​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 9 September 2013

கல்லார் அகத்தியர் ஞானபீடம் - ஒரு தகவல்!

வணக்கம்!

ஒரு அகத்தியர் அடியவர் தந்த தகவலின் பேரில், அகத்தியர் ஞானபீடம், கல்லாரில் இருக்கும் மாதாஜியிடம் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது.  இதை, என் வாழ்க்கையின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். ஒரு சில தகவல்களை தந்தார்கள் உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ள.

சித்தன் அருளை வாசித்த அன்பர்களுக்கு தெரியும், அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை போன்ற தினங்களில் அகத்தியர் வாக்கு உறைப்பதில்லை.  ஆனால், கல்லார் ஆஸ்ரமத்தில், வாரத்தில் ஒருநாள் மட்டும் (சனிக்கிழமை) நாடி வாசிக்கப்படுவதால், அகத்திய பெருமான் மனம் கனிந்து சனிக்கிழமை அந்த திதிகள், நட்சத்திரங்கள் வந்தாலும் அருள் வாக்கு தருவதாக உறுதி அளித்துள்ளாராம்.

மேலும் ஒரு சந்தோஷ விஷயம் என்னவென்றால், சமீபத்தில் இங்கு வந்து நாடி படித்து அகத்தியர் அருள் வாக்கை பெற்ற மூன்று குடும்பத்தில், மிகவும் தள்ளிப்போன திருமணம், நிச்சயமாகி, இந்த மாதம் திருமணம் நடக்கப்போகிறதாம்.

மேலும் ஒரு தகவல். தொடர்பு கொண்டு நாடி வசிக்க முன் பதிவு வேண்டுகிற அனைவருக்கும் அங்கு பதிவு செய்கிறார்களாம்.

அகத்தியர் அருளை பெற விழைகின்ற அனைவருக்கும் இப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் உடனேயே நடக்கட்டும் என்று வேண்டிக்கொண்டு,

இதை வாசிக்கும் அனைவரும் சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்.

ஓம் அகதீசாய நமஹ! 
கார்த்திகேயன்

6 comments:

 1. எனக்கு வரும் செப்டம்பர் 18ஆம் தியதி புதன் கிழமை காலை 9 மணிக்கு மாதாஜியிடம் முன் அனுமதி பெற்றூளேன் , அந்கு சென்றூ வந்த பிறகு எனது அனுபவந்கலை இவ்விடம்
  பகிர்ந்து கோள்கிரேன்

  நன்றீயுடன்
  ராஜா
  மதுரையில் இருந்து
  9943998993

  ReplyDelete
  Replies
  1. Hi Raja,
   Could you pls share your Jeevanadi reading experience in detail pls.

   Delete
  2. Mr Raja, Can u share ur Jeevanadi reading experience. Sivaraman

   Delete
 2. ஒருவர் தனக்கு கிடைத்த நாடி அனுபவத்தை, அவராக முன் வந்து சொல்லாதவரை, நாம் கேட்பது சரி என்று எனக்கு தோன்றவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினைக்கான பதிலாக இருக்கலாம். எனது வேண்டுகோள் என்னவென்றால், அமைதியாக இருப்போம். அவராக பகிர்ந்து கொண்டால் உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 3. ஒரு நண்பர் பகிர்ந்து கொண்ட நாடி அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் கீழே உள்ள தொடுப்பில் சென்று பாருங்கள்.

  http://www.gnanaboomi.com/first-hand-experience-with-jeeva-nadi

  ReplyDelete