​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 20 February 2017

சித்தன் அருள் - 597 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணாகடாக்ஷத்திலே, இவனொத்த ஆத்மாக்கள் எம்மிடம் வரும்போதெல்லாம், அஃதொப்ப கிரகநிலையை அனுசரித்து இறைவன் அருளாலே கூறுகிறோம் என்றாலும்கூட, அடிப்படை விஷயம் யாதென்றால், விஷத்தை உண்டுவிட்ட ஒருவனுக்கு, அவன் உடலில் இருந்து விஷத்தை எடுப்பதற்கு மருத்துவர்கள் எங்ஙனம் போராட்டம் நடத்துகிறார்களோ, அந்த போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிமுறைகளையெல்லாம் மருத்துவர்கள் கையாள்கிறார்களோ, அதைப்போலதான் பாவங்கள் என்ற கடுமையான விஷம் ஒரு மனிதனை பற்றியிருக்கும் பட்சத்திலே, அதை எடுப்பதற்கென்றுதான் பிறவிகளும், பிறவிகளில் பல்வேறுவிதமான சம்பவங்களும் நிகழ்கின்றன. அந்த சம்பவங்களை வெறும் உலகியல் ரீதியாக பார்க்கும்பொழுது கடினமாக, சோதனையாக, அவமானமாக, வேதனையாக தெரியும். ஆனாலும்கூட அதை ஒரு சிகிச்சை முறையாக பார்த்தால் நோயாளிக்கு அது எப்படி அவசியமோ அதைப்போல பாவங்களைக் கழிப்பதற்காக பிறவியெடுத்த ஆத்மாக்களுக்கு இஃதொப்ப லௌகீக அனுபவங்கள் அவசியம் என்பது புரியும். எனவே விஷத்தை உண்டுவிட்ட மனிதனுக்கு விஷமுறிப்பு சிகிச்சைபோல பாவங்களிலிருந்து ஒரு ஆத்மாவை விடுவித்து, நிரந்தரமாக தன்னை அறிவதற்கென்று எந்தப் பிறவியில் அந்த ஆத்மாவை தேர்ந்தெடுத்து தருகிறாரோ, அந்தப் பிறவியில் லௌகீக வெற்றிகள் அத்தனை எளிதாக கைவரப் பெறாமலும், சுற்றமும், உறவும் ஏளனம் செய்யும் வண்ணமும், ‘"பித்து பிடித்தவன், பிழைக்கத் தெரியாதவன்" என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டும் அந்த ஆத்மா, வாழத்தான் வேண்டும். நாங்கள் கூறவருவது ஒன்றுதான். இது போன்ற நிலையிலே மனம் தளராமல் திடம்கொண்டு வாழ்வதற்கு, இஃதொப்ப ஆத்மாக்கள் முயற்சியும், பயிற்சியும் செய்வதோடு விடாப்பிடியாக இறைவனின் திருவடியை பிடித்துக்கொள்வதுதான். இஃதொப்ப ஆத்மாக்களுக்கு ஒருவேளை, ஒருவேளை ஜீவ அருள் ஓலையிலே வாக்குகள் வாராது. இருப்பினும் யாம் இறைவன் அருளால் எஃதாவது ஒரு வழியில் வழிகாட்டிக்கொண்டே இருப்போம். இறைவன் அருளாலே தத்துவ நிலை தாண்டி, பிறவியெடுத்ததற்கு ஏதோ ஒரு இல்லறம் நடத்தி, வாரிசை பெற்று வாழவேண்டிய நிலையிலே அந்த வாழ்க்கையும் ஓரளவு அர்த்தம் உள்ளதாக வேண்டும் என்று எண்ணுகின்ற நிலையிலே, அஃதொப்ப ஒரு பங்கம் வராமல் வாழ யாம் இறைவனருளால் நல்லாசி கூறுகிறோம்.

7 comments:

  1. Om Agatheesaya namaha ..ஒரு ஆத்மாவை விடுவித்து, நிரந்தரமாக தன்னை அறிவதற்கென்று எந்தப் பிறவியில் அந்த ஆத்மாவை தேர்ந்தெடுத்து தருகிறாரோ, அந்தப் பிறவியில் லௌகீக வெற்றிகள் அத்தனை எளிதாக கைவரப் பெறாமலும், சுற்றமும், உறவும் ஏளனம் செய்யும் வண்ணமும், ‘"பித்து பிடித்தவன், பிழைக்கத் தெரியாதவன்" என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டும் அந்த ஆத்மா, வாழத்தான் வேண்டும். Ippadi than intha Athma vazhthundu irruku. Gurudevar punniyathala ennoda vazhkai poindirukku. Gurudevar Aasirwadham eppodhuzhum ellorukkum kidaichinde irrukka vendum endru vendikollkiren. Oru small doubt..Orutharukku varisu illai endral avaroda pavapuniya kanakku mudichittudhu endru arthamagu..Gurudevar vidaiallikka vendugiren. Nandrigal

    ReplyDelete
    Replies
    1. கணக்கை ஒரு பிறவியில் முடிக்க வேண்டுமா இல்லையா என்பது இறைவன் தீர்மானம். ஒரு வேலை இரு பிறவியாக இருந்து அதன் முன் பகுதியை ஒரு வாழ்விலும், மற்ற பகுதியை இன்னொரு வாழ்விலும் என்கிற பட்சத்தில், சந்ததி இல்லாமல் போனால், அந்த வாழ்வின் கடன்களை, கடமைகளை அவன்/அவள் சரியாக இறை ஞாபகத்துடன் அர்ப்பணித்து செய்கிறார்களா என்று இறை நோக்கி கொண்டிருக்கும். அப்படி செய்யாத பட்சத்தில் அந்த பிராவின் தீர்க்காத கடன்களை அடுத்த பிறவி/பாகத்துடன் சேர்த்து திருப்பி கொடுக்க வேண்டிவரும். ஆகவே, மனதில் விரித்துக்கொண்டு, எல்லாம் இறைவன் தீர்மானம் என்று உணர்ந்து, செய்ய வேண்டிய கடமைகளை அனைவரும் செய்யவேண்டும்.

      Delete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. Om Lobamudra Samedha Agasthiyar Ayyane thunai...

    ஒவ்வொரு நொடியும் இறை அருள் நிறைந்தது தான் அனைவருடைய வாழ்க்கை

    ReplyDelete
  4. அகத்தியர் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை பாவம் செய்தவன் தண்டனை பெறவேண்டும் ஆனால் அது அவன் தங்கிகொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும் . விஷத்தை எப்படி வேண்டுமானலும் எடுக்கலாம் சித்தரவதை செய்து தான் எடுக்கவேண்டும் என்று எல்லை உதாரணமாக ஒருவன் முன்செய்த கர்மவினை படி அவனுக்கு திருமணம் இல்லை என்று விதி இருந்தால் அதற்காக அவன் கடைசி வரை திருமணம் ஆகாமால் இருக்க வேண்டும் என்று சொல்லவது தவறு , மாறாக திருமண வாழ்வை தந்து அதில் சில பிரச்சனைகளை தரலாம் . இவ்வாறு வயதில் ஒரு சில திருத்தங்கள் செய்யலாம் . ஒரு விஷயத்தை ஒட்டுமொத்தமாக மறுப்பது என்பது தவறு , எப்படி கன்றை பால் குட்டிக்கவிடாமல் செய்வது தவறோ அதுபோல் அடிப்படை லொவ்கீக விஷயங்கள் மறுப்பதும் தவறுதான் .. ஆகவே அகத்தியர் இதனை மனதில் கொள்ளவேண்டும் .. தாங்களும் இந்த கருத்தினை அவரிடம் எடுத்து சொல்லுமாறு தாழ்மையுடன் கொள்கிறேன் ..

    ReplyDelete
    Replies
    1. அகத்தியரிடம் எடுத்து சொல்கிற அளவுக்கு எல்லாம் அடியேன் உயரவே இல்லை. அனைத்தும் அறிந்தவர் அவர். பிறர் உடன்பாடு அவர் கூறும் கருத்தில் இருக்கிறதா என்று கூட அவர் பார்ப்பதில்லை. ஏன் என்றால், அனைத்தையும் இறைவன் கூற, அவர் அனுமதியுடன்தான் கூறுகிறார். ஒன்று நாம் உணரவேண்டும். என்றோ விதித்ததை ஒரு நாள் அறுவடை செய்கிறோம். நம்மை வழி நடத்த அகத்தியர் இருக்கும் பொழுது, குருவுக்கு எல்லாம் தெரியும். அவர் சொல்வது மட்டும் தான் உண்மை என்று, தலை வணங்கி செய்துவிடவேண்டும். அதுவே, உண்மையான இறைவன் எதிர்பார்க்கும் சிஷ்யத்துவம். குரு விஷத்தை தந்து குடு என்றாலும், குடித்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று இருந்துவிடவேண்டும். குடித்த விஷம் கூட உள்ளே அமிர்தமாக மாறிவிடும். அதுவே குருவின் மீதுள்ள நம்பிக்கையை உணர்த்தும்.

      Delete
  5. அன்னை லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்ய பெருமானின் திருவடி சரணம்

    ஐயா அக்னிலிங்கம் அருணாச்சலம் ,
    தங்கள் கூறியது 1௦௦% உண்மை. நடக்கும் அனைத்தும் இறை திருவடி அடைய இந்த மனதை ஒரு முகபடுத்த வருபவை தான். தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவம் அனைத்தும் குரு மன்னித்து அவர் அருள் தொடரட்டும்

    ReplyDelete