அகத்தியர் அறிவுரை!
Thursday, 30 September 2021
சித்தன் அருள் - 1038 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
Tuesday, 28 September 2021
சித்தன் அருள் - 1037 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்!
15/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த இடம்.
ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சித்தருகாவூர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்
நல் முறைகள் ஆகவே இத்தலம் உயர்வடையும் என்பேன் பல சித்தர்களும் இங்கு நாடி வந்து பல சித்துக்களும் செய்தார்கள் என்பேன்.
அப்பனே இங்கு ஓர் பெரிய மண்டபம் உண்டு என்பேன் இதனால் அதில் கூட பல சித்தர்கள் ஞானிகள் வந்து அமர்ந்து உறங்கி சென்று இருக்கின்றார்கள் முன்னொரு காலத்தில் என்பேன்.
நல் முறைகள் ஆகவே எவை என்று கூற இதனையும் நல் முறைகள் ஆகவே கருவூரானும் (கருவூர் சித்தர்) அமைத்தான் என்பேன்.
நல் முறைகளாக இதனால் எவ்வாறு என்பதையும் கூட இத்தலத்திற்கு இன்னும் புகழ் பெற நல் முறைகள் ஆகவே வலம்வந்து வலம் வந்து கொண்டிருந்தால் தொழிலில் உயர்வு பெறலாம் என்பேன் என்பேன்.
தொழிலுக்கு அதிபதி இவனே என்பேன்.
அப்பனே நல் முறைகளாக இன்னும் பல திருத்தலங்கள் இன்னும் சிதிலடைந்து கொண்டே இருக்கின்றது ஆனாலும் மனிதர்களோ எவை எவை என்று புதுப்புது திருத்தலங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் பழைய திருத்தலங்களில் அப்பனே பல அற்புத சக்திகள் உள்ளன என்பேன் அங்கு சென்றால்தான் மட்டுமே கலியுகத்தில் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்பேன்.
ஆனாலும் இத்திருத்தலமும் அதில் ஒன்று என்பேன்.
நல் முறைகளாக விளக்கங்கள் அப்பனே புண்ணியங்கள் எவை என்று செய்ய அப்பனே நல் முறைகள் ஆகவே இங்கு வணங்கி செல்பவர்கள் நிச்சயம் தொழில் அமைப்பார்கள் என்பேன் தொழிலில் சிறந்து விளங்குவார்கள் என்பேன்.
சுயதொழில் நல் முறையாக செய்வார்கள் என்பேன். இதுதான் சிறப்பு என்பேன்.
சுயதொழில் செய்பவர்கள் நல் முறையாக இங்கே பின் ஒரு மண்டலம்(48நாட்கள்) நல் முறைகளாக இவனை வணங்கி பாடி துதித்து பின் சிவ புராணத்தைப் பாடி நல் முறைகள் ஆகவே தீபம் ஏற்றி அனுதினமும் அப்பனே நல் முறைகள் ஆகவே அரை மண்டலம்(24நாட்கள்) அதன் உரையே இருபத்தி நான்கு மனிதர்களுக்கு அனுதினமும் உணவை தானம் அளித்து நல் முறைகளாக சென்று விட்டால் பின் ஒரு மண்டலம் கழித்து உயர்வுகள் வரும் என்பேன். இதுதான் இத்தலத்தின் அதி சிறப்பு என்பேன்.
அப்பனே ஆனாலும் சித்தர்களுடைய திருத்தலங்கள் எவருக்கும் தெரிவது இல்லை கலியுகத்தில் அப்பனே முன்னே சொன்னேன் அப்பனே அற்ப சுக வாழ்க்கைக்காக வே மனிதன் ஓடோடி கொண்டிருக்கிறான் அதனால்தான் அப்பனே பின் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் அவை எல்லாம் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே இதனை நன்குணர்ந்து அனைத்து தலங்கள் சித்தர்கள் வாழ்ந்த ஸ்தலங்கள் மேலும் எழும்ப இங்கு வந்தும் எவ்வாறு என்பதையும் கூட ஆங்காங்கே மனிதர்கள் வணங்கி வந்தால் விமோசனம் கிடைக்கும்.
அதனை விட்டுவிட்டு எதையெதையோ செய்து கொண்டால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.
மனிதன் பின் படுகுழியில் விழத்தான் வேண்டும் என்பேன்.
நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது கருவூரானே அனைத்தும் செய்து விடுவான் என்பேன் கருவூரான் பக்தர்கள் இங்கு வருவார்கள் என்பேன் அனைத்தும் நல் முறைகள் ஆகவே எவை எவை என்று கூற அதி விரைவிலேயே இத்தலத்திற்கும் நல் முறைகள் ஆகவே நடக்கும் என்பேன் சித்தர்களும் வருவார்கள் என்பேன் முன் ஜென்மத்தில் வாழ்ந்த பல ரிஷிகளும் இங்கே வருவார்கள் என்பேன். இதனை அதி விரைவில் முடித்து யான் அகத்தியனும் இங்கு வருவேன் என்பேன்.
நல் முறைகள் ஆகவே பலப்பல அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து அப்பனே முறைகள் ஆகவே இச் சிவன் துணை புரிவான் தொழிலுக்கு மூலமான அதிபனும் துணை புரிவான் என்பேன்.
இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே முறைகள் ஆகவே இங்கு வலம் வந்து எவ்வாறு என்பதையும் கூட நிலைநிறுத்தி அனுதினமும் இச் சிவனை 108 முறை நல் முறைகளாக வலம் வந்தால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பேன்.
அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எதனால் இதனில் இவன் தனக்கு பெயரையும் வைக்கலாம் என்பேன் திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் இன்று நீங்கள் அழைத்தாலும் சந்தான ஈஸ்வரி சந்தான ஈஸ்வரர் என்றும் அழைக்கலாம் தவறு இல்லை என்பேன்.
அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே இவன்தனை வணங்க பிரம்மனும் நல் முறைகள் ஆகவே வரங்கள் தருவான் என்பேன்.
அற்புதங்கள் நிறைந்தது அப்பனே ஆனாலும் இதனை யான் ஏற்கனவே சொல்லி கொண்டே இருக்கின்றேன் எவ்வாறு என்பதையும் கூட பல பல திருத்தலங்களை அப்பனே மனிதர்கள் வணங்கி உயர்வு பெறுகிறார் என்று சில தீய மனிதர்கள் அழித்து விட்டார்கள்.
அப்பனே ஆனாலும் ஈசன் விடமாட்டான் என்பேன். எழுவான் என்பேன்.
ஆனாலும் எவரெவர் நியமிக்கப்பட வேண்டும் என்று என்பதுகூட ஈசனுக்கு தெரியும் அப்பனே. நல் முறையாக நல் மனிதர்களை நியமத்து விட்டான். அப்பனே.
அப்பனே நல் மேல் முறைகள் ஆகவே இங்கு கருவூரான் நல் முறைகள் ஆகவே வலம் வந்து இன்றளவும் அனுதினமும் இங்கே உறங்கித்தான் செல்கின்றான். என்பேன் இத்திருத்தலத்தை நல் முறையாக முடிக்கும் வரை அனுதினமும் இங்கு வந்து சென்று கொண்டுதான் இருப்பான் என்பேன்.
அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்று நினைக்கும் அளவிற்கு கூட ராஜராஜ சோழனின் பங்கும் இங்கு உள்ளது என்பேன்.
அவனும் இம் மண்டபத்தை நல் முறையாக பெரிதாக்க அவன் தனும் பின் நல் முறைகளாக இத் திருத்தலத்திற்கு பல உதவிகள் செய்வான் என்பேன்.அதனால் ராஜராஜசோழனும் இங்கு வந்து இச் சிவனை தரிசித்து தான் சென்றிருக்கின்றான் என்பேன்.
அப்பனே நல் முறைகள் ஆகவே அருணகிரிநாதன் இங்கு சில நேரத்தில் தங்கிச் சென்று பின் நல் முறைகளாக பின்பு தான் அண்ணாமலைக்கு சென்றான் என்பேன்.
அப்பனே இங்கு வந்து நல் முறைகளாக அவன்தனக்கு சில சில உதவிகள் கிடைக்காததால் அண்ணாமலைக்கு சென்று அங்கு உயிரையும் துறந்துவிட துணிந்து விட்டான் ஆனாலும் முருகன் காப்பாற்றினான் அப்பனே.
முருகனும் இங்கு ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான் இங்கு.
அப்பனே நல்முறைகள் ஆகவே அப்பனே இவ்வுலகத்தில் சிவனே பெரியவன் என்பேன் ஆனாலும் இதனையும் தடுத்தழிக்க அப்பனே முன்னொரு ஜென்மத்தில் படையெடுத்து வந்து பின் மனிதர்களெல்லாம் பின் திருத்தலங்களுக்குச் சென்றால்வாழ்ந்து விடுவார்கள் என்று நினைத்து பின் அனைத்தையும் அழித்து விட்டார்கள் ஆனாலும் கலியுகத்தில் நிச்சயம் நல்லோர்களால் எவ்வாறு என்பதையும் கூட யார் மூலம் எதனை செய்தால் நல்லது என்று கூட நினைத்து ஈசனே வரவழைத்து அனைத்தும் செய்துகொள்வான் என்பேன்.
இனிமேலும் கலியுகத்திலும் அப்பனே அக்கிரமங்கள் அநியாயங்கள் நடக்கும்பொழுது ஈசன் நிச்சயமாய் அன்றன்றே தண்டிப்பான் என்பேன்.
அப்பனே இதிலும் சூட்சமம் உள்ளது என்பேன் சூட்சமங்கள் அப்பனே எவை எவை என்று கூற மனிதன் இன்னும் ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே முட்டாள்களாகவே வாழ்ந்து வருகின்றான்.
ஆனால் எவை என்று கூற இருக்கும்பொழுது இறையருள் பெற்று விட்டால் அப்பனே வேறு எதுவும் தேவை இல்லை என்பேன் இறையருளே அனைத்தும் கொடுத்துவிடும்.
ஆனாலும் மனிதன்
எதன் எதனோ மாயையில் சிக்கிக் கொண்டு அனைத்தையும் இழந்துவிட்டு திரும்பவும் இறைவனிடத்தில் வந்தால் அவன் என்ன செய்வான்? மகனே?
அப்பனே ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட மனிதன் எதை நோக்கிச் செல்கின்றானென்றால் கர்மாவை நோக்கியே செல்கின்றான்.
இதனையும் பல தடவைகளில் பல உரைகளில் யான் சொல்லியே வந்திருக்கின்றேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.
மனிதன் கர்மாவை சேர்ப்பதில் வல்லவன் என்பேன் அப்பனே இவ்வாறு என்பது கடைசியில் பின் எவ்வாறு என்பதையும் கூட கஷ்டங்கள் வந்தால் இறைவா இறைவா என்று ஓடோடி வருவது அப்பனே அதனால்தான் ஆறு அறிவுகள் இறைவன் பயன்படுத்தி கொள்வதற்காகவே கொடுத்திருக்கின்றான். ஆனாலும் மனிதர்களுக்கு அதை ஒழுங்காக பயன்படுத்தத் தெரியவில்லை மகனே. அப்பனே நல் முறைகள் ஆகவே இந்த ஆறு அறிவையும் ஒருவன் ஒழுங்காக கடைப்பிடித்தால் ஏழாவது அறிவு அவனுக்கு தெரிந்துவிடும் அவன் இறைவனையே காணலாம் என்பேன்.
அப்பனே நல் முறைகள் ஆகவே இறைவன் அனைத்து திறமைகளும் கொடுத்து தான் மனிதனை அனுப்புகின்றான் ஆனால் முட்டாள் மனிதனோ அவ விஷயங்களை அனைத்தையும் கெடுத்து கொண்டிருக்கின்றான்.
அப்பனே நல் முறைகள் ஆகவே சிவன் வருவான் எவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட அப்பனே நல் முறைகளாக அனைத்து சித்தர்களும் இங்கு வருவார்கள் என்பேன். நீங்கள் குறித்துள்ள நாட்களிலேயே நிச்சயம் அவர்களே வந்து இதனை பிரதிஷ்டை செய்வார்கள் பின் எவ்வாறு என்பதையும் கூட இதனையும் நிறுவித்து செய்வார்கள் அப்பனே இது உண்மை.
அப்பனே இதற்கும் சக்திகள் எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் பொழுது அப்பனே இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கின்றேன் அப்பனே நன்றியோடு நல் முறைகள் ஆகவே கேட்டதை நல்ல முறையில் ஆகவே எவை எவை என்றும் கூற கூறி விளக்கும் பொழுது அதில் அதிலும் சூட்சமம் உள்ளது இல்லாதது என்றெல்லாம் இல்லை என்பேன்.
அப்பா என்று இவன் தனை மனமுருகி வணங்கி வழிபட்டால் இவனும் மனம் இரங்கி அருள் செய்வான் என்பேன்.
கருவூரானும் எவ்வாறு என்பதை நினைக்கும்பொழுது அப்பனே சித்தனும் எவ்வாறு என்பதையும் கூட நன்கு பொருந்தி நல் முறையாக வாழ்ந்திட கருவூரான் உதவி செய்வான் என்பேன்.
கருவூரான் செய்த பல பல லீலைகள் எவ்வாறு என்பதை நினைக்கும்பொழுது அப்பனே அவ் லீலைகள் அனைத்தும் பிழைப்பதற்காகவே எழுதி இருக்கின்றான் ஆனாலும் முட்டாள் மனிதர்கள் அதனை அழித்தும் விட்டார்கள் என்பேன்.
அப்பனே கலியுகத்தில் மனிதன் இன்னும் அழிப்பதற்கே பார்ப்பான்
ஆனாலும் யாங்கள் சித்தர்கள் நிச்சயமாய் விடமாட்டோம் மாட்டோம் காப்பாற்றுவோம் இப்பூவுலகை.
அப்பனே எவ்வாறு என்பதையும் கூட கலியுகத்தில் கலி முற்றும் தருணத்தில் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களுக்கு நோய்கள் வரும் பிரச்சினைகள் பல வரும் ஆனாலும் அப்பனே அதன் முன்னே யாங்கள் எவ்வாறு என்பதையும் கூட ஈசன் பின் திருவடிகள் ஆங்காங்கே சக்தி வாய்ந்த பல திருத்தலங்களை யாங்களே யார் மூலம் என்று எண்ணி ஈசனும் சேர்த்து உருவாக்குவோம் என்பேன்.
இதனால் அப்பனே கலியின் வேகம் குறையும் என்பேன்.
அப்பனே கடைபிடியுங்கள் நல்லவையாகவே நடக்கும் என்பேன். அப்பனே ஒன்றை தெரிவிக்கின்றேன் இதனை உரைக்கும் பொழுது கருவூரானே இங்கு அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பேன்.
அப்பனே இதைபோன்று ஆசீர்வாதங்கள் எவருக்கும் இல்லை என்பேன் இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துவிட்டான் என்பேன். அவரவர் விருப்பப்படி நல் முறைகள் ஆகவே நடக்கும் என்பேன்.
அப்பன்களே அம்மை களே அனு தினமும் ஏதாவது ஒரு ஜீவராசிகளுக்கு உணவு அளித்து விடுங்கள்.
அப்பனே நல் முறையாக இவ் ஈசனையே பிடித்துக் கொள்ளுங்கள் அனைத்தும் விரும்பியவாறே நடக்கும் என்பேன். இவன் தன் அனைத்தும் செய்வான் நல் முறைகள் ஆகவே.
எவ்வாறு என்பது நினைத்துப் பார்க்கும் அளவிற்கு திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் விரும்பியவாறு நிச்சயம் அனைத்தும் கொடுக்கப்படும் என்பேன்.
இவ்வாலயத்தின் முதல் முறையாக வந்து நல் முறைகள் ஆகவே வணங்கி செல்பவர்கள் வீட்டில் சுபிட்சங்கள் சுப காரியங்கள் ஏற்படும் என்பேன். அப்பனே எவ்வாறு என்பதையும் கூட பல பல சித்தர்கள் வருவார்கள் அனைத்தும் செய்வார்கள் என்பேன் கவலைகள் இல்லை எவ்வாறு என்பதையும் கூட உயர்ந்து நிற்கும் இத்தலம் என்பேன்.
அப்பனே நல் முறைகளாக ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் ஈசன் அருள் இல்லாமல் இங்கு யாரும் இத்திருத்தலத்திற்கு வரமுடியாது என்பேன்.
அலைந்து திரிந்து சிவனே கதி என்று நினைத்து இங்கு வந்துவிட்டால் அனைத்தும் மாறும் என்பேன். அனைத்தும் நல்கும் என்பேன்.
அப்பனே ஆனால் மனிதர்களோ அதை செய்தால் இவை நடக்கும் இதைச் செய்தால் அதை நடக்கும் என்று எங்கெங்கோ எவ்வாறு என்பதையும் கூட மனிதனை தேடி செல்கின்றான். ஆனால் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன். ஆனாலும் இவை தானே அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்றெல்லாம் மனிதனை ஆசை காட்டி தூண்டிவிட்டு அப்பனே வேடிக்கை பார்க்கின்றவன் தான் மனிதன் என்பேன் ஆனாலும் இறைவன் எவ்வாறு என்பதையும் கூட பின் யாங்கள்(சித்தர்கள்) எங்களுடைய ஆட்சிகள் வரும் என்பேன்.
ஆனாலும் ஆங்காங்கே இருக்கும் தலங்களை ஏற்படுத்தி நல் முறைகளாக மக்களுக்கு யாங்களே நல்லவை செய்வோம் மனிதனை இனிமேலும் யாங்கள் நம்பப் போவது இல்லை என்பேன்.
நல் முறைகள் ஆகவே அப்பனே எவை எவை என்று கூற அப்பனே அகத்தியன் யான் இருக்கின்றேன் இத்திருத்தலத்தை முடிந்தவரையில் யானே முடித்து வைக்கின்றேன் இத்திருத்தலத்தை நல் முறைகள் ஆகவே.
நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நலமாக நலமாக எண்ணியவாறு அப்பனே அனைத்தும் செய்வான் இவ் ஈசன் என்பேன்.
அப்பனே குற்றங்கள் இல்லை துன்பங்கள் இல்லை துயரங்கள் இல்லை. நல் முறைகள் ஆகவே அப்பனே அதனால்தான் சக்தி வாய்ந்த திருத்தலங்களை இன்னும் யாங்கள் நல் முறைகள் ஆகவே மனிதர்களை பயன்படுத்தி கூட வெளிக் கொணர்ந்து ஏற்படுத்துவோம். எவ்வாறு என்பதையும் கூட
நல்லோர்கள் என்பதைக்கூட யாங்களே ஏற்படுத்துவோம் எங்களுக்கு தெரியும் யாரை பயன்படுத்த வேண்டும் என்று கூட. நல் மனிதர்களை யாங்கள் தேர்ந்தெடுத்து நடத்தி வைப்போம் நல் முறைகள் ஆகவே.
அப்பனே இதற்கு இது எவ்வாறு என்பதை கூட சொல்கின்றேன் நல் மனது இருந்தால் மட்டுமே போதுமானது.
அப்பனே நல் விதமாக அப்பனே எவ்வாறு என்பதையும் கூட முன்னேற்றங்கள் காணப் போகின்றது அப்பனே இங்குள்ள அனைவரும் நல் முறைகளாக சக்திகள் பெற்றுள்ளார்கள் என்பேன். அதனால் இங்குள்ள ஒவ்வொரு இல்லத்திலும் சக்திகள் கூடி அருள் பெருகும் என்பேன்.
அப்பனே நல் முறைகள் ஆகவே இங்கிருந்து எவ்வாறு என்பதையும் கூட பாம்புகள் ராஜ்யம் என்கின்றார்களே அவ் ராஜ்ஜியம் இத்திருத்தலமே என்பேன்.
அப்பனே நல் முறைகள் ஆகவே எங்கிருந்து எவ்வாறு என்பதையும் கூட பின் நல் முறைகள் ஆகவே அரை கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளே சென்றால் பல நாகராஜன்கள் தவழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அதனால் சக்திகள் பலம் என்பேன் இங்கு.
அப்பனே நல் முறைகள் ஆகவே ராகு கேதுக்கள் இவர்களால் ஏற்பட்ட தோஷங்களும் நிச்சயமாய் இங்கு விலகி ஓடும் என்பேன்.
அப்பனே இத்தலத்திற்கு நன்கு பல சிறப்புகள் உண்டு என்பேன் இன்னும் பல சூட்சமங்களை விவரிக்கின்றேன் நல் முறைகள் ஆகவே வரும் காலங்களில்.
அப்பனே என்னுடைய ஆசிகள் கருவூரானும் அப்பனே கேட்டு சந்தோஷம் அடைந்து விட்டான் என்பேன் மீண்டும் வந்து வாக்குகள் செப்புகிறேன் அப்பனே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.
ஆலயத்தை தொடர்பு கொள்ள வேண்டிய எண்.
J. பச்சையப்பன்
9944137269
M. புண்ணியகோடி
9444482571
நன்கொடை வழங்க வங்கி எண்
INDIAN BANK
AC NO 589343152
IFSC NO IDIB000C048.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்................. தொடரும்!
Tuesday, 21 September 2021
சித்தன் அருள் - 1036 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை!
Thursday, 16 September 2021
சித்தன் அருள் - 1035 - அன்புடன் அகத்தியர் - சிதம்பரம்!
Tuesday, 14 September 2021
சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்!
Thursday, 9 September 2021
சித்தன் அருள் - 1033 - அன்புடன் அகத்தியர் - வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்!
29/8/2021 அன்று வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்(உற்றுற கேட்கும் ஈஸ்வரன்) ஆலயத்தைப்பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
உலகை ஆளும் ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்.
இத்தலத்தில் பல பல பெருமைகள் பின் நல் முறைகள் ஆகவும் பூசலான் (பூசலார் நாயனார்) என்கின்ற ஞானியும் இங்கு வந்து நல் முறையாகவே பின்பற்றி பின் அனைத்தும் செய்வித்தான். மக்கள் கூட்டம் அலைமோதியது என்பேன்.
பின் நன்றாகவே வாழ்ந்து வந்தநிலையில் பலப்பல கர்மாக்களும் நீக்கி வந்தான் இவ் ஈசன்.
ஆனாலும் இதனையும் முன்னோக்கி பின் சில சில தீய மனிதர்களாலும் எவை என்று கூற இதனையும் போக வேண்டும் என்று எண்ணி சில சில மனிதர்கள் இதனையும் அழித்துவிட்டார்கள் கண் காணாமல் எவை என்றும் கூட.
ஆனாலும் ஈசன் இங்கு மறைந்து இருக்கின்றான் முழுவதும் பலப்பல சிலைகளும் காத்துக் கொண்டிருக்கின்றது மேல் எழும்ப.
இன்னும் மர்மங்கள் சொல்லப்போனால் பின் நல் முறைகள் ஆகவே இதனடியில் நாக தேவதைகள் இன்னும் பல உண்டு என்பேன்.
அப்பனே எவை என்றும் இங்கிருந்து நல் முறைகள் ஆகவே இப்பொழுதும் கூட மேற்கு நோக்கி பார்த்தால் பலபல பலபல வடிவமுள்ள ஈசன் நல் முறைகள் ஆகவே பின் மண்ணுக்கடியில் மறைக்கப்பட்டு கீழ்நோக்கி அமர்ந்து இருக்கின்றான் அது விரைவிலேயே அனைத்தும் மேலே எழும்பும் என்பேன்.
பல கோடி மக்கள் நல் முறைகள் ஆகவே இங்கு வந்து அனைவரும் குறை தீர்த்து சென்றுகொண்டிருந்தனர் ஆனாலும் ஓர் இப்பொழுதும் கூட இவை என்று கூற ஆங்கிலேயர் என்று சொல்கின்றார்களே அவர்களும் இங்கு வந்து எதனை என்றும் கூற பரிசுத்தமான இதயங்களை கொன்றார்கள் மக்களை அழித்தார்கள். பல பேர் இங்கு மடிந்து விட்டனர்.
இதனையும் நிமித்தம் காட்டி பின் அனைவரும் எவ்வாறு என்பதையும் கூட முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் அருளாசி பெற்றவர்கள் அவர்களுக்கு அந்தக் கொடுமை நடந்தது எப்பொழுது என்றால் பின் அதுவும் விநாயகர் சதுர்த்தி என்கிறார்களே அந்நேரத்தில்.
அப்பனே நல் முறைகள் ஆகவே பின் நல் முறைகள் ஆகவே எவை எவை என்று கூற விநாயகப் பெருமானும் பின் நல் முறைகள் ஆகவே தற்போது வரும் நிலைகள் இன்னும் மேலோங்க செய்வான் என்பேன். அவனுடைய நாளிலிருந்து(விநாயகர் சதுர்த்தி முதல்). நல் முறைகள் ஆகவே இன்னும் பல ஆத்மாக்கள் இங்கு வலம் வந்து தான் கொண்டிருக்கின்றன.
இங்கு நிச்சயம் அவ் ஆன்மாக்கள் சபதம் இறைவனை வேண்டி நின்றன எவ்வாறு என்பதைக் கூட யான் இப்போது உரைக்கின்றேன்.
இங்கு வருபவர்கள் நல் முறைகள் ஆகவே யாங்கள் ஆசீர்வதித்து பின் எங்களுக்கு அழிவில்லாத ஆன்மாக்கள் ஆகவே இங்கு பறக்கச் செய்ய வேண்டும் என்பதைக்கூட ஈசனிடம் அவர்களும் முறையிட ஈசனும் அப்படியே நடக்கட்டும் என்று சொல்ல அவர்களும் இங்கு வலம் வந்து தான் கொண்டிருக்கின்றார்கள். இதனால் மனப் பிரச்சினைகள் மனப் போராட்டங்கள் இவையெல்லாம் இருந்தால் இங்கு நல் முறையாக தங்கிச் தங்கி சென்றால் பின் அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்க அனைத்தும் நிறைவேறும் என்பேன்.
கலியுகத்தில் ஆனாலும் ஈசன் எவ்வாறு என்பதைக்கூட இவ் நல் விதமான ஆன்மாக்களும் ஈசனிடம் கேட்க இறைவா போதும் ஆனாலும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் அநியாயங்கள் அக்கிரமங்கள் இனிமேலும் மேலோங்கும் மேலும் இதனால் நிச்சயம் நீ எழ வேண்டும் என்பதைக்கூட நல் முறைகள் ஆகவே அவ் ஆன்மாக்கள் முறையிட்டனர் அவர்களை தேவதைகள் என்று கூட சொல்லலாம்.
அப்பனே இவ்வாறு என்று உணர்ந்து நிச்சயம் கூடி நினைக்கும்பொழுது ஈசன் தான் இங்கு நல் முறைகள் ஆகவே எழுந்தருளினான் என்பேன் இதனால் அவன் வேலையை தன் நலமாக அவன் நிச்சயம் பார்த்துக்கொள்வான் என்பேன் இனிமேலும்.
இவ்வாலயத்தைப் பற்றி இதன் முன்னே இதன் பின்னே விரிவாக எடுத்துரைக்கின்றன வரும் காலங்களில் .
இன்னும் சில ஆண்டுகளில் புகழ் ஓங்கும் என்பேன் ஓங்கும் என்பேன் அனைவரும் இங்கு வந்து வழிபட வழிபட சில சில வினைகள் மாறும் வினைகள் மாறும்பொழுது ராகு கேதுக்களின் தோஷங்களும் மறையும் என்பேன்.
ஏனென்றால் எவ்வாறு என்பதை கூட ஈசனும் ஈசனையும் நல் முறைகள் ஆகவே பல வருடங்களாகவே நாகராஜன் காத்துக் கொண்டிருக்கின்றான். இப்பொழுதும் கூட இங்கு அவன் அலைந்துகொண்டு இருக்கின்றான் என்பேன்.
நல் முறைகள் ஆகவே அனைத்தும் நடக்க நல் முறைகள் ஆகவே சந்தோசம் அடைவீர்கள் என்பேன்.
அப்பனே அனைத்தும் இங்கு பொய் என்பேன் இறையே மெய் என்பேன் இறை சக்திகள் மிகவும் பலம் வாய்ந்தது என்பேன் அப்பனே அதைவிட உலகத்தில் சொந்தங்கள் வேறு ஏது.
நல் முறைகளாக எவை என்று கூற குறிப்பிட்ட அளவிற்கு நின்ற பொழுதும் கூட அப்பனே ஈசன் வருவான் இன்னொரு விஷயத்தையும் கூறுகின்றேன் அப்பனே.
இவ் அம்பாள் இடத்தில் உரைத்துக் கொண்டிருக்கிறேன் அம்பாள் இப்போது உறங்கவில்லை கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றாள் என்பேன்.
நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே மேன்மை நிலை இவ் குடில் பெறும் என்பேன். அப்பனை ஆனாலும் எவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு யாங்களும் எவ்வாறு என்று நிமிர்ந்து ஈசனும் எவ்வாறு என்று உணர்ந்து பார்த்தால் ஈசனே அமைத்துக் கொள்வான் என்பேன் நல் முறைகள் ஆகவே.
இன்னும் அப்பனே எவ்வாறு என்று நீண்டுகொண்டே போனால் இதன் இங்கிருந்து சரியான நேர் பாதையில் 60 கிலோ மீட்டர்களில் பல கோடி லிங்கங்கள் அமைந்துள்ளது என்பேன்.
நேராக கிழக்கு திசை என்பேன்(காஞ்சிபுரம்)
இவை எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள் என்பேன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்று பல மனிதர்கள் வந்து வாழ கற்றுக் கொண்டுதான் சென்று இருந்தனர் இதனை சில தீயவர்கள் மறைமுகமாக எதிர்த்து இதனை அழித்துவிட்டால் அனைத்தும் நம் வசம் வந்துவிடும் என்று அனைத்தையும் அழித்து விட்டனர் ஆனாலும் இதுபோல் செல்லலாகாது என்பேன்.
அனைத்தும் எழுந்து நிற்கும் .
ஈசனை அனைவரையும் அழிப்பான் என்பேன்.
ஈசனின் விளையாடல் திருவிளையாடல் இன்னும் மக்களுக்கு புரியவில்லை என்பேன். ஆடினான் ஆட்டம்.
ஆனாலும் திருந்தவில்லை மனிதர்கள்.
அப்பனே இதைவிட சிறப்பு என்னவென்றால் அப்பனே இங்கு எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது அப்பனே நீரிலே பல பலப்பல ஆலயங்களும் மிதந்துள்ளன என்பேன்.
ஆனாலும் அப்பனே எவை என்று கூற ஆனாலும் அனைத்தையும் இடித்துத் தள்ளினார்கள் என்பேன்.
அப்பனே எவை என்றும் எதனை என்றும் கூறும்பொழுது அப்பனே இங்கேயும் அலை கடலாக இருந்தது ஒரு காலத்தில்.
அப்பனே நலமாக நலமாக சித்தி முக்தி கிடைக்கும் என்பேன் நல்ல முறையாக இங்கு.
நல் முறையாக வேண்டியதை இங்கு நல் முறையாகவே நிச்சயமாய் ஈசனும் தந்து முன்னோர்களும் காணச் செய்வார்கள் என்பேன்.
ஆனாலும் இங்கு வந்த நல் முறைகளாக வணங்கிச் சென்று இங்கு ஒரு கோமாதாவை வைத்து அமைக்க வேண்டும் என்பேன் கோமாதாவிற்கு நல் முறைகள் ஆகவே பல தானியங்கள் கொடுத்து நல் முறையாக செய்ய அப்பனே அவ்வாறு செய்யும் நபர்களுக்கு நிச்சயம் வெற்றி என்பதே உண்மை. நல் முறைகள் ஆகவே இதுவும் வரும் என்பேன் நல் மனிதர்கள் இதனையும் செய்து கொடுப்பார்கள் என்பேன்.
காணக்கிடைக்காத அற்புதங்களும் இங்கே புதைந்து உள்ளது என்பேன் அதன் சூட்சுமத்தையும் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன்.
இத்திருத்தலம் ஓங்கும் என்பேன் சிறப்பு பெறும் என்பேன். எதனால் என்பதையும் கூட விஜயராகவன் என்ற அரசனும் இங்கு வந்து வழிபட்டு சென்றுதான் போய் இருக்கின்றான் என்பேன்.
நல் முறைகள் ஆகவே பூசலான்(பூசலார்நாயனார்)வள்ளல் பெருமானும் (வள்ளலார்) இங்கு நல் முறைகளாக வந்து வணங்கி சென்றிருக்கின்றார்கள் என்பேன்.
இவர்கள் தவிர யானும் இங்கே வந்தேனப்பா (அகத்தியர்).
அதனால்தான் யான் இப்போது இங்கு வந்து வாக்குகள் இப்பொழுது உரைத்துக் கொண்டிருக்கிறேன் அப்பனே.
அப்பனே நல் முறைகள் ஆகவே இவ்வாறு இருக்க பாலமுருகன் என்கின்ற அடிகளானும் (பாலமுருகன் சித்த சுவாமிகள்) இங்கு நல் முறையாக ஜீவ சமாதியும் அடைந்திருக்கின்றான். என்பேன்.
அப்பனே இது தான் சூட்சமம் மனிதனுக்கு தெரியாத பல விஷயங்கள் இங்கு உண்டு என்பேன் இதனைத்தான் எவ்வாறு என்பதையும் கூட அமைத்திருக்கும் ஆலயத்தின் கருவறை அடியிலேயே அவன் ஜீவசமாதியும் அமைந்திருக்கின்றது என்பேன்.
அப்பனே இதனால் சிறப்பு பெற்ற சக்திகள் இத்தலத்திற்கு உண்டு என்பேன்.
அப்பனே இதனால் நன்மைகள் பெருகப்பெருக அப்பனே அனைவரும் இவ்வாறு வழிபட்டுச் சென்றால் அப்பனே நல் முறைகளாக மனிதனுக்கு எவ்வித ஆசைகளும் வளராது என்பேன்.
முன்னோர்கள் ஆசீர்வாதத்தால் அப்பனே நல் முறையாக நல் முறைகள் ஆகவே அனைத்தும் நடக்கும் என்பேன் முன்னேறலாம்.அவர்கள் அனைத்தும் செய்வார்கள் என்பேன் இத் தலத்திற்கு வருபவர்களுக்கு முறைகள் ஆகவே.
பல சித்தர்கள் எவ்வாறு என்பதையும் பல நிமித்தம் காட்டி இனிமேலும் பல திருத்தலங்கள் திருத்தலங்களை உருவாக்குவார்கள் என்பேன் ஏனென்றால் மனிதனை நம்பி நம்பி எவ்வாறு என்று போன போக்கிலே புதுப்பித்து எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களின் நிலைமையை யான் சொல்வதற்கு இல்லை.
அதனால்தான் சித்தர் ஆட்சி சித்தர் பூமி என்பதெல்லாம் இனிமேலும் நடக்கும் பொழுது அப்பனே அனைத்தும் எழும் என்பேன் யாங்களும் நல் முறைகள் ஆகவே துணை புரிந்து அனைவராலும் அனைவரும் நல் முறைகள் ஆகவே வாழ்ந்து பின் இறையருள் சேர வேண்டும் என்பதே சித்தர்களின் கொள்கை என்பேன் இதனால் நாங்களே நிச்சயம் பல திருத்தலங்களுக்கு சென்று நல் முறைகளாக யார்? யார்? எதன் மூலம்? எதனை மூலம்? என்பதையும் கூட நியமித்து அத் திருத்தலத்தை உருவாக்கும் பொழுது அங்கு வருபவர்கள் நல் முறைகள் ஆகவே சில கர்மாக்களையும் நீக்குவார்கள் இதனால்தான் எங்களால் இவையெல்லாம் நடக்கும் என்பதே உண்மை.
இது தவிர எவ்வாறு என்பதையும் கூட அதைச் செய்து தருகின்றோம் இதைச் செய்து தருகின்றோம் என்பதை நம்புவது எல்லாம் வீண். நடக்கவும் நடக்காது அதைச் செய்தாலும் பின் நேர் வினையாக இருந்து எதிர்வினை ஆகவும் எதிர்வினையாக இருந்து நேர் வினையாகவும் இருக்கும்பொழுது ஆனால் அதன் வழியே கஷ்டங்கள் ஆக வந்துவிடும்.
இறைவனின் சக்திகள் பலம் ஆவதற்கு நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு நின்று காத்தருளும் அளவிற்கு ஈசனும் பாலகுமாரன் முருகனும் இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே இங்கு அமைத்தல் வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பனே பூசலார் உருவாக்கிய ஸ்தலம் இது அப்பனே அவனுக்கு வேலையே எவ்வாறு என்பதை கூட இதைத்தான் இதனைச் சுற்றி வட்டாரங்களில் உள்ள பல ஆலயங்கள் அவனால் உருவாக்கப்பட்டவை என்பேன். அதனால்தான் யான் சொன்னேன் மனதில் உள்ள காரியங்கள் எண்ணிக்கொண்டு ஈசனையும் எவ்வாறு என்பதையும் எண்ணிக்கொண்டு மனதில் எண்ணிக் கொண்டிருந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பேன். இதுதான் இத்தலத்தின் சிறப்பு ஆகும்.
அப்பனே இக் கர்மா பூமியில் இன்னும் பழைய பழைய எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலைகள் இருக்கின்றன இப்புவியில். அவையெல்லாம் எழும்பும் பொழுது நல் முறையாகவே இறைவனை பார்ப்போம் என்பேன் இதனால் மக்களே நல் முறையாக கலியுகத்தில் கலியுகத்திலும் வாழ்வார்கள் என்பேன்.
கலியுகத்தில் இனிமேலும் மனிதர்கள் வாழ்வதற்கு கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் போய்க்கொண்டே இருக்கும் அவை எல்லாம் மாற்றுவதற்கே இன்னும் பல சக்தி மிகுந்த திருத்தலங்கள் இப்புவியின் அடியில் அழிந்து விட்டது அதையெல்லாம் நல் முறைகள் ஆகவே ஈசனே வருவான் வர வைப்பான் என்பேன்.
எவ்வாறு என்பதையும் கூட அதை யாங்களே(சித்தர்கள்) சொல்லிக் கொண்டு வருவோம் என்பேன் இதனால் அப்பனே பேரருள் கிட்டி இறைவனின் நல்லாசிகள் பெற்று அப்பனே நல் முறைகளாக வாழுங்கள் என்பேன்.
வாழுங்கள் என்பேன் இறை என்று கூற அப்பனே அதனால்தான் இனிமேலும் அனைவருக்கும் கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கும் வந்துகொண்டே இருக்கும் ஆனாலும் இதனை நிறுத்த வல்லவன் ஈசன். நிறுத்த வல்லவன் ஈசன் என்பதெல்லாம் யாங்கள் நல் முறைகள் ஆகவே சக்திகள் இருக்கும் தலத்தை பற்றியும் அடிக்கடி உரைத்துக் கொண்டே இருக்கின்றோம் அங்கு சென்று நலம் பெறுக என்பேன். இதுதான் அப்பனே விதி.
அப்பனே எவை எவை என்று கூறும்பொழுது கூட அப்பனே மக்கள் எவ்வாறு மிகுந்திருந்த பொழுது போது கடல் எவ்வாறு என்பதை கூட உள்ளே புகுந்த பொழுது செல்வங்கள் அழிந்து விட்டது பலப்பல உண்மைகள் பொக்கிஷங்களும் அழிந்துவிட்டது இங்கே இவையெல்லாம் புதைக்கப்பட்டுள்ளது என்பேன்.
இவையன்றி அப்பனே நல் முறைகளாக இத் திருத்தலமும் நல் முறையாக எழும்பும் என்பது விதியப்பா.
அப்பனே நல் முறைகளாக கவலை இல்லை என்பேன் அப்பனே அதிவிரைவிலேயே அனைத்தும் நினைத்தவாறு நடக்கும் என்பேன்.
ஈசனும் நல் முறைகள் ஆகவே இங்கு ஒரு வாரம் நல் முறைகள் ஆகவே தங்கிச் செல்வான் என்பேன்.
நல் முறைகள் ஆகவே ஆசிகள் பின்பு என் அப்பனே நல் முறைகள் ஆகவே இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கின்றேன் இத் தலத்தைப் பற்றி அப்பனே முறைகளாகவே பின் எவ்வாறு என்பதையும் கூட கிரகங்களால் கோச்சாரத்தால் பின் அடிபட்டவர்கள் இங்கு நல் முறைகள் ஆகவே இங்கு தங்கிச் சென்றால் பின் கிரகங்களாலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.
நல் முறைகள் ஆகவே அப்பனே இத்தலத்தின் சிறப்பை பற்றியும் எடுத்துரைத்து விட்டேன்.
அப்பனே நல் முறைகள் ஆகவே இன்று இருக்கும் நிலையை எவ்வாறு என்று பார்க்கும் பொழுது அப்பனே நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதை உண்மை நிலையை புரிந்து என்னுடைய ஆசீர்வாதங்கள் என்பேன்.
ஆசீர்வாதங்கள் என்பேன் இன்னும் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே அதி விரைவிலேயே இதன் செயல்கள் தொடங்கும் என்பேன் இதனால் கவலைகள் இல்லை என்பேன்.
ஆபத்சகாயேஸ்வரர் என்பதே மெய் உற்றுற கேட்கும் ஈஸ்வரனும் இவன் நாமமே இதுவும் மெய்யே இதிலேயே அர்த்தமுள்ளது யோசித்துக் கொள்ளுங்கள் அகிலாண்டேஸ்வரி என்பதும் ஞானபிரசுராம்பிகை என்பதும் மெய்யே என்பேன் இதைத்தான் பெயராக சூட்ட வேண்டும் என்பேன்.
அப்பனே நல் முறையாக அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் மீண்டும் வந்து வேறொரு சக்தி வாய்ந்த தலத்தைப் பற்றி வாக்குகள் உரைக்கின்றேன் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.
ஆலய முகவரி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஞானபிரசுராம்பிகை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் உற்றுற கேட்கும் ஈஸ்வரர் கோயில்
வணக்கம்பாடி கிராமம். ஆரணி சாலை.
திமிரி பேருராட்சி.
ஆற்காடு வட்டம் .
ராணிப்பேட்டை மாவட்டம்.
ஆலய திருப்பணி குழு தொடர்பு எண்:-
9344488868.
8675564007
9444452393
9443730125.
சித்தன் அருள்.................தொடரும்!