​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 1 February 2018

சித்தன் அருள் - 746 - பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நாடி வாசிப்பவர்கள் அனைவரும் கூறுகிற ஒரே வாக்கியம் இதுதான்!

"சித்தர்களில் அகத்தியப் பெருமானின் அருள், அருகாமை இருந்தால், அவனை அலையவிட்டு, ஆன்மீக பைத்தியமாக்கி, உடலை வருத்தி, கர்மாவை போக்கி, இறையருளை கூட்டி, ஒன்று முடிந்ததும் "அப்பாடா! சற்று இளைப்பாறலாம்!" என்று தீர்மானிக்கும் பொழுது அடுத்த நிகழ்ச்சி அல்லது அடுத்த புண்ணிய தலத்துக்கு இழுத்து சென்று உண்மையை உணர்த்துவார்! அந்த உண்மை மிக மிக உயர்ந்த விஷயமாக இருக்கும். எங்கிருந்துதான் நம் உடலுக்கு சக்தி வரும் என்று தெரியாது! அந்த பாதையில் செல்லும் பொழுது, உலகியல் விஷயங்களை நிறையவே இழந்துவிடுவோம். அது ஒரு சோதனை என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட விஷயங்களை பற்றி நமக்கு தெரிவிக்க வேண்டுமென ஒரு சித்தன் நினைத்துவிட்டால், நம் மனதுக்கு பிடித்தமான எந்த விஷயமாயினும், அதன் வழி புகுந்து, செய்தியை தெரிவித்து விடுவார்கள்!. செய்தியை உணர்ந்தபின், அதை சென்று சேரும் வரை, நம் பாடு திண்டாட்டமாகவே இருக்கும். ஆயினும், கடை வரை உதவியும் கிடைக்கும்."

மேற்சொன்ன வாக்கியத்தை அடிப்படையாக வாழ்க்கையில் நிலை நிறுத்தியதால், அடியேன், மனதை இறை பாதத்தில் வைத்துவிட்டேன். அதனால், மிருதங்கத்துக்கு ரெண்டு பக்கத்திலிருந்தும் அடி என்பதை போல, ஒருத்தர் (இறைவன்) இழுத்து முடித்த நொடியில் அடுத்தவர் (பெரியவர்கள்) இழுப்பார்! கடலில் எப்பொழுது அலை ஓய்வது நான் என்னிஷ்டப்படி நிதானமாக குளிப்பது! ஆகவே, "என்னிஷ்டம்" என்பதை அடியேன் மறந்தே போனேன் என்பது தான் உண்மை.

சமீப காலமாக, அகத்தியரின் பாதையில், அவருடன் வாழ்க்கையை இணைத்து கொண்டு செல்பவர்கள் பலரிடமும் தொடர்பு கொள்ள முடிந்தது. எல்லாவற்றிலிருந்தும், விலகிநின்று, கிடைக்கிற உத்தரவை நிறைவேற்றுவதில் மட்டும் இருந்து வந்த அடியேன் மனோ நிலையை ஓரளவுக்கு அகத்தியப் பெருமான் மாற்றினார் என்பதே உண்மை.   ஒரு அகத்தியர் அடியவரிடம் உரையாடும் பொழுது ஒரு குறிப்பிட்ட பெருமாள் கோவிலை சுட்டிக்காட்டி, அங்கு சென்று அருள் பெற்று வாருங்களேன் என்றார். எதோ அகத்தியர் செய்தி சொன்னதுபோல்தான் உணர்ந்தேன்.

அவர் சொன்ன கோவில், திருநெல்வேலிக்கு அருகில் சீவலப்பேரி என்கிற கிராமத்தில் உள்ளது. அடியேனோ, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், தாமிரபரணித்தாய் சுற்றி சுற்றி சென்று இறைவனை வழிபட்டு செல்கிற கோவில்களை பார்ப்பதில் விருப்பம் உள்ளவன். அகத்தியரால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி நதியானது, காரணமின்றி,  சுற்றி செல்வதில்லை. எங்கெல்லாம் அந்தத்தாய் செல்கிறாளோ, அதற்கும் ஒரு காரணம் இருக்கும், என்று நம்புகிறவன் நான். தான் சென்ற வழிகளில், ஒவ்வொரு இறை சன்னதியிலும், மனித குலத்துக்கு என வேண்டிக்கொண்டு ஒரு வரத்தை பெற்று தந்துள்ளாள். அந்த இடத்தின் வரமென்ன? அதை ஏன் தெரிந்து கொண்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி பார்க்கக்கூடாது? என்கிற எண்ணம் அடியேனுள்ளே உண்டு. அடியேன் உணர்ந்ததை, உடனேயே, அடுத்தவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்; யாம் பெற்ற இன்பம் இவ்வையகத்து மனிதருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படை எண்ணம்தான், காரணம். உதாரணமாக, பாபநாசம், கோடகநல்லூர், என நிறைய இடங்களை சித்தன் அருள் வலைப்பூவில் தெரிவித்ததை செல்லலாம்.

சனிக்கிழமை விடுமுறையாக இருந்ததால், அன்று காலை சீவலப்பேரி கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்று, மாலை கோடகநல்லூர் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்மானித்தேன். அன்று கிளம்பி கோவிலுக்கு போனபொழுது, பெருமாள் விளையாடிவிட்டார்.

சீவலப்பேரி ஊர் எல்லையில் ஒரு கோவில் இருக்கவே, அதுதான் அந்த கோவில் என்று நினைத்து, அருகில் சென்று பார்த்தால், பூட்டி இருந்தது. அவ்வழியே சென்ற ஒரு பெண்மணியிடம் "இதுதான் பெருமாள் கோவிலா, வேறு கோவில் உண்டா?" என்று வினவ, அவளும் "இது பெருமாள் கோவில்" என்று கூறிச் சென்று விட்டாள்.

"சரி! நமக்கு பாக்கியம் இல்லை போலும்! பிறகு பார்க்கலாம்! நாளை காலை சீக்கிரமாகவே வந்துவிடுகிறேன். உம்மை விடுவதாக இல்லை" என்று மனதுள் நினைத்து, திரும்பினேன்.

திரும்பி வரும் வழியில் "செய்தி வந்த கோவில் இதுவல்ல. நீ தான் தப்பாக புரிந்து கொண்டுவிட்டாய்" என்று உத்தரவு வந்தது.

உடனேயே, செய்தி சொன்ன அகத்தியர் அடியவரை தொடர்பு கொண்ட பொழுது, கோவில் இருப்பிடம் பற்றிய விவரங்களை கூறிய பொழுது, "அது தானே கோவில்" என்றார்.

"சரி! நான் எடுத்த கோவிலின் புகைப்படத்தை அனுப்புகிறேன்! பார்த்து விட்டு சொல்லுங்கள்" என்று அனுப்பி வைத்தேன்.

"அடியேன் சொன்ன கோவில் இதுவல்ல! இதுவும் பெருமாள் கோவில்! இங்கிருந்து மேலும் 2 கிலோ மீட்டர் சென்றால் இடதுபக்கத்தில் ஒரு கோவில் விளம்பர பலகையில் "முக்கூடல் சங்கமம்" என்று இருக்கும். வலது புறத்தில் நேர் எதிரே துர்கை அம்மன் கோவில் இருக்கும். இடது புறத்தில்தான் பெருமாள் கோவில் உள்ளது. நாளை செல்லுங்கள். அர்ச்சகரிடம் அடியேன் செய்தியை கூறிவிடுகிறேன்" என்றார்.

எங்கேயோ தவறு செய்துவிட்டோமே! சரி! மாலை கோடகநல்லூர் சென்று பெருமாளிடம் கேட்டுவிடுவோம். அது வரை மௌனம் காப்போம், என்று தீர்மானித்து மாலை வருவதற்காக காத்திருந்தேன்.

சித்தன் அருள்................. தொடரும்!

13 comments:

 1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 2. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

  பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா...

  வியாழன் அன்று அகத்தியர் அய்யன் ஆசிகள் பெற்றால் தான் பிறகு வரும் ஏழு நாட்களும் நிம்மதியாக இருக்கும்...

  ReplyDelete
 4. Vannakkam ayya,
  Eatho oru nalla thagaval vara irukkiradhu polum....

  ReplyDelete
 5. sir na ungaluku mail anupierundhen reply varala. " கனவு "

  ReplyDelete
 6. எல்லாம் வல்ல குருவை வணங்கி


  அகத்தியர் அடியார்களுக்கு வணக்கங்கள். திருநெல்வேலி பாபநாசத்தில் உள்ள அகத்தியர் லோபமுத்திரை சிலையை யாரோ சேத படுத்திவிட்டார்கள் , தற்சமயம் அன்னை லோப முத்திரை சிலை தலை இல்லமால் உள்ளது .கடந்த செவ்வாய் அன்று தினமலரில் வந்த செய்தி. படித்தவுடன் மனது வலித்தது. எத்தனை வருட பழமையான சிலை என்று தெரியவில்லை .நாம் பாதுகாக்க தவறிவிட்டோம் அடியேன் மனதில் உதித்த எண்ணம் சிலையை சுற்றி இரும்பு வேலி போடலாம் என்று அல்லது அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி சிலை இருக்கும் இடத்தில சிறு கோவில் போல கட்டலாம் என்று எதிர்காலத்தில் அகத்தியர் லோபாமுத்திரை சிலைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காலம் காலம் நிலைத்து நிற்கும்

  திரு அக்னீலிங்கம் தாங்கள் கோவில் நிர்வாகத்திடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்க அகத்தியர் அடியவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்
  ReplyDelete
  Replies
  1. நாடியில் வந்து அருள்வாக்கு உரைத்த அகத்தியப் பெருமான் "இந்த நிகழ்ச்சியை புறம் தள்ளச் சொல்லிவிட்டார்". ஆகவே, இனி சூழ்நிலை தெளிவாகும் பொழுது, அனைவரின் பங்கும் இதில் இருக்க அவர் பிரியப்பட்டால், அவர் அருளுடன் லோபாமுத்திரா அம்மாவின் சிலை ப்ரதிஷ்டையில் அனைவரும் பங்குபெறுவோம். அதுவரை எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டிக்கொள்கிறேன்.

   Delete
 7. திரு அக்னீலிங்கம் அவர்களே
  அகத்தியரிடம் அன்னை லோப முத்திரை சிலையின் தலை பாகத்தை எப்படி சரி செய்வது என்று கேட்கவும். இந்த செய்தியை ( சிலை சேத படுத்தியது) தலைப்பு செய்தியாக போடவும் அனைவரிடமும் போய் சேரும் .

  ReplyDelete
  Replies
  1. நாடியில் வந்து அருள்வாக்கு உரைத்த அகத்தியப் பெருமான் "இந்த நிகழ்ச்சியை புறம் தள்ளச் சொல்லிவிட்டார்". ஆகவே, இனி சூழ்நிலை தெளிவாகும் பொழுது, அனைவரின் பங்கும் இதில் இருக்க அவர் பிரியப்பட்டால், அவர் அருளுடன் லோபாமுத்திரா அம்மாவின் சிலை ப்ரதிஷ்டையில் அனைவரும் பங்குபெறுவோம். அதுவரை எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டிக்கொள்கிறேன்.

   Delete
  2. முடிந்த வரை எல்லாரிடமும் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு தீபம் ஏற்ற அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்....

   ஏன் சொல்கிறேன் என்றால் நிறைய இடங்களில் நெருப்பு பற்றியுள்ளது.

   என் தந்தை மக்களின் நன்மைக்காக ஜோதிடம் பார்க்கிறார் பணம் பெறுவதில்லை வெற்றிலை பாக்கு மட்டுமே பெற்று வருகிறார். அவர் பார்க்கும் இடத்தில் தீ பற்றி முழுமையாக எரிந்து விட்டது... நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...ஆ ஆனால் அதே போல் வேறு ஒரு ஜோதிடர் வீட்டிலும் நடந்து உள்ளது. பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து உள்ளது.

   அகத்தியர் அய்யன் ஆசிகள் படி எல்லாரிடமும் தீபம் ஏற்ற சொல்லி முயற்சிக்கவும்....

   அய்யா....தங தங்கள் மனதிற்கு சம்மதம் என்றாள் அருள்மிகு அகத்தியர் அய்யனிடம் கேட்டு சொல்லுங்கள்...

   Delete
 8. அன்னை லோபாமுத்திரை ஸமேத அகஸ்திய பெருமானின் திருவடி சரணம் , அய்யா வெள்ளிக்கிழமை அன்று அலுவலகத்தில் நண்பர் ஒருவர் பொதிகை அன்னை லோபாமுத்திரை ஸமேத அகஸ்தியர் அபிஷேகம் செய்த விபூதி பிரசாதம் மற்றும் பழனி முருக பெருமானின் விபூதி பிரசாதம் அளித்தார் மிகவும் ஆனந்தம் , ஓதியப்பர் திருவடி சரணம்

  ReplyDelete
 9. பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு! that means can you explain about it ethukavathu pathi sollunga

  ReplyDelete