வணக்கம் அகத்திய பெருமான் அடியவர்களே!
செப்டம்பர் 02 ம் தியதி ஒதிமலை சென்று ஓதியப்பரின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி அவர் அருளை பெற்று வந்த என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டதை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஞாயிற்று கிழமை அன்று ஐந்து பேர் சேர்ந்து மலை ஏறி மறுநாள் கோவில் திறக்கும் வரை காத்திருந்திருக்கிறார்கள். இரவில் பலமாக காற்று வீச குளிர் நன்றாகவே உணர முடிந்ததாம். இரவில் கோவிலுக்கு மிக அருகில் நிற்கும் ஒரு உயர்ந்த மரத்தை உலுக்கி எடுத்த காற்று, ஓதியப்பர் கோவில் மண்டபத்துக்குள்ளே வரவே இல்லையாம். இது ஒரு மிகுந்த ஆச்சரியம். கீழே தருகிற படங்களில் விதவிதமாக தெரிந்தால் அது சித்தர், ஓதியப்பர் அருள். உன்னிப்பாக பாருங்கள்.
உதயத்தில் ஒதிமலையின் நிழல் எதிர் மலையிலிருந்து ஓடி வந்து நிற்கும். அது ஒரு அருமையான காட்சி. அந்தப் படம் இதோ.
இரவில் ஒதிமாலையில் மழை இல்லை. கோயம்பத்தூரில் சரியான மழையாம். சன்னதி திறந்ததும் மிகுந்த உஷ்ணம் பரவியதை உணர்ந்திருக்கின்றனர். ஓதியப்பருக்கு எண்ணை காப்பு (குளிர்விக்க தோதான எண்ணை) போட்டதும், தொடங்கிய மழை இரவு 07.30 வரை நீடித்ததாம்.
எல்லாம் அவன் செயல் என்று நினைப்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். சமீப காலமாக வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அடியவர்களுக்கு "உத்தரவு" கொடுத்து வந்த ஓதியப்பர், பிறந்த நாள் திங்கட்கிழமையில் இருந்தும், மனம் உவந்து நிறைய பேருக்கு "உத்தரவு" கொடுத்தது, மிகுந்த ஆச்சரியம். வந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக, மன திருப்தியுடன், அவர் அருளுடன் சென்றனர். ஓதியப்பரின் பிறந்தநாள் அலங்கார கோலம் உங்கள் அனைவருக்காகவும் இதோ.
Om Nama Kumaraya
ReplyDeleteOm Nama Kumaraya
Om Nama Kumaraya
superb post
ReplyDeleteமிக்க நன்றி ஐய்யா.கண்கொள்ளா காட்சி
ReplyDeleteom nama kumaraya
ReplyDeleteஓம் ஸ்ரீ சரவண பவ |
ReplyDeleteஓம் ஸ்ரீ சரவண பவ |
ஓம் ஸ்ரீ சரவண பவ |
ஒம் ஸ்ரீ சரவனபவ!
ReplyDelete