​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 13 February 2020

சித்தன் அருள் - 844 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


[ வணக்கம்! இந்த வார தொகுப்பை சற்று மனம் நிறுத்தி/ஒன்றி நிதானமாக வாசிக்கவும் ]

ஹடயோகத்தில் மூச்சுசக்தியை கும்பகத்தில் நிறுத்திவிட்டால், மனதின் செயல் நிறுத்தப்பட்டுவிடும். இதை சமாதி நிலை என்பர். கேசரி யோகத்தில், உள்நாக்கை, நாக்கினால் மூடினால்/அழுத்தினால் சுவாசம் நின்று மனம் ஓய்ந்துவிடும். இவை இரண்டும் முயற்சி செய்து தேர்ந்திட, விதி விலகி வழிவிடவேண்டும். ஆதனிலால்தான், யாருக்கு விதி வழி விடுகிறதோ அவர்களின் கர்மாவை உற்று நோக்கித்தான், இந்த பயிற்சியை, சித்தர்கள் தீக்ஷையாக கொடுத்தனர். இது மற்றவர்களிலிருந்து விலக்கியே வைக்கப்பட்டு, ரகசியமாக காப்பாற்றப்பட்டு வந்துள்ளது.

யோகமுறைகள்/பிராணாயாம முறைகளை தொடங்கும் காலத்தில், ஒருவன் உடல் பற்றிய உணர்வில் இருப்பான். ஹடயோகத்தில் தொடங்கி மனம் பற்றிய அமலயோக நிலைக்கு செல்லும் பொழுது, த்யானிப்பவனுக்கு இருவித யோகநிலைகள் அவன் முன் தோன்றும்.

சிவ ஸ்வரூபத்தை சூன்யம் என்றும், குணங்கள் அற்றது என்றும் த்யானிக்கிற அபாவ யோகம் ஒன்று;
இரண்டாவது சிவஸ்வரூபத்தை பேரானந்த ஸ்வரூபமாகவும், நிர்மலமானதாகவும் தியானிப்பது - இதை அமலயோகம் என்பர்.

அதனால்தான் சித்தர்கள் இவ்வுடலை "ஐந்து கல்லால் ஒரு கோட்டை;  ஒன்பது வாசல்" என்று பாடி சென்றனர்.

நீண்ட காலம் வாழ வழி பிராணாயாமம் செய்தால்தான் என சித்தர்கள் அனுபவபூர்வமாக உணர்த்தி சென்றனர். சூரியகலை(வலது மூக்கு வழி செல்லும் சுவாசம்), சந்திரகலை (இடது மூக்குவழி செல்லும் சுவாசம்) வழியே செல்லும் ஸ்வாசங்களால்தான் ஒருவரின் ஆயுள் கணக்கிடப்படுகிறது.

ஆரோக்கியமான ஒரு தேகத்தில் சூரிய நாடி வழி 8 அங்குல சுவாசமும், சந்திரநாடி வழி 12 அங்குல சுவாசமும் நடக்கிறது. சந்திர நாடி வழி சுவாசத்தை செல்ல விடாமல், சூரிய நாடி வழி (வலது நாசி) சுவாசம் செல்லும்படி பழகிக்கொண்டால் 120 ஆண்டுகள் (தீர்காயுள்) வரை உயிர் வாழலாம் என்கின்றனர், சித்தர்கள்.

எல்லா இந்திரியங்கள் வழியும் வரும் அறிவானது ஆக்ஞாசக்ரம் என்கிற நெற்றிக்கண்ணில் (சுழுமுனை) வந்து சேருகிறது. சுழுமுனை என்பது ஆகாய தத்துவம் கொண்டது.  ஆதலினால், இதை காண்பது அரிது. அறிவு ஆக்ஞா சக்கரத்துக்கு மின் அலைகளாக வருவதை நாதம் என்பர். இந்த ஆக்ஞா சக்கரத்தை மாகேஸ்வரி பீடம் (PITUATARY GLAND) என்பர். இங்குதான் முதல் தொடக்க நிலை ஆரம்பமாகிறது. இவ்விடத்தில், வந்து சேரும் நாதம் எண்ணங்களால் சிதறடிக்கப்படும் பொழுது, த்யானத்தில் மனம் ஒன்றாமல், எங்கெங்கோ அலை பாய்கிறது. இங்கு வரும் மின்னலைகள் ஒரே புள்ளியில் நிற்க, அந்த நாதத்தை சஹஸ்ராரத்துக்கு தொடர்ந்து செலுத்திட, அதுவே மாற்றிப்படைக்கும் சக்தியாக மாறும்.

மேற்சொன்ன மாகேஸ்வரி பீடநிலை தான் ஒரு சிலருக்கு அதீத சக்தியை கொடுக்கிறது. உதாரணமாக, எதிரில் இருப்பவரின் எண்ணத்தை வாசிப்பது, கர்மவினைப்படி என்ன நடக்கும் என்று சரியாக உணர்வது, ஆதார சக்கரங்களின் அசைவு, அவற்றின் நிறங்களில் வரும் மாறுதல், ஒருவருக்கு உள்ளே உள்ள வியாதியை கண்டறிவது போன்ற அதிசய செயல்களை செய்கிற சக்தியை கொடுக்கும். இவற்றில் ஒன்றும் மயங்கிவிடாமல் தொடர்ந்து பிராணாயாம நிலையை பயிற்சி செய்பவர், ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒவ்வொரு அஷ்டமாசக்தியையும் அடைவர். அஷ்டமாசக்தியை அடைந்து, அதிலும் மயக்கமுறாமல் தொடர்பவர்கள், ஒரு நிலையில் "மகா சக்தி" என்கிற நிலையை அடைந்து இறைவனோடு கலந்து ஒன்றி இருப்பார்கள். இதுவே "சித்த நிலை". எல்லாம் இருந்தும், ஒன்றின் மீதும் பற்றின்றி இருக்கும் நிலை. இறை உத்தரவை நிறைவேற்றும் நிலை.

பிராணாயாமம் > தசவாயுக்கள் > சூர்யசந்திர கலைகள் > நாதம் > சஹஸ்ராரம் > ஆதார சக்கரங்கள் (நாடி சுத்தி) > அஷ்டமாசித்துக்கள் > மாகேஸ்வரி பீடம் > மகா சக்தி லயனம் என்பதே மனிதன் சித்தத்தன்மை அடைய, சித்தர்கள் வகுத்து கொடுத்த வழி. பிராணன் லயம் செய்யும் முறையை அறிந்தவர்களிடம், சிவம் பிரகாசிக்கும் என்பதே சித்தநிலை பற்றிய சுருங்கிய வாக்கியம்.

சித்தன் அருள்....................... தொடரும்!

4 comments:

  1. ஐயா வணக்கம். ஓம் லூபா முத்திரை அம்மா சமேத அகத்தியர் குரு பிரான் திருவடிகள் போற்றி! தாங்கள் கூறியபடி சித்த நிலையில் தலை கீழ் லிங்கம் தெரியுமா ஐயா. மிக்க நன்றி ஐயா. குருவே துணை!

    ReplyDelete
  2. https://youtu.be/LHAKjp_NAuI

    லோபமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய
    மகரிஷிக்கு மதுரையில் நடைபெற்ற
    குடமுழுக்கு விழா -07/02/2020


    ReplyDelete
  3. ஐயா.... மிகவும் முக்கியமான அரிய பொக்கிஷங்கள் எங்களுக்கு கிடைக்கிறது...மேலும் வழிமுறைப்படுத்தி செயல்பட இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்...கிடைத்தவற்றை நல்ல முறையில் பயன்படுத்த இன்று முதல் தொடங்குகின்றேன் ஐயா...

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

    ReplyDelete
  4. முருகப்பெருமானின் மூளை

    http://fireprem.blogspot.com/2020/02/blog-post.html?m=1

    ReplyDelete