​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 22 February 2025

சித்தன் அருள் -1806 - அன்புடன் அகத்தியர் - சிவராத்திரி - குருநாதர் உத்தரவு

 






வணக்கம் அகத்தியர் அடியவர்களே !

வரும் 26/2/2025  அன்று மகா சிவராத்திரி தினத்தில் அடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்துள்ளார். அதன்படி அனைவரும் பின்பற்றுக. 

ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!

அறிந்தும் கூட அப்பனே பின் சிவராத்திரி அன்று அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பகல் வேளையில் அப்பனே நல்விதமாக அப்பனே பின் பசுக்களுக்கு அன்னத்தையும் பின் கொடுத்து அப்பனே!!!

(கோசலைகளில் அல்லது தென்படும் பசுக்கள் மாடுகளுக்கு அகத்திக்கீரை புல் கட்டுகள் வெல்லம் வாழைப்பழம் போன்றவை சிவராத்திரி பகல் நேரத்தில் வழங்க வேண்டும்)

(சிவராத்திரி)  இரவுதனில் அப்பனே பின் அதாவது சிவன் அப்பனே பின் அதாவது சிவன் தனை கூட நினைத்து அப்பனே பின்... அழகாகவே அதாவது பின் நிச்சயம் ஈசன் புகழ் பாடுவோருக்கு எல்லாம். அப்பனே இரவு தன்னில் கூட... ஏதாவது பின் உட்கொள்ள அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல்.. மூலிகைகளான சிலவற்றை கூட அதாவது தேநீரை கூட அப்பனே நிச்சயம் அப்பனே கொடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே சில பாவங்கள்... நிச்சயம் கரையும் அப்பனே. 

(சிவாலயங்களில் சிவராத்திரி அன்று நான்கு கால பூசையை காண கூடியிருக்கும் பக்தர்களுக்கு மற்றும் சிவபுராணம் திருவாசகம் ஓதிக்கொண்டு படித்துக் கொண்டு ஓம் நமசிவாய என்று  நாமம் சொல்லி ஜெபம் செய்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் திருமுறைகள் முற்றோதுதல் செய்து கொண்டிருக்கும் சிவனடியார்களுக்கும்

துளசி, இஞ்சி.  எலுமிச்சை கருப்பட்டி  சுக்கு கொத்தமல்லி விதை மிளகு இட்ட சுக்கு காபி எனப்படும் தேநீரை வழங்க வேண்டும். 

மற்றும் சிலர் விரதம் இருப்பார்கள்.. அவர்களுக்கு பால் பழங்கள் வழங்க வேண்டும் மற்றவர்களுக்கு அன்னத்தையும் கூட வழங்கலாம்.)

அவைமட்டும் இல்லாமல் அப்பனே பின் முறைகளாகவே அப்பனே பின் ஈசனக்கு அப்பனே நிச்சயம் வில்வ இலைகளையும் கூட அப்பனே... பரிசாகவே அப்பனே... கொடுத்தால் அப்பனே நிச்சயம்... சில சாபங்களும் நீங்கும் அப்பனே....

(சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு அர்ச்சனை அபிஷேகம் செய்வதற்கு வில்வ இலைகளை கொண்டு கொடுக்க வேண்டும்)

போகப் போக சில மாற்றங்களும் கூட மெதுவாகத்தான் ஆனாலும் உடனடியாக அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய அதன் பலனை எதிர்பார்க்கக் கூடாது என்பேன் அப்பனே. 

எவன் ஒருவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பலனை எதிர்பார்த்து செய்கின்றானோ...  பின் அதற்கு மதிப்பு.. குறைவு தான் என்பேன் அப்பனே 

 இதை என் பக்தர்கள் ஏற்றுச் செய்ய நன்று என்பேன் அப்பனே!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அன்றைய தினத்தில் அப்பனே அதாவது சிவராத்திரி அன்று நால்வோர் துதிகளையும் கூட அப்பனே 

(அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்.. தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல்)

பின் நிச்சயம் அப்பனே அதாவது என்னால் திருத்தலத்திற்கு செல்ல முடியவில்லையே.. என்று ஏங்குவோர்களும் கூட இல்லத்தில் தன்னால் இயன்ற தீபங்களை ஏற்றி அப்பனே பின் அத் தீபத்தின் வழியாக... ஈசனையும் பார்வதி தேவியையும் பின் பார்த்திட்டு.. அப்பனே பதிகங்களை ஓத ஓத.. அப்பனே சிறப்பு தரும் என்பேன் அப்பனே!!

(சிவராத்திரி அன்று ஆலயத்திற்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றி அந்த தீபஜோதியின் வழியாக சிவனையும் பார்வதி தேவியோரையும் நினைத்துக் கொண்டு தேவாரம் திருவாசகம் பதிகங்கள் பாராயணம் செய்து வருதல் வேண்டும்)

ஆசிகள் !!ஆசிகள்! அப்பனே!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!