​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 29 September 2012

அகத்தியர் லிகித ஜபம் - நாடி பற்றிய தகவலும்!



வணக்கம்!

சித்தன் அருளை வாசித்துவரும் ஒரு அன்பர் ஒரு வேண்டுகோளை என்னிடம் தந்தார்.  மிக உன்னதமான எண்ணமானதால் அதை கீழே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  அனைவரும் பங்கு பெற வேண்டுகிறேன்.

தகவல்:- 1

கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!

இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது? ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.

ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;

இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.

15.12.2012 (கார்த்திகை மாதத்தின் கடைசி நாள்) வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா?

அனுப்ப வேண்டிய முகவரி:கி.முரளிதரன்,டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,3,முதல் தளம்,பாரதி பூங்கா வீதி 2,சாய்பாபா காலனி,கோயம்புத்தூர் 11. 

PROPER ADDRESS:= in English:Mr.K.MURALIDARAN,TOTAL OIL INDIA P LTD,3,First Floor, Bharathi Park Cross Road-2,Saibaba Colony,COIMBATORE-11.


தகவல்:- 2

சற்று நாட்களுக்கு முன் "எல்லோரும் அகத்தியரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.  நல்ல ஒரு மனிதரை தெரிவு செய்து அந்த நாடியை வாசிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டேன்.  அனைவரின் பிரார்த்தனைக்கும் தலையாய சித்தர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.  கூடிய விரைவில் அந்த நாடி சென்று சேர்ந்து அவர் வாசிக்க தொடங்கிய பின் அவர் அனுமதியுடன் முழு விலாசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

அகத்தியர் திருவடி சரணம்!

6 comments:

  1. திரு.கார்திகேயன், அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறென். அகத்தியர் சித்தரை வணங்கி இதை தெரிவித்துக்கொள்கிறென். தாங்கள் தெரிவித்த நாடி படிக்க ஒருவரை தேர்ந்தெடுக்க பிராத்தனை செய்ய சொன்னீர்கள். அதனை தொடர்ந்து தினமும் பிராத்தனை செய்த பொது அதற்க்கான நல்ல சகுனம் தெரிந்தது. பிராத்தனை பலித்தது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete
  2. தலையாய சித்தருக்கு நன்றி. திருவிளையாடல் புரிய மீண்டும் வந்திருக்கிறார். ஸ்ரீ அகஸ்தியாய நம

    ReplyDelete
  3. thalayaya siththarin varugaikkaga avaludan kathirukkirum - prarthanai seitha anaithu ullangalukkum vanakkathudan koodiya Nandrigal - ravi MS.Chennai

    ReplyDelete
  4. Pranams, i had been recently to the Velladai siddhar Jeeva Samadhi.
    On the whole i should say it was a fantastic experience which cannot be really explained. I request everyone to experience this. I'm sure you would not definitely disappointed but surprised.

    regards,

    Sriram R

    ReplyDelete
  5. thanks for sharing...

    ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து

    வெள்ளை ஆடை சித்தர் அவர்களின் ஜீவசமாதி கேரளாவில் பாலக்காடு மெயின் ரோடில் கொழிஞ்சம்பார அருகில் அப்புபிள்ளையூர் என்ற இடத்தில் ஸ்ரீ சிற்றம்பல சதாசிவ ஜீவாலயம் என்னும் பெயரில் அமைந்துள்ளது.
    மேலும் அறிய ...
    for more info....

    http://spiritualcbe.blogspot.in/2012/09/blog-post_3.html

    http://spiritualcbe.blogspot.in/2012/12/blog-post_19.html

    http://spiritualcbe.blogspot.in/2012/09/blog-post_1588.html

    ReplyDelete
  6. தற்போது நாடி படிப்பவரை நான் காண வேண்டும் ஐயா. அவரை எங்கனம் நான் தொடர்பு கொள்வது???

    ReplyDelete