அகத்தியர் அடியவர்கள், பிரசாதம் வாங்கிக் கொள்ள, ஒரே சீராக வந்து வாங்கிக் கொண்டனர். மிக அமைதியாக, இறை பிரசாதத்தை வாங்கிக்கொண்டவர்கள், உண்ட பின், பாக்கு இலை தட்டை அதெற்கென வைத்துள்ள குப்பை தொட்டியில் சேர்த்து, கோவிலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவியது.
எந்த ஊரிலிருந்து என்று ஞாபகம் இல்லை, ஒரு அகத்தியர் அடியவர் தனியாக வந்திருந்து, காலையிலிருந்தே அன்னம் தயாரித்து, நிறைய பேர்களுக்கு வழங்கினார். தன்னை அகத்தியப் பெருமானின் அடியவர் எனவும், திரு.ஹனுமந்த தாசன் அவர்களின் சீடர் எனவும், தெரிவித்துக் கொண்டார். அவர் பல அடியவர்களின், பசிப்பிணியை போக்கினார். அவர் முதல் நாள் இரவு பெய்த மழையில், அத்தனை சிரமங்களையும் தாங்கிக்கொண்டு கோவில் திண்ணையில் வைத்து காய்கறி நறுக்கி, அடுப்பு மூட்டி, சமையல் செய்தது, மிக நெகிழ்வாக இருந்தது. அவர் பட்ட சிரமங்களைப் பார்த்த பொழுது, அடியேனின் முயற்சி ஒன்றும் இல்லை என்றானது. அவரும், அவர் சுற்றமும் நலமாய் வாழ, அகத்தியர் அருளவேண்டும், என பிரார்த்திக்கிறேன்.
அகத்தியர் அடியவர்களுக்கு, அகத்தியர் பூசையின் பிரசாதமாக, இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட, புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. அகத்தியர் அடியவர்கள் விநியோகம் செய்வதற்கு, மிக உதவி செய்தனர். ஒருவர் தட்டு கொடுக்க, மற்றவர்கள் ஒவ்வொரு பிரசாதத்தை கொடுக்க, அதன் முடிவில், பெருமாளின் மஞ்சள் பொடி, மூன்று விதமான எண்களில் ஒன்றை கொண்ட ஒரு 10 ரூபாய் - [786-108-354] பெருமாளின் ஆசி என கூறி வழங்கப்பட்டது. இதற்கிடையில், திரு சுவாமிநாதன், அகத்தியர் அடியவர் அனைவருக்கும் ஒரு ருத்திராக்ஷத்தை கொடுத்தார்.
உண்மையிலேயே, மேலும் இருவித பிரசாதத்தை, அகத்தியர் அடியவர்களுக்கு கொடுக்கவேண்டும் என நினைத்திருந்தாலும், மறந்து போய், கொண்டுவராததாலும், அடியேன் பக்கமே தங்கிவிட்டது.
ஒன்று, பொதிகை அகத்தியப் பெருமானிடம் வேண்டி, வாங்கிக் கொண்ட, அவர் கழுத்தில் சூடியிருந்த "வெட்டி வேர் மாலை". இதன் ஒரு சிறு துரும்பை அனைவருக்கும், வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். மறந்து போனது.
இரண்டாவது, வீட்டில் அமர்ந்து, திருப்பதி வேங்கடவரிடம் விண்ணப்பித்து, அவர் முகவாயில் வைத்து பிரசாதமாக கிடைத்த "பச்சை கற்பூரம்". இதையும் ஒரு சிறு துகள் அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என நினைத்திருந்தேன். முடியாமல் போனது.
மொத்தமாக பார்க்கையில், அகத்தியர் அடியவர்களின் உதவியுடன், இந்த வருட பெருமாளின் பூஜை, மிக சிறப்பாக நடந்தது.
சரி! நம் பார்வைக்கு தட்டுப்படாத, ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் தெரிய வந்த, அங்கு நடந்த நிகழ்ச்சிகள் என்ன?
அன்று பூஜைக்கு வந்திருந்த ஒரு அகத்தியர் அடியவர், ஊருக்கு சென்றபின், கோவில் பிரசாதத்தை, ஒரு பெரியவரிடம் கொடுத்திருக்கிறார். என்ன விஷயம் என்று கூறவில்லை. கண் மூடி சற்று த்யானத்தில் இருந்த பெரியவர், "என்ன? பெருமாள் கோவில் ப்ரசாதமா? அகத்தியர் பூசை செய்தாரா? என்று கேட்டுவிட்டு, மேலும் தொடர்ந்தார். "அட! கருடாழ்வார் முதல் நாளே, பெருமாள் உத்தரவின்படி வந்து சேர்ந்துவிட்டாரே. வாயு பகவானும், வருணனும் பூஜை அன்று மிகுந்த சிரமம் கொடுப்பார்கள் என்று உணர்ந்த பெருமாள், வாயு மைந்தனான, அனுமனை வரவழைத்து, கோவிலில் இருக்கவைத்து, அவர்களை, தடுத்து நிறுத்தினார். அதனால் பூசை மிக சிறப்பாக நடந்துள்ளது. அட! நாரதரும் "இங்கு பெருமாள் கோவிலில், அகத்தியரும் அனுமனும், அடியவர்களும் சேர்ந்து என்னதான் செய்கிறார்கள் என்று அறிய, சிவனடியாராக வேடம் பூண்டு வந்திருக்கிறார்!" சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், கண் திறந்து, "இப்படி ஒரு பூஜை நடக்கிறது என்பதை முன்னரே சொல்லியிருக்கலாமே! வந்திருந்த அடியவர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த ஆசிர்வாதத்தை, பெருமாளும், அகத்தியரும், அனுமனும், கருடாழ்வாரும், நாரதரும், மற்றும் பல சித்தர்களும், அளித்துள்ளார்கள்!" ரொம்ப கொடுப்பினை உள்ளவர்கள், அனைவரும்!" என தன் அருளுரையை அளித்தார். [இதுவே அகத்தியர் பூசையின் சிறந்த பரிசு, என அடியேன் நினைக்கிறேன்].
இளநீர் அபிஷேகத்தின் பொழுது நடந்த சுவாரசியமான நிகழ்ச்சியை முன்னரே கூறியிருந்தேன். அதே நேரத்தில், அங்கிருந்த அகத்தியர் அடியவர் திரு.காளிமுத்துவின், மகள், ஊருக்கு சென்ற பின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு விஷயத்தை விவரித்தாள். "இளநீர் அபிஷேகம் நடந்த பொழுது, நான் தாத்தாவை பார்த்தேன். அவர் காவியுடுத்து, ருத்ராட்ச மாலை அணிந்து, தலையில் பெரிய கொண்டைபோல போட்டுக்கொண்டு, அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்! அவரும் நீங்கள் கொடுத்த இளநீரைதான் வாங்கி அபிஷேகம் செய்தார்" என்றாள். {இதைக்கேட்டதும், ஒன்றும் பேசத் தோன்றவில்லை! அமைதியாகிவிட்டேன்!]
இன்னும் நமக்கு தெரியாமல் நடந்த நிகழ்ச்சிகள் பல இருக்கலாம். யாருடைய எப்படிப்பட்ட பிரார்த்தனைகள், நிறைவேற்றப் பட்டது என்பது தெரியவில்லை.
அனைவரும் சென்றபின், மீதம் தங்கியிருந்த அகத்தியர் அடியவர்கள் குழு ஒன்று, கோவிலையும் சுற்றுப்புறத்தையும், சுத்தம் செய்கிற வேலையில் இறங்கினார்கள். ஒரே மணி நேரத்தில் கோவில், அதன் உட்புறம், பிரகாரம், கோவிலின் வெளிப்புற தெருவுவரை, குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தனர். வெளியே வந்து பார்த்த அர்ச்சகர் "அட! மிக சிறப்பாக செய்துவிட்டார்களே அகத்தியர் அடியவர்கள். இங்குதான் இத்தனை பேர்கள் கூடி ஒரு பூசை நடந்ததா! என ஆச்சரியப்படுகிற அளவுக்கு, சுத்தம் செய்துள்ளார்கள். நிச்சயமாக அனைத்துவருக்காகவும் நான் பெருமாளிடம் விண்ணப்பிக்கிறேன்!" என்றார்.
அகத்தியர் அருளை "சித்தன் அருளில்" வாசித்து, அகத்தியர் நடத்திய பெருமாளின் பூஜைக்கு வந்திருந்து, அத்தனை உழவாரப்பணியையும் சிரம் மேற்கொண்டுசெய்து, பெருமாள், அகத்தியரின் அருள் பெற்ற அனைத்து அடியவர்களுக்கும், அடியனின் சிரம் தாழ்ந்த வணக்கம்.
எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ்க!
[கோடகநல்லூர் தொகுப்பு, நிறைவு பெற்றது!]
சித்தன் அருள்........... தொடரும்!
ஓம் லோபமுத்ரா சமேத அகஸ்தியர் அய்யா போற்றி போற்றி. குருவே சரணம். ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி போற்றி. பதினெண் சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி .
ReplyDeleteஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி போற்றி
ReplyDeleteஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி சமேத அருள்மிகு பெருமாள் பாதங்கள் போற்றி போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத அருள்மிகு வவெள்ளிவெள்ளி ஆண்டவர் போற்றி போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ சரஸ்வதி சமேத அருள்மிகு பிரம்மதேவர் போற்றி போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாய் சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி
ஐயா இறைவன் அருள் மேலும் கிடைத்து ஆனந்தம் பெருகட்டும் அனைத்து இறை அடியவர்களுக்கும்.... ஓம் அகத்தியர் அய்யன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
தங்களின் சித்தன் அருள் பதிவில் மனம் நிறைந்து உள்ளேன்.... நன்றி ஐயா
அய்யா, தயவுசெய்து 108 மற்றும் 354 எண்களின் சிறப்புகளை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
ReplyDeleteஅய்யா, தயவுசெய்து 108 மற்றும் 354 எண்களின் சிறப்புகளை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
ReplyDeleteஅகத்தியரின் உரைப்படி பரத்வாஜர் உரைப்பது - ஆகம வேதம்
ReplyDeletehttp://fireprem.blogspot.com/2019/01/blog-post.html?m=1