​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 4 January 2018

சித்தன் அருள் - 742 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 9


இறைவன், அகத்தியர் அருளால், "அந்த நாள்>> இந்த வருடம் - 2017 - கோடகநல்லூர்" தொகுப்பின் ​முடிவுரைக்கு வந்துவிட்டோம். இதன் தொடர்பாக, எங்கும் உறையும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். "நன்று என்கிற வார்த்தை மிக மிக சிறியது. அன்று வந்திருந்த அகத்தியர் அடியவர்கள், அன்றைய தினம்  பெருமாளுக்கு,அகத்தியரின் பூசைக்கு "உழவாரப் பணி" செய்ததற்கு கைமாறாக என்ன செய்வது என்று யோசிக்கும் பொழுதுதான், "பெருமாளின் மஞ்சள் பொடி" பிரசாதம் நினைவுக்கு வந்தது. அதை அன்று பெருமாளே மனம் உவந்து அருளிய பொழுது, அடியேனுக்கு புரிந்தது, ஒன்றுதான். பெருமாளே, இந்த கலியுகத்தில், "அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து, அவரை மனம் குளிரவைக்க, இத்தனை விஷயங்களை செய்துவிட்டார்களே" என்று பூரித்து போனதால், அவர் கைமாறாக இத்தனை நாள் யாருக்கும் செய்யாமல் இருந்து, சில காலத்துக்கு முன் அடியேனுக்கு அருளியதை உங்களுக்கும் அருளினார் என்று தான் சொல்லவேண்டும். ஆம்! அந்த சூட்ச்சுமத்தை இங்கு சூசகமாக சொல்கிறேன். புரிந்து கொள்ளுங்கள். மனித உடலில் இருக்கும் எந்த வியாதியையும் (விஷம், கர்மா வினை) எடுத்து, நல் வாழ்வு அளிப்பது, அவர் கரம், பாதம் பட்ட மஞ்சள்பொடி.  அதை உங்கள் அனைவருக்கும் வாங்கி கொடுத்து, உங்களுக்கு, தெரிந்தோ, தெரியாமலோ உடலுக்குள் இருக்கும் நோயை அடியோடு விரட்டிவிடவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அதற்காக பெருமாளிடமும், அர்ச்சகரிடமும் அத்தனை விண்ணப்பித்தேன். அகத்தியர் அருளால் அதுவும் வெற்றி பெற்றது. என்றேனும், அங்கு செல்லும் பொழுது, மஞ்சள்பொடி வாங்கி கொடுத்து, பெற்று, அங்கிருப்பவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து, இறை அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.

முதலில் திருமஞ்சன மஞ்சள் பொடியை கொடுக்கும் பொழுது, அது மிக வேகமாக தீர்ந்துவிட்டது. அப்பொழுது, ஒரு பெண், தன் தகப்பனாருக்கு உடல் நிலை சரியில்லை எனவும், இன்று இந்த கோவிலுக்கு வந்தால் மருந்து கிடைக்கும் எனவும் யாரோ சொல்லியதை கேட்டு, வந்திருந்தாள். அந்த பெண், இன்னும் சிறிது வேண்டும் என வினவிய பொழுது, திருமஞ்சன மஞ்சள் பிரசாதம், தீர்ந்து போய்விட்டிருந்தது. நானே, என் கரங்களை பார்த்து, "என்ன செய்வது?" என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நினைவுக்கு வந்தது, பெருமாள் பாதத்தில் பூசிவைத்த மஞ்சள்.

"சற்று பொறுங்கள்! பிரசாத விநியோகத்தின் முடிவில், தருகிறேன். மறக்காமல் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறி, அவர் வந்த பொழுது நிறையவே கொடுக்க முடிந்தது. எல்லாம் அகத்தியர் அருள்.

கடந்த வருடம், இதே நாளில் இங்கு வந்து ஒரு தாய் தன் மகளின் மேல் படிப்புக்கா வேண்டிக்கொள்ள, பெருமாளும் அதை அருளி நிறைவேற்ற, அந்த மகளுக்கு அவள் விரும்பிய மேல் படிப்பே கிடைக்க, இந்த முறை அந்த தாய், மகளையும் அழைத்து வந்து பெருமாளுக்கு நன்றி கூறிவிட்டு, பெருமாளின், அகத்தியப் பெருமானின் கனிவை எல்லோரிடமும் கூறி சந்தோஷப்பட்டார்.

ஒரு "அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்"லிருந்து அடுத்த வருட அந்த புண்ணிய திதிக்குள், இறைவனும், அகத்தியரும் எத்தனையோ பேரின் வேண்டுதல்களை, சரியான நேரம் பார்த்து நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து அடியேன், மிகுந்த மகிழ்ச்சியுற்றேன்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்த அனைவருக்கும் கூற விரும்புவது ஒன்றுதான்!, "பொறுமையாக இருங்கள்! அகத்தியப் பெருமான் அருளுவார்" அதையும் நீங்கள் மட்டும்தான் உணர்வீர்கள்.

கோடகநல்லூர் மட்டுமல்ல, எந்த கோவிலிலும், மாலை/சந்தியா வேளையில் சுற்று விளக்கேற்றுவது, மூலவருக்கு பூசைக்கு "பச்சை கற்பூரம்" வாங்கி கொடுப்பது போன்றவை இறையை மனம் நெகிழவைக்கும், இறைவனின் அருளை உடனடியாக தருவிக்கும் என்பதும் உண்மை!

அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து செய்த உழவாரப் பணி, உண்மையிலேயே அடியேனுக்கு 1008 கைகள் முளைத்துவிட்டது போன்று தோன்றியதே உண்மை. அதற்காக உங்கள் அனைவருக்கும் மிக மிக கடமை பட்டுள்ளேன்.

இந்த 2018ம் ஆண்டிலும், இதுபோல் நிறைவாக, அந்த புண்ணிய நாளில் பூசைகள் நடந்திட, அகத்தியர் அடியவர்கள் அருள் பெற்றிட, பெருமாளும், அகத்தியப் பெருமானும் அருளுவார்கள் என்ற திடமான நம்பிக்கையுடன், அனைத்து அகத்தியர் அடியவர்களும், க்ஷேமமாக, அமைதியாக, நிறைவாக வாழ வேண்டிக்கொண்டு, இந்த தொகுப்பை "ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில்" சமர்ப்பித்து, இன்றைய தினம் அகத்தியப் பெருமானின் திருஅவதார தினம், அவர் கோவிலுக்கோ, அல்லது அவர் பூசை நடக்கும் இடங்களுக்கோ சென்று உழவாரப்பணி செய்து, அவர் அருளை பெற்றுக்கொள்ளுங்கள், என்று நினைவூட்டி, விடை பெறுகிறேன்! ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!



[கோடகநல்லூர் அகத்தியப் பெருமான் நிகழ்த்திய அற்புத பூசையின் நிகழ்வுகள் தொகுப்பு இத்துடன் நிறைவு பெற்றது!]

சித்தன் அருள் ................. தொடரும்!

24 comments:

  1. அன்னை லோபாமுத்திரா ஸமேத அகஸ்திய பெருமானின் திருவடி சரணம். கோடகநல்லூர் தாயார் ஸமேத பச்சை வண்ண பெருமாளின் திருவடி சரணம். அய்யா மனம் கனிந்து நன்றிகள். குருவின் அருள் அனைவர்க்கும் அன்னையின் அருவியாக பொழிய வேண்டும் என்றும் ஓதியப்பர் துணை

    ReplyDelete
  2. மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    நேரில் வர இயலாத என்னை போன்றவர்களுக்கு...நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்த தங்களுக்கு என்னுடைய தாழ்மையான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா

    மிக்க நன்றி
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
  3. Dear Sir,
    Can you please tell me where i can workship agathiyar today in chennai. i am in annasalai.

    ReplyDelete
    Replies
    1. ஓம் லோபமுத்ரா சமேய அகத்தீசாய நமஹ!
      சித்தர் வழி நடத்திச்சசெல்லும் அருட்சசெல்வர் திரு.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கும்
      அருட்சசெல்வர் திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. கோடகநல்லூர் தாயார் ஸமேத பச்சை வண்ண பெருமாளின் திவ்யதரிசனம் தாங்கள் அளித்த தொகுப்பு தேனில் ஊரிய பலாவைப்போன்று தீஞ்சுவையாய் இனித்தது.அடுத்து அகத்திய பெருமானின் குருபூஜை தொகுப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.தயவுசெய்து திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களின் மின்னஞ்சல் முகவரி அளித்து உதவுமாறு அன்புடன் வேண்டி பணிகிறேன்.குருவே சரணம்!

      Delete
  4. இறைவா உமது அருள்

    ReplyDelete
  5. அய்யா சுற்று விளக்கேற்றுவது என்றால் என்ன?
    விளக்கேற்றுவது என்பது தெரியும்.கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. கோவில் பிரகாரத்தில் ப்ரதக்ஷிண வழியில் இருக்கும் விளக்குகள், சுற்று விளக்குகள் எனப்படும். விளக்கேற்றுவது என்றால், ஸ்வாமியின் சன்னதியிலோ, அவருக்கு முன்னாடியே ஏற்றுவதை குறிக்கும்.

      Delete
  6. Sir,
    What is the difference between lighting sutru vilakku and lighting vilakku in evening in temple?
    Also please share Kodaganallur temple opening timings on regular days ?
    Thanks...

    ReplyDelete
    Replies
    1. by lighting sutru vilakku, your applications will be considered fast.

      Kodaganalloor temple opens on all days by 8 AM and kept open up to 11.30 AM depending upon visits of devotees or people doing pariharams. evening from 5.40 to 7.30

      Delete
    2. Om Agatheesaya namaha...

      Ayya...How many sutru vilaku we have to put? Because in many temples I haven't seen any particular place to lit vilaku....in that case how to do? Please kindly guide me

      Delete
    3. It depends upon how many lamps are available in that particular temple. For eg., @ Kodaganallur there are 25 lamps are there. But those lamps are fixed in the walls. (Kal Vilakku).

      Delete
    4. Thank you very much sir for your kind reply

      Delete
  7. Sir,
    I was at Kodaganallur on divine day.
    I read your review posts again and again to recall each and every minute I spent at Kodaganallur.
    I tried to come to Kodaganallur to attend the ceremony in 2016 but I couldn't. I have been blessed to attend 2017 function. On that day I asked god to bless me to attend the function in coming years also. Thanks a lot for guiding each one of us.

    ReplyDelete
  8. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  9. ஓம் லோபமுத்ரா சமேய அகத்தீசாயய நமஹ!
    சித்தர் மெய்யருள் வழிகாட்டி நடத்திசெல்லும் அருட்செல்வர் திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும், அருட்செல்வர் திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கும் அடிபணிந்து வணக்கம்.தங்கள் உபாயத்தால் கோடகநல்லூர் தாயார் ஸமேத பச்சை வண்ண பெருமாளின் திவ்யதரிசனம் நேரில் சென்று தரிசனம் செய்த அனுபவத்தை தங்கள் தொகுப்பு அளித்தது.அற்புதம்.நெஞ்சார்ந்தத நன்றி.திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களின் மின்னஞ்சல் முகவரி அளித்துதவுமாறு வேண்டுகின்றேன்.நன்றி.

    ReplyDelete
  10. ஓம் லோபமுத்ரா சமேய அகத்தீசாயய நமஹ!
    அருட்செல்வர் திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும், அருட்செல்வர் திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கும் அடிபணிந்து வணக்கம்.தங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுத்துதவியதற்கு நன்றி.குருவே சரணம்.

    ReplyDelete
  11. Ayya, Mikka Nandri. In post # 736, you have mentioned about Bhogar's 128 herbal powder added to water during Pooja (போகரின் 128 மூலிகைப்பொடி). Can you please share some insights on this herbal powder? What does it contain and whats the purpose of adding to water during pooja? Thank you very much.

    ReplyDelete
  12. 128 மூலிகை பொடிகளால் அபிஷேகம் செய்த அனைத்து பலன்களும், அன்று அங்கு வந்திருந்த அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கு கிடைக்கும், என்பதே எண்ணம்.

    ReplyDelete
  13. Ayya, please help me in getting Bogar 128 muligai powder for my divine mother Angalaparameshwari. I have also sent email to your Gmail account.

    Aum Guruve Saranam

    ReplyDelete
  14. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  15. ௐ ஸ்ரீ அகத்தீசாய நமஹ....

    ReplyDelete
  16. ஐயா.... அருளுக்கு காத்திருக்கிறேன்

    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    ReplyDelete