​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 14 January 2021

சித்தன் அருள் - 977 - குருநாதரின் அருள் வாக்கு!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பொங்கல் தினமான இன்று நம் குருநாதர் அருளிய வாக்கை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

"பாடுபட்டால் பலன் உண்டு என்பதும், பாத்திரமறிந்து பிட்சையிடு என யாம் உரைத்தவற்றை இறுகப்பற்றி கடைப்பிடித்து வருபவர்கள் எம்மால் அனுக்கிரகிக்கப்பட்டு(( ஏற்றுக்கொண்டநிலை)) பிந்நாளில் பிறருக்கு அதனை தகுந்த காலத்தின் பொருட்டு அறிவுறுத்தல் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள்.  எப்போதும் எந்நிலையிலும் விழிப்புடன் இருக்கும் எம் சேய்களினும் மேலான கண்மணிகள் சூட்சுமத்தை உணர்ந்து கொண்டு இது நம்மால் (அகத்தியனால்) உணர்த்தப்பட்டது என சுதாரித்துக் கொண்டு அதனை பிறருக்கு தகுந்த நேர காலத்தில் எடுத்துரைக்கவும் செய்கிறார்கள்.

யாம் நேரடியாக எல்லா சேய்களிடத்திலும் அன்போடு உரையாட வேண்டுமென்று ஆவலாக தான் இருக்கிறோம்.

ஆனால் ஒரு குழுவாக இருந்து அதனை ஒழுங்கு படுத்த்தி வழிகாட்டிக் கொண்டு இருக்கும் தன்மைப் பண்புடையவனிடத்திலே சேய்கள் காட்டும் சிரத்தையானது இன்னும் ச்ரத்திக்கவேண்டும். அப்போது யாமே தகுந்தவனை தேடி வருவோம்.

ஒழுக்கம் என்றால் சத்தியம்  அது சத்தியம் என்றால் அது *சத்தியத்தின் திருவுருவான அகத்தியனே என ஆதிசக்தியின் திருவாக்கினால் எமக்கு கிடைத்த வரமப்பா

அங்ஙனமே எம் வழி வரும் சேய்களினும் மேலான கண்மணிகள்  சமூகத்தில் எங்கு எச்செயல் செய்யினும் எமது முகவரியை சுட்டிக் காட்டும் என்பது தெரிந்து செய்தால்  மிகவும் நன்றப்பா. 

அதிகமாக பேச எண்ணம் கொண்டு வந்தோம். மகர சங்கராந்தி நிமித்தம் சில பணிகள் இருக்கிறதப்பா எங்கு போகப் போகிறேன். வந்து மீண்டும் தொடர்வோம்.

ஆனால் நெற்றிப் பொட்டில் அடித்தார் போல சொல்லப்பா எம் வழி வருபவர்களுக்கு நாம ஜெபம் மிக மிக முக்கியமென்று."

சித்தன் அருள் ............ தொடரும்!

18 comments:

 1. Om Sri lopamudara samata Agastiyar thiruvadi saranam.Ayya Nama Japam om am agathisya namaha.enpthaya endru thelivu patutha vendum ayya

  ReplyDelete
 2. ஓம் அகத்தீசாய நமஹ
  ஓம் அகத்தீசாய நமஹ
  ஓம் அகத்தீசாய நமஹ
  🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 3. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 4. ஓம் அகத்தீசாய நம
  ஓம் அகத்தீசாய நம
  ஓம் அகத்தீசாய நம
  குருவே சரணம்
  குருவே சரணம்
  குருவே சரணம்

  ReplyDelete
 5. ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரயா நமோ நமஹ!

  ReplyDelete
 6. Om lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

  ReplyDelete
 7. ௐ ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகதீசாய நமக
  ௐ அம் அகத்தீசாய நமக

  ReplyDelete
 8. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் திருவடிகள் போற்றி போற்றி போற்றி துணை

  ReplyDelete
 9. Om lobamuthra sametha agasthiyaha namaha.

  ReplyDelete
 10. Aum Agastheeshaya Namaha.....Aum Agastheeshaya Namaha

  ReplyDelete
 11. Pongal Wishes to Aiyya & Agasthiya Gurunathar

  ReplyDelete
 12. For nama japam (இறை வழிபாடு) to be effective, Guru Annai of Gnanalayam Pondicherry had advised as follows -

  Before any nama japam or devotional activity, we need to cleanse our mind/brain cells. For example, the bucket has to be empty to take in maximum water, if the bucket is filled with sand and garbage, then its capacity to store water becomes less.

  During nama japam or any devotional practice, we attract/ request the grace (ஆற்றல் / அருள் ) which comes to us in the form of light (electro magnetic energy like sunlight) from the divine being/deity/God/Agathiyar. This light force is stored in our brain in specific cells which are then utilised by our Atma's Life force(உயிர் சக்தி) to give us what we desire/request.


  The prescribed order for nama japam (இறை வழிபாடு) is -
  1. Chant ParaShakti or any Devi name for 21 times before an oil/ghee lamp in your pooja room or any peaceful room.
  2. Meditate in a dark room with a oil lamp for 24 minutes, feel the light going into your eyes, head and body and cleansing all thoughts accumulated during the day. Imagine the light from the oil lamp as the flame of of the life-force (உயிர் சக்தி). Many thoughts will come up during this time, destroy them with the light of the life force.

  3. After meditation for 24 minutes, do nama japam or any devotional practice (இறை வழிபாடு) as per your normal practice.

  4. After nama japam or any devotional practice (இறை வழிபாடு) only, we should place our request (பிரார்த்தனை/வேண்டுதல் ) for help or favor from God/Agathiyar.

  The above order is the correct - 1. Meditation(Cleansing) - 2. Devotion (nama japam/poojai) - 3. Prarthanai (பிரார்த்தனை/வேண்டுதல் ).

  Many times we start with our request (பிரார்த்தனை/வேண்டுதல்) to God/Agathiyar. This will not get the desired effect, as the science behind our creation has to be respected.

  ஓம் அம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
  Replies
  1. Thanks a lot for your great help. Om Agatheesaya Namaha

   Delete
 13. குருவே சரணம் குருபாதம் சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏

  ReplyDelete
 14. ஐயா நான் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது....உணவு உண்பதட்கு முன்பு...தூங்க செல்லும் முன் என எப்போதும் ஆழ்மனத்தில்(subconcius mind) கூறி கொண்டு தான் உள்ளேன்...அதற்கான பலன் கண்கூடாக தெரிகிறது.....

  ReplyDelete
 15. அகத்தியர் என் மேல் அருளை பொழிய என்ன செய்ய வேண்டும்...எளிய வழி முறைகளையும் அதை முன் எடுத்து செல்ல தேவையான தெய்வ சக்தியை பெருக்கி கொள்ளவும் வழிகாட்டி அருள் புரியவும்...நன்றி...

  ReplyDelete