வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
ஆதிசங்கரர் நமக்களித்த "சௌந்தர்யா லஹரியிலிருந்து" இரு ஸ்லோகங்கள் கீழே தரப்பட்டுள்ளது. முதல் சுலோகம் 32வது ஸ்லோகமாக வரும். இரண்டாவதாக உள்ள சுலோகம் 99வது ஸ்லோகமாக வருகிறது.
அடியேனுடைய குருநாதர் இந்த 32வது ஸ்லோகத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 48 முறை ஜெபித்துவிட்டு, 99வது ஸ்லோகத்தை ஸ்லோகத்தை, கடைசியில் மூன்று முறை கூறி நிறைவு செய்யச் சொன்னார். என்ன வேண்டுமோ அதை முதலிலேயே அம்பாளிடம் வேண்டிக்கொள் என உத்தரவிட்டார்.
என்ன வேண்டிக்கொள்வது? என்ற எண்ணம் வரவே, பொதுவாக எல்லோருடைய நலத்திற்கும் வேண்டிக்கொண்டு ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபம் செய்து வர, மந்திரமும் வளர, அடியேனுடைய வாழ்க்கையில் அனைத்தும், அம்பாளின் அருளால் வந்து சேர்ந்தது. பின்னர் ஒரு முறையேனும் வாழ்க்கையில், எதற்காகவும் திரும்பி பார்க்க வேண்டிய நிலை வரவில்லை என்பதே உண்மை.
நம்புகிறவர்களுக்கு வாழ்க்கை உங்கள் கையில்.
சரி! இப்பொழுது இதை ஏன் கூறுகிறேன் என்றால், அகத்தியப் பெருமானின் சித்தனருளை வாசிக்கும் அனைவருக்கும் தெரிவிக்கும் படி, நம் குருநாதரின் உத்தரவாகியுள்ளதால்தான். விருப்பமுள்ளவர், இந்த இரண்டு ஸ்லோகங்களை தினமும் கூறி வாருங்கள். நல்லதே நடக்கும்.
32வது சுலோகம்:-
சிவ சக்தி காம ஷிதி ரத ரவிச் சீதகிரணக
ஸ்மரோ ஹம்ஸ-சக்ர ததனு ச பரா-மார ஹரய
அமீ ஹ்ருல்லேகாபிஸ் தீஸு ருபி-ரவசாநேஷு கடிதா
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜநநி நாமா வயவதாம்!
शिवश्शक्तिः कामः क्षितिरथ रविश्शीत किरणः
स्मरो हंसश्शक्रः तदनुच परामारहरयः
अमी ह्रुल्लेखाभिः तिसृभिः अवसानेषु घटिताः
भजन्ते वर्णास्ते तवजनानि नामावयवताम्!
shivah shaktih kamah khshitiratha ravih shItakiraNah
smarO hamsah shakrah tadanuca parAmAraharayah
amI hrullEkhAbhih tisrubhih avasAnEShu ghaTitA
bhajantE varNAstE tava janani nAmAvayavatAm
99வது சுலோகம்:-
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி சபத்னோ விகரதே
ராதேபாதி வ்ரித்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவன்னேவ ஷபித பசுபாச வ்யதிகர
பராநந்தாபிக்யாம் ரசயதி ரசம் தஃவத்பஜனவான் !
सरस्वत्या लक्ष्म्या विधि हरि सपत्नो विहरते
रतेः पतिव्रत्यं शिथिलयति रम्येण वपुषा
चिरं जीवन्नेव क्षपित-पशुपाश-व्यतिकरः
परानन्दाभिख्यं रसयति रसं त्वद्भजनवान् !
saraswatyA lakshmyA vidhi hari sapatnO viharatE
ratE pativrityAm sithilayati ramyENa vapuShA
ciram jIvannEva kshapita pashupAsha vyatikarah
parAnandAbhikhyam rasayati rasam tvadbhjanavAn
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சரணம்/சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................... தொடரும்!
ஐயா வணக்கம்... நன்றி ஐயா. அய்யனுக்கு கோடானு கோடி நன்றிகள் ஐயா...
ReplyDeleteௐ ஶ்ரீ லோபமுத்ரா சமேத அகதீசாய நமக..
ReplyDeleteஐயா... அய்யன் இந்த பொக்கிஷம் கொடுத்தது எனக்காகவே அய்யா...என் நன்றிகள் அய்யன் அம்மையின் பாதத்திற்கு சமர்ப்பிக்கிறேன் ....
ReplyDeleteCan someone post Dhanvanthiri sloka that can be chanted for well-being of kids? How many times and what is the best time to chant? Thanks!
ReplyDelete