 1000 முறை பக்திபூர்வமாக பாடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிட்டும் என்பது திண்ணம்!

    உச்சிஷ்ட கணபதி விநாயக
    என் விக்னமெல்லாம் நீ தீர்ப்பாய்
    தும்பிக்கையால் என்னை நீ அணைக்க
    என் அஞ்ஞானம் தீர்ந்து நான் எனை மறக்க
    எப்போதும் அருள் செய்வாய் விநாயகா
    எல்லோரும் போற்றும் விநாயகா!

    ReplyDelete
  7. valuable information iyya. thanks iyya

    ReplyDelete