​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 28 February 2020

சித்தன் அருள் - 849 - மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம்!


மதுரையில், இறைவன் திருவிளையால் புரிந்த ஊரில், நம் குருநாதர் அகத்தியருக்கு ஒரு கோவில் கூட இத்தனை காலங்களாக தென்படவில்லை. இது ஏன் என பலமுறை அவரிடமே கேட்டதுண்டு. பதில் - ஒரு புன்னகையும், மௌனமும். இதில் ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது என்று உணர்ந்து, பின்னர் அடியேனும் மௌனமாகிப்போனேன்.

அனைத்து அகத்தியர் அடியவர்களின் சிறு முயற்சியால், அன்னை வாலையின் அருளோடு, சமீபத்தில் மதுரை பசுமலையில் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமான் வந்தமர்ந்தார்.

உண்மையிலேயே, அடியேன் எதிர்பார்ப்பு நிறைவேறியதில், மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். குடமுழுக்கு அதன் பின்னர் அவர்களின் ஆசி போன்ற விரிவான தகவலை ஒரு அகத்தியர் அடியவர் அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். "அகத்தியப் பெருமானின் சித்தன் அருளை" வாசிக்கும் ஒவ்வொருவரும், அறிந்துகொள்வதற்காக அவற்றை கீழே தருகிறேன்.

26-Feb-2020 ஆதி சக்தி வாலை பொது ஜீவ நாடி நூல்:- 

மதுரை பசுமலையில் பிப்ரவரி 7ஆம் தேதி குடமுழுக்கு கண்ட ஶ்ரீ லோபாமுத்திரா உடன்உறை அகத்திய மஹரிஷி ஆலயத்திற்காக ஆலய அகத்தியர் அடியவர்கள் வேண்டி, உரைக்கப்பட்ட பொது நாடி வாக்கு.

நாடி வாக்கு;-

அருள் வடிவான சிவத்தை போற்றி அருளுகிறேன் அன்னை என் ஜீவ மொழி ஆசி! புவிதனில் அகத்தியனுடன் லோபமாதா தாயும் பரசிவமாய் பரம் பொருளாய் வரத்தை வந்த தடத்தில், தடத்திலே கையிலை ஈசன் சக்தி யானும் தரணி காக்க வந்திட்டோம். அகத்தியன் லோபா மாதாவாக. நிலமதில் நல்லோர்கள், தனவான்கள், தயவான்கள் நீதியுடன் யாசகம் பெற்று அமைத்த நல் சித்தர் குடில் அதுவில், அருளாய் முப்பெரும் தேவர் உடன் தேவியரும் , சித்தர்கள், ரிஷி கணங்கள், முனிவர்கள், யோகிகள், சிவ கணங்கள், நவ நாத சித்தர்கள் சூட்சும வடிவில் வடிவிலே வாழுகின்றார். இதுவே உண்மை.

வகை பட அமைத்த நல் கோட்டம், அதில் கந்தனும் வேல் படையும் ஆதி மூலரும், ஔவையும் கலியுகம் காக்க கருணைபட வந்திருக்கார். வந்திருக்கார் நவகோடி சித்தர்களும் சூட்சுமத்தில் விண்ணுலக தெய்வ கணங்கள் மனம் மகிழ்ந்து இருக்கார். விகாரி ஆண்டு கலைத்திங்கள் ஆறிரண்டு திகதி புகர் வாரம் ( தை மாதம் 24 வது நாள் - குடமுழுக்கு நடந்த பிப்ரவரி 7,2020 ஆம் நாள், வெள்ளிக்கிழமை) விண்ணிலிருந்து இறை கணங்கள் அகத்தியனை கண்டு ரசித்தார்.

கண்டு ரசித்தார் கலையுகம் காவல் தெய்வம் வெளிப்பட கூறிடம் இது தடம் வருவோர் மூவினை சாபமுடன் பிரம்ம சாபம், பித்ரு சாபம், பெண் சாபம், பிரேத சாபம், பூமி சாபம், கங்கா சாபம், குல தெய்வ சாபம் தீரும்மென்பேன். 

தீருமென்பேன் சர்ப்ப தோஷம், நவ கிரக தோஷம், புத்திர தோஷம், தீரும் மாங்கல்ய தோஷம், குசன் தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பூ தோஷம், மைந்தன் குற்றம் , இதனுடன் கலியுகத்தில் பிறவி பலன் பயன் தோஷம் தீரும். தீரும் பாலரிஷ்டம் , உடல் உயிர் மனக்குறைகள்,தர்ம வழி தவ வழி செல்லுவோர்க்கு உலகில் சைவ நெறி தவராது நிற்ப்பவர் தமக்கும் சத்தியமாய் முக்தியும் அருளிடுவர் சிவ கணங்கள். சிவ கணங்கள்
மகிழ்ந்து இருக்கார் இங்கு.

சிவமுடன் நாராயணர் அருளும் இது தடம் இருப்பதுவால் பல குறைகள் சாம்பலாய் போகும்.

இயம்பிட விதி மாற்றும் வித்தை கூட உண்டு. உண்டுதான் அகத்தியரும் பிரம்ம சொரூபமாக நிற்க்க உரைத்திட இனி வரும் காலம் முழு மதிதோரும் ( ஒவ்வொரு பௌர்ணமி அன்றும்)

அகத்தியருக்கும் அன்னைக்கும் விழா எடுக்க அருள் வடிவில் சித்தர்கள் எல்லாம் கலந்து செல்வர். செலவர் மனம் மகிழ்ந்து அருள் வரம் தந்து ஜெகத்திலே சூட்சும சக்திகள் வந்திறங்கி வரம் தருவர் பணிவோர்க்கெல்லாம் வந்த வினை, வரும் வினை, பெற்ற இரு வினைகள் (குழந்தைகள் பெற்ற வினை) யாவும் தீரும். (வந்த வினை- சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிய கர்மா) தீரும் போகாத கொடு வினை. எல்லாம் தவசிகளே விரும்பி அமைத்த குடில் இது அறியவேண்டும். பக்குவம் உள்ள மனிதர் தவம் இயற்றும் காலம் பராசக்தி பார்வை படும்,  அருள் தடம் இது. 

[இந்த ஆலயத்தில் யாராவது தவம் செய்தால் ஆதி வாலை பரமேஷ்வரியே கண் திறந்து அந்த ஆலயத்தை பார்க்கக்கூடிய அருள் சிறந்த ஒரு தடமாக இந்த இடம் உள்ளது. இப்பேர்பட்ட்வல்லமை பொருந்திய இந்த அகத்திய மஹரிஷி ஆலயத்தில் மக்கள் வந்தால் அவர்கள் வினை எல்லாம் தீரும். இந்த உலகத்தில் எந்த தெயவத்தினிடம் சென்று நம் குறைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் அப்படீன்னு தெரியாதவங்க இந்த அதி மகத்துவம் மிக்க ஆலயத்துக்கு வந்தால் எந்த குறைகளாக இருந்தாலும் அத்துனை குறைகளையும் ஆசான் அகத்திய மஹரிஷிகளும் அன்னை லோபாமுத்திரையும் கண் திறந்து அருள் ஆசி வழங்கி சிவ சக்தி சொரூபத்தில் இருந்து மக்களுக்கு வினைகளை/விதிகளை நீக்கி வாழ்வில் வளங்களை அருளுவார்கள் என்ற சத்திய வாக்கை வாலை அன்னை இந்த ஆலயத்திற்க்கு அளித்த விளக்கத்தை நிறைவு செய்கின்றோம்]

நாடி ஆசி முற்றே 

அகத்திய மஹரிஷி இங்கு பிரம்ம சொரூபம் ஆக உள்ளார். அதனால் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வர்ர் போல் விதியை மாற்றும் ஆலயம்

மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

அ/ மி சக்தி மாரியம்மன் கோவில் வளாகம்,
தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை-4.

[திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  அருகில். மதுரை திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே, எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு  முந்தின ஸ்டாப்.]

Sri Arulmiga Sakthi Mariamman Temple,
Thiagarajar Colony,
GST Road, Moolakarai, 625004,, Pasumalai, Madurai, Tamil Nadu 625004, India

https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7


ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

15 comments:

 1. Nandri ayya! I was looking for the address of this temple and got all the details now. Really feeling blessed.

  ReplyDelete
 2. ஆதி சக்தி வாலை பொது ஜீவ நாடி நூல்:

  இந்த ஜீவ நாடி எங்கு உள்ளது , போன் நம்பர் , முகவரி , கொடுத்தால் உதவியாக இருக்கும் நன்றி

  ReplyDelete
 3. ஐயா வணக்கம். தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன். ஐயா பிப் 8 அன்று குரு பிரான், தாய் அவர்களை பார்த்து ஆசி பெற்றோம் ஐயா. அவர்களை பார்க கண் கோடி வீடும் ஐயா. அப்படியே சதுர கிரி சென்று சுந்தர மஹாலிங்க, சந்தன மகாலிங்கம் , நவ கோடி சித்தர்கள் தரிசனம் பெற்று வந்தோம் ஐயா. பதிவிற்கு கோடி கோடி நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா. படித்து விட்டு delete செய்து விடுங்கள் ஐயா.

  ReplyDelete
 4. Ayya,
  Om Agatheesaya namaha!
  Vanakkam. Can you please ask Sri Agasthiyar in jeevanadi about coronavirus affecting the world,?
  Any prayers n remedies we can follow?
  Thanks so much,
  Priya

  ReplyDelete

 5. ஐயா
  வணக்கம்.

  மதுரையில் உள்ள நம் குருநாதர் பற்றி நேற்று நாம் குழுவில் பேசிக் கொண்டு இருந்தோம். அடியார்கள் கோயில் பற்றி கேட்க, நாம் நம் தள பதிவுகளை இட்டிருந்தோம். அதே நேரத்தில் குருவின் அருளால் சித்தன் அருள் வலைத்தளத்தில் அதே கோவில் பற்றி பதிவு வெளியாகி உள்ளது. இது குருவின் பரிபூரண அருள் தான். குருவின் அற்புதம் தான்
  மேலும் குருவின் அருளால் , இந்த ஆலய விபூதி பிரசாதம் நாம் சென்ற சதுரகிரி யாத்திரையில் பெற்று வந்துள்ளோம். சென்னையில் உள்ள அன்பர்கள் நேரில் கண்டு எம்மிடம் பெற்றுக் கொள்ளவும். ஏனைய அன்பர்கள் தங்கள் முகவரியை எம் அலைபேசி எண்ணிற்கு(7904612352) கொடுத்தால் நாம் பிரசாதம் அனுப்பி வைக்கின்றோம்.  குருவின் அருளாலே குருவின் தாள் வணங்கி
  நன்றி
  வணக்கம்

  ரா.ராகேஷ்
  தேடல் உள்ள தேனீக்களாய் TUT குழு
  https://tut-temples.blogspot.com/

  ReplyDelete
 6. engal kudumbatharudan ayya agatheesa ungalai kana arul vendume om agatheesaya namaha.

  ReplyDelete
 7. excellent information.thank u so much

  ReplyDelete
 8. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 9. Yesterday unfortunately I got this opportunity in my life

  ReplyDelete
 10. Yesterday unfortunately I got opportunity to see agathiyar aiya

  ReplyDelete
 11. It should be read as "unexpectedly" instead of unfortunately.

  ReplyDelete