​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 2 January 2018

சித்தன் அருள் - 741 - அகத்தியப் பெருமானின் திருஅவதார நாள் - 04-01-2018


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

வருகிற வியாழக்கிழமை அகத்தியப் பெருமானின் அவதார நட்சத்திரமான ஆயில்யம் வருகிறது. அன்று அனைத்து அகத்தியர் கோவில்களிலும், திரு சன்னதியிலும் அகத்தியப் பெருமானுக்கு சிறப்பான பூசை நடை பெரும். அகத்தியர் அடியவர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் சென்று, பூசையில் கலந்து கொண்டு, முக்கியமாக உழவாரப் பணி செய்து, அவர் அருள் பெற்றிட வேண்டுகிறேன்.

திரு ஸ்வாமிநாதன், பாண்டிச்சேரி, அகத்தியர் இல்லத்தில் நடைபெறும் ஆயில்ய பூசையை உங்கள் முன் சமர்ப்பிக்க வேண்டியதால், அந்த தகவலை கீழே தருகிறேன்.

"நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம்  மார்கழி மாதம் 20 ஆம் நாள் (04/01/2018) வியாழக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 6:30  மணி முதல் பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லத்தில் அருள்பாலிக்கும் அகத்தியர் லோபாமுத்திரை  தம்பதியினருக்கு அபிஷேகம், அலங்காரம்,திருமண வைபவம்  செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். 

  6:30 மணி - அபிஷேகம் 
  9:00 மணி - ஹோமம் 
10:30 மணி -திருக்கல்யாணம் 
11;30 மணிக்கு மேல் - திருக்கல்யாண விருந்து 

அனைவரையும் வருக! வருக!! என்று பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லம் சார்பாக வரவேற்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு; சுவாமிநாதன் 9894269986

ஓம் லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

9 comments:

  1. மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    இந்த தகவலை இணையத்தில் படித்தேன்...குரு அகத்தியர் அடியவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வாய்ப்பு இருக்கும் அடியவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    ★கேரளா வழியாக அகஸ்தியர் கூடம் செல்ல ஜனவரி 5ல் முன்பதிவு ஆரம்பம்.கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு..!

    ★அகஸ்திய முனிவர் தவம் செய்த அகஸ்தியர் கூடம் கடல் மட்டத்திலிருந்து 1890 மீட்டர் உயரத்தில் உள்ளது .மேற்கு தொடர்சி மலையில் கேரள வனப் பகுதியான நெய்யார் வனப் பகுதியில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் போனக்காடு வன எல்லையிலிருந்து 56 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு பகுதியான மலை ஏறி சன்னதி செல்ல வேண்டும்.

    ★வருடத்தில் சிவராத்திரி நாள் ஆதிவாசி மக்கள் வழங்கும் சிறப்பு பூஜை பிரசத்தி பெற்றதாகும். சிவராத்திரிக்கு முன்னதாக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இப்பகுதிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவர்.

    ★2018ம் ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது.

    ★தினம் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.
    மிகவும் கடினமான அகஸ்தியர் கூடம் புண்ணிய யாத்திரைக்கு பெண்கள் அனுமதி இல்லை

    ★இதற்க்கு முன் பதிவு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 11:00 மணி முதல் துவங்குகிறது.

    serviceonline.gov.in

    www.forest.kerala.gov.in

    ★ஆகிய இணைய தளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய கால அவகாசம் உள்ளதால் முன்கூட்டியே தங்கள் கணக்கை பதிந்து வைத்து விடவும்.பின்னர் முன்பதிவு செய்யும் நாளில் உடனடியாக முன்பதிவு செய்யலாம்.

    ★கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு...!

    ★கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும்
    புகை பிடிப்பது மற்றும் மது அருந்துதல் தடை செய்யப் பட்டுள்ளது

    ★பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அனுமதி இல்லை
    ஒன்று முதல் ஐந்து நபர்களுக்கு 30ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு)
    பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு 40ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு)
    பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு அல்லது குழுவாக வருபவர்களுக்கு கைடு வசதி செய்து தரப்படும். ஒரே நபரே மொத்த குழுவிற்கும் பதிவு செய்யலாம்.

    நன்றி : #கேரள_வனத்துறை.

    மிக்க நன்றி
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  4. can please tell me,where is the post 741 sir?

    ReplyDelete
  5. Om Lobamuthra samatha Sri Agasthisaya namaha!!
    Heartful thanks for posting the detailed celebration programes of sri Agasthia peruman's guru pooja to be held tomorrow in various temples and Ashrams.Sir, please give Thiru. Agnilingam Arunachalam Iya's email address.Thank you.

    ReplyDelete
  6. ஓம் லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
    நாளை நடைபெறவுள்ள அகத்திய பெருமானின் திருஅவதார பூஜை நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை தொகுத்து வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.திரு.அக்னிலிங்கம் அருணாசலம் ஐயா அவர்களின் மின்அஞ்சல் முகவரி அளித்து உதவுமாறு வேண்டுகிறேன்.நன்றி.

    ReplyDelete
  7. அக்னிலிங்கம் அருணாசலம் ஐயா அவர்களுக்கும் வேலாயுதம் கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கும் வணக்கம்

    தங்கள் இருவரின் சித்தர் பணி 2018இல் மேலும் சிறப்புற பிரார்த்திக்கிறேன்

    பாண்டிச்சேரி அகத்தியர் ஞான இல்லம் முகவரி பதிவிட வேண்டுகிறேன்

    Om Loba Mudra Sametha Agatheesaya Namaha;

    Aum Sairam

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  8. அகத்திய பெருமான் ஆயில்யம் நக்ஷத்திரத்தில் பிறந்தார் என்று யார் சொன்னது ?

    சித்தர்களுக்கு ஜாதகம் கிடையாது , அவரே " நான் சிவன் செய்த யாகத்தின் மூலம் உதித்தவன் " என்கிறார் .


    அதுமட்டும் இல்லை ஆயில்லியம் ஒரு அசுப நக்ஷதிரம் . இதில் பிறந்து இருக்க வாயிப்பே இல்லை ..


    என் சந்தேகத்தை போக்குமாறு கேட்டுகொள்கிறேன் ....


    பிரவீன்.

    ReplyDelete