​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 24 January 2019

சித்தன் அருள் - 791 - பொதிகையில் அகத்தியர்!


[பொதிகை செல்லும் வழியில், வழுக்குப்பாறை என்கிற இடத்தில் அகத்தியர். இவருக்குத்தான் இப்பொழுது பூஜை போடமுடியும்! பொதிகையில் அகத்தியருக்கு, ஒன்றும் செய்ய முடியாது. ஏன்? கீழுள்ள படத்தை பாருங்கள்.]
[கேரள வனத்துறை ஏற்பாட்டின் பேரில், மூலஸ்தானத்தில், அவரை சுற்றி கயிற்றினால் வேலி கட்டி, விடியற்காலை 5 மணிக்கே வனத்துறை அதிகாரிகள் வந்து யாராவது உள்ளே செல்கிறார்களா, அந்த கயிற்றை தொடுகிறார்களா என்று கவனித்து, செய்தால் அந்த இடத்திலேயே, குறைந்தது 2000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் அலங்காரம், எதுவும் செய்ய முடியாது.

அகத்தியர் அடியவர்களுக்கு, ஏன் இந்த சோதனை? 
உண்மையான அடியவர்கள் வருத்தத்துடன் மலை இறங்குகின்றனர். நிறைய பேர்கள், பூஜை சாமான்களை, கொண்டுவந்து, பலராமபுரம் அகத்தியர் கோவிலில் கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
அகத்தியரை பார்த்துவிட்ட முற்போக்குவாதிகள் சந்தோஷமாக சிரித்தபடி, எதையோ கீழடக்கிவிட்டோம் என்கிற மமதையில் இறங்குகின்றனர். இதில், மலை ஏறி அகத்தியருடன் செல்பி வேறு.

அடியேனுக்கு ஒரு கேள்விதான் கேட்க விருப்பம். அகஸ்தியர் மூலஸ்தானம் இருப்பது "களக்காடு" என்கிற வனத்துறை பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு ஏன் இந்த இடத்தை கேரளாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டு அமைதியாக இருக்கிறது.

என்னே அகத்தியருக்கு, அடியவர்களுக்கு வந்த சோதனை.

இதுவும் அகத்தியர் அருள் என கொள்க!

சித்தன் அருள்.............. தொடரும்!

9 comments:

 1. ஒம் லோபமுத்ரா சமேத அகத்தீசாய நமக!

  ReplyDelete
 2. I feel bad about this.. I hope this is changed. Yaaroda place ku yaaru boundary poduradhu? Agasthiyar thaan help pannanum in some way...

  ReplyDelete
 3. ஐயா... ஏன் பூஜை செய்யவிடாமல் இப்படி செய்திருக்கிறார்கள்.... காரணம் என்ன என்று சொல்லப்படுகிறது? அம்மனுக்கு பூஜை செய்யவிடாமல் இப்படி இருப்பது மிகவும் கவலையாக இருக்கிறது...ஓ அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி... நடப்பது எல்லாம் ஈசன் திருவிழையாடல்...

  ReplyDelete
 4. Dear Sir, Namudiya poojai muraiyil ethum kutram irrukiratho enno vo neengal Guru vidamae kettu theriya paduthungal ayya.Sithan Arulai parpavarkal moolam serara vendiyavarkaluku seratum. Ellam nam guru vin arulae enbathil thuliyum maru karuthu illai. Neengal yaraiyum ethuvum solla vendam. Ungalaku kidaikum pathilai engaluku theirya paduthungal ayya. Om Aghathisaya Namaha.

  ReplyDelete
 5. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்ள வேண்டியது தான்...

  ReplyDelete
 6. Om Lopamudra mata samet Agatheesaya Nama

  Everything is HIS wish but we have to perform together genuine prayers to HIM to pardon all of us if there is something wrong things happened from us.....Mahamuni please grant us atleast permission to touch your holy feets.

  We are nothing without YOU

  Om Namah Shivaya

  ReplyDelete
 7. வணக்கம் அகத்திய அடியவர்களே

  நாம் எல்லோரும் நமது குருவை தரிசனம் எந்த தடையில்லாமல் தரிசனம் செய்ய குருவே வழிகாட்ட பிரார்த்திப்போம்

  ஓம் லோபா முத்ரா சமேத அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 8. Nam ellorum oru manu ezhudhuvom adhai madalamaichar kurai theerpu piruvukku anuppi, agathiyar adiyavargal anaivaradhu kayoppamudan , Mudiyuma . Eppadi seyal paduthalam vivaram therindhavargal pagiralam.

  ReplyDelete
 9. IF THERE IS A GOOD LEADER IN TAMILNADU, WE CAN CHANGE THIS PROBLEM ONCE FOR ALL. THERE IS A ROUTE TO AGASTHIYAR MALAI FROM MANIMUTHARU DAM SIDE , BUT IT IS NOT PERMITTED BY TAMILNADU FOREST DEPARTMENT AND ONE NEED TO REACH THE UPPER SIDE OF THE HILL WHICH COMES UNDER KERALA FOREST DEPT. ONLY MAHAGURU AGASTHIAR SHOULD SHOW THE WAY !!!

  ReplyDelete