​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 14 November 2020

சித்தன் அருள் - 962 - அனைவருக்கும் குருவருள் கூடும் நேரம்!


நாம் என்னதான் சிலவிஷயங்களை தீர்மானித்தாலும், அகத்தியப் பெருமான் என்ன நினைக்கிறாரோ அந்த நேரத்துக்குத்தான் நம் திட்டமிடல் நிறைவேறும்.

நான்கு நாட்கள் அமைதியாக காத்திருந்தேன். வியாழக்கிழமையும் வந்தது. அன்று காலை 9 மணியிலிருந்து 12 மணிவரை நல்ல நேரமாயினும், 10.30முதல் 11.30தான் நல்ல முகூர்த்தம் என்று மனது கூறியது. பஞ்சாங்கம் ஆம்! அதுவே உண்மை என காட்டியது.

10 மணிக்கு அவரை தொடர்பு கொண்ட பொழுது, கோவில் சென்றுவிட்டு வந்ததாகவும், காலை உணவை அருந்திவிட்டு, பிறகு அவரே அழைக்கிறேன் என கூறினார்.

பின்னர் அவர் அழைத்தது 10.45 மணிக்கு; முகூர்த்த நேரம்.

சிரித்துக்கொண்டே "நமஸ்காரம்! அடியேனின் குருநாதருக்கு, குரு மாதாவுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். எப்படி? கேள்விகளை நான் கேட்கட்டுமா? என்றேன்.

"இல்லைங்க நீங்கள் கேட்க வேண்டாம். அவர் சொல்ல வருவதை படித்து விடுகிறேன். அதில் உங்கள் கேள்விகளுக்கான பதில் இருக்கும். ஏதேனும் விட்டுப்போனால், பின்னர் நீங்கள் கேட்கலாம்!" என்றார்.

"சரி! அப்படியே ஆகட்டும்! வாசியுங்கள்!" என்றேன்!

"அப்பனே!" என முதலில் மூன்று முறை அழைத்தார்!

யாரும் அடியேனை இதுவரை அப்படி அழைத்து கேட்காததால், கூச்சத்தால், கூனிக்குறுகி போனேன்! ஒரு அமைதி உடலுள் பரவுவதை உணர்ந்தேன். முதலில், தனிப்பட்ட விஷயங்களை பற்றி அவர் விவரித்தது, ஆச்சரியத்தை கொடுத்தது. அவர் அருள் வாக்கில், என் கேள்விகளுக்கு பதில் கிடைக்க, ஒவ்வொரு வினாவாக காற்றில் கரைந்து போகத் தொடங்கியது. இத்தனை வருடங்களாக, ஒவ்வொரு விஷயத்தையும் செய்யும் பொழுது, அது பின்னர் முளைத்து, என் கர்மாவையும் சேர்த்து கரைக்கும் என ஒரு பொழுதும் உணரவே இல்லை. அவர் அத்தனையையும் கவனித்திருக்கிறார். [அவர் கூறியதில், அடியேனின், தனிப்பட்ட விஷயங்களை இவ்விடத்தில் தவிர்த்து விடுகிறேன்].

"எதற்காக என்னை விரட்டிப்பிடித்து இப்பொழுது இந்த நாடி அருள்வாக்கு? என மனதுள் கேள்வி எழுந்த அடுத்த நிமிடம் பதில் வந்தது.

"இவனும், இவனை சேர்ந்த என் சேய்களும் எத்தனை வருடங்களாக, எப்படியெல்லாம் என்னிடம் பிரார்த்தனை வைத்தார்கள் என்பது எனக்கு தெரியும்! அதில் மனம் நெகிழ்ந்து யாம் இந்த நாடிக்கு வழி வகுத்தோம். இனி யாம் இங்கு வாக்குரைப்போம்!" என்ற  அமிழ்தினும் இனிதான தமிழில் தெளிவாக உரைத்தார்.

அடியேன் ஒரு நிமிடம் ஆடிப்போனேன். நான் கேட்டது உண்மைதானா, இது கனவா, நனவா என்றறிய, என்னையே விரல் நகத்தால் ஒரு முறை குத்திப் பார்த்துக் கொண்டேன்.

"அப்பாடா! ஒரு வழியாக நம் குருநாதர் அருள்வாக்கு உரைக்க சம்மதித்துவிட்டார். மறைந்த திரு ஹனுமந்த தாசன் ஸ்வாமிக்குப்பின், இனி யாம் வாக்குரைப்பதில்லை என்று கூறி சென்றுவிட்ட குருநாதரிடம், அடியேன் எங்கு சென்றாலும் வைத்த ஒரே பிரார்த்தனை இதுதான்.

"பாரதத்தில் உள்ள 130 கோடி மனிதர்களில், ஒருவரை தெரிவு செய்து, நாடியை கொடுத்து, அதில் தாங்கள் அமர்ந்து வாக்குரைக்க வேண்டும். நல்வழி காட்ட வேண்டும்" என்பேன். இதையே இறையிடமும் கூறி வந்தேன். "சித்தன் அருள்" வழி அனைத்து அடியவர்களையும், அகத்தியரிடம் வேண்டிக்கொள்ள சொல்லியிருந்தேன். அந்த வேண்டுதலுக்கு 10 வருடங்களுக்கு பின் நம் குருநாதர் செவி சாய்த்துள்ளார் என அன்று உணர்ந்தேன். [நாடி வாசித்தவர் பின்னர் ஒருமுறை பேசிய பொழுது, வந்த ஒரு அருள்வாக்கை பகிர்ந்து கொண்டார். அது!

"இனி வாக்கு உரைப்பதில்லை என்று சென்ற அகத்தியர், சாதாரண ஒரு மனிதனுக்காகவும், மனிதர்களின் வேண்டுதலுக்காகவும், மறுபடியும் வாக்குரைக்க வந்திருப்பது, பிற சித்தர்களையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அகத்தியர், தீர்மானித்தால் அதுவே முடிவு. ஒரு பொழுதும் மறுபரிசீலனை செய்யவே மாட்டார்! அவரா இந்த முடிவை எடுத்தார்!" என போகர் முதல், காகபுஜண்டர் வரை, கேள்வியை எழுப்பினராம்!]

சரி! இனி உங்கள் அனைவருக்குமான பதிவுக்கு வருகிறேன்!

 1. அகத்தியப்பெருமான், வாரத்தில் மூன்று நாட்கள் (புதன், வியாழன், வெள்ளி) நாடியில் வந்து அருள் வாக்குரைப்பார்.
 2. அருள்வாக்கு கேட்க விரும்புகிறவர்கள் கீழே தரப்பட்டுள்ள எண்ணில் SMS செய்தியை (உங்கள் பெயர், ஊர் பெயர், செல் நம்பர்) தட்டச்சு செய்து முன் பதிவு செய்ய வேண்டும்.
 3. முன் பதிவு செய்தபின், தியதி, நேரம் போன்றவையுடன் பதில் பின்னர் வரும்.
 4. அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் அழைத்து உங்களுக்கான அகத்தியரின் நாடி அருள்வாக்கை போன் வழியாகவே கேட்டுக் கொள்ளலாம்.
 5. நாடி வாசிப்பவர் பெயர் - திரு.ஜானகிராமன்,
 6. தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 8610738411

சித்தன் அருளில் எனக்கு இடப்பட்ட முக்கியமான வேலை நிறைவு பெற்றது என எண்ணுகிறேன்.

அனைவரும், அகத்தியர் அருள்வாக்கை பெற்று, அதன் படி நடந்து, வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அடியேனின் நமஸ்காரத்தையும், மிக்க நன்றியையும் சமர்ப்பிக்கிறேன்.

சித்தன் அருள்.................. தொடரும்!

47 comments:

 1. மிக்க நன்றி ஐயா. தாத்தாவின் கருணையே கருணை. ஓம் லோபாமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் திருவடிகளே போற்றி.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. "அகத்தியப்பெருமான், வாரத்தில் மூன்று நாட்கள் (புதன், வியாழன், வெள்ளி) நாடியில் வந்து அருள் வாக்குரைப்பார்" - ITHU ENNA NAADIYAAKA IRUKKUM?

   Delete
  2. ஜீவநாடி அய்யா. யாருக்கு எல்லாம் வாக்கு கிடைக்கிறதோ அவர்கள் எல்லாம் அகத்தியர் அய்யாவின் அருள் பெற்றவர்கள். உங்கள் பிரார்த்தனையால் கிடைக்க போகும் வாக்கு என்பதால் சந்தோஷம்.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 3. ஓம் குருவே துணை
  பிராத்தனைக்கு எப்பொழுதும் பலன் உண்டு அதுவும் குரு அகத்திய பெருமானிடம் கண்டிப்பாக உண்டு.
  ஓம் ஸ்ரீ லோபமுத்திரை சமேத அகத்தீசாய நமக

  ReplyDelete
 4. மிக்க மிக்க நன்றி ஐயா. இன்றைய நாளில் எனக்கு மிகுந்த மகிழ்வை கொடுத்த செய்தி இதுதான்.
  ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தியப் பெருமான் தீருவடிகள் போற்றி 🙏

  ReplyDelete
 5. ஓம் ஸ்ரீ அகத்தீஷாய நம்௳

  ReplyDelete
 6. சார்
  உண்மை பக்தர்களின் கோரிக்கையை நிறைவு செய்து தீபாவளி அன்று சந்தோஷத்தையும் ஆறுதளையும் உங்கள் மூலமாக அகத்தியர் அய்யாவை நம்பும் அனைவருக்கும் அருள் புரிந்து இருக்கிறார் அய்யா. உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. பிறருக்காக பிரார்த்தனையும் வேண்டுதலும் செய்பவர்கள் உங்களை போன்ற வெகு சிலரை. அய்யாவின் அருள்வாக்கு கேட்க SMS அனுப்பிவிட்டேன். ஓம் அகத்தீசாய நம

  ReplyDelete
 7. ஶ்ரீஅகத்தியர் லோபாமுத்ரா நமஸ்காரம்.
  ௐ அம் அகத்தீசாய நமக.

  ReplyDelete
 8. ஆஹா அற்புதம்
  மகிழ்ச்சியான செய்தி
  மிக்க நன்றி ஐயா
  ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  ReplyDelete
 9. Om lobamuthra sametha agasthiyaha namaha.

  ReplyDelete
 10. ஐயா அன்பு வணக்கங்கள். எல்லா உயிரும் இன்புற்று இருக்கவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே! தங்களின் அன்பு வழி இது. பை நாக பம்பை சுருட்டி கொண்டு ஆழ்வார் உடன் கிளம்பி விட்ட பெருமாளை போல் அன்பு மகன் கேட்டவுடன் அப்பாவும் அருள்வாக்கு தர சம்மதித்து விட்டார். அப்பாவின் சேய் களுக்கு அவரின் அன்பும், கருணையும் கிடைக்க செய்தீர்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன் ஐயா, அம்மா.

  ReplyDelete
 11. Agathiyar thiruvadigal pottri..
  Nandri ayya..sms anupivitten.

  ReplyDelete
 12. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  ReplyDelete
 13. ஆஹா எல்லாம் இறைவன் செய்யாள் சித்தன் போக்கு தனி போக்கு ,ஹ்ம்ம் எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி ...


  என் அருள் இல்லாமல் நீ இங்கே வரமுடியுமா நிச்சயம் உண்டு ! - சென்ற முறை பாக்க சென்றபோது அகத்தியர் எனக்கு சொன்னது . ஹ்ம்ம் பார்க்கலாம் என்னை அழைக்கின்றார் என்று ...

  ReplyDelete
 14. பேரானந்தம் ஐயா

  ReplyDelete
 15. வணக்கம் ஐயா.. நான் மலேஷிyயாவில் இருக்கிறேன். WATSAPP NO.கிடைக்குமா... நன்றி

  ReplyDelete
 16. எல்லாம் வல்ல குருவை வணங்கி

  அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம் இன்று குருவிடம் நாடி படித்த போது கொரோனா பற்றி சொன்னார். இறைவனின் திருவிளையாடல் இது (கொரோனா ) இதற்கு மருந்து திரிபலா திரிகடுகு இரண்டையும் சம அளவாக சேர்த்து தண்ணீர் அல்லது பால் கலந்து சாப்பிட சொன்னார் இரு வேளை. பத்தியம் இல்லை
  எத்தனை நாள் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை
  கொரோனா முடியரவரையில் சாப்பிட்டால் நன்று என கருதுகிறேன்

  ReplyDelete
 17. Ayya vannakam.om Sri Lopamudra samata agastiyar thiruvadi saranam.Thai Thathai thiruvadi pottri.

  ReplyDelete
 18. Can anyone share the experience of JeevaNadi please. Thank you.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. அற்புதம் மகா அற்புதமான குருவின் திருவருள்.... எத்தனை ஆண்டுகள் தவம் ஏக்கம் அனைத்தும் இன்று முதல் தீர்ந்தது.. குருவின் கடைக்கண் பார்வை நமக்கு கிடைத்துள்ளது... குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete
 21. தோன்றா துணையன் ஆக இருக்கும் இறைவனும் குருவும் நேரடியாக அருள்வாக்கு தர சம்மதித்தது தங்களின் பொதுநலவேண்டுதலை ஏற்று .🙏🙏🙏...தன்னலம் கருதாது எங்களுக்கும் குருவருள் கிடைக்கச்செய்த அக்னிலிங்கம் ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள்.... பக்தி பரவசத்துடன் காத்து இருக்கிறோம் குருவின் திருவருள் வேண்டி .. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete
 22. அகத்தீசன் அடியவர் அகத்திற்கு ஈசனென விளங்கும் தனிப்பெரும் முதல்...
  கர் என்னும் செயலையும் அதனால் விளையும் மா வினைப்பதிவுகளையும் அடியவரின் அந்தராத்மாவை ஊடுருவும் தந்தை அகத்தீசனே அறிவார்...
  அகத்தியர் அடியவராக இருக்கும் தகுதியை வளர்த்துக் கொள்ளவும் அவரது அருளே முதலாகிறது .
  ஓம் ஸ்ரீ அகத்தீஷாய நமஹ

  ReplyDelete
 23. அதே முகூர்த்தத்தில் இன்று அகத்தியர் ஜீவ நாடியில் வாக்கு வந்த போது சிறு மழை பெய்து நின்றது. அகத்தியர் ஆசியாக தான் பார்க்கிறேன். ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி.

  ReplyDelete
 24. மிக்க மகிழ்ச்சி அய்யா

  ReplyDelete
 25. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 26. Ayya Vanakkam .
  I sent request with name location and cell no. To Jeeva nadi reader shri Janakiraman SMS on Monday 16.11.20
  After seeing yr post. So far no information received regarding any date to know reading.
  What further step should I take to know my readings sir
  Should I send again and again till I get date for me. That will cause overload for shri Janakiraman .
  Or can I contact directly on his cell.Because u wrote only to send SMS I don't want to pressurise him sir

  Pls guide me

  ReplyDelete
 27. AYya Vanakkam
  As per your information I sent SMS to Shri Janakiraman on 16.11.20 but so far no news for me
  How to go further pls guide me
  Thank you

  ReplyDelete
  Replies
  1. Namaskaram! I heard he as been loaded with so much of SMS. He is calling each adiyavar as Agasthiyar directs in his naadi. Pray to Gasthiyar to call you soon.

   Delete
  2. ON ENQUIRY, I CAME TO KNOW, HE HAS NOT RECEIVED YOUR MESSAGE FOR REGISTRATION. BETTER YOU MAY CALL HIM DIRECTLY.

   Delete
 28. வணக்கம் ஐயா.. நான் மலேசியாவில் இருக்கிறேன் அகத்தியரின் வாக்கு கேர்ப்பதற்கு WATSAPP NO.கிடைக்குமா. நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! இங்கு வெளியிடப்பட்டதே அந்த எண்தான்! அதில் "வாட்ஸாப்" உள்ளது!.

   Delete
 29. Today I got the blessings and Nadi reading from Agasthiyar. I am happy to have his blessings. Thanks to Janakiram Sir.

  ReplyDelete
 30. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 31. என் பெயர் பிரபு கோவையை சேர்தவன். நான் மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு என் விவரங்களை அனுப்பி ஓரு வாரம் ஆகிவிட்டது இன்னும் பதில் குறுஞ்செய்தி வரவில்லையே!!!

  ReplyDelete
  Replies
  1. ITS NOT IN OUR HAND. GURU HAS TO CALL YOU. PRAY TO HIM!

   Delete
 32. Mikka nandringa ayya.....
  guruve thunai..

  ReplyDelete
 33. I GOT BLESSED WITH NADI READINGS OF MAHAGURU AGATHIAR THRU MR.JANAKIRAMAN AIYA ,I THANK AGATHIAR AND OTHER SIDDHARS ALONG WITH MR.JANAKIRAMAN , I WAS OVERWHELMED WITH THIS READING.

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete