​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 18 March 2016

சித்தன் அருள் - 278 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஏனோ தெரியவில்லை, அகத்தியப் பெருமான் அருளிய இந்த அருள் வாக்கை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்  தோன்றியது. கீழே தருகிறேன். படித்து உணர்ந்து செயல்படுங்கள்.

"பூக்களைப் பறித்தாலும், தளிரைப் பறித்தாலும் இறைவனுக்கு என்ற நோக்கத்திலே மெய்யாக, மெய்யாக, மெய்யாக அந்த நோக்கம் சற்றும் மாறாமல் பொது நலத்திற்கு என்று செய்யப்படும்பொழுது அது பாவமாக மாறாது. அது மட்டுமல்ல. அந்தப் பூக்களையெல்லாம் பறித்து இறைவனின் திருவடியிலும், இறைவனின் திருமேனியிலும் சமர்ப்பணம் செய்வதால் அந்த பூக்கள் எல்லாம் மோட்சம் அடைவதால் அவைகளின் ஆசிர்வாதமும் மனிதனுக்குக் கிட்டுகிறது. ஆனால் இறந்த மனிதனின் மீது மலர்களைப் போடுவது கடுமையான தோஷத்தையும், பூக்களின் சாபத்தையும், விருக்ஷங்களின் சாபத்தையும் மனிதன் பெறுவதற்கு வழி வகுக்கும். அதை ஒருபொழுதும் செய்யக்கூடாது. ஆனாலும் மனிதர்கள் தவறாக அதனை செய்து கொண்டே இருக்கிறார்கள். சாலை முழுவதும் பூக்களை வாரி இறைப்பது மகா பெரிய பாவமும், தோஷமும் ஆகும். ஆனால் எத்தனையோ பாவங்களை நியாயப்படுத்திக் கொண்ட மனிதன் இதைப் பாவம் என்று ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஒரு (வாழ்ந்த) மகான் உண்மையாக ஒரு புனிதனாக வாழ்ந்திருக்கிறான், நல்ல சேவைகளை செய்திருக்கிறான், பிறருக்கு நல்ல புத்திமதிகளைக் கூறியிருக்கிறான் என்றால் அப்பொழுதும் துளசி போன்ற இலைகளைதான் ஆரமாக கட்டிப்போட வேண்டுமே தவிர மகானாக இருந்தாலும் மலர்களைப் போடுவது எமக்கு உடன்பாடு இல்லை."

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

5 comments:

  1. Sir, thank you. The quotation you have given "mayai-ana indha lokathil...ulagil edhumillai", is it also a vakku by Sri Agastiar perumal?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! அது அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

      Delete
    2. Mayai ana intha ulagathil quotation engu ullathu..om agatheesaya namah

      Delete
  2. அகத்தியன் கருத்தை ஏற்றுக்கொள்பவன் மனிதனாகி மகான் ஆகிறான்.
    வாழ்கஅறமுடன். வளர்கஅருளுடன் .

    ReplyDelete
  3. அகத்தியன் கருத்தை ஏற்றுக்கொள்பவன் மனிதனாகி மகான் ஆகிறான்.
    வாழ்கஅறமுடன். வளர்கஅருளுடன் .

    ReplyDelete