​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 3 October 2026

சித்தன் அருள் - 2332 - அன்புடன் அகத்தியர் - கோலாலம்பூர் கூட்டு பிரார்த்தனை வாக்கு - 2 !




ஆதி சிவசங்கரியின்  பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் லோபா முத்திரையோடு. 

( பகுதி 1 அதன் தொடர்ச்சியாக……) 

( அடியவர்கள் சிவபுராணம் பாடி முடித்த பின்னர் ….)

சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா படிக்கிறேன். என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் ஐயா. 

குருநாதர்:- அப்பனே அம்மையே கவலைகள்  வேண்டாம் நிச்சயம் தன்னில் கூட  அறிந்தும். 

அதனால் சித்தர்கள் பின்னே  வருபவர்கள் எல்லாம் பின் மீண்டும் மீண்டும் இதைத்தான் யான் தெரிவிப்பேன்.  

***** ஒரே பிறவியில் எங்களை பின் நிச்சயம் பின் அதாவது பின்தொடர்பவர்கள் நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் இல்லை.  *****

*****  அதாவது பல ஜென்மங்களில் செய்த புண்ணியங்கள், பல பல வழிகளில் ஞானத்தை நிச்சயம் தன்னில் கூட பெற்றுத்தான், நிச்சயம் பின் கடைப்பிறவியில் பின் நீங்கள் நிச்சயம் தன்னில் கூட எங்களை பின் தொடர்ந்து இருக்கின்றீர்கள்.  ***** 

***** அதாவது யாருக்கு ஒருவன் நிச்சயம், அதாவது யாருக்கு எவை என்று கூற,  கடை பிறவி இருக்கின்றதோ அவனே வந்து என்னை அடைவான். *****

சுவடி ஓதும் மைந்தன்:-  அதனால யாரெல்லாம் கடைசி பிறவி இருக்குதோ அவங்கதான் யாரு தேடி வருவாங்க அய்யா?  சுவடி ஓதும் மைந்தன்:-  சித்தர்களை தேடி வருவாங்க.  அகத்தியரை வந்து தேடி வருவாங்க.  கடைசி பிறவியில்  இருபவங்க.

குருநாதர்:-  அப்பனே இதனால்  அப்பனே அனைத்தும் சில தாமதமாகும் என்பேன் அப்பனே. 

*****   ஏனென்றால் அப்பனே கடைசி பிறப்பில் அனைத்தும் பாவத்தையும் தீர்க்கப்பட வேண்டும். *****  

*****   அதனால்தான் அப்பனே அனைத்தும் சற்று தாமதமாகின்றது. *****   

அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

*****   அனைத்தும் யான் கொடுத்திடுவேன். அன்பு நெஞ்சங்களே. *****  

சுவடி ஓதும் மைந்தன்:-  ஏன்னா கடை பிறவி ஒருத்தருக்கு இருந்ததுன்னா.. எல்லா பாவத்தையும் கரைச்சிடனும். 

சுவடி ஓதும் மைந்தன்:- அந்த கடைசி பிறவில எல்லாத்தையும் கரைக்கணும் இல்லையா? . அப்ப வந்து சில நல்லது நடக்குறது வந்து கொஞ்சம் தாமதமாக ஆகும். அவ்வளவுதான். ஆனாலும் என் மக்களுக்கு நான் கண்டிப்பாக கொடுத்தே தீருவேன் 

குருநாதர்:-  ஆனால் நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை. 

*****    அன்பை மற்றவருக்கு விதையுங்கள். போதுமானது. *****   

*****    தர்மத்தை பற்றி சொல்லுங்கள். *****   

மற்றவை எதை என்று புரிய  பின் ஏதும் தேவையில்லை. 

*****    இறைவனை அழைத்து வந்து உங்களுக்கு யான் காண்பிப்பேன் எதை என்று புரிய. *****   

***** நீங்கள் எதை செய்தால், பின் உங்களுக்கு நலமானதோ அது எங்களுக்கு தெரியும்.  *****   

சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாருமே அன்புடன் பழகுங்கள் வந்து அந்த அன்பை… நீங்க தர்மத்தை பற்றி நீங்க எடுத்து உரைச்சீங்கன்னா நான் உங்களுக்கு யாரை காட்டுறேன்? இறைவனை. 

குருநாதர்:- நீங்களே வந்தாலும்  எதை என்று புரிய,  பின் நல்லெண்ணங்கள் பின் எதை எதை என்று புரிய  பின் இல்லாமல் இருந்தாலும், அதையும் பின் மாற்றி நிச்சயம் நல் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இன்னும் பல வகை புண்ணியங்கள் கூட. அதாவது பின் அதாவது எங்களிடத்தில் பல புண்ணியங்கள் இருக்கின்றது.  அவையெல்லாம் உங்களுக்கு தந்து, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் செய்வோம். 

குருநாதர்:-  இதனால் கவலை வேண்டாம். இன்னும் எதை என்று புரிய அனைவருக்குமே நிச்சயம் தன்னில் கூட, இன்னும் பின் விவரமான வாக்குகள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று கூற, பின் குறித்து வைத்திருக்கின்றேன். அதனால் நிச்சயம் பின் எதை என்று புரிய, நிச்சயம் அவரவர்  வினையையும்  கூட எப்படி ஏது என்று புரிய, இன்னும் சில ரகசியங்களும் செப்பி, பல வகையிலும் கூட, நன்மைகள் பெற, பல வகையில் கூட எதை என்று புரிய,  பின் மந்திரங்களும் உபதேசங்களும் உங்களுக்கு செப்பி, நிச்சயம் நீங்களும் நன்றாக வாழ வேண்டும். மற்றவர்களுக்கு பின் பெரிதாக எடுத்து,  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும். ஏனென்றால் உலகம்  எவை என்று கூட நிச்சயம் கலியுகம் பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் முடிந்து அழியுகம் எவை என்று கூற பின் தொடர்ந்து கொண்டே  எதை என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட இதனால் எவை அழியுகத்தில் நிச்சயம் பின் மனிதன் பின் எவ்வாறெல்லாம் பின் அழிகின்ற யுகத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு மனிதன் அழிய வேண்டுமோ அக்குணங்கள் தான் மனிதனுக்கு இருக்கும். 

அவை தன் நீக்கவே சித்தர்கள் யாங்கள் வந்திருக்கின்றோம். 

***** இதனால் நிச்சயம் என் பக்தர்களை இனிமேல் சேவைக்காகத்தான் யான் பயன்படுத்துவேன். ***** 

***** சொல்லிவிட்டேன். ***** 

இவ் முக்கிய வாக்கின் சுருக்கம் :-  ( கவலைப்பட வேண்டாம்; அனைத்தையும் தெளிவாகப் புரிய அனைவருக்கும் தேவையான விவரமான அருள் வாக்குகள் ஏற்கனவே வைத்திருக்கின்றேன். ஒவ்வொருவரின் வினை எப்படி செயல்படுகிறது, அதை எவ்வாறு நீக்க வேண்டும், எந்த ரகசியங்கள் மனிதனை உயர்த்தும்—இவற்றை எல்லாம் மந்திரங்களும் உபதேசங்களும் உங்களுக்கு வழங்கி, நீங்கள் நன்றாக வாழ வேண்டும். கலியுகம் முடிந்து அழியுகம் தொடரும் இந்த காலத்தில், மனிதன் அழிவை ஏற்படுத்தும் குணங்கள் அதிகரித்துள்ளன. அவற்றை நீக்கவே சித்தர்கள் உலகிற்கு வந்துள்ளனர். இனிமேல் என் பக்தர்களை நான் சேவைக்காகப் பயன்படுத்துவேன் என்று குருநாதர் தெளிவாக அறிவிக்கிறார். ) 

குருநாதர்:-  எதை ஏது என்று புரிய அதாவது நீங்கள் பதிலுக்கு செய்ய வேண்டியது தர்மம் மட்டுமே. 

குருநாதர்:-   நீங்களும் இருந்து, மற்றவர்களுக்கும் நிச்சயம் சொல்கின்ற பொழுது, நிச்சயம் உங்களையும் காத்து, மற்றவர்களையும் காத்து, நிச்சயம் தன்னில் கூட இப்புவிதன்னை  கூட காக்கலாம். சொல்லிவிட்டேன். 

(நீங்கள் சந்திக்கின்ற அவர்களிடம்  எல்லாம் தர்மத்தை பற்றி பேசுங்கள். அவர்களையும் தர்ம வழியில் நடத்தினால், எல்லாம் தர்மமாக மாறும். அப்ப இந்த உலகத்தை காப்பாற்றலாம் என்று அகத்திய பெருமான்  கூறுகிறார்.) 

குருநாதர்:-  அனைவரும் ஒன்றே எதை என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட எங்களுக்கு. இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட எதை  என்று புரிய  அனைவரின் எது என்று புரிய  யோசிக்காமல்,  அனைவரின் பின் எண்ணம் எதை  என்று கூற பின் அதாவது மனதில், நிச்சயம் அதாவது புண்ணியத்தை புகுத்து, நிச்சயம் தன்னில், ஏது என்று புரிய,  பின் அதாவது காந்தகத்தை நிச்சயம் பின் எவை என்று உருவேற்றுவோம்.  பின் எதை என்று புரிய  நிச்சயம் எவ்வகையான மனிதன் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று கூற பின் நிச்சயம் பின் அதாவது அவர்களுக்கும் வாக்குகள் உரைப்போம். 

அடியவர் :- அதாவது எங்களுக்கு எல்லாருமே ஒன்னுதான். நல்லவன் கெட்டவன்னு பாகுபாடு கிடையாது. தீயவினை காரணமாக தீயவனாக  மனிதன் இருக்கின்றன. அவன் மனதிலும் நாங்கள் புண்ணியத்தை புகுத்தி, அவனையும் நல்லவனாக மாற்றி, எல்லாரையும் உயர்த்துவோம். அதுதான் சித்தர்கள். 

குருநாதர்:- இதனால் ஏது என்று புரிய  நிச்சயம் தன்னில் எதை என்று கூற.  

அதனால் புவி தன்னில் எது என்று புரிய  அதிக பாவங்களோடு  மனிதன் அதாவது பின்னிக் கொண்டிருக்கின்றான். 

அதாவது நிச்சயம் உங்களை, அதாவது யான் அதாவது உங்களை பார்த்தே பின் ஒரு கேள்வி கேட்கின்றேன்.  

***** அதாவது உங்கள் உடம்பை நிச்சயம் கயிற்றால் கட்டினால், நீங்கள் பின் நிச்சயம் தன்னில் கூட,  எப்படி பின் அதாவது அதை பின் எவை என்று அவிழ்த்து வெளியே வருவீர்கள்?  யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்?  *****

சுவடி ஓதும் மைந்தன்:- உங்கள கயிறு இந்த கயிறு இருக்குல்ல…. பெரிய கயிறு எடுத்து, கட்டிட்டோம்னா… எப்படி நீங்க வந்து…. அந்த கயிறு பிரிச்சிட்டு எப்படி வருவீங்கன்னு?  கேக்குறாரு அகத்திய பெருமான்? 

அடியவர்:- வரவே முடியாது 

குருநாதர்:-  எதை ஏது என்று புரிய,  ஏதோ பின் நீங்கள் கூச்சலிட்டால், மற்றொருவன் வந்து அதை அவிழ்ப்பான். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஏதோ கட்டி போட்டாங்க என்று கூச்சலிட்டால், என்ன பண்ணுவாங்க வந்து? யாராவது வந்து உங்களை அவிழ்த்து விடுவார்கள். 

குருநாதர்:- இதே போலத்தான் அப்பா, பாவம் என்ற கயிற்றை பின் அனைவரும் நிச்சயம் சுற்றி, எவை என்று கூற, நீங்கள் அதாவது கத்துகின்றீர்கள்.  இறைவா ! இறைவா!! இறைவா!!! என்று, அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன்:- கஷ்டம்தான் வரும். நிறைய கஷ்டம் வரும். அப்ப என்ன பண்றோம்? இறைவா இறைவா இறைவா என்னை காப்பாத்து அப்பா … இதுல இருந்து கட்டு அவிழ்த்து விடு, அவிழ்த்து விடு சொல்லிட்டு இறைவனை அழைக்கிறோம் நம்ம வந்து. 

குருநாதர்:-  எதை என்று புரிய  இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். 

இதனால் பின் அப்பொழுது உங்களுக்கு என்ன யோசனை வரும்?  

***** இறைவனைப் பற்றி தான் யோசனை வரும். ***** 

*****  அதாவது உன்னை காப்பாற்றிக்கொள்ள, யாராவது காப்பாற்றுங்கள்… யாராவது காப்பாற்றுங்கள்… என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. ***** 

*****  அதேதான் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ***** 

*****  அதேபோலத்தான் இறைவன். *****  

*****  இவன் எவ் எண்ணத்தையும்  பின் நிச்சயம் தன்னில் எண்ணாமல், பின் நம் தனை அழைக்கலாமா, பின் அழைப்பானா என்றெல்லாம். ***** 

*****  நிச்சயம் அப்பொழுது எவ் சிந்தனையும் இல்லாமல் இறைவா !  இறைவா !! இறைவா !!! என்று அழைத்தால் இறைவன் வந்துவிடுவான். ***** 

*****  அவ்வளவுதான். வாழ்க்கை சுலபமாகிவிட்டது. ***** 

*****  புண்ணியம் சேர்ந்துவிடும். ***** 

நீங்கள் பாவத்தால் சூழப்பட்டு இருக்கின்றீர்கள். அது கட்டுன்னு சொல்றாரு. அந்த கயிறை கட்டு போட்டு உங்களை கட்டிட்டாங்க. அப்போ இறைவா !  இறைவா !! இறைவா !!! இறைவான்னு சொல்லிட்டு எந்த நினைப்பும் உங்களுக்கு இருக்கக்கூடாது. இறைவா இறைவா அப்பதான் புரியுதா இதோட கான்செப்ட்ங்க ஐயா? 

சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது ஐயா.  இதுல இறைவன் வந்து என்ன எதிர்பார்க்கிறார்? அவரை தவிர எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது ஐயா. அப்பதான் என்ன பண்ணுவாரு இறைவன்? கட்டை அவிழ்த்து உங்களிடம் உள்ள பாவத்தை வந்து, அவிழ்த்து எடுத்து எடுத்து போட்டுருவாரு ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா அதனால இறைவன் எதிர் பார்ப்பாராம்? இப்ப இவன் என்னன்னா யாரையும் நினைக்கக்கூடாது. நம்மள மட்டும்  நினைக்கிறானா…. அப்பதான் வந்து என்ன பண்ணுவாராம்? அந்த கட்டை வந்து.. அந்த கயிறை வந்து பிரிச்சு தூர போட்டு விடுவாரு. அப்பதான் நீங்க வந்து விடுதலை உணரலாம் ஐயா. மெய் ஞானத்தை உணரலாம். அப்பதான் இறைவன் யார் என்பது உங்களுக்கு தெரியும். இல்லையென்றால் புரியாது ஐயா . 

குருநாதர்:- அப்பனே இன்னும் பல வழிகளில் கூட அப்பனே ஞானங்கள் பலவற்றை கூட அப்பனே மந்திரங்கள் உபதேசங்கள் எல்லாம் உங்களுக்கு சொல்லித் தருகின்றேன் அப்பனே. 

***** இதனால்  அப்பனே அதை வைத்து நீங்களும் பிழைக்கலாம் அப்பனே. ***** 

***** மற்றவர்களும் பிழைக்கலாம் அப்பனே. ***** 

***** பின் நிச்சயம் தன்னில் கூட புவியை கூட அப்பனே வாழ வைக்கலாம் என்பேன் அப்பனே. ***** 

*****  இதனாலதான் அப்பனே வருங்காலத்தில் மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றேன். *****  

*****  என் பக்தர்களை அப்பனே சேவைக்காகத்தான் யான் பயன்படுத்துவேன். *****  

*****  பூலோகத்தை காக்கத்தான் யான் பயன்படுத்துவேன். *****  

***** சொல்லிவிட்டேன். ***** 

அடியவர்:- அதாவது என்ன சொன்னாருன்னா, பல மந்திரங்களை உபதேசிப்பேன். என்ன காரணம் என்றால் நேத்து தண்ணீர் மலையில் சொன்னாரு ஒரு மந்திரத்தை. அதை தட்டச்சு செய்து பகிர்கின்றோம் விரைவில்.  முருகப்பெருமான் அருள் வாங்க அதுக்கு ஒரு மந்திரம் சொன்னாரு. சோ அந்த மந்திரத்தை அங்க போய் சொன்னீங்கன்னா, முருகன் அடடா யார்டா என்னை கரெக்டா கூப்பிடுறதுன்னு சொல்லி பார்த்து அருள் கொடுப்பார். அதுபோல பல மந்திரங்களை உபதேசித்து, இறைவன் அருளை பெற்றுத் தருவேன்  அப்படின்னு சொல்லி உரைக்கிறார். மேலும் அகத்திய பெருமான் தன் பக்தர்களை சேவைக்காகத்தான், பூலோகத்தை காக்கத்தான் பயன்படுத்துவேன் என்று சொல்கின்றார். 

குருநாதர்:-  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை. 

*****  ஆனால் இக்குறை எளிதாக பின் விலக்கிவிட்டால், இறைவனை அதாவது நினைக்கக்கூட மாட்டார்கள். ***** 

***** அதனால் நிச்சயம் தன்னில் கூட அதிகப்படுத்தி, அதிகப்படுத்தி இறைவன் விளையாடுகின்றான் நிச்சயம் தன்னில் கூட. *****

***** ஏனென்றால் அதிகப்படுத்தும் பொழுதுதான் நீங்கள் இறைவனை நாடி வருவீர்கள் என்பது படைத்தவனுக்கு….. அதாவது பின் அதாவது பின் தாய் தந்தை என்று இங்கு. ***** 

***** ஆனால் உங்கள் தாய் தந்தை இறைவனே. ***** 

சுவடி ஓதும் மைந்தன்:-  என்ன சொல்றாருன்னா புரியுதுங்களா எல்லாருக்கும் ஐயா ? 

சுவடி ஓதும் மைந்தன்:-  இறைவன் என்ன எதிர்பார்க்கிறார் வந்து?  உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்துட்டு, அவர் பாசத்தை எதிர்பார்க்கிறார். ஆனா நம்ம என்ன பண்றோம்? அது கஷ்டம் என்று எடுத்துக்கிறோம். ஆனா இறைவனுக்கு அது என்னது? ….. பாசம். 

சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பி நம்ம கையில வருவானா?  நம்ம கையில வருவானா?  வரணும் வரணும்னு சொல்லிட்டு, இன்னும் துன்பத்தை கொடுத்துட்டு இருக்காரு.  அது மாதிரி உண்மையா வந்து… அந்த நம்மளும் அன்பா அவருக்கு அன்பை, பாசத்தை கொடுத்துட்டோம்னா இறைவன் என்ன பண்ணுவாரு?  அவரே கொடுப்பார் வந்து…. அதனால இப்ப உங்க அப்பா அம்மா யார் என்று எல்லா மனிதர்களுக்குமே  தெரியும். ஆனால் உண்மையான அப்பா அம்மா யாருன்னா… கடவுள் மட்டுமே. 

சுவடி ஓதும் மைந்தன்:-  அவருடைய மகன் மகள் எல்லாமே இருக்கும் பொழுது,  என் கையில வரலையே என் மகன் மகள். எப்படி வருவாங்க?

சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு துன்பத்தை கொடு அவனுக்கு….ஒரு நோயை கொடு அவனுக்கு….அப்படித்தான் சொல்றாரு அகத்திய பெருமான்.   

அப்ப என்ன பண்ணுவான்?  இறைவனிடம் தன் குறையை நீக்க ஓடோடி வருவான்… அப்ப இறைவன் என்ன பண்ணுவாரு?

எப்பா என் மகன், என் மகள்… என் கையில வந்துட்டே இருக்கான்.  

அப்ப இதே கொஞ்சம் துன்பத்தையே கொஞ்சம் கொடுத்தா…என் கையில வருவான்… 

அதே மாதிரி கொஞ்சம் நோய் இருந்தா, கொஞ்ச நேரம் வருவான்… 

சில கஷ்டங்கள் கொடுத்தா சில தடை கொடுத்தா என் கையில வந்துட்டே இருப்பான். 

அழகா பார்ப்பார் இறைவன்.  அப்ப என்ன பண்ணுவாரு? சரி. ஓகே. இவனுக்கு போதும். அனுபவி எண்டு  ஏதாவது கொடுப்பான்னு சொல்லிட்டு நல்லது செய்வாருங்க ஐயா. இதுதான் இறைவனுடைய கோட்பாடுன்னு வச்சுக்கலாம். 

சுவடி ஓதும் மைந்தன்:- அகத்திய பெருமான் அதுதான் சொல்றாரு. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete