​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 25 January 2018

சித்தன் அருள் - 745 - அகத்தியர் தரிசனம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அடியேனது இரு நண்பர்கள் இந்த வாரம் பொதிகை சென்று அகத்தியப் பெருமானுக்கு அபிஷேக பூசைகள் செய்து, அவர் சன்னதியில் அஷ்ட திக்கிற்கும் விளக்கு போட்டு, அருள் பெற்று வந்ததை தெரிவித்தனர். அவர்கள் பகிர்ந்து கொண்ட இரு வீடியோவையும், ஒரு சில புகை படங்களையும், இன்றைய அகத்தியப் பெருமான் தரிசனமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.








ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

இந்த தொகுப்பில் தரிசனம் கொடுத்த அகத்தியப் பெருமான் நிறையவே அடியேனுக்கு அருளினார். அந்த விஷயத்தையும் கூறலாம் என்று ஒரு எண்ணம்.

போன வருடம் இதே சமயத்தில் கேட்ட பொழுது "நீ எங்கும் செல்லவேண்டாம். அங்கேயே இரு" என்று உத்தரவு வந்து, வீட்டிலேயே இருந்த பொழுது தான் என் தகப்பனாரின் மறைவு நிகழ்ந்தது. நிறையவே சடங்குகள், கட்டுப்பாடுகள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரு வருடம் நிறைவு பெற காத்திருக்கிறேன். எல்லா வாரமும் எங்கேனும் ஒரு மலை ஏறி ஏதேனும் ஒரு கோவிலில் இறை தரிசனம் பெறுவது வழக்கம். நம்பிமலை, ஓதிமலை, திருவண்ணாமலை என உதாரணம் கூறலாம். கர்மம் செய்தவன் ஒரு வருடத்திற்கு மலை ஏறுவது, கடல் ஸ்நானம் போன்றவை செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகள். அடியேனுக்கு, சித்தர்கள் கூற்று வாழ்க்கை முறையாகி போனதால், ஆசாரா அனுஷ்டானங்களில் அத்தனை விருப்பமில்லை. இருப்பினும், செய்யக்கூடாது என்பதை செய்தால், என் தாயின் மனம் வேதனைப்படுமே என்றுணர்ந்து, என் அவாக்களை (மலைக்கோவில்) கட்டிப் போட்டேன். கட்டிப்போட்டது சும்மா இருக்குமா? குரங்கு மனம் போல், ப்ராணாவஸ்தை.

இந்தமுறை வனத்துறை அனுமதிக்கும் நேரத்தில் பொதிகைக்கு செல்ல முடியாது. ஒருவருடம் நிறைவு பெற வேண்டும்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நண்பர் வந்து பொதிகை செல்லலாம் என்றிருக்கிறேன், என்றார்.

அடியேன் சார்பாக அபிஷேகத்துக்கு ஒரு சில விஷயங்களை தருகிறேன். அதை எடுத்துக்கொள். அவருக்கு அபிஷேகம் செய்த எண்ணை வேண்டும். அவர் பாத விபூதி வேண்டும். இது இரண்டும் கிடைக்கும். இனி சொல்லப்போவதை கவனமாக கேள்! அடியேன் அகத்தியப் பெருமானிடம், அவருக்கு அணிவித்த "வெட்டிவேர்" மாலையை தருமாறு கேட்டிருக்கிறேன். முதலில், பூசாரியிடம் கேள். இல்லையே என்பார். காத்திரு! சற்று நேரத்தில், ஞாபகம் வரவே, நில் தருகிறேன் என்பார். வாங்கி கொண்டு, வந்து தரவும், என கூறினேன்.

அதே போல், முதலில் இல்லை என்று மறுத்தவர், அடியேனின் நண்பர் விலகாமல் இருப்பதை கண்டு ஞாபகம் வரவே, எடுத்து கொடுத்து அனுப்பினார். அனைத்து பிரசாதமும் வந்து சேர்ந்தது. கூடவே, வெட்டிவேர் மாலையும், அவருக்கு அபிஷேகம் செய்த தேனும்!

எதுவுமே கேட்காதிருப்பவன், கேட்டிருக்கிறான், கொடுத்துவிடுவோம் என்று தீர்மானித்து அத்தனை பிரசாதத்தையும் கொடுத்தனுப்பியிருக்கிறார். பெரியவருக்கு எப்படி நன்றி சொல்வது?



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக!

13 comments:

  1. குருவே சரணம்

    மிக்க நன்றி அய்யா
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  3. Agnilingam ayya,
    Podhigai sendru varum vazhi vivarangal thara mudiyuma?
    Ivan,
    R.Narasimhan

    ReplyDelete
    Replies
    1. இந்த தகவலை இணையத்தில் படித்தேன்...குரு அகத்தியர் அடியவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வாய்ப்பு இருக்கும் அடியவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

      ★கேரளா வழியாக அகஸ்தியர் கூடம் செல்ல ஜனவரி 5ல் முன்பதிவு ஆரம்பம்.கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு..!

      ★அகஸ்திய முனிவர் தவம் செய்த அகஸ்தியர் கூடம் கடல் மட்டத்திலிருந்து 1890 மீட்டர் உயரத்தில் உள்ளது .மேற்கு தொடர்சி மலையில் கேரள வனப் பகுதியான நெய்யார் வனப் பகுதியில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் போனக்காடு வன எல்லையிலிருந்து 56 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு பகுதியான மலை ஏறி சன்னதி செல்ல வேண்டும்.

      ★வருடத்தில் சிவராத்திரி நாள் ஆதிவாசி மக்கள் வழங்கும் சிறப்பு பூஜை பிரசத்தி பெற்றதாகும். சிவராத்திரிக்கு முன்னதாக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இப்பகுதிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவர்.

      ★2018ம் ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது.

      ★தினம் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.
      மிகவும் கடினமான அகஸ்தியர் கூடம் புண்ணிய யாத்திரைக்கு பெண்கள் அனுமதி இல்லை

      ★இதற்க்கு முன் பதிவு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 11:00 மணி முதல் துவங்குகிறது.

      serviceonline.gov.in

      www.forest.kerala.gov.in

      ★ஆகிய இணைய தளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய கால அவகாசம் உள்ளதால் முன்கூட்டியே தங்கள் கணக்கை பதிந்து வைத்து விடவும்.பின்னர் முன்பதிவு செய்யும் நாளில் உடனடியாக முன்பதிவு செய்யலாம்.

      ★கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு...!

      ★கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும்
      புகை பிடிப்பது மற்றும் மது அருந்துதல் தடை செய்யப் பட்டுள்ளது

      ★பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அனுமதி இல்லை
      ஒன்று முதல் ஐந்து நபர்களுக்கு 30ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு)
      பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு 40ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு)
      பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு அல்லது குழுவாக வருபவர்களுக்கு கைடு வசதி செய்து தரப்படும். ஒரே நபரே மொத்த குழுவிற்கும் பதிவு செய்யலாம்.

      நன்றி : #கேரள_வனத்துறை.

      மிக்க நன்றி
      இரா.சாமிராஜன்

      Delete
  4. வணக்கம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    அகத்தியர் அய்யனின் சொற்படி அஷ்டதிக்கு பாலகர்களுக்கே தீபம் ஏற்றி வழிபட்டோம் நானும் என் இரண்டு குழந்தைகளும்.தீபம் ஏற்றியதும் அகத்தியர் அய்யனையும் ,அம்மை அப்பனையும் வேண்டிக் கொண்டேன்.அடுத்த நிமிடம் அங்கு ஒரு பட்டாம்பூச்சி வந்து அம்மையிடம் சென்று பிறகு அய்யனிடம் சென்று வெளியில்வந்தது.... என் மகளிடம் வந்து பிறகு அப்படியே வெளியில் சென்று... உள்ளே வந்து தெய்வங்களை வழிபட்டு சென்றுவிட்டது. மெய் சிலிர்க்க வைத்தது. வந்தது அருள்மிகு அகத்தியர் அய்யன் என்றே உணர்கிறேன். 10 ஆண்டுகளாக அந்த கோவிலுக்கு அதேவேளையில் தான் சென்று வருகிறேன். ஒரு நாள் கூட என் கண்ணில் பட்டாம்பூச்சி தென்பட்டது இல்லை.

    மற்றும் ஒரு அருள்.... என் மகள் கற்கண்டு வேண்டும் என்று கேட்டார்... பூசாரியிடம் கேட்க சொன்னேன் ஆனால் பூசாரிக்கு தமிழ் தெரியாது அதனால் அவரிடம் என் மகள் கேட்கவில்லை.... இது நடந்தது வெளியில் கொடி கம்பம் இருக்கும் இடம். பிறகு விளக்கு ஏற்றி பூசை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது அங்கு வந்த மற்றொரு பூசாரி என் மகளை அலைத்து நீ இனிப்பு கேட்டாய் அல்லவா என்றார் கன்னடத்தில்... என் மகளுக்கு புரியாமல் என்னிடம் என்ன என்று கேட்டார்... அவரிடமே கேள் என்றேன். அதற்குள் அவர் கை நிறைய மலர்கள் மற்றும் இரண்டு பழங்கள் கொடுத்து இருவரும் பங்கிட்டு வைத்து கொள்ளுங்கள் என்று கன்னடத்தில் கூறினார். மெய் சிலிர்த்து விட்டது. இறைவன் அருளை என்னவென்று சொல்வது... என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது...

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஒரு அருள் நிகழ்வு. பூசாரி கன்னடத்தில் பேசியதாக தெரிவித்துள்ளீர்கள்.தாங்கள் வசிப்பது பெங்களூரிலா.

      Delete
  5. மிக்க நன்றிகள் ஐயா...

    பொதிகை மலையில் உள்ள அருள்மிகு அகத்தியர் அய்யன் தரிசனம் பெற்றோம்...

    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    தாங்கள் பிரசாதம் பெற்றது அருள் நிறைந்தது....


    ReplyDelete
  6. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  7. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  8. அற்புதம் அதி அற்புதம் படங்களை கண்டவுடன் பரவசம். அன்னை லோபாமுத்திரை ஸமேத அகஸ்திய பெருமானின் திருவடி சரணம் ஓதியப்பர் திருவடி சரணம்

    ReplyDelete
  9. ஓம் லோபமுத்ரா சமேய அகத்தீசாயய நமஹ!
    சித்தநெறி அருட்செல்வர் திரு. கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும், சித்தநெறி அருட்செல்வர் திரு.‍அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கும் அடிபணிந்து வணக்கம்.
    புனிதயாத்திரையாய்
    பொதிகைமலையேறி -
    அகத்தியபெருமானுக்கு
    அபிஷேக ஆராதனை,
    பூஜைபுனஸ்காரரங்ககள் -
    செய்த நிககழ்வுகளை
    நெய்து தொகுத்தளித்த
    தங்களுக்கும்,
    அகத்தியர் அடியவர்க்கும்
    அடிபணிந்து வணக்ககம்.
    ஆராயிரம்அடிகடந்து -
    அகத்தியர்கூடம் அடைந்து -
    அய்யன் அகத்தியன்
    அருட்தவக்ககோலம்-
    காணும் பாக்கியம்- எமக்கு
    சித்தன் அருளாலே சாத்தியம்.
    குருவே சரணம்!

    ReplyDelete
  10. ஓம் அகத்தீஸ்வராய நம!
    ஐயா,
    முதல் அகத்தியர் படம் எந்த இடத்தில் உள்ளது?
    நன்றி !

    ReplyDelete