​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 6 February 2020

சித்தன் அருள் - 842 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


ஒரு உடலில் பிராணன் மேல் நோக்கி இயங்க, அபானன் கீழ் நோக்கி இயங்கும். இவை இரண்டும் கோர்த்துக்கொண்டு ஒன்றை மற்றொன்று தன் இயக்கத்துக்கு ஏற்ப மேலும், கீழுமாக இழுக்கும். இதை பிராண-அபான பந்தனம் என்பர். இந்த இயக்கம் குடலில் ஏற்படும் தாக்கத்தை சரி செய்து, ஜீரண சக்திக்கு தேவையான ரத்தத்தை அதன் அதன் உறுப்புகளுக்கு அனுப்பும். ஆகவே, பிராணனின் இயக்கம், அதிகப்படியான வயிற்றிலுள்ள வாயுவை ஏப்பமாக வாய் வழி வெளியேற உதவுகிறது. அபானனின் இயக்கம், அதிகப்படியான வாயுவை ஆசனவாய் வழி, அபான வாயுவாக வெளியேற்றுகிறது.

விக்கலை உருவாக்குவதே உதானனின் வேலைகளில் ஒன்று. இது குரல்வளை நரம்புகளை கட்டுப்படுத்தி, அவைகளை முடுக்கிவிட்டு விக்கல் சப்தத்தை உருவாக்குகிறது. இந்த விக்கல் நிறைய பேருக்கு நீண்ட நேரம் தொடர்ந்து நின்று எரிச்சலையும், வெறுப்பையும் உருவாக்கும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில், அனைவரும் ஒரு விஷயத்தை சற்று யோசிக்க வேண்டும். குடலுக்கு ஏற்பட இருந்த ஒரு அதீத தாக்கத்தை, இந்த உதானன் தன் நிலையில் நின்று பலிகொடுத்து, குடலையும், உடலையும் காப்பாற்றிவிட்டு, என் கையிருப்பு குறைந்துவிட்டது என்று நமக்கு தெரிவிப்பதற்கே, விக்கலை உருவாக்குகிறது. எப்பொழுது உதானன் இழந்த சதவிகிதத்தை, அது திரும்பி பெறுகிறதோ, அப்பொழுது தொண்டை நரம்புகளை தூண்டி விடுவதை நிறுத்திக் கொள்கிறது. விக்கல் நின்று விடுகிறது.

சரி! உதானனின் இழப்பை எப்படி நிரவர்த்தி செய்வது? மிக எளிது. விக்கல் தொடங்கியவுடன். மார்பு நிறைய பிராண வாயுவை நிரப்பி, அப்படியே கும்பத்தில் ஒரு 30 வினாடிகள் பிடித்து வைத்துவிடுங்கள். நுரையீரல் பிராண வாயுவை வேறு வேறாக பிரித்து அதனதன் இடங்களுக்கு அனுப்பும். உதானனின் குறைவு நிவர்த்தி செய்யப்படும். விக்கல் நின்று விடும்.

தசவாயுக்களை சமன்படுத்தி, உடலில் சக்தியை மெருகேற்றுவதை பிராணாயாமம் செய்கிறது. மனித உடலிலுள்ள அசுத்தத்தை அணுவளவிலிருந்து, சுத்த நிலையை அடையவைக்க முடியும் என கண்டுபிடித்து அதற்கான பயிற்சியையும் வகுத்து தந்தவர்கள் சித்தர்கள். இதையே அவர்கள் "வாசி யோகம்" என்றனர். மனித உடலில் இருக்கும் உயிரின் ஊசலாட்டத்தை சூட்ச்சுமக் கயிறு என்றனர் சித்தர்கள். இந்த உயிரின் ஊசலாட்டத்தை பிடித்து மேலேறி ஜோதியை காண்பதே "சாகாக்கலை" என்பர். "சூத்திரப்பாவை கயிறருந்து வீழும்முன், சூட்ச்சுமக் கயிற்றினைப் பாரடா, அதிசூட்சுமக் கயிற்றினைப் பாரடா" என்றார் குணங்குடி மஸ்தான் சாகிப்.

சாகாக்கலையின் ஆணிவேரே யோகாப்யாசம் தான். 108 வகையான யோகாப்யாசனங்கள் இங்குள்ளன. அதில் மிக முக்கியமானது 72 ஆசனங்கள். நல்ல ஆரோக்கியம் உள்ள ஒருவரின் இதயம் நிமிடத்திற்கு 72 முறை அடித்துக்கொள்கிறது. இதை கவனித்தால் ஒரு துடிப்புக்கு ஒரு ஆசனம் என்பது சித்தர்கள் கூறும் வழி.

சித்தம் நிலைத்து நிற்க பிராணாயாமம் செய்வது மிக முக்கியம். ஒரு தம்பதியருக்கு சந்ததி உருவாக காரணமாக இருப்பதே நிலையான சித்தம் தான். சித்தம் சிதறி இருந்தால், சந்ததி உருவாவது தடைபடும்.

ஹடயோகம் மூலம் அதிக காலம் வாழலாம் என சித்தர்கள் கண்டுபிடித்தனர். "ஹ" என்பது சூரியனை குறிக்கும். "ட" என்பது சந்திரனை குறிக்கும். சூரிய, சந்திர நாடிகளை சரியான விகிதத்தில் இயக்கினால், மனதை ஒருமுகப்படுத்த முடியும். மூக்கின் நுனியில் பார்வையை நிறுத்துவதின் மூலம் மனதை ஒன்றுபடச் செய்யலாம். இதையே ஒரு சிலர் சாம்பவி முத்திரை எனவும், கேசரி முத்திரை எனவும் கூறுவர்.

சித்தன் அருள்........... தொடரும்!

4 comments:

  1. ௐ ஶ்ரீ லோபமுத்ரா சமேத அகதீசாய நமக.

    ReplyDelete
  2. ௐ ஶ்ரீ லோபமுத்ரா சமேத அகதீசாய நமக..

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

    அரிய தகவல்கள் பெறுகின்றோம்... நன்றி ஐயா

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக,

    ஐயா, நான் 12 வருடங்களுக்கு முன்பு சென்னையில் திரு. அனுமத்தாசன் ஐயா அவர்களின் பெரும் உதவியால் அகத்திய பெருமான் கருணையால் தீராத உடல் உபாதை தீர வழிகாட்டுதல் பெற்று நலம் அடைந்தேன், அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள வார்த்தைகள் இல்லை. ஐயா நான் மீண்டும் குரு அகத்தியர் அவர்களின் ஜீவ நாடியை பார்க்க தகுந்த வழிகாட்டுதலை எனக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி

    எனது மின்னஞ்சல் முகவரி : rkvijay833@gmail.com
    தொலைபேசி : 8144386111

    ReplyDelete