​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 21 February 2020

சித்தன் அருள் - 847 - மகாசிவராத்திரி!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று மகாசிவராத்திரி. உங்களுக்கு தெரியும், அனைத்து சிவாலயங்களிலும் அபிஷேக பூஜைகள் மிகச்சிறப்பாக நடத்தப்படும் என்று. சிவராத்திரி பூசையில் கலந்து கொள்ளவே, எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். முன் கர்ம வினைகள் விலகி வழிவிட்டு, இறைவனும் அவனை நினைக்க வைத்தாலே, யோசிக்கவே தோன்றும். அதிலும், நினைப்பு வந்து, பூசையில் கலந்து கொண்டு, உழவாரப்பணியும் செய்கிற பாக்கியம் கிடைத்தால், அல்லது அன்றைய தினம் கிரிவலம் செய்து, தான தர்மங்கள் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அது மிகப்பெரிய பாக்கியம்.

தர்மம் செய்யவேண்டும் என்ற உடன் யோசனையே இருக்க கூடாது. செய்து விட வேண்டும். நம்முடன் சிறிது பழம் வைத்துக் கொண்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செய்கையில் வழியில் அமர்ந்திருக்கும் அல்லது நின்றிருக்கும் ஒரு பசு நிமிர்ந்து நம்மை பார்த்தால், அது தானம் செய்ய வேண்டிய நிமித்தம் என்று உணருங்கள். யாருக்கு, எங்கு, எப்படி கர்மவினைகள், தானம் வழி கழித்து விடப்படும் என்பதை, இறைவனும், சித்தர்களும்தான் தீர்மானிக்கிறார்கள்.

இது புரிந்தவர்கள் விருப்பப்படி சிவராத்திரியை அமைத்துக்கொள்ளலாம்.

ஓம் நமசிவாய!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

6 comments:

 1. அன்புடையீர் திருவோணம் நட்சத்திரம் இன்றா அல்லது நாளையா

  ReplyDelete
  Replies
  1. இன்று திருவோணம் நட்சத்திரம்.

   Delete
 2. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் சரணம்!

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

  நன்றி ஐயா

  ReplyDelete
 4. ஐயா வணக்கம். வாழ்க வளமுடன் ஐயா. ஐயா நான், சிவா, பிரசாத், ப்ரஷாந்த் அனைவரும் கிரிவலம் வந்தோம் ஐயா. தாங்கள் அம்மா அனைவரும் வருவீர்கள் என்று நினைத்தேன் ஐயா. அடுத்த முறை சிவராத்திரி கு வரவேண்டும் ஐயா. கோயிலுக்கு உள்ளே போக முடியவில்லை ஐயா. கூட்டம் அதிகம். திருவண்ணாமலை கிரிவலம், மற்றும் கோயில் பற்றி ஆழமான பதிவு கொடுங்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா. படித்துவிட்டு delete செய்து விடுங்கள் ஐயா.

  ReplyDelete