​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 18 January 2018

சித்தன் அருள் - 743 - அஷ்டதிக்கிலும் விளக்கு போடுங்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சித்தன் அருள் வலைப்பூவில் தொகுப்பை தர முடியாமல் போனது. அன்று மாலை, அகத்தியர் கோவிலுக்கு எப்போதும் போல சென்று தரிசனத்துக்கு அமர்ந்த பொழுது, "ஆதித்ய ஹ்ருதயம்" ஸ்லோகத்தை ஜெபித்து அவர் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு, த்யானத்தில் "இந்த வாரமும் எந்த ஒரு தொகுப்பையும் வெளியிடமுடியாதபடி தனிப்பட்ட வாழ்க்கையில் மூழ்கடித்துவிட்டீர்களே. தாங்கள் அருளிய சுமை பரவாயில்லை! அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால் உங்கள் சேய்களுக்காக ஏதேனும் ஒன்றை கூற அனுமதித்திருக்கலாமே! ஏன் இப்படி நடக்கிறது? உங்கள் சேய்களின் செயல்களின் பெருமை அனைத்தும்  உங்கள் அருளால், உங்கள் பாதத்தில் சமர்ப்பணம்! ஏதேனும் தவறிருந்தால், அது சேய்களின் அறிவின்மை, மன்னித்தருளுக!" என்று கூறி அவர் பாதத்தை மனதில் இருத்தி த்யானத்தில் அமர்ந்திருந்தேன்.

"ஏதேனும் இறை சன்னதியில் (கோவிலில்) எட்டு திக்கிற்கும் விளக்கேற்றச்சொல், என் சேய்களிடம்" என்று உத்தரவு வந்தது.

இப்படிப்பட்ட உத்தரவு அடியேனுக்கு புதியதல்ல. ஒருமுறை, அருணாச்சலத்தில், கிரிவலம் முடித்த பொழுது, இறையே, அடுத்த கிரிவலம் முதல் எட்டு லிங்கத்திற்கும் (அஷ்ட திகபாலகர்கள் பிரதிஷ்டை செய்த) விளக்கேற்றி, "லோகஷேமத்துக்காக" வேண்டிக்கொள் என்று உத்தரவு வர, அதை அங்கு செல்லும் பொழுதெல்லாம் இறை அருளால், நிறைவேற்றி வந்தேன். வெறும் விளக்கு மட்டும் போட்டால், இதுவரை விளக்கேதும் ஏற்றதா இவன் ஏன் இதை இப்பொழுது செய்கிறான் என்கிற கேள்வி வரும் என்றுணர்ந்து, நண்பர்களிடம், பூசையை சிறிய அளவில் செய்துவிடுவோம், என்று கூறி, வெற்றிலை, பாக்கு, பழம், ஊதுபத்தி, அச்சுவெல்லம், என வழி மாற்றி செய்ய வைத்தேன். ஒவ்வொரு சன்னதியிலும், ஒவ்வொருவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். சிறு பூசையாக இருந்தாலும், பிரார்த்தனையை மனதிலிருந்து கூறி கிரிவலத்தை நிறைவு செய்வோம். எல்லோருக்கும் திருப்தி.

அந்த உத்தரவின், உண்மையை புரிந்து கொள்வது மிக கடினம். சித்தர்கள் அதனை எவ்வளவு தூரம் மறைக்க முடியுமோ, அந்த அளவு மறைத்து, தன் சேய்களிடம் சிறு பிரார்த்தனையை காணிக்கையாக பெறுவார்கள். அதையும் இறைவனிடம் கூறிவிடுங்கள்/சமர்ப்பித்துவிடுங்கள் என்று அகத்திய பெருமான் கூறுகிறார் என்றால், மனித பிரார்த்தனையையும் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆகவே, அகத்தியர் அடியவர்களிடம், அவர் கூறிய செய்தியை தெரிவிப்பது என் கடமை. அகத்தியர் அடியவர்கள் அனைவரும், இதில் ஆத்மார்த்தமாக பங்கு பெற வேண்டும் என்பதே, அடியேனின் விருப்பம். உங்களால் இயன்றவரை, ஏதேனும் ஒரு நாள் மாலை 6 மணிக்கு, எங்கேனும் ஒரு கோவிலில், எட்டு திக்கிற்கும் ஒரு சிறு விளக்கை ஏற்றி விட்டு, அகத்திய பெருமானின் உத்தரவுப்படி, இந்த தீபத்தை ஏற்றிவிட்டு "இறைவா உன் கோவிலில் இந்த பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறோம்! இது லோக ஷேமத்துக்காக! இதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என வேண்டிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன்.

சமீபகாலத்தில், தனிப்பட்ட வாழ்க்கையில் நாடி வாசிக்க சென்ற பலருக்கும், இந்த உத்தரவை/அருளை தவிர, வேறு எதுவும் சித்தர்கள் கூறவில்லை என்பதிலிருந்து, இது எத்தனை முக்கியமான உத்தரவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடனேயே செயல் படுவது, மிக சிறந்தது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! 

21 comments:

 1. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 2. om sri Lobamudrasametha agatheesaya namah .....

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

  ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

  ஐயா 8 விளக்கு போடவேண்டுமா அல்லது ஒரு விளக்கு ஏற்ற வேண்டுமா?

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு திசைக்கும் ஒருவிளக்கென, மொத்தம் எட்டு திசைக்கும் சேர்த்து 8 விளக்கு போடவேண்டும்.

   Delete
 4. ஐயா எட்டு திக்கிற்கும் என்றால் எப்படி விளக்கு ஏற்ற வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ​திக்கு என்றால் திசை. கிழக்கு வடக்கு, மேற்கு என்று அர்த்தம்!

   Delete
 5. ஐயா,
  எட்டுத்திக்கும் விளக்கேற்றுவது என்பது புரியவில்லை.
  கோவிலில்ஒ சன்னதி முன்பு ஒரே இடத்தில் எட்டு திசைகளை நோக்கி விளக்கேற்றுவதா அல்லது கோவிலின் எட்டு இடங்களில் (திசைகளில்) தனித்தனியே விளக்கேற்றுவதா?

  தயை கூர்ந்து விளக்கவும்.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. சன்னதியை சுற்றி 8 திசைகளில் ஏற்றுவது மிக சிறப்பு. அனைத்து தீபமும் இறைவனை சூழ்ந்து இருப்பது போல் இருக்கும்.

   Delete
  2. ஐயா,
   அகத்திய பெருமானின் வாக்குப்படி, இன்று மாலை அஷ்ட திக்கிலும் விளக்கேற்றினேன். மிக்க மகிழ்ச்சி.
   நன்றி ஐயா. தங்களின் மின்னஞ்சல் முகவரி தாருங்கள். புகைப்படம் அனுப்புகிறேன்.

   Delete
 6. Ayya,

  Om Agatheesaya Namaha:

  Please excuse me for typing in English

  These days Most temples allow to keep lit lamps in a particular place, allotted for lighting lamps

  Please permit us to light 8 lamps in that place Probably each one facing East/West/North/South/ NorthEast/ Northwest /SouthEast / SouthWest

  Seeking your humble advice,

  Sorry for our ignorance, you are trying to share the goodness to be spread but each one of us (His children) have questions only to be perfect.

  Thank you for your valuable service May Guru bless all of us and guide ever.

  Aum Sairam

  ReplyDelete
  Replies
  1. Sage said "ஏதேனும் இறை சன்னதியில் (கோவிலில்) எட்டு திக்கிற்கும்". Ask for permission from temple authorities. If they don't give the same, put it in the place where they order to lit the lamp and submit to deity your prayer. Intention is the important factor here. We cannot change the mindset of the temple administrators. i put the lamp in Sage Agasthiya temple, around the sanctum, after getting permission from the poojari. Interesting thing is, i asked Arunachalam and Unnaamalai Ammai to come and receive the prayer since Sage has several times told in naadi that he is present as Shiva and Sakthi. After submitting the prayer, i opened my eyes to see Sage and Lobaamudraa. What I saw was "Vengadavar from Tirupathi" standing at a height of 20 Ft behind Agasthiyar. Actually there is no sanctum of Venkitachalapathi in that temple. What could I say! I had to say "Pranaam" and a "Hmm" withthin my heart.

   Delete
  2. தாங்கள் மிகவும் புண்ணியம் பெற்றுள்ளீர்....

   தங்களால் நாங்களும் பாக்யம் பெற்றோம்

   Delete
 7. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
  சித்தநெறி அருட்செல்வர் திரு கார்திகேயன் அய்யா அவர்களுக்கும் சித்தநெறி அருட்செல்வர் திரு அக்னிலிங்கம் அருணாசலம் அய்யா அவர்களுக்கும் அடிபணிந்து வணக்கம்.கடந்த வியாழன் அன்று சித்தன்அருள் பதிவின்றி எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.இனிவரும் காலங்களில் வியாழன்தோறும் சித்தன்அருள் தொடர்ந்து கிடைத்திட அருள் செய்திடுங்கள்.தங்களது ஆலோசனை ஏற்று விரைவில் ஆலயத்தில் அஷ்டதிக்கு தீபம் ஏற்றுகிறேன்.அகத்தியர் அடியவர் அனைவர்க்கும் இதயம் நிறைந்த பொங்கல் வாழத்துக்கள்.குருவே சரணம்!

  ReplyDelete
 8. அகத்தியர் அவ்வாறு சொன்னார் என்றால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் .ஒன்று தேசத்தில் ஏதேனும் பேரழிவு நடக்க கூடும் அதன் பொருட்டு அவர் யரிடம் கேட்டு இப்படி சொல்லலாம் அல்லது தங்களின் பதிவு மூலம் ஏதானும் தெய்வ ரகசியம் சொல்ல வேண்டும் எண்ணி அதற்காக இப்படி செய்ய சொல்லலாம்.....


  எதுவாயினும் அதில் நிச்சயம் லோகநன்மை இருக்கும் ...

  ReplyDelete
  Replies
  1. உண்மை... எல்லாம் இறைவன் செயல்

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 11. ஸ்ரீ அகத்தியர் வழி நின்று சித்தன் அருள் வாயிலாக வழி காட்டும் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
  அய்யன் அகத்திய பெருமானின் நாடி படிப்பதற்கான முகவரி தந்து உதவ வேண்டுகிறேன். தஞ்சாவூரில் நாடி வருவதில்லை என்கிறார்கள். கல்லாறில் தற்போது நாடி படிப்பதில்லை. தயை கூர்நது முகவரி தந்து உதவ வேண்டுகிறேன். நன்றி.

  ReplyDelete
 12. ஓம் அகத்தீசாய நமஹ

  இன்று (29.01.2018) சோம பிரதோஷம் அன்று குரு அகத்தியரின் ஆசீர்வாதத்தோடு பஞ்சேஷ்டி திருத்தலத்தில் அஷ்ட திக்கில் காசி விஸ்வநாதர் சன்னதியில் விளக்கு ஏற்றும் பாக்கியம் கிட்டியது

  இதற்கு முன்னரே இரு முறை வேறு கோயில்களில் முயற்சி செய்து விளக்கு வைக்கும் இடத்தில் தான் 8 விளக்கும் வைக்க முடிந்தது

  இன்று பிரதோஷ தினம் மற்றும் குரு அகத்தியரின் பிரத்தியேக கோவிலில் ஏற்றுவதற்க்கு பாக்கியம் கொடுத்தற்கு கோடானு கோடி நமஸ்காரம்

  ஐயா அக்னிலிங்கம் தாங்கள் சேவை பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நன்றி

  ReplyDelete