​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 9 July 2020

சித்தன் அருள் - 877 - தாவர விதி!


தாவர விதி என்கிற தலைப்பில், கொய்யா இலையின் "ஒற்றை மூலி" தத்துவம் விளக்கப்படுகிற்து.

வயிற்றுப்போக்கு நிற்க:-

4 கொய்யா இலைகளை  பறித்து கழுவி,  அம்மியில் வைத்து நீர்விட்டு நன்கு அரைத்து அவ்விழுதை ஒரு தம்ளர் மோரில் கலந்து குடிக்கவும். இவ்வாறு தினம் 3 வேளை குடித்துவர வயிற்றுப்போக்கு விரைவில் குணமாகும்.

மேற்கூறிய நோய்கள் அனைத்தும் பித்தநோயில் அடங்கும்.

இனி கபம் (சளி) நோய்களை  எவ்வாறு போக்கலாம் என்று பார்ப்போம்.

கொய்யா இலைகள் - 5
இஞ்சி        - 5 கிராம்
ஏலக்காய்  - 2
மிளகு        - 10
நீர்             -    2 தம்ளர்

இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு 2 தம்ளர் நீர் ஒரு தம்ளராக வற்றும் படிக் காய்ச்சி காலையில் உணவிற்கு முன்பு அல்லது உணவிற்கு பின்பு குடிக்கவும்.

இதேபோல் மாலையிலும் குடிக்க வேண்டும். இவ்வாறு தினம் 2 வேளை இக்கசாயத்தைக் குடித்து  வர சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா ஆகியன தீரும்.

செய்முறை:-

பச்சையான கொய்யா இலைகளை 5 பறித்து வந்து அதைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் இட்டு, அதனுடன் உங்கள் கட்டைவிரலுக்கு பாதியளவு   தோல் சீவிய இஞ்சியை தட்டிப் போட்டு, ஏலக்காய் 2 எண்ணிக்கை எடுத்து அதையும் நன்கு இடித்துப் போட்டு,10 எண்ணிக்கை முழு மிளகையும் இட்டு, 400 மி.லி நீர் விட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு  குடிக்கவும். வயிற்றுப்புண் உடையவர்கள் காலை உணவிற்குப் பின்பு குடிக்கவும். 

இவ்வாறு தினம் காலை, மாலை என 2 வேளை குடித்துவர கபம் (சளி) நோய்களும், மூட்டுவலி போன்ற வாத நோய்களும் படிப்படியாக  குணமாகும்.

ஆவி பிடிக்க:-

கொய்யா இலைகளை நீரிலிட்டு  அவித்து வெளிவரும் ஆவியை போர்வையால் போர்த்தி வேது பிடித்து வர தடுமன், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தலைவலி ஆகியன விரைவில் நீங்கும்.

பல்நோய்கள் தீர:-

காலையில் மூலிகைப் பற்பொடியால் பல்தேய்த்த பின்பு வெறும் வயிற்றில் 3 இளம் கொய்யா இலைகளை வாயிலிட்டு நன்கு மென்று சுவைத்து அதன் சாற்றைக் விழுங்கி வர

1. பல்வலி உடனே நீங்கும்.
2. பற்களில் சொத்தை வராமல் தடுக்கும்.
3. வாய்துர்நாற்றம் நீங்கும்.
4. ஈறு வீக்கம் வற்றும்.
5. பல்லீறுகள் பலப்படும்.
6. பல்லீற்றில் இரத்தம் வடிதல் நிற்கும்.
7.வாய்ப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் ஆறும்.

முகம் பொலிவு பெற:-

கொய்யா இலைகள் 5 பறித்து நீர் விட்டு நன்கு அரைத்து,  இதை 2 தேக்கரண்டி தயிரில் குழைத்து பசைபோல் ஆக்கி பெண்கள் முகத்திற்கு பூசி ஒருமணி நேரம் கழித்து முகம் கழுவி வர

1. முகப்பருக்கள் நீங்கும்.
2. முகத்தில் கறும்புள்ளிகள் மறையும்
3. முகச் சுருக்கம் நீங்கும்.
4. முகம் பொலிவு பெறும்.

வெட்டுக்காயம் ஆற:-

கொய்யா இலைகளை அரைத்து வெட்டுக்காயத்தின் மீது கட்டிவர காயங்கள் விரைவில் ஆறும்.

தலைமுடி உதிர்தல் நிற்க:-

முதலில்  கூறிய கொய்யா இலைக் கசாயத்தை தயார் செய்து அதை ஆறவைத்து பெண்கள் இதை தலையில் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து குளித்துவரவும். இவ்வாறு வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவர

1. தலைமுடி உதிர்தல் நிற்கும்.
2. பொடுகு நீங்கும்
3. தலை அரிப்பு நீங்கும்.
4. பேன்கள் நீங்கும்
5. தலைமுடி வெடித்தல் சரியாகும்
6. தலைமுடி பலம் பெறும்.
7. முடி அடர்த்தியாக வளரும்.

கொய்யா இலையில் உள்ள சத்துக்கள்:

1. நார்ச்சத்து
2. வைட்டமின் A, B 6, C
3. கால்சியம்
4. இரும்புச்சத்து
5. பாஸ்பரஸ்
6. சோடியம்
7. பொட்டாசியம்
8. துத்தநாகம்
9. மாங்கனீசு
10. தாமிரம்
11. ஃபோலிக் அமிலம்.
12. டானின்கள்
13. கரோட்டினாய்டுகள்
14. ஃபிளேவனாய்டுகள்
15. ஆன்டி-ஆக்ஸிடன்டுகள்
16. புற்று நோயை எதிர்க்கும்மூலப்பொருட்களான லைக்கோபீனே (Lycopene), க்வெர்செடின் (Quercetin) பாலிபினால்கள் ஆகியவை உள்ளன. ஆகவே இவை நுரையீரல் புற்று, வாய்ப்புற்று, வயிற்றுப்புற்று, பெருங்குடல் புற்று, ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பிப் புற்று, பெண்களின் மார்பகப்புற்று, ஆகியவற்றைத் தடுக்கிறது.
17. வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புடைய கொலைன் என்ற சத்தும் இந்த கொய்யா இலையில் உள்ளது. ஆகவே இது ஆயுளை நீடிக்கும்.

கீரீன் டீயை விட இது சிறந்தது:

பத்தியம் இல்லாத பக்கவிளைவுகள் அற்ற எளிதில் கிடைக்கும் இந்த கொய்யா இலையின் பயன் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் கிரீன் டீ யை இன்று  கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். இனிவரும் காலத்தில் இந்த கொய்யா இலை டீ பிரபலமாகும்.  அதற்கு குரு அகத்திய முனிவரின் இந்த அருள் மிக முக்கிய காரணமாகத் திகழும். ஆகவே இந்த கொய்யா இலைகளை நாம் பறித்து உலர்த்தி இடித்து  கிரீன் டீ வடிவில் உபயோகிக்கலாம். சாதாரண டீ தூள் கூட கலந்தும் உபயோகிக்கலாம். பொதுவாக கொய்யா இலையை பச்சிலையாக பறித்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் 100% பலன் கிடைக்குமென்று வைத்துக் கொண்டால் இதை காயவைத்து டீத் தூள் வடிவில் பயன்படுத்தும் போது 90% அளவு பலன் கிடைக்கிறது. கிரீன் டீயில் உள்ள ஒரு வேதிப்பொருள் இருப்பதால், அதை அளவுக்கு அதிகமாக குடித்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். ஆனால் இந்த கொய்யா இலைகளில் அது இல்லை.

கிரீன் டீயை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. உணவு சாப்பிட்ட  ஒரு மணி நேரம் கழித்தே குடிக்க வேண்டும். ஆனால் இந்த கொய்யா இலை டீயை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.!

புற்றுநோயை எதிர்ப்பதில் கிரீன் டீயைவிட இந்த கொய்யா இலை மிகவும் சிறந்தது. ஆரம்ப நிலை புற்று நோய்களுக்கு இதை தனி மருந்தாக கொடுக்கலாம். நாள்பட்ட புற்று நோய்க்கு மற்ற மருந்துகளுக்கு துணை மருந்தாக கொடுக்கலாம்.

இந்த கொய்யா இலைகளைப் பறித்து 5 நாட்கள் நிழலில் உலர்த்தி 6 வது நாள் 1 மணிநேரம்  மதியம் வெயிலில் காயவைத்து  உடனே உரலில் இட்டு கசாய சூரணம் போல இடிக்க வேண்டும். (இடித்து பொடி செய்ய கூடாது.) கிரீன் டீ வடிவில் இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் வீட்டுத் தோட்டத்திலும் இனி நாட்டுக் கொய்யா மரம் வளர்க்க வேண்டும். இதன் மூலம் நமக்குத் தேவையான மருந்தை நாமே தயார் செய்ய வேண்டும். நம் நாட்டில் தற்சார்புக் கொள்கை வளர வேண்டும்.

சித்தன் அருள்................ தொடரும்!

10 comments:

  1. Om sri agasthiar thiruvadigale potri.
    Thanks sir for giving valuable information.
    Please guide us how to do guru poornima pooja sir

    ReplyDelete
  2. ஐயா அன்பு வணக்கம். கொய்யா இலையின் நன்மைகள் இத்துணை என்று தாங்கள் தெரிவித்த பிறகு தான் தெரிகிறது ஐயா. கொய்யா மரம் வளர்க்க தோன்றுகிறது ஐயா. ஐயா தலைமுடி வளர கஷாயம் கொய்யா இலை மட்டும் கொதிக்க வைத்து பயன்ன்றி படுத்தலாமா ஐயா. மிக்க நன்றி ஐயா. குருவே துணை!

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. கடவுளுன் கருணை ஈடு இணை இல்லாதவை.என்றும் அவர்களது கருணை அனைத்து ஜீவன்களுக்கும் கிடைக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. ஒம் ஈஸ்வராய நமக
    கடவுளுன் கருணை ஈடு இணை இல்லாதவை.என்றும் அவர்களது கருணை அனைத்து ஜீவன்களுக்கும் கிடைக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. ஓம் அகத்தியர் அய்யன் லோபமுத்ரா தாய் போற்றி.ஐயா எங்கள் வீட்டில் செடிகள் வளர்க்க இடம் போதுமானதாக இல்லை ஆனால் பல பைகளில் சிறிய வகை செடிகள் வளர்த்து வருகிறோம்.1வருடமாக பல கொய்யா செடிகள் தானாக வளருகிறது.ஏன் என்ற காரணம் தெரியாமல் இறையின் விருப்பம் என்று அனைத்து செடிகளையும் பெரிய சாக்கு பைகளில் வைத்துள்ளோம்.ஆனால் என் மனதில் இதற்கு காரணம் என்ன என்ற கேள்வி மட்டும் இருந்து கொண்டே இருந்தது.இன்று விடை கிடைத்தது. மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  7. நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  8. நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  9. நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete