​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 20 January 2018

சித்தன் அருள் - 744 - விளக்கு போட்ட அடியவர்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருளில் அகத்தியர் உத்தரவின் பேரில் விளக்கு போடச் சொன்னதை தொகுத்தபின், எத்தனை பேர் இதை புரிந்து கொண்டு செய்வார்கள் என்ற எண்ணம், அடியேனுள் உதித்தது உண்மை. சரி! யார் யார் போடவேண்டும் என்று குருநாதர் நினைக்கிறாரோ, அவர்களிடமிருந்து விளக்கை போட வைத்து வாங்கிவிடுவார், என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன். உண்மையிலேயே, அகத்தியர் அடியவர்களிடமிருந்து வந்த செய்தி அடியேனை நிறையவே சந்தோஷப்படுத்தியது என்பதே உண்மை. நிறைய பேர்கள் விளக்கு போட்டதை தெரிவித்தார்கள். மிக்க மிக்க நன்றி. நிச்சயமாக லோகம், அனைத்து ஆத்மாக்களும் க்ஷேமமாக இருக்கும்.

அகத்தியர் அடியவர் திரு.கோபிநாத் என்பவர் விளக்கு போட்டுவிட்டு, புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தார். அதை நீங்கள் அனைவரும் காண கீழே தருகிறேன்.

சிங்கப்பூரில் வசிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திரு பாஸ்கரன் லோகஷேமத்துக்காக, அகத்தியர் உத்தரவால் போட்ட விளக்கின் புகைப்படம். இங்கு கோவிலில் 8 திக்கில் போட அனுமதிக்காததால், ஒரே தட்டில் 8 திசை நோக்கி பெருமாள் முன் சமர்ப்பித்தார். என்ன வேண்டிக்கொண்டு போடுகிறோம் என்பதே முக்கியம், என்பதை இங்கு இறைவன் நமக்கு தெரிவித்துள்ளார். மிக்க நன்றி திரு.பாஸ்கரன் அவர்களே!


சிங்கப்பூரில் வசிக்கும் திரு குமார் என்பவர், அங்கு உறையும் சிவாலயத்தில், லிங்கத்தை சுற்றி அஷ்ட திக்கிலும் விளக்கு போட்டார். தீப ஒளி எட்டு திக்கையும் நோக்கி பாய்ந்து செல்வது போல் புகைப்படம் அமைந்துள்ளது. எல்லாம் அவன் செயல் அன்றி வேறொன்றுமில்லை. உண்மையான வேண்டுதலுக்கு, பக்திக்கு இறைவன் என்றுமே அருள் புரிவார் என்பதில் சந்தேகமில்லை. அந்த புகைப்படங்களை கீழே தருகிறேன். அகத்தியப் பெருமானும் அங்கு உறைகிறார் என்பது ஒரு விசேஷ செய்தி.
திருவண்ணாமலையில் அகத்தியர் உத்தரவின்படி 108 விளக்கு போட்ட அகத்தியர் அடியவர் திரு ராகேஷ், அப்போது எடுத்த புகைப்படங்களை, அவரது தொகுப்பையும், கீழே தருகிறேன். மிக்க நன்றி திரு.ராகேஷ் அவர்களே.

சித்தன் அருள் உத்தரவில் விளக்கு போட சொன்ன பதிவை படித்தோம். எப்போது? எங்கே? என்று யோசித்து விட்டு சில நாட்கள் காத்திருந்தோம். அப்போது தான் புரிந்தது, சென்ற மகா ஆயில்யம் பூஜையில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் அகத்தியர் பெருமான் ஆராதனையில், நாம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாக 108 விளக்குகள் போட்டோம். அன்றைய நாளில், பூசைக்கு வந்த ஒவ்வொருவரும் பொறுமை காத்து, ஒவ்வொரு விளக்கையும் ஏற்றி, உலக மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தனர். அதேபோன்று தற்போது திருஅண்ணாமலை கிரிவலம்  செல்லும்  போதும், நாம் அஷ்டலிங்கங்கள் சன்னதியில் தற்போது விளக்கேற்றி வருகின்றோம். சித்தன் அருள் பதிவை பார்த்த பின்பு, நாம் கோயில் குருக்களிடம் கேட்டோம், அவர்கள் அஷ்டதிக்குகளில் விளக்கு போட அனுமதி கொடுத்தனர்.

இதற்கு மேல் நம்மால் காத்திருக்க முடியவில்லை. இன்றைய அஷ்டமி திதியில் கூடுவாஞ்சேரியில் உள்ள வேலி அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் பைரவருக்கு விளக்கு போட தயாரானோம். அகல் சற்று பெரிய அளவில் இரு நாட்களுக்கு முன்னரே தயார் செய்து விட்டோம். இன்று காலையில் 1 கி நெய் வாங்கி விட்டு, சுமார் 9:30 மணி அளவில், பைரவரை வேண்டி, ஆயத்தப் பணிகள் தயாரானது. நெய்யை ஒவ்வொரு அகல்களில் ஊற்றினோம். சரியாக 6 அகல்களுக்கு நெய் சரியாக இருந்தது. மீதி உள்ள அகல்களுக்கு என்ன செய்வது? சோதிப்பது நம்மை உணர்த்தத்தானே என்று பொறுமை காத்து, அகத்தியரிடம் வேண்டினோம். பின்னர் கோயில் குருக்கள் எண்ணெய் கொடுத்தார்கள். அப்பாடா! என்று மனதில் அமைதி வந்தது. பின்னர் ஒவ்வொரு திக்கிலும் விளக்கை வைத்து விட்டு, பிரார்த்தனை செய்து விட்டு, விளக்கேற்றினோம், பைரவர் அருள் மனதில் மத்தாப்பாய் மிளிர்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த சில அடியார்கள், விளக்கில் சரியாக திரி பொருந்தவில்லை. பெரிய அகல் என்றால் இரண்டு திரியை இணைத்து ஒன்றாக்கி போடவும் என்று பேசியது நம் காதில் விழுந்தது. அவர்களை அழைத்து, நீங்களே அந்த கைங்கர்யத்தை செய்ய வேண்டினோம். உடனே அவர்கள் அனைத்து விளக்கிலும்  திரியை சரி செய்தார்கள். பின்னர் என்ன! விளக்கு ஜொலித்தது. நம் மனமும் பிரகாசித்தது.

வழிநடத்தும் சித்தன் அருளிற்கு நன்றி!"சிங்கப்பூரில் வசிக்கும் அகத்தியர் அடியவர், திரு.பாஸ்கரன் அவர்கள், அங்கு உறையும் சிவாலயத்தில் லோகஷேமத்துக்காக விளக்கு போட்டுள்ளார். மிக்க நன்றி! குருவருள் உண்டாகட்டும்!


சென்னையில் வசிக்கும் அகத்தியர் அடியவர் திரு தினேஷ் குமார் என்பவர் அகத்தியர் உத்தரவை சிரம் மேற்கொண்டு கோவிலில் அஷ்டதிக்கிற்கும் விளக்கேற்றியுள்ளார். அவருக்கு அகத்தியர் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.


ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளுக்கு அனைத்தும் சமர்ப்பணம்!

20 comments:

 1. மிக்க சந்தோஷம் , நானும் அகத்தியரிடம் மானசிககமாக வேண்டிக்கொண்டேன் எல்லா மக்களுக்கு, அருள் புரியுங்கள் என்று .


  இப்படி பட்ட சில நல்ல உள்ளங்கள் இருபதனால் தான் உலகம் இன்னும் சுழண்டுகொண்டிருகிறது .. அந்த அன்பருக்கு என் வாழ்த்துகள் .....

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.கோபிநாத் அவர்களே...

   குடும்ப சூழ்நிலை காரணமாக நாளைக்கு தான் விளக்கு ஏற்ற வேண்டும்... எல்லாம் இறைவன் செயல்...

   Delete
  2. நான் கோபிநாத் இல்லை என் பெயர் பிரவீன் குமார்.

   நன்றி.

   Delete
 2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

  நான் தினமும் வழிபடும் போது இவ்வளவு நாட்களும் எல்லா லோகத்தில் உள்ள தெய்வங்களும் தேவாதி தேவர்கள் தேவதைகள் மகா சித்தர்கள்
  மா முனிவர்கள் முனிபுங்கவர்கள் அஷ்டதிக்கு பாலகர்கள் நவகிரக தெய்வங்களும் பஞ்ச பூதங்கள் சர்பங்கள் நாகர்லோக தெய்வங்களும் பூமாதேவி குல தெய்வம் மற்றும் பெரியோர்கள் அணைவரையும் வணங்குவேன்...

  ReplyDelete
 3. Om Shree Lobamudra Sametha Agatheesaya Namaha:
  Om Sai Ram

  ReplyDelete
 4. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தீசாய நமஹ.

  அனைவருக்கும் வணக்கம்,

  சித்தன் அருளை படிக்க நேர்ந்ததும், அஷ்ட திக்கு விளக்கு ஏற்றியதும், அகத்தியர் அருளால் மட்டுமே நடந்தது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை படிக்கும்போது மனதில் புதிய நம்பிக்கையும், உற்சாகமும், நேர்மறை எண்ணங்களும் ஏற்படுகிறது.
  என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 5. I and my husband both went to sivan temple and puted 8 sides deepam today.thank u sir..

  ReplyDelete
 6. I and my husband both went to sivan temple and puted 8 sides deepam today.thank u sir..

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. send your photos to agnilingamarunachalam@gmail.com

   Delete
 8. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. This picture shows how to put lamps in simple temples also. Shall we put lamps only a time or very often ?

  ReplyDelete
 11. சிங்கப்பூரில் இருபத்தி ஐந்து கோவில்கள் உள்ளது . இந்த பதிவில் குறிப்பிடபட்டுள்ள அகத்தியர் அருளாட்சி செய்யும் சிவன் கோவில் முகவரி :-
  Sri Sivan Temple
  (Administered by Hindu Endowments Board),
  24 Geylang East Avenue 2
  Singapore 389752..

  http://sst.org.sg

  ReplyDelete
 12. ஓம்ஸ்ரீலோபமுத்திரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வராய நமஹ!
  சித்தர் மெய்யருள் வழிகாட்டி நடத்திசெல்லும் அருட்செல்வர் திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும், அருட்செல்வர் திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கும் அடிபணிந்து வணக்கம்.எங்கள் பகுதியில் அமைைந்துள்ள ஸ்ரீமுருகப்பெருமான் கோவிலில் எட்டுதிக்கிலும்
  1.கிழக்கில் ஸ்ரீமுருகப்பெருமான்
  2.தென்கிழக்கில் ஸ்ரீகணேசர்
  3.தெற்கில் சிவபெருமான்,தக்ஷிணாமூர்த்தி
  4. மேற்ககில் ஸ்ரீஆஞ்சநேயர்,பெருமாள்
  5. வடக்கில் ஸ்ரீதுர்கை,ஸ்ரீசனீஸ்வரன்
  6. ஈசான்யத்தில் நவக்கிரகங்கள் - என்று இயற்கையாகவே கோவிலின் எட்டுதிக்கிலும்
  தீீபமேற்றி உலகஷேமத்திற்காக நானும்,என்மனைவியும் வணங்ககிணோம்.
  தங்கள் வழிகாட்டுதலாலும், ஸ்ரீஅகத்தியபெருமானின் கருணையாலும் இந்தப்பேறு
  கிடைக்கப்பெற்றேன்..குருவே சரணம்.

  ReplyDelete