வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நம் குருநாதர் திரு அகத்தியப்பெருமான் உறையும் பொதிகை மலை, மலை நாட்டில் "அகஸ்தியர் கூடம்" என்றழைக்கப்படும். எல்லா வருடமும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தரிசனத்துக்கு வனத்துறை அனுமதியளிப்பர். தினமும் 100 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதுவும், அவர்கள் வலைத்தளம் வழி பதிவு செய்பவர்களுக்கு மட்டும். இந்த முறை முன்பதிவு தொடங்கிய 20 நிமிடத்தில், அத்தனை நாட்களுக்குமான முன் பதிவு தீர்ந்து போய்விட்டது, என்று கேள்விப்பட்டவுடன், எத்தனைபேர் அகத்தியர் தரிசனத்துக்கு, அத்தனை கடினமான யாத்திரையையும், ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். இதுவரை பெண்கள் யாரும் அகத்தியர் கூடத்திற்கு செல்வதற்கு, வனத்துறை அனுமதிக்கவில்லை. காரணம், மிக கடினமான பாதை, ஆபத்து மிகுந்த இடங்கள் தான் காரணம். போதாதற்கு, சமீபத்தில், பெண்களும் அகத்தியர்கூடம் செல்லலாம் என்று ஒரு தீர்ப்பு வேறு வந்துள்ளது. பக்கத்தில் இருக்கும் மலைமேல்/குன்றின்மேல் உள்ள கோவிலை பார்ப்பதுபோல் நினைத்திருப்பார்கள் போலும். போய் அனுபவித்துவிட்டு வரட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
அகஸ்தியர்கூடம் யாத்திரை என்று ஒரு காணொளி காண நேர்ந்தது. நாம் எவ்வளவு ஆசைப்பட்டாலும், அகத்தியர் அனுமதித்தால் அல்லாமல், ஒருவரால் அவரை சென்று பார்க்க முடியாது என்று ஒரு சொல் உண்டு. அங்கு செல்ல முடியாவிட்டாலும், அகத்தியர் அடியவர்கள், அவரை தரிசிப்பதற்காக, அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
முதல் காணொளியில் பின்னுரை மலையாள மொழியில் இருக்கும். இருப்பினும் ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம்.
குருநாதரை கண்டு களியுங்கள்.
சித்தன் அருள்................ தொடரும்!
அகஸ்தியர் கூடம் யாத்திரை
அகத்தியப்பெருமானை மிகத்தெளிவாக பார்க்க
Thank you very much
ReplyDeleteWe had the pleasant experience on seeing the agasthiar abhishegam in podhigaimalai
we hope that Lord Agasthiyar is leading us in all our activities
We are blessed with Guruarul & Thiruarul.