​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 3 January 2021

சித்தன் அருள் - 974 - ஸ்ரீ அகத்தியர் கோவில் பாலராமபுரம், திருவனந்தபுரம் - திருநட்சத்திர விழா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

மார்கழி மாத ஆயில்ய திரு நட்சத்திரம் 02/01/2021 அன்று, பாரதத்தில் "சித்தர்கள் தினமாக" கொண்டாடப்பட்டது என்பது நமக்கெல்லாம் மிக பெருமை அளிக்கும் விஷயம். ஆம் அன்றைய தினம் நம் குருநாதர் அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திரம் ஆக அமைந்தது. பாலராமபுரத்தில், அவருக்கு அபிஷேக பூஜைகளுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரும், எப்பொழுதும்போல் சோதனைகளை கொடுத்து, கடைசியில் பூஜை நடக்க வேண்டிய நேரத்துக்கு, அனைத்தையும், இயல்பாக ஆக்கித்தந்து, பூசையை ஏற்றுக் கொண்டார். அன்றைய தினத்தின் அருளுக்கு செல்லும் முன், எல்லோரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள ஒரு விஷயத்தை கூறுகிறேன்.

2021இல் டிசம்பர் 23ம் தேதி அன்று மறுபடியும் ஒரு மார்கழி-ஆயில்ய நட்சத்திரம் வருகிறது. மேலும் 2022இல் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே இந்த வருட கடைசியில், அவரவருக்கு இயன்ற வரை மிக நன்றாக அவரின் திரு நட்சத்திர பூஜையை கொண்டாட, வேண்டுமானால், இப்பொழுதே அவரிடம் வேண்டிக் கொண்டு, தவமிருக்க தொடங்கலாம்.

ஆன்மீகத்தில் புகும்முன் பலவிதமான கேள்விகளை சுமந்து நடந்து, இவைகளுக்கு எங்கு பதில் கிடைக்கும்? அது எப்படி கிடைக்கும் என தெரியாமலேயே நடந்த காலங்களில், ஒவ்வொரு இடத்தில் ஒன்று அல்லது சில கேள்விகளுக்கு பதில் கிடைக்க, அந்த வழியையே கைப்பற்றி நடந்தவன் அடியேன். வெகு தூரம் நடந்த பொழுது, பல கேள்விகள் காணாமல் போயின. சிலவற்றுக்கு அனுபவம் வழி பதில் கிடைத்தது. அதில், நிறைய அனுபவங்களை பதிலாக்கி, பாலராமபுரத்தில் உள்ள கோவிலில் நம் குருநாதர் அடியேனுக்கு பாடம் எடுத்துள்ளார். எத்தனையோ ஆச்சரியங்கள். ஆசீர்வாதங்கள். அடியேனின் செயல்களை, எண்ணங்களை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், அதில் எழும் சந்தேகங்களை உடனேயே அல்லது அடுத்த முறை அவரை சந்திக்கும் பொழுதோ தெளிவித்து விடுவார். அவருக்கு நிகர், சிறந்த ஆசிரியர், யாருமே இல்லை எனத்தான் கூறுவேன். ஒவ்வொரு  விஷயத்திலும் இருக்கும் மிக சிறந்த மேன்மையை, நம்மை பார்க்க வைப்பார். ஆனால் மிக கண்டிப்பான தகப்பன்.

இந்த வருடம் அன்றைய தின பூஜைக்கு, ஏற்பாடு செய்ய, பொருட்கள் வாங்க உதவி செய்ய, யாருமின்றி தனியாய் இருக்க, ஒரு நாள் வீட்டிலிருந்தே, வேண்டுதலை அவரிடம் சமர்பித்தேன்.

"அய்யா! கட்டுப்பாடான சூழ்நிலை காரணமாக, இம்முறை அபிஷேக பூஜைகளை எப்படி செய்வது என தெரியவில்லை. எப்போதும் உதவிக்கு வரும் நண்பர்களையும் காணவில்லை. உங்களை தரிசித்து மாதங்களாயிற்று. நீங்களாக ஒரு வழி தந்தால் அன்றி பூஜைக்கு ஏற்பாடு செய்ய முடியாது. அருள வேண்டும்!" என்றேன்.

இரண்டு நாட்கள் சென்றது. கோவில் பூஜாரியிடமிருந்து அழைப்பு வந்தது.

"அய்யா! குருநாதர் உங்களை அழைக்கிறார்! இந்த வருட பூஜைக்கு என்ன ஏற்பாடு செய்யப்போகிறீர்கள்?" என்றார்.

"அடியேனால் வந்து பங்கு பெற முடியுமா எனத்தெரியவில்லை. நீங்களே ஏற்பாடு செய்து நடத்தி விடுங்கள். அடியேனின் பங்கை தந்துவிடுகிறேன்" என்றேன்.

"அது முடியாது. நீங்கள் வர வேண்டும். அதற்கு முன் ஒரு நாள் இங்கு வந்து குருவை கண்டு பேசிவிடுங்கள்!" என்றார். குருநாதர் ஏதோ விளையாட மேடை தயாரிக்கிறார் என்று தோன்றியது. சரி! சனிக்கிழமை அன்று, முயற்சி செய்து, எப்படியாவது அவரை போய் பார்த்துவிட்டு வருவோம், என தீர்மானித்தேன்.

சனிக்கிழமை மாலை, கோவில் சென்றுவர, பூஜை அறையில் இறைவனிடம் உத்தரவு கேட்க சென்ற பொழுது, அவர் கழுத்தில் கிடந்த சந்தனத்தால் சூழப்பட்ட ருத்திராக்ஷ மாலை கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு போய், குருநாதர் கழுத்தில் போட்டு பூசை செய்து வாங்கி வரலாம் என எடுத்துக்கொண்டு, பஸ் பிடித்து கோவிலை அடைந்தேன்.

அடியேனும், மனைவியும் தவிர மூன்று பக்தர்கள் இருந்தனர். சன்னதி அமைதியாக இருந்தது.

பூஜாரிக்கு நம்பவே முடியவில்லை. அதற்குள்ளாகவா! என்ற கேள்வியுடன் வந்தார்.

"குரு தீர்மானித்துவிட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது இல்லையா?" என்றேன்.

கொண்டு போன வாசனாதி திரவியங்களை கொடுத்து, பின் ருத்திராட்ச மாலையை குருவின் கழுத்தில் போடச்சொன்னேன்.

"அடியேனை வரச்சொன்னீர்கள்! வந்துவிட்டேன். என்ன உத்தரவோ?" என்ற கேள்வியுடன் அவர் முன் த்யானத்தில் அமர்ந்தேன்.

"திருநட்சத்திர பூஜை சிறப்பாக நடக்கும். ஆசிகள். ஆனால் இன்று நீ காண்பதை இவனிடம் உரைத்துவிடு, அதற்கு பிரதி விதியும் உனக்கு தெரியும். அதையும் செய்யச் சொல்லி கூறிவிடு!" என்றார்!

"இதென்ன புது கதையாக இருக்கிறது? அடியேன் பூஜாரிக்கு சொல்லவா. அவர்தான் உங்களிடம் அமர்ந்து உத்தரவு வாங்குகிறாரே, நீங்களே அவருக்கு காட்டி கொடுத்து விடலாமே!" என்றேன்.

பதில் வரவில்லை.

என்னவோ ஒரு மௌனம் பரவி நின்றது.

இரவு கடைசி தீபாராதனை! எப்பொழுதும், தீபாராதனையின் பொழுது இறைவனுக்கு கூறப்படும் மந்திரமான "ராஜாதி ராஜாய" என்கிற மந்திரத்தை கூறி அதில் கலந்து கொள்வேன். அப்பொழுது அகத்தியப்பெருமான் லோபாமுத்திரை தாயாருக்குப்பின், இந்த கோவிலில் மட்டும், ஏழு மலையான் புன்னகைத்தபடி வந்து நின்று பூஜையை ஏற்றுக்கொள்வதை பார்த்திருக்கிறேன். உடனேயே பெருமாளின் தீபாராதனா நேர மந்திரமான "ஸ்ரியஸ்காந்தாய கல்யாண" என்கிற மந்திரத்தை கூறி நிறைவு செய்வேன்.

அன்றும் அப்படியே நடந்தது. ஆனால் பெருமாள் முகத்தில் புன்னகையை காணவில்லை. குருநாதர் முகத்தை சுட்டி காண்பித்தது போல் இருந்தது.

சட்டென குருநாதரின் முகத்தில் பார்க்க அவர் முகம் மிக சோர்வுற்று இருந்தது.

ஏதோ திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டது தெளிவாயிற்று. என்னவோ நடந்திருக்கிறது!

"சரி! இதிலிருந்து வெளியே வருகிற வழியைத்தான் கூற சொல்கிறார் போல!" என்றுணர்ந்தேன்.

பொதுவாக கோவில் மூர்த்தங்களுக்கு த்ரிஷ்டி தோஷம் போன்றவை வந்து செல்கிற பக்தர்களால் வரும்! அல்லது தற்காலிகமாக பூஜை செய்கின்றவர்களாலோ, பூஜாரியின் கவனக் குறைவினாலோ வரும்! அதற்கான ரகசிய பூஜைகள், அபிஷேகங்கள் போன்றவை செய்யப்படும். "பச்சை கற்பூரம்" கலந்த அபிஷேகம், அல்லது இரவு நடை சார்த்தும் பொழுது மூலஸ்தானத்தில் உள்ளே பச்சை கற்பூரத்தை பொடித்து தூவி விடுவார்கள். இதை பூஜாரி ரகசியமாக செய்ய வேண்டும்!

இதை தினமும் செய்து வர பூஜாரியிடம் தெரிவித்து, பின் எதற்கும் நாளை நீங்களே அவர் முன் அமர்ந்து பார்த்து பின் செய்யவும், என கூறி ருத்ராக்ஷ மாலையை, பிரசாதத்தை பெற்றுக்கொண்டு விடை பெற்றேன்.

மறுநாள் மாலை பூஜையில் அமர்ந்த பொழுது, த்யானத்தில் திருஷ்டி தோஷம் இருப்பதை, அவர் முக பாவனையில் கண்டுபிடித்தார். 

அன்று முதல், பச்சை கற்பூரத்தை உபயோகிக்க தொடங்கினார்.

மறுபடியும், எல்லாம் நல்லபடியாக நடக்கத் தொடங்கியது.

சித்தன் அருள்.................தொடரும்! 

12 comments:

  1. அகத்தீசாய நம நன்றி அய்யா

    ReplyDelete
  2. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  3. ayya manam ayyanai ninaithu migavum kavalaipadukirathu.
    om agatheesaya namaha

    ReplyDelete
  4. குருவே சரணம் குரு நாதா சரணம் எமை ஆட்கொண்ட அகத்தீசர் பரம்பொருளே சரணம் லோபமுத்திரை தாயாரே சரணம் உங்கள் கருணையால் நாங்கள் வாழ்கிறோம் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete
  5. Om lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  6. ஓம் அகத்திய குருவே சரணம்
    அனைத்தும் குருவின் செயலே தீர்மானிப்பதும் அவரே , ஓம் குருவே துணை


    ReplyDelete
  7. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  8. இன்றைய ஸ்ரீ அகத்தீய பெருமானின் புகைப்படம் அருமை அய்யா
    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

    ReplyDelete
  9. ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தியர் திருவடிகள்
    சரணம் சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  10. அய்யா
    வணக்கம். 02.01.2021 அன்று கோவை வெள்ளலூர் சிவன் கோவிலில் அகத்தியர் அய்யாவை தரிசனம் செய்யும் பாக்கியத்தை அருளினார். ஜாதிமல்லி பூ, வெற்றிலை பாக்கு மற்றும் வாழைபழம் வாங்கி சென்றிருந்தேன். அய்யர் தீபாராதனை செய்து அகத்தியர் அய்யாவியன் சுரசில் இருந்து கொஞ்சம் சந்தனம் எடுத்து கொடுத்தார். நான் கேட்கவில்லை.கேட்காமல் கிடைத்தது.அன்று உணர்ந்தேன் அகத்தியர் அய்யா கேட்காமல் கொடுப்பவர் என்று. ஓம் அகத்தீசாய நம.

    ReplyDelete
  11. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் திருவடிகள் போற்றி

    மிக்க நன்றிகள் ஐயா அனுபவம் தந்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  12. Om Sri lopamudra samata agastiyar thiruvadi pottri.

    ReplyDelete