​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 2 October 2026

சித்தன் அருள் - 2330 - அன்புடன் அகத்தியர் - தண்ணீர்மலை கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்கு 4!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  22/09/2026  அன்று தண்ணீர்மலை மலேசியாவில்  நடந்த   கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்கு - பகுதி 4

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன். 

( பகுதி 3 …அதன் தொடர்ச்சியாக…)  

குருநாதர்:-  எதை என்று அறிய பின் யானும்  சந்தோஷத்துடனே…. “முருகா” !!!!!! அறிந்தும், எதை என்று “உனக்கு என்ன பிடிக்கும்?” என்று பேசிக்கொண்டிருந்தோம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சந்தோஷமா பேசுறாரு, முருகா உனக்கு என்ன பிடிக்கும்? 

அடியவர் :- ஏன்னா அவர் தன்னில் மட்டுமே போதும் என்று சொல்கிறாரே. ஏன்னா அவர் சின்ன குழந்தை , என்ன வேண்டும் என்று கேட்கும் என்று.

குருநாதர்:-  எதை என்று அறிய, அதாவது எவ்வாறு என்று முருகனும் , அதாவது நிச்சயம் அகத்தியனே !!!!!!  யான் என்ன பால் குடிக்கும் சிறு குழந்தையா?  என்று. 

குருநாதர்:-  ஆனால் யான் புரிந்து கொண்டேன்.  முக்கியம் பின், அதாவது முருகனுக்கு பால் தான் என்று,  அழகாக எடுத்து வந்து, பின் ஊற்றினேன், ஊற்றினேன். இதனால் இவ் தேசம் அது சிறப்படையும். 

அடியவர் :-  அதாவது அவங்க கேக்குறாங்க, நான் என்ன பால் குடிக்கிற குழந்தையா?  அதாவது நானும் ஒரு தெய்வ சக்தி மிகுந்த… அப்படின்னு சொல்லிட்டு… ஆனால் பால் என்பது முருகனுக்கு பிடித்தது… அப்படின்னு சொல்லி, முருகன் வாயில …..

சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல, இல்ல…. அகத்திய பெருமான் என்ன சொல்றாரு… என்ன வேணும் அப்பா?  என்ன வேணும் அப்பா?  என்ன வேணும்னு கேக்குறாரு. யார்கிட்ட? 

அடியவர் :-  முருகர்   கிட்ட, 

சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்திய பெருமான் முருகர்   கிட்ட கேக்குறாரு,  முருகன் என்ன பண்றாரு, ஏப்பா நான் பால் குடிக்கும் குழந்தையா என்று சொல்கின்றார். அப்ப டக்குனு அகத்திய பெருமான்  என்ன பண்ணாரு?  ஓ…. ரைட்…. முருகனுக்கு பால் தான் பிடிக்கும் என்று சொல்லிட்டு, என்ன பண்ணாரு? எவ்வளவு வேணுமோ, பால் வந்து எடுத்துட்டு வந்து…

அடியவர் :-  அபிஷேகம் செய்கிறார். என்ன சொல்றாரு, நீங்க எந்த அளவுக்கு இந்த பால் அபிஷேகம் பண்றீங்களோ, அந்த அளவுக்கு இந்த தேசம்… 

சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல இல்ல.  அதே போல இந்த பால் அபிஷேகத்துக்கு சிறந்த ஒரு நாடு என்றால் மலேசியா தான், அப்படின்னு சொல்றாரு. அப்படித்தான் ஒரு கான்செப்ட் இருக்கணும். அப்ப தானாகவே வந்தது…. தானாகவே வந்து இந்த உலகத்துல வந்து, யார் வந்து நிறைய அபிஷேகம் பண்ணவங்க, யார் வந்து?  மலேசியா நாட்டு மக்கள் வந்து , வந்து சும்மா எல்லாம்  போகமாட்டாங்க. எல்லாரும் முருகருக்கு வந்து?

அடியவர் :-   பால் காவடி ( அபிஷேகம்  )....

குருநாதர்:-  அப்பனே எவை என்று அறிய, இதனால் தான் முருகன் அனைத்தும் கேட்டுக் கொண்டே இருக்கின்றான் அப்பனே. 

குருநாதர்:-  பரிசுத்தமாக, அவனுக்கு அப்பனே பின் கொடுத்து பசியாற்றினேன். இதனால்தான் அப்பனே  நீங்கள் அனைவருமே பசியாற்றுகின்றீர்கள். அதனால்தான் உங்களுக்கு என்ன தேவையோ,  அவன் கொடுத்து விடுகின்றான் சந்தோஷமாக. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால நல்லா சந்தோஷப்பட்டார். அந்த பால் வந்து அவருக்கு கொடுத்ததுமே.  அப்பான்னு சொல்லிட்டு .. அதனாலதான் உங்களுக்கு என்ன தேவையோ,  நீங்க பாலை அபிஷேகம் பண்ணி, (உங்கள் தேவை அதை) அவர் கிட்ட வாக்கிக் கொள்கின்றார் என்று சொல்கின்றார். 

சுவடி ஓதும் மைந்தன் :- (பால் அபிஷேகம் செய்யலாம் என்று ) உங்களுக்கே மனசுல தோன்றுமாம்.  

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலதான் இந்த தேசத்துல வந்த எல்லாரும் என்ன பண்றாங்க?  பால்குடம் எடுக்குறாங்க ஐயா. புரியுதுங்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலதான் பால்குடம் எடுத்து முருகனுக்கு…. முருகன் கேக்கல. ஓகேங்களா? அதனால பாலை, (முருகப்பெருமான்) அவருக்கு தேவையானதை, அவரே வாங்கிட்டு, நல்லா சந்தோஷப்பட்டு, சந்தோஷப்பட்டு, நீங்க ஈஸியா உங்களுக்கு என்ன தேவையோ அதை உங்களுக்கு (முருகப்பெருமான்)  கொடுத்து விடுகிறார் சந்தோஷமாக என்று சொல்கின்றார். 

குருநாதர்:-  இதனால் தான் அப்பனே நிச்சயம் பலமாக செயல்பட்டுக் கொண்டு  இருக்கிறது. அப்பனே இதுவும், அப்பனே சிங்கள தேசமும் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிங்கப்பூர் சொல்றாரு. அதனாலதான் இங்கேயும் சிங்கப்பூரும்  பலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.  புரியுதுங்களா? யார் அருளால்? 

அடியவர் :- முருகன் அருளால். 

சுவடி ஓதும் மைந்தன் :-   முருகன் அருளால்  என்று சொல்றாரு. 

குருநாதர்:-  இன்னும் எதை என்று புரிய , இதனாலதான் நல்ல ஆரோக்கியங்கள் எல்லாம் முருகன்  கொடுத்து, அனைத்தும் செய்து கொண்டே இருக்கின்றான். அதனால் அதாவது, அதாவது சிங்கம், சிங்கள  ஊரும் எதை எடுத்து, இவ் மலையன், ஊரும்  நிச்சயம் பின் பிடித்தது முருகனுக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   சிங்கப்பூரும், மலேசியாவும், முருகனுக்கு பிடித்த நாடுகளில் ஒன்று. ஐயா  புரிஞ்சுதுங்களா? 

குருநாதர்:-  இன்னும் இதனை தாண்டி, எதை என்று அறிய அதாவது பக்கத்தில்  பின் தாய், என்ற ஊரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதை தாண்டி, தாய்லாந்து என்ற ஊர். ஐயா. புரியுதுங்களா? 

குருநாதர்:-  ஆனாலும் அங்கும் அக்கிரமங்கள் பின் அடுக்கடுக்காய் ஆரம்பித்துவிட்டது. ஆனாலும்  ஈசன் முடிவு எடுத்துவிட்டான் அழிப்பதற்கு. ஆனால் முருகனோ, என் நாடு இது. ஒன்றும் செய்யக்கூடாது என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  தாய்லாந்தும்  பிடிக்கும் முருகருக்கு. ஆனால் அந்த நாட்டில் எல்லாமே எல்லை மீறி போயிட்டு வந்து. அதனால உடனே என்ன பண்ணாரு வந்து யாரு? ஈசன் வந்து முடிவெடுத்தார் அழிப்பதற்கு. ஆனால் முருகன் வந்து என்ன சொன்னார்? என் நாடு இது. நான் பார்த்துக்கிறேன். தடுத்து நிறுத்திவிட்டார் என்று சொல்கின்றார்.

குருநாதர்:-  அப்பனே, எதை என்று புரிய  இதனால் , அப்பனே, முருகனை பற்றி அழகாக உரைத்துவிட்டேன் அப்பனே. நிச்சயம் எம்முடைய ஆசிகள் பரிசுத்தமானவை. அப்பனே கவலை வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ, அதை யானே கொடுக்கின்றேன். 

அடியவர் :-  அதாவது, இங்க இருக்கிறவங்களுக்கு என்ன சொல்றாங்கன்னா, என்னுடைய ஆசிர்வாதங்கள் பரிபூரணமாக உண்டு.  உங்களுடைய தேவைகள் என்னவோ, அந்த அகத்திய பெருமான்  கொடுப்பார் , அப்படின்னு சொல்லி, 

சுவடி ஓதும் மைந்தன் :- அகத்திய பெருமான் நானே உங்களுக்கு கொடுக்கிறேன். ஐயா புரியுதுங்களா? 

குருநாதர்:-  அப்பனே, இதனால் , தர்மத்தை மட்டும் அப்பனே பின் நிச்சயம் சொல்லிக் கொடுங்கள் போதும் என்பேன் அப்பனே. உங்களுக்கு தேவையானதை யானே கொடுக்கின்றேன் அப்பனே. கவலைகள்  வேண்டாம். 

அடியவர் :- நீங்கள் தர்மத்தோடு நடந்தால் மட்டும்தான், உங்களுக்கு வேண்டியதை இந்த அகத்திய பெருமான் கொடுப்பார் என்று சொல்கின்றார்.

குருநாதர்:-  அப்பனே, எதை என்று கூற, அப்பனே நீங்கள் நடத்திக்கொண்டு, இப்பொழுது இது போதும். 

அடியவர் :-  இன்னும் நிறைய செய்திகள் உண்டு, ஆனால் இன்று இது போதும் என்று அகத்திய பெருமான்  உரைக்கின்றார். 

குருநாதர்:-  இதனால் மீண்டும் எதை என்று புரிய, அதாவது, பலமாக முருகனை நினைத்து, ஒரு ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் சரியாக அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். என்ன தேவை என்று உங்களுக்குள்ளே நினைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் முருகன் அனைத்தும் கொடுப்பான். 

அடியவர் :-  ஒரு ரெண்டு நிமிடம் எல்லாரும் முருகனை நினைத்து, தூய மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன வேண்டுமோ, அதை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள். 

அடியவர் :-  பிரார்த்தனை செய்யுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- நிச்சயமாக முருகன் கொடுப்பான். 

அடியவர்கள் :- ( இரண்டு நிமிட தியானம் செய்தனர் ……. )

( இரண்டு நிமிட தியானம் செய்த பின்னர் வாக்குகள் ஆரமபமனது……. )

குருநாதர்:-  அப்பனே, அழகாக கந்த சஷ்டி, அப்பனே பின் பாடி பாடி  . முருகனுக்கு, அப்பனே, நிச்சயம் பின் நீங்கள், பின் நிச்சயம் தன்னில் கூட  கேட்டதை யான்  கொடுக்கின்றேன் அப்பனே.  அனைவரின்  மனதை  யான்  ஆராய்ந்து விட்டேன்.  

(தியானம் செய்த அவ் 2 நிமிடத்திற்குள் அங்குள்ள அனைவரின் மனதும் என்ன வேண்டுகிறது என்று ஆராய்ந்து, அறிந்து கொண்ட அகத்திய பெருமான் திருவடிகள் போற்றி )

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா மனதையும் அகத்திய பெருமான் ஆராய்ந்து விட்டார்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று. மனசார முருகனை வேண்டி,  கந்த சஷ்டி கவசம் படிங்க எல்லோரும். 

அன்பு முருகப்பெருமான் அடியவர்கள் :- ( கந்த சஷ்டி கவசம் பாட ஆரம்பித்தார்கள் ….)

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட  

………………….
………………..
……………….

(அன்பு அடியவர்கள் கந்த சஷ்டி கவசம் பாடி முடித்த பின்னர்) 

குருநாதர்:-  அப்பனே, அம்மையே, அனைவருக்குமே, எம்முடைய ஆசிகள். நிச்சயம், அதி விரைவிலேயே, பின் நிச்சயம், குறைகள், சில, தீர்த்து வைக்கின்றேன். 

குருநாதர்:-  ஆனாலும், நிச்சயம் உங்களுக்கு இன்னும்  ஆற்றலை பெருக்கி, உங்களுக்கு என்னென்ன  தேவையோ, அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, அருளிட, இப்பொழுது ஒரு மந்திர உபதேசத்தை யான் சொல்கின்றேன். 

குருநாதர்:-  அதை, சரியாக, கடைபிடித்து வந்தாலே, முருகன் உங்களுக்கு அனைத்தும் கொடுப்பான்.  அதாவது, முருகன் இடத்திலேயே  யான் சொல்கின்றேன்.

அடியவர் :-  என்ன சொல்ல வராருன்னா, உங்களுடைய குறைகளை, அதிவிரைவிலே, தீர்த்து விடுகின்றேன். அது இல்லாம, ஆற்றல் பெருக, ஒரு மந்திர உபதேசம், குருநாதர், தன் வாக்கு மூலம் இப்பொழுது  உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அது தயவு செய்து, பயன்படுத்திக்கோங்க.  அதை பயன்படுத்தி, உங்களுக்கு, முதல்ல, ஆற்றல் எல்லாம் பெருக்கிக்கோங்க.

குருநாதர்:-  இதை தன் அறிய , எவை தன் அறிய, நிச்சயம் ஒரு கருங்காலி  கட்டையை, சரியாக  இரண்டு கைகளில் வைத்துக்கொண்டு…….. 

குருநாதர்:-  “ஓம்  ஹ்ரீம் ஸ்ரீம்  சரவணபவ”

குருநாதர்:-  எனும்  1008 முறை செப்பி, நன்றாக பின் அதை தன் அக் கருங்காலி, பின் அதாவது கட்டையை பின் நீரில் இட்டு, அந்நீரை நீங்கள் அருந்தி வந்தால், நிச்சயம் தன்னில்  கூட, உண்மை ஞானம் பிறக்கும்.

குருநாதர்:-  அதனால்தான் முதலில் ஞானத்தில் இருந்தே  யான் தொடங்குகின்றேன். இதனால் உண்மை ஞானம் பின் நிச்சயம் பின் அறிந்தும் பின் தொடர்ந்து, நிச்சயம் உங்கள் எதை என்று கூற, எதிர்காலத்தில்  பின் நிச்சயம் சிறப்பாக எவை என்று கூற, ஆற்றல் அதிகரித்து, உங்களுக்கு என்ன தேவையோ, அதை முருகன் பின் நிச்சயம் கொடுப்பான். பின்  நிச்சயம் சொல்கின்றேன். அவசியம் நீங்கள் செய்ய வேண்டும். ஆசிகள். ஆசிகள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படி ஒரு கருங்காலிக் கட்டையை பிடிச்சுக்கோங்க, நல்லா ரெண்டு கையில. இப்படி பிடிச்சுக்கோங்க. முருகன் மந்திரம் சொல்லி இருக்காரு வந்து. அதை 1008 முறை சொல்லுங்க நல்லா. சொல்லிட்டு…. அந்த கருங்காலி கட்டையை வந்து எங்க பண்ணனும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  தண்ணில வந்து ஊற வச்சு,  அந்த தண்ணீரை நீங்க எடுத்து குடிங்க. நல்ல ஆரோக்கியம் மேம்படும். நல்ல வந்து புத்திசாலி எப்படி இறைவனை பண்றது எதுன்னு சொல்லி உங்களுக்கு சில விஷயங்கள் தெரியும். முதல்ல அந்த ஞானத்தை நீங்க பெற்றுக்கோங்க. கத்துக்கோங்க. அதன் பிறகு ஒவ்வொன்றாக உங்களுக்கு யார் கொடுப்பார்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  முருகன் கொடுப்பார் இதை அவசியம் நீங்கள் என்ன பண்ணனும் ? 

அடியவர் :- செய்ய வேண்டும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் சொல்ல மாட்டாங்க யாரும் உங்களுக்கெல்லாம். முருகன் நினைக்கணும். அகத்திய பெருமான்  நினைக்கணும். ஏன்னா ஒவ்வொன்னும் இப்படித்தானே எடுத்து கொடுப்பாங்க  சித்தர்கள் வந்து.  நீங்க எல்லாம் எதிர்பார்க்க மாட்டீங்க. நானும் எதிர்பார்த்துக்க மாட்டேன். இதனாலதான் இது மாதிரி எல்லாருக்கும் சேர்த்து, ஒரு மந்திரத்தை, எல்லோரையும்  கூப்பிட்டு, சொல்லி ,  நீங்க ஜெபிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும் வாழ்க்கை மாற்றங்கள். எல்லாமே தெரியும். இப்ப ஒருத்தருக்கு சொல்றதை விட இது மாதிரிதான் எல்லாருக்கும் சொல்றாரு இப்ப வந்து. 

அடியவர் :-  ஏன்னா ஒருத்தருக்கு சொன்னா அவருக்கு மட்டும் தான் சொன்னாரு. எனக்கு சொல்லல. அதனால எல்லாருக்கும் பொதுவா சொல்லி… 

சுவடி ஓதும் மைந்தன் :-   எல்லாருக்கும் பொதுவா சொல்லி… இதை நீங்க பயன்படுத்தி, மத்தவங்களுக்கு சொல்லும்பொழுது, அவருடைய ஆற்றல் இன்னும் அதிகமாகுது. சில விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும் நல்லதாகவே வந்து.கண்டிப்பா நீங்க எல்லோரும் செய்யணும் என்று சொல்கின்றார். 

குருநாதர்:- இதனால் இன்னும் எதை என்று புரிய, இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன். எனை பின் நம்பினோருக்கு யான் நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் செப்பிடுவேன் 

சுவடி ஓதும் மைந்தன் :- நான் இன்னும் ரகசியங்கள் சொல்லணும் இன்னும். என்னை நம்பியவருக்கு வந்து நான் வந்து?  

அடியவர் :- அனைத்து ரகசியங்களையும் நான் சொல்லிவிடுவேன் . ரகசியம்னா.  இப்ப இந்த மந்திரம் சொன்னா உங்களுக்கு ஞானம் கிடைக்கும். இத மாதிரி நிறைய ரகசியங்களை…. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது  ஒரு ரகசியம். ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல மாற்றங்கள் கிடைக்கும் இதை செஞ்சீங்கன்னா என்று சொல்கின்றார். 

குருநாதர்:- இன்னும் பல விஷயங்கள் சொல்லப் போகின்றேன். பல பல வழிகளில்  கூட எவ்வாறு ஞானிகள் இவ் தேசத்தில் வாழ்ந்தார்கள் என்பது எல்லாம் சொல்லப் போகின்றேன். அதை சரியாக கடைபிடித்து நீங்களும் வாழுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை பெற்றுக் கொள்ளுங்கள். 

குருநாதர்:-  நிச்சயம் முருகனின் உபதேச மந்திரமும், பின் சரியாக கொடுத்துவிட்டேன். அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி. 

அடியவர் :- அதாவது இப்ப இந்த உரைத்த மந்திரம் தான் இந்த முருகருக்கான வெற்றி மந்திரம் நீங்க வச்சுக்கலாம். இதை நீங்க சரியா பயன்படுத்தினீங்கன்னா, உங்களோட வாழ்க்கையில வெற்றி பாதைக்கு முருகப்பெருமானும், அகத்திய பெருமானும் அகத்தியரும் அழைத்துச் செல்வார்கள். 

குருநாதர்:-  இன்னும் ரகசியங்கள் அடுத்தடுத்த வாக்கில் அனைவருக்கும் சொல்கின்றேன். மீண்டும் சிறப்பான ஒரு எவை என்று அறிய,  நிச்சயம் தன்னில் கூட, இவ் பிரார்த்தனை தன்னில் உங்களுக்கு பல ரகசியங்கள் நிச்சயம் சொல்லித் தருகின்றேன். 

குருநாதர்:-  இப்பொழுது போதும். இதை செய்து வாருங்கள். 

குருநாதர்:-  மீண்டும் நிச்சயம் பின் உங்களுக்கு உரைப்பேன். ஆசிகள். ஆசிகள் லோபா முத்திரையோடு. 

குருநாதர்:-  முருகன் கண்டுகொண்டிகின்றான்… கண்டுகொண்டே இருக்கின்றான் யான் என்னென்ன சொல்கின்றேன் என்று. 

அடியவர் :- அதாவது இப்ப இந்த ஒன்னரை மணி நேரம்  படிச்ச வாக்கை வந்து முருகன் கேட்டுக்கிட்டே இருக்காரு. அகத்திய பெருமானும் , அன்னை லோபமுத்திரையும் இங்க வந்து அரூபமாக வந்து நம்ம எல்லோருக்கும் ஆசி தந்து விட்டார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால் தயவு செய்து இந்த மந்திரம் உங்களுக்கானது வந்து, கடைசில எல்லாம் சொல்லி, சில ஆசிகள் கொடுத்து, உங்களுக்கு பொதுவா ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார், அதை தயவு செய்து செய்யுங்க. செஞ்சுட்டே வந்தீங்கன்னா உடலும், ஆரோக்கியமும் மேம்படும். சில விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். மீண்டும் நான் இதே மாதிரி வந்து உங்களுக்கு சொல்றேன்  என்று சொல்லி இருக்காங்க ஐயா. 

அடியவர் :-  அதாவது இதே போல கூட்டு பிரார்த்தனைகள் நடக்கும் பொழுது, பல விஷயங்களை உரைப்பார்கள். பல விஷயங்கள் நான் சொல்றேன் என்று சொல்லி இருக்காங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா என்னங்க ஐயா? 

ஒரு அடியவர் :- அந்த மந்திரம் என்ன ? 

அடியவர் :-  மந்திரம் ஐயா ஐயா மந்திரம் அது ரெக்கார்ட் ஆயிருக்கு ஐயா. நாங்க எடுத்து அனுப்புறோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு தடவை போயிடுச்சுன்னா திருப்பியும் ஜீவ நாடி இதுல வராது எழுத்துக்கள். 

அடியவர் :- ஐயா அகத்திய பெருமான் சொன்னது, எனக்கு தெரிஞ்ச வரைக்கும்  “ஓம்  ஹ்ரீம் ஸ்ரீம்  சரவணபவ”.  பட் ரெக்கார்ட் ஆயிருக்கு. அதை நாங்க டெக்ஸ்ட் பண்ணி, ஷேர் பண்றோம். ‘’

குருநாதர்:-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் இவ் மந்திரத்திலிருந்தே அப்பனே தொடங்குகின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த மந்திரத்திலிருந்தே…இன்னும் சில விஷயங்கள் உங்களுக்கு சொல்லித் தரேனப்பா. முதல்ல இதானப்பா உங்களுக்கு கொடுத்த மந்திரம் .  

அடியவர் :-  உங்களுக்கு கொடுத்த ஒரு பிரார்த்தனை முறைன்னா இந்த மந்திரம். ஏன்னா பாரத தேசத்துல வந்து, எங்களுக்கு நிறைய பிரார்த்தனை முறைகள் சொல்லி இருக்காங்க,

குருநாதர்:-  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட முருகன் இடத்திலிருந்து இருந்து கொடுத்திருக்கின்றேன் அப்பனே. இதனால் சக்திகள் அதிகம் என்பேன் அப்பனே. 

அடியவர் :-  அதாவது அகத்திய பெருமான் கொடுத்ததே முருக பெருமான் மந்திரம். அதனால இதுக்கு சக்திகள் அதிகம். உங்களுக்கு வெற்றிகள் வந்து ஈசியா கிடைக்கும் அப்படின்னு சொல்றாரு. 

குருநாதர்:-  அப்பனே இன்னும் அப்பனே தர்மத்தை கடைபிடிங்கள் அப்பனே. இன்னும் தர்மத்தை கடைபிடிக்க இன்னும் அப்பனே ரகசியங்கள் சொல்வேன் அப்பனே. இதுபோல அப்பனே வாழ்ந்தால் அப்பனே நிச்சயம் இவ் உலகம் பின் அழிவிலிருந்து தப்பித்து விடலாம் என்பேன் அப்பனே. 

அடியவர் :- அதாவது நீங்க தர்மத்தோடு வாழ்ந்தாலே நாங்க நிறைய விஷயங்களை சொல்லித் தருவோம் அதை வச்சு இந்த உலகத்தை வந்து அழிவிலிருந்து காப்பாற்றலாம் அப்படின்னு உரைக்கிறார். 

குருநாதர்:-  அப்பனே இன்னும் அப்பனே பின் நிச்சயம் அதாவது இனிமேல் என் பக்தர்களுக்கு அப்பனே தர்மத்தைப் பற்றியே போதிக்க போகின்றேன் அப்பனே.  

குருநாதர்:-   அவை இருந்தால் அனைத்தும் யான் பின் எளிதாக கொடுத்து விடுவேன் அப்பனே அனைத்தும். 

அடியவர் :-  அதாவது நான் தர்மத்தைப் பற்றிதான் சொல்லுவேன். நீங்க தர்மப்படி நடந்தால் உங்களுக்கு எல்லாமே எளிதாக கிடைத்து விடும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்திய பெருமான் நான் எல்லாமே உங்களுக்கு கொடுத்து விடுவேன், நீங்கள் தர்மத்தை கடைபிடித்தால். 

குருநாதர்:-  இதனால் அப்பனே நிச்சயம் கவலை வேண்டாம். முருகனுடைய ஆசிகள் பரிபூரணம் அப்பனே. இதனால் பின் நிச்சயம் தன்னில் கூட மற்றொரு மற்றொரு அப்பனே  நிச்சயம் தன்னில் கூட அப்பனே சிறப்பான உரையை கூட யான் விவரிக்கின்றேன் அப்பனே. 

குருநாதர்:-  இப்பொழுது எம்முடைய ஆசிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர்:-  அழகாக அப்பனே நிச்சயம் இன்னும் நேரங்கள் உங்களுக்கும் கூட அங்கங்கு  நீங்கள் செல்ல வேண்டும் அல்லவா? அதனால் அப்பனே இப்படி முடித்துக்கொண்டேன்.  இல்லை என்றால் அப்பனே நிச்சயம் எவை இன்னும் இழுத்துச் செல்வேன். 

குருநாதர்:-  இப்பொழுது போதும் அப்பா. எம்முடைய ஆசிகள். மறுவாக்கிலும்  யான் உரைக்கின்றேன். ஆசிகள். ஆசிகள். 

குருநாதர்:-  எதை ஏன் என்று புரிய அனைவரும் மனதார நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஒரு நிமிடம் “சரவணபவ” என்று அமைதியாக மந்திரத்தை கூறுங்கள். நிச்சயம் பின் அதாவது உங்களுக்கு என்ன தேவையோ,  அவன் நிச்சயம் கொடுப்பான்.  ஆசிகள் ! ஆசிகள் !!  பேராசிகள் !!!!

சுவடி ஓதும் மைந்தன் :-  மனசுலவே நினைச்சு ஒரு நிமிஷம்… ரெண்டு நிமிஷம்.. 

அடியவர்  :-  ஒரு நிமிஷம் சரவணபவா என்று ஒரு நிமிஷம் நினைச்சு பிரார்த்திக்கோங்க. பெரும் ஆசிகள் அப்படின்னு சொல்லி இருக்காரு. இது ரொம்ப அபூர்வமான ஆசீர்வாதமா நாங்க கருதுறோம் ஐயா. ஏன்னா எல்லா இடத்துலயும் ஆசிகள் ஆசிகள் எல்லாம் சொல்லுவாரு. இது வந்து அபூர்வமான ஆசீர்வாதமா நாங்க கருதுறோம் நன்றி ஐயா. 

வாக்குகள் நிறைவடைந்தது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete