​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 25 June 2020

சித்தன் அருள் - 873 - தாவர விதி!


சிறு உயிரினங்கள் இல்லாமல் போனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் மனிதர்கள் மட்டும் இப்பூமியில் இல்லாமல் போய்விடுவர் என இன்றைய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறுகிறார்கள். ஆயின், இந்து மதக்கூற்றின்படி, தாவரங்களைப் படைத்த இறைவன், அவைகளின் வம்சம் தழைத்தோங்க, பிற உயிரினங்களை படைத்தார், என்பதே உண்மை.

'ஓ' என்கிற இரைச்சலுடன், மனிதன் பூமிக்கும், வானத்துக்கும் குதித்து தூரத்தை அளந்தாலும், பெருமை பட்டாலும், அவனால் ஒரு சிறு துரும்பை கூட படைக்க முடியாது. ஒரு புல்லை கூட தன் முயற்சியினால் உருவாக்க முடியாது என்பதே உண்மை. அதற்கும், பஞ்ச பூதங்களின் உதவி வேண்டும்.

மனிதனைத் தவிர, அத்தனை ஜீவன்களும், இயல்பாகவே அவற்றுள், தாவரத்தைப் பற்றிய அறிவை பெற்றுள்ளது. எப்படி? ஒரு நாய்க்கு அஜீரணம் ஏற்பட்டால், ஒரு குறிப்பிட்ட புல்லை தின்று, தன் நோவை போக்கிக்கொள்ளும். அது ஒரு பொழுதும் தாவரங்களை வைத்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதில்லை. அறிவு என்கிற கூற்றின் படி இந்த விஷயத்தில், இங்கு யார் உயர்ந்தவர்?

ஒரு தாவரத்தின் பெயர் "கருடக்கொடி". இது மிக ரகசியமான இடங்களில் பாறைகளுக்கு இடையே, மிக உயர்ந்த மலை பிரதேசங்களில் வளரும். இது கொடி வகையை சேர்ந்தது. சிறந்த அருமருந்து. உடலுக்கு உரத்தை ஏற்படுத்தும். ஆனால் மனிதர் வாசம் ஏற்பட்டால் தன்னை குறுக்கி பாறைகளுக்கு இடையில் மறைந்து கொள்ளும். அத்தனை எளிதில் கிடைக்காது. மருத்துவர்களும், அதர்வண வேதத்தினரும் இதை தேடி செல்வார்கள். மருத்துவர்கள், பூசை, பிரார்த்தனை, வேண்டுதல் போன்றவை சமர்ப்பித்து, இறைவன் அருளால் இந்த கொடி கிடைக்கப் பெறுவார். அதர்வண வேதம் தொடர்ந்து செல்பவர்கள், கண்களுக்கு இது சிக்காது என்று தெரிந்தவர்கள், வேறு குறுக்கு வழியை கையாள்வர். எப்படி?

பாறையும், மரங்கள் அடர்ந்த உயரமான மலை பகுதிக்கு சென்று, அங்கு எந்த மரத்தில் கருடன், கூடு காட்டியுள்ளது என கண்டு பிடித்து, அது உணவு தேட வெளியே சென்ற நிமிடத்தில், அதன் கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் கால்களை, சிறு கம்பியால் கட்டி விடுவார்கள். திரும்பி வந்த கருடன், தன் குஞ்சுகளுக்கு மனிதனால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என உணர்ந்து [மனித உடல் வாசனைதான் காரணம்], அவைகளை காப்பாற்ற வேண்டி, "கருடக்கொடி" இருக்கும் இடம் சென்று. ஒரு நீள கொடியை பறித்து வந்து, அதன் நுனியால், குஞ்சுகளின் காலில் கட்டப்பட்டுள்ள கம்பியை தட்ட, அவை உடைந்துவிடும். உடனேயே, தன் குஞ்சுகளை அங்கிருந்து எடுத்து சென்று விடும். குஞ்சுகளை மனிதன் தொட்டதே இதற்கு காரணம். கருடக்கொடியை அந்த கூட்டிலேயே விட்டு செல்லும் பொழுது, மனிதர் அதை எடுத்துக்கொள்வார். இங்கு யார் உயர்ந்தவர்? மனிதன்?, கருடன்? கருடக்கொடியா? எவ்வளவு பலமான இரும்பு அல்லது உருக்கு போன்றவற்றை கூட இந்த கருடக்கொடியினால் ஒரு தட்டு தட்டினால், அது இரண்டாக பிளர்ந்துவிடும். அந்த அளவுக்கு சக்தி, அந்த மூலிகைக்கு உண்டு. இது ஆச்சரியமாக இல்லை?

தேங்காயை பற்றி சொல்வதானால், அதன் பெயர், "தேவதரு" என்பதற்கேற்ப, சக்தி உடையது. தினமும் உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்டமாலை என்கிற நோய் வராது. அதனுள் இருக்கும் நீர் ஆனது, மரத்தின் வேரால் உறிஞ்சப்பட்டு அந்த காய்க்குள் சென்று விட்டால், பின்னர் அது உடையும் வரை, வெளியுலகை காண்பதில்லை. மனிதக்கண் என்கிற திருஷ்டி தோஷம் இல்லாதது. கங்கையை விட புனிதமானது. இதனால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், அப்படியே இறைவனை மயக்கிவிடலாம். அத்தனை புனிதமானது. உடலை கர்மா வருத்தும் பொழுது, ஒரு தேங்காயை, தலையை சுற்றி, பின் இரவு உறங்கும் பொழுது, வலது பக்கம் தலைமாட்டில் வைத்தால் (தேங்காயின் கண்கள் மேல்நோக்கி இருக்கும்படி), அந்த உடலுக்குள் இருக்கும் கெட்ட கர்மாக்களை, திருஷ்டி தோஷங்களை, எடுத்து, உடலுக்கு நலத்தை கொடுக்கும். நம் மக்களுக்கு, பொருக்கி தின்பதும், விதவிதமான நிறங்களில் சட்டினிக்கு எடுத்துக் கொள்ளவும்தான், தெரியும்.

தாவரங்களிலும், உயிரினங்களிலும், கலப்படம் செய்தால், பின் வரும் தலை முறை, வரண்டுபோய், சந்ததி இன்றி, இருந்தாலும் சிறப்பின்றி, உடல் குறையுடன், நோயுடன் போராடுகிற மனிதனாக வாழ்வதற்கு, இயற்கையின், தாவரங்களின், பிற உயிர்களின் சாபமே காரணம். இதை யார் கவனிக்கிறார்கள். தாவரமும், பிற உயிர்களும் எதிர்ப்பதில்லை என்பதால், அவைகளை அடக்கி ஆள்கிற உரிமையை மனிதன் தானே எடுத்துக் கொண்டுவிட்டான். அந்த அகங்காரமே,அவனுக்கு எதிராக விதி என்கிற ரூபத்தில் இன்றுவரை வேலை செய்து கொண்டிருக்கிறது.

சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள், உடலை, நோயை மட்டும் பார்த்து மருந்து கொடுப்பதில்லை. நோய் என வந்தவரின் கர்மாவையும் உற்று நோக்குவார்கள். அவர்களுக்குள் இருக்கும் தாவர சாபத்தின் அளவு என்ன? இம்மருந்து உள் வேலை பார்த்து, குணப்படுத்துமா என்றெல்லாம் பார்ப்பார்கள்.

மனிதனுக்குத்தான், தாவர சாபங்களினால் சந்ததியே இல்லாமல் போய்விடுகிறதே தவிர, எந்த மரமும்/தாவரமும் அடுத்த தலைமுறையை உருவாக்கிவிட்டுத்தான் இறைவனடியை சேரும். ஏன் என்றால், தாவரங்களுக்கு இருக்கும் கர்மாவை, அவைகளை அழித்து மனிதன் வாங்கிக் கொண்டு விடுகிறான்.

சித்தன் அருள்.................... தொடரும்!

Sunday, 21 June 2020

சித்தன் அருள் - 872 - தகவல் >> தர்மம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த நாட்களில், மனிதன், பயந்து, பயந்து வாழ்கிறான். ஒவ்வொருவரும், தங்கள் பெயர் அந்த தொகுப்பில் (இறைவன் தீர்மானித்ததில்) இருக்குமோ என்கிற எண்ணத்துடன் வாழ்கிறார்கள். மனிதரின் பதட்டம், எல்லை தாண்டிவிட்டது. தர்மத்தை நீ செய்யின், அந்த தர்மமே உன்னை சூழ்ந்து நின்று காக்கும் என்பதை எல்லாம் ஒரு நேர சினிமா பாடலை கேட்கின்ற பாவத்துடன் கேட்டு சென்ற காலம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கர்ம பூமியில், தர்மம், அதர்மம் விளைவிக்கப் படுவதை பொறுத்து, மனிதரின் ஆரோக்கியம், மனநிம்மதி, வல்லமை அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது.

தர்மம் உயர்ந்து நின்றால், நன்மையும்; அதர்மம் உயர்ந்து நின்றால், தீமையும் உயிர்களை வந்து சேரும் என அன்றே சித்தர்கள் உரைத்ததின் அர்த்தம், இன்று பலருக்கும் புரிய ஆரம்பித்திருக்கும்.  தர்மம் செய், தர்மம் செய் என திருப்பித் திருப்பி எல்லா நாடியிலும் வந்து அகத்தியப்பெருமான் உரைத்தது, ஒரு முறையாவது அது ஒருவன் மனதில் பதிந்து, அதுவே அவனை பின்னர் வழி நடத்தி சென்று, இவ்வுலக ஆபத்துகளிலிருந்து மனிதன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்கிற எண்ணத்தில்தான். உறங்கச் செல்லும் முன், ஒரு நிமிடம் அன்று செய்த நல்ல விஷயங்களை, தான, தர்மங்களை சிந்தையிலிருத்தி, அவைகளை செய்வதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் என சித்தர்கள் உரைத்ததெல்லாம், அது ஓவ்வொரு தனிமனிதனுக்கும், ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும், என்பதினால்தான். அதன் வழி, ஒரு சமூகம் தன்னை உயர்த்திக்கொள்ளும். இங்கு யாரும், அனாதைகள் இல்லை என்கிற நிலையை உருவாக்கும். தைரியத்தை கொடுக்கும்.

இன்றைய நிலையை பற்றி, அதன் காரண-காரியங்களை அலசி ஆராய்ந்து, எல்லா சித்தர்களும் நாடியில் வந்து கூறுகிற ஒரே பதில் - "அதர்மம் கையோங்கி விட்டது. இத்தனை உரைத்தும், செவிமடுக்கா மனிதனே காரணம். தொடர்ந்து, தன் வாழ்க்கையை மட்டுமே சிந்தித்து, பிற உயிர்களை பற்றி யோசிக்காமல், அனைத்தையும் அழித்து வாழ்ந்ததே, காரணமாயிற்று. பொறுமை இழந்த இறைவனின் கோபமே, நோயாய் வாட்டுகிறது."

சித்தர்கள், எத்தனை மன்றாடினும், இறைவன் மனம் கனிவதாக இல்லை. அவர்களை கைகட்டி ஓரமாக நிற்க வைத்துள்ளது இறை. எனினும், தங்களால் இயன்ற தகவல்களை எப்படியெல்லாம் முடியுமோ, அந்த வழிகளில் மனிதரை சென்று சேர வைக்கிறார்கள்.

தகவல் - 1:-

நித்ய தர்மம் நடக்க வேண்டும். அனைவரும் அவரவர் இருப்பிடத்தில் இருந்து கொண்டு, முடிந்தவரை தான, தர்மங்களை செய்ய வேண்டும்.

தர்மம் செய்பவராது இயல்பு எப்படி இருக்க வேண்டுமென திருமூலர் சித்தர் தன் திருமந்திரத்தில் உரைத்துள்ளார்.

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே!

உணவு உண்ணுவதற்கு முன் இறைவனுக்கு ஓர் பச்சிலை நிவேதனம் செய்யுங்கள். இங்கு பச்சிலை என்பது துளசி, வில்வம் போன்றவற்றால் செய்யும் பூசைகள். அது எல்லோராலும் முடியும். அதைப்போல் பசுவுக்கு ஓர் கையளவுக்கு புல் கொடுத்தால், அது எல்லோருக்கும் கொடுத்தது போல் ஆகும். அதுபோலவே, நாம் உண்பதற்கு முன், ஒரு பிடி அளவு உணவு தானமாக கொடுத்தால், அது எல்லோருக்கும் கொடுத்தது போல் ஆகும். இவை எல்லாவற்றையும் விட, ஓர் இனிய சொல்லை மற்றவர்களிடம் சொன்னால், அது எல்லோருக்கும் கூறியது போல் ஆகும். எல்லோராலும் பின்பற்ற வேண்டிய எளிய தர்மம் இங்கு கூறப்பட்டுள்ளது.


தகவல் - 2 :-

இறையின் சினத்தை அம்மையால் மட்டுமே தணிக்க முடியும். அதுவும், மதுரைவாழ், மீனாக்ஷி அம்மை மனம் வைத்தால்தான் நடக்கும். ஆகவே, திரு நீலகண்ட தீக்ஷிதர் அருளிய "ஆனந்த சாகரஸ்தவம்" என்கிற ஸ்லோகத்தை, என்ன வேண்டுமோ அதை சங்கல்பமாக மீனாக்ஷி அம்மையிடம் சமர்பித்துவிட்டு (பொது நலமாக இருக்க வேண்டும்), தினம் ஒரு முறை, அவரவர் வீட்டிலேயே பூசை அறையில் அமர்ந்து ஜெபிக்க சொல்கிறார்.

வடமொழியில் உள்ளது. அதை கீழே தருகிறேன். சற்றே பெரியதுதான், சிரமம் பாராமல், இதற்கென நேரம் ஒதுக்கி இதை பார்த்து படித்தே ஓதிவிடுங்கள். தவறிருந்தால், தாய் மன்னித்து விடுவாள். தண்டிக்க மாட்டாள். நம் மன எண்ணம் பொதுநலமாக இருந்தால் போதும்.

இந்த சுலோகம் தமிழில், பிற மொழிகளில் கிடைக்கிறது. கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான மொழியில் தொகுப்பை எடுத்துக்கொள்ளவும்.

LINK FOR DOWNLOAD 

அனந்தசாகரஸ்தவம் தமிழில் விளக்க உரையுடன்

அகத்தியப் பெருமானின் அருளால் விரைவில் இந்த சுலோகம் கேட்பதற்காக, MP3 வடிவில் இங்கு வெளியிடப்படும்.

சித்தன் அருள்................ தொடரும்!



ஆனந்த³ஸாக³ரஸ்தவ꞉

.. ஆனந்த³ஸாக³ரஸ்தவ꞉ ..

விஜ்ஞாபனார்ஹவிரலாவஸரானவாப்த்யா

மந்தோ³த்³யமே மயி த³வீயஸி விஶ்வமாது꞉ .

அவ்யாஜபூ⁴தகருணாபவனாபவித்³தா⁴-

ன்யந்த꞉ ஸ்மராம்யஹமபாங்க³தரங்கி³தானி .. 1 ..

ஆவேத்³யதாமவிதி³தம்ʼ கிமதா²ப்யனுக்தம்ʼ

வக்தவ்யமாந்தரருஜோபஶமாய நாலம் .

இத்யர்த்²யஸே கிமபி தச்ச்²ரவணே நிதா⁴தும்ʼ

மாத꞉ ப்ரஸீத³ மலயத்⁴வஜபாண்ட்³யகன்யே ..2..

ஆக்ரந்தி³தம்ʼ ருதி³தமாஹதமானனே வா

கஸ்யார்த்³ரமஸ்து ஹ்ருʼத³யம்ʼ கிமத꞉ ப²லம்ʼ வா .

யஸ்யா மனோ த்³ரவதி யா ஜக³தாம்ʼ ஸ்வதந்த்ரா

தஸ்யாஸ்தவாம்ப³ புரத꞉ கத²யாமி கே²த³ம் .. 3 ..

பர்யாகுலே மனஸி வாசி பரிஸ்க²லந்த்யாம்ʼ

ஆவர்தக³ர்த இவ சக்ஷிஷி கூ⁴ர்ணமானே .

கஸ்தே(அ)பி⁴தா³ஸ்யதி ஶிவே மமதாமவஸ்தா²ம்ʼ

காலே த³யஸ்வ கத²யாமி தவாது⁴னைவ .. 4 ..

ப⁴க்திம்ʼ கரோது நிதராம்ʼ ஸுரஜாதிமாத்ரே

க்³ராமீணஜந்துரிவ பௌரஜனேஷு லோக꞉ .

அன்யத்ர தே³வி ப⁴வதீ³யபதா³ரவிந்தா³-

தா³க்ருʼஷ்யமாணமபி மே ஹ்ருʼத³யம்ʼ ந யாதி .. 5 ..

  அங்கீ³குரு த்வமவதீ⁴ரய வா வயம்ʼ து

தா³ஸாஸ்தவேதி வசஸைவ ஜயேம லோகான் .

ஏதாவதைவ ஸுகரோ நனு விஶ்வமாத꞉

உத்³த³ண்ட³த³ண்ட³த⁴ரகிங்கரமௌலிப⁴ங்க³꞉ .. 6 ..

வேதா³ன்தவாக்யஜனிதம்ʼ விமலம்ʼ விசாரை꞉

ஆஸாத்³ய போ³த⁴மனுசிந்தனதோ(அ)பரோக்ஷம் .

முக்திம்ʼ வ்ரஜந்தி மனுஜா இதி ஸூக்திமாத்³யா-

மாலம்ப்³ய கஸ்தரிதுமர்ஹதி ஶைலகன்யே .. 7 ..

ஏகைகவேத³விஷயா꞉ கதி நாமஶாகா²-

ஸ்தாஸாம்ʼ ஶிராம்ʼஸி கதி நாம ப்ருʼத²க்³விதா⁴னி .

அர்தா²வபோ³த⁴விது⁴ரோ(அ)க்ஷரலாப⁴ ஏவ

கேஷாம்ʼ ந்ருʼணாம்ʼ கதிபி⁴ரஸ்து ஶரீரப³ன்தை⁴꞉ .. 8 ..

ன்யாயா꞉ பரஸ்பரவிபி⁴ன்னதி³ஶ꞉ ஸஹஸ்ர-

முச்சா²வசானி ச ப⁴வந்த்யுபப்³ருʼம்ʼஹணானி .

ஏவம்ʼ ஸ்தி²தே கி³ரிஸுதே நிக³மோபலானாம்ʼ

தாத்பர்யஸாரமவதா⁴ரயிதும்ʼ க்ஷம꞉ க꞉ .. 9 ..

அஸ்த்வக்ஷரக்³ரஹவிதி⁴ர்ஜனுஷாம்ʼ ஸஹஸ்ரை-

ராபாததோ ப⁴வது நாம ததோ(அ)ர்த²போ³த⁴꞉ .

து³ர்வாதி³கல்பிதவிகல்பதரங்க³ஸாந்த்³ரான்

து³ஷ்பூர்வபக்ஷஜலதீ⁴ன் கத²முத்தரேய꞉ .. 10 ..

ப்³ரஹ்மேதி ஶக்திரிதி ப³ன்த⁴விமோசனீதி

மாயாமயீதி மத³னாந்தகவல்லபே⁴தி .

ஸப்தாஷ்டஶப்³த³பரிவர்தனமாத்ர ஏவ

ஸாமர்த்²யமாவஹதி ஶாஸ்த்ரபரிஶ்ரமோ(அ)யம் .. 11 ..

தஸ்யை ப்ரஸீத³ஸி கி³ரீந்த்³ரஸுதே ய இத்த²ம்ʼ

ஸம்பாத³யேத ஶனகைரபரோக்ஷபோ³த⁴ம் .

யஸ்மை ப்ரஸீத³ஸி ஸ ச க்ஷமதே(அ)வபோ³த்³து⁴-

மித்த²ம்ʼ பரஸ்பரஸமாஶ்ரயமேததா³ஸ்தே .. 12 ..

ஆகர்ணய த்வமிமமப்⁴யுபக³ம்ய வாத³ம்ʼ

ஜானாது கோ(அ)பி யதி³ வா ஹ்ருʼத³யம்ʼ ஶ்ருதீனாம் .

தஸ்யாப்யஸங்க்²யப⁴வப³ன்த⁴ஶதார்ஜிதோ(அ)யம்ʼ

த்³வைதப்⁴ரமோ க³லது ஜன்மஶதை꞉ கியத்³பி⁴꞉ .. 13 ..

காலே மஹத்யனவதா⁴வபதன்க்வதா³பி

க்வாப்யந்திமே ஜனுஷி கோ(அ)பி க³திம்ʼ லபே⁴த .

இத்த²ம்ʼ ஸமர்த²னவிதி⁴꞉ பரமாக³மானாம்ʼ

பர்யாயஸூக்திவித⁴யா நயனம்ʼ நஞர்தே² ..14 ..

ஏகாபவர்க³ஸமயே ஜக³தோ(அ)பவர்க³꞉

ஸர்வாபவர்க³ஸமயே புனரஸ்தஶங்க꞉ .

ஈத்³ருʼக்³வித⁴ம்ʼ கமபி பக்ஷமிஹாவலம்ப்³ய

ஸ்தா²தும்ʼ ஸுக²ம்ʼ க்ஷமமனேவ பதா² ப்ரவ்ருʼத்தை꞉ .. 15 ..

அப்⁴யஸ்ய வேத³மவதா⁴ர்ய ச பூர்வதந்த்ர-

மாலக்ஷ்ய ஶிஷ்டசரிதானி ப்ருʼத²க்³விதா⁴னி .

அத்⁴யாபனாதி³பி⁴ரவாப்ய த⁴னம்ʼ ச பூ⁴ரி

ஶர்மாணி மாதரலஸா꞉ கத²மாசரேயு꞉ .. 16 ..

ஆயஸ்ய தாவத³பி கர்ம கரோது கஶ்சி-

த்தேனாபி மாதரதி⁴கம்ʼ கிமிவானுபா⁴வ்யம் .

அஸ்தே ஸுக²ம்ʼ ய இஹ பா⁴ரதவர்ஷஸீம-

ன்யாஸ்தே ஸ கிஞ்சிதி³த உத்தரதோ(அ)பஸ்ருʼத்ய .. 17 ..

கர்ம த்யஜேம யதி³ நூனமத⁴꞉ பதேம

யத்³யாசரேம ந கதா³பி ப⁴வம்ʼ தரேம .

கர்ம த்யஜேதி³தி சரேதி³தி ச ப்ரவ்ருʼத்தா꞉

பா⁴வேன கேன நிக³மா இதி ந ப்ரதீம꞉ .. 18 ..

கர்மண்யகர்மவிதி⁴ரேஷ யதா³சரந்தி

கர்மாணி தத்தத³னுப³ன்த⁴ஜிஹாஸயேதி .

ஸத்யம்ʼ ததா²ப்யபி⁴னவோ ப⁴விதா ந ப³ன்த⁴꞉

ப்ராசீனப³ன்த⁴ஹரணே க இவாப்⁴யுபாய꞉ .. 19 ..

ப்ராரப்³த⁴கர்ம கியதா³ரப⁴தே கியத்³வா

ப்ராரப்ஸ்யதே கியதி³த³ம்ʼ க இவாவத⁴த்தாம் .

கால꞉ கியானிவ மயா ப்ரதிபாலனீயோ

யஸ்ய க்ஷணார்த⁴மபி கல்பஶதத்வமேதி .. 20 ..

பும்ʼஸ꞉ க்ஷணார்த⁴மபி ஸம்ʼஸரணாக்ஷமஸ்ய

ஸாங்க்²யாத³ய꞉ ஸரணயோ ந விஶந்தி கர்ணம் .

ஸங்க்²யாய கா³ங்க³ஸிகதா꞉ ஸகலாஶ்ச ஸூக்ஷ்மா

பு⁴ங்க்ஷ்வேதி வாகி³வ மஹாக்ஷுத⁴யார்தி³தஸ்ய .. 21 ..

ப⁴க்திஸ்து கா யதி³ ப⁴வேத்³ரதிபா⁴வபே⁴த³-

ஸ்தத்கேவலான்வயிதயா விப²லைவ ப⁴க்தி꞉ .

ப்ரீதிஸ்த்வயி த்ரிஜக³தா³த்மனி கஸ்ய நாஸ்தி

ஸ்வாத்மத்³ருஹோ ந க²லு ஸந்தி ஜனாஸ்த்ரிலோக்யாம் .. 22 ..

ஆத்மா ஸமஸ்தஜக³தாம்ʼ ப⁴வதீதி ஸம்ய-

க்³விஜ்ஞாய யத்³விதனுதே த்வயி பா⁴வப³ன்த⁴ம் .

ஸா ப⁴க்திரித்யபி⁴மதம்ʼ யதி³ ஸித்³த⁴மிஷ்டம்ʼ

வ்யர்த²ம்ʼ விஶேஷ்யமலமஸ்து விஶேஷணம்ʼ ந꞉ .. 23 ..

ஸ்வாத்மேதரத்வமவதா⁴ர்ய பரத்வபு³த்³த்⁴யா

யத்ப்ரீயதே கு³ருஜனேஷ்விவ ஸைவ ப⁴க்தி꞉ .

ஸ்யாதே³ததே³வமியமேவ து மே ஜிஹாஸ்யா

த்³வைதப்⁴ரமாத்கிமதி⁴கம்ʼ ப⁴வப³ன்த⁴மூலம் .. 24 ..

ஸேவைவ ப⁴க்திரிதி கர்மபத²ப்ரவேஶ꞉

ஸேவ்யப்ரஸாத³ப²லகா கில கர்மஸேவா .

த்⁴யானப்ரவாஹ இதி சேச்ச்²ரவணாத் த்ருʼதீய꞉

ப்ராகே³வ மாதரயமாகலிதோ(அ)ப்⁴யுபாய꞉ .. 25 ..

அத்ரைவ தா³ஸ்யஸி விமுக்திமதா²பி யாசே

மாத꞉ ஶரீரபதனம்ʼ மணிகர்ணிகாயாம் .

அஸ்து ஸ்வக்ருʼத்யமனுகம்பனமீஶ்வராணாம்ʼ

தா³ஸஸ்ய கர்மகரதைவ ததா² ஸ்வக்ருʼத்யம் .. 26 ..

ஸத்³யோ ப⁴வேத்ஸுக்ருʼதினாமுபதே³ஶலாப⁴꞉

பாபாத்மனாம்ʼ ப³ஹுதிதே² ஸமயே வ்யதீதே .

இத்யாதி³பி⁴꞉ கில புராணவசோபி⁴ரம்ப³

வாராணஸீமபி ந யாசிதுமுத்ஸுகோ(அ)ஸ்மி .. 27 ..

ஆக்ராந்தமந்தரரிபி⁴꞉ மத³மத்ஸராத்³யை꞉

கா³த்ரம்ʼ வலீபலிதரோக³ஶதானுவித்³த⁴ம் .

தா³ரை꞉ ஸுதைஶ்ச க்³ருʼஹமாவ்ருʼதமுத்தமர்ணை꞉

மாத꞉ கத²ம்ʼ ப⁴வது மே மனஸ꞉ ப்ரஸாத³꞉ .. 28 ..

த⁴ன்யா꞉ கதி த்ரிபு⁴வனே பரமோபபா⁴க்³யம்ʼ

ஸம்ʼஸாரமேவ பரமேஶ்வரி பா⁴வயந்த꞉ .

ஆபா⁴ஸரூபமவபோ³த⁴மிமம்ʼ ஸமேத்ய

க்லிஶ்யே கியத்கியத³ஹம்ʼ த்வமுனா ப⁴வேன .. 29 ..

கா ஸம்ʼஸ்க்ருʼதி꞉ கிமபசாரனிப³ன்த⁴னேயம்ʼ

கீத்³ருʼக்³வித⁴ஸ்ய தவ கிம்ʼ க்ஷதமேதயேதி .

ப்ரஶ்னே து நாஸ்மி குஶல꞉ ப்ரதிவக்துமேவ

கே²த³ஸ்து மே ஜனனி கோ(அ)ப்யயமேவமாஸ்தே .. 30 ..

ஏவம்ʼ க³தஸ்ய மம ஸாம்ப்ரதமேதத³ர்ஹ-

மத்ரேத³மௌபயிகமித்த²மித³ம்ʼ ச ஸாத்⁴யம் .

அஸ்மின்ப்ரமாணமித³மித்யபி போ³த்³து⁴மம்ப³

ஶக்திர்ன மே பு⁴வனஸாக்ஷிணி கிம்ʼ கரோமி .. 31 ..

ந ஜ்ஞாயதே மம ஹிதம்ʼ நிதராமுபாயோ

தீ³னோ(அ)ஸ்மி தே³வி ஸமயாசரணாக்ஷமோ(அ)ஸ்மி .

தத்த்வாமனன்யஶரண꞉ ஶரணம்ʼ ப்ரபத்³யே

மீனாக்ஷி விஶ்வஜனனீம்ʼ ஜனனீம்ʼ மமைவ .. 32 ..

கிஞ்சின்மயா ஶ்ருதிஷு கிஞ்சிதி³வாக³மேஷு

ஶாஸ்த்ரேஷு கிஞ்சிது³பதே³ஶபதே²ஷு கிஞ்சித் .

ஆக்⁴ராதமஸ்தி யத³தோ ப⁴வதீம்ʼ வரீதும்ʼ

கோ³ப்த்ரீதி காசிது³த³பத்³யத பு³த்³தி⁴ரேஷா .. 33 ..

ப்³ரஹ்மைவமேவமஹமேஷ ததா³ப்த்யுபாய

இத்யாக³மார்த²விது⁴ரா꞉ ப்ரத²மே த³யார்ஹா꞉ .

த்வத்³ரக்ஷகத்வகு³ணமாத்ரவிதோ³ த்³விதீயா

இத்யர்த²யே ஸத³தி⁴கார நிரூபணாய .. 34 ..

மாதா கரோஷி மமதாம்ʼ மயி யாவதீ³ஶ-

த்தாவத்³யதே மம தத꞉ கிமிவாஸ்தி ஸாத்⁴யம் .

மாமித்த²மித்த²முபயுங்க்ஷ்வ ந விஸ்மரேதி

கிம்ʼ ஸ்வாமினம்ʼ த்வரயதே க்வசன ஸ்வப்⁴ருʼத்ய꞉ .. 35 ..

த்யாஜ்யம்ʼ த்யஜானி விஹிதம்ʼ ச ஸமாசராணி

நித்யேஷு ஶக்திமனுருத்⁴ய ஹு வர்திதவ்யம் .

தத்³பு³த்³தி⁴ஶக்திமனுருத்³த்⁴ய ந கார்யஶக்தி-

மித்யேததே³வ து ஶிவே வினிவேத³யாமி .. 36 ..

ஆத்மைவ பா⁴ர இதி தம்ʼ த்வயி யோ நித⁴த்தே

ஸோ(அ)ங்கா³னி கானி கலயத்வலஸ꞉ ப்ரபத்தே꞉ .

விஶ்வஸ்ய ஸாக்ஷிணி விலக்ஷணலக்ஷணா யா

விஸ்ரம்ப⁴ஸம்பதி³யமேவ ஸமஸ்தமங்க³ம் .. 37 ..

த்வத்ப்ரேரணேன மிஷத꞉ ஶ்வஸதோ(அ)பி மாத꞉

ப்ராமாதி³கே(அ)பி ஸதி கர்மணி மே ந தோ³ஷ꞉ .

மாத்ரைவ த³த்தமஶனம்ʼ க்³ரஸத꞉ ஸுதஸ்ய

கோ நாம வக்ஷ்யதி ஶிஶோரதிபு⁴க்திதோ³ஷம் .. 38 ..

முக்திம்ʼ நிஷாத⁴யிஷதாம்ʼ நிஜயைவ பு³த்³த்⁴யா

ப்ராரப்³த⁴கர்ம ப⁴வது ப்ரதிப³ன்த⁴ஹேது꞉ .

த்வாமேவ ஸாத⁴னதயாபி ஸமாஶ்ரிதானாம்ʼ

துல்யம்ʼ தத³ம்ப³ யதி³ கஸ்தவ வீரவாத³꞉ .. 39 ..

ப்ராரப்³த⁴கர்ம கி³ரிஜே ப⁴வதா³ஶ்ரிதானா-

மன்யத்ர ஸங்க்ரமய நாஶய வா ஸமூலம் .

மர்த்யாஶ்ச க²ல்வபி விஷம்ʼ வபுஷி ப்ரஸக்தம்ʼ

ஸங்க்ராமயந்தி பரதோ(அ)பி ச நாஶயந்தி .. 40 ..

த்வத்³த³ர்ஶனஶ்ரவணசிந்தனவந்த³னாதி³-

ஷ்வக்ஷாணி தே³வி வினியுஜ்ய யதா²தி⁴காரம் .

ரக்ஷேத்யஸங்க்²யப⁴வஸம்ப்⁴ருʼதயைவ மைத்ர்யா

ருந்த்⁴யாம்ʼ யதி³ ஸ்தி²ரமமூன்யது⁴னைவ ந ஸ்யு꞉ .. 41 ..

த்ராதவ்ய ஏஷ இதி சேத்கருணா மயி ஸ்யா-

த்த்ராயஸ்வ கிம்ʼ ஸுக்ருʼதது³ஷ்க்ருʼதசிந்தயா மே .

கர்தும்ʼ ஜக³த்திரயிதும்ʼ ச விஶ்ருʼங்க²லாயா꞉

கர்மானுரோத⁴ இதி கம்ʼ ப்ரதி வஞ்சனேயம் .. 42 ..

த்வய்யர்பிதம்ʼ ப்ரத²மமப்பயயஜ்வனைவ

ஸ்வாத்மார்பணம்ʼ வித³த⁴தா ஸ்வகுலம்ʼ ஸமஸ்தம் .

கா த்வம்ʼ மஹேஶி குலதா³ஸமுபேக்ஷிதும்ʼ மாம்ʼ

கோ வானுபாஸிதுமஹம்ʼ குலதே³வதாம்ʼ த்வாம் .. 43 ..

மௌட்⁴யாத³ஹம்ʼ ஶரணயாமி ஸுராந்தரம்ʼ சே-

த்கிம்ʼ தாவதா ஸ்வமபி தஸ்ய ப⁴வாமி மாத꞉ .

அஜ்ஞானத꞉ பரக்³ருʼஹம்ʼ ப்ரவிஶன்பரஸ்ய

ஸ்வத்வம்ʼ ப்ரயாஸ்யதி பஶு꞉ கிமு ராஜகீய꞉ .. 44 ..

ஆதா⁴ய மூர்த⁴னி வ்ருʼதை²வ ப⁴ரம்ʼ மஹாந்தம்ʼ

மூர்கா² நிமஜ்ஜத² கத²ம்ʼ ப⁴வஸாக³ரே(அ)ஸ்மின் .

வின்யஸ்ய பா⁴ரமகி²லம்ʼ பத³யோர்ஜனன்யா

விஸ்ரப்³த⁴முத்தரத பல்வலதுல்யமேனம் .. 45 ..

க்வேத³ம்ʼ பதிஷ்யதி வபு꞉ க்வ ததோ நு க³ம்யம்ʼ

கோ த³ண்ட³யிஷ்யதி கியந்தமனேஹஸம்ʼ வா .

கிம்ʼ தஸ்ய ஸந்தரணஸாத⁴னமித்யனந்தா

சிந்தா ஸ்தி²தா த்வயி ஶனைரவதாரிதா ஸா .. 46 ..

ஜ்ஞானம்ʼ விஶேயமுத தேன வினோத்³த⁴ரேயம்ʼ

ப்ராரப்³த⁴மப்யபலபேயமுதானுருந்த்⁴யாம் .

இத்த²ம்ʼ ஸக்ருʼத்ப்ரபத³னைகவஶம்ʼவதா³யா

மாதுர்மயி ப்ரவவ்ருʼதே மஹதீஹ சிந்தா .. 47 ..

ஏதஜ்ஜடா³ஜட³விவேசனமேததே³வ

க்ஷித்யாதி³தத்வபரிஶோத⁴னகௌஶலம்ʼ ச .

ஜ்ஞானம்ʼ ச ஶைவமித³மாக³மகோடிலப்⁴யம்ʼ

மாதுர்யத³ங்க்⁴ரியுக³லே நிஹிதோ மயாத்மா .. 48 ..

ஷட்த்ரிம்ʼஶதா³வரணமத்⁴யஜுஷி த்வத³ங்க்⁴ரௌ

ஹாலாஸ்யனாத²த³யிதே நிஹிதோ மயாத்மா .

பூ⁴பு⁴தலத்ரிதி³வவர்திஷு க꞉ க்ஷமேத

தச்சக்ஷுஶாதி³ நிப்⁴ருʼதேன நிரீக்ஷிதும்ʼ மாம் .. 49 ..

ப³ன்த⁴ம்ʼ ஹரிஷ்யஸி ஸுக²ம்ʼ விதரிஷ்யஸீதி

நிஶ்சப்ரசம்ʼ நிகி²லமம்ப³ ததா³ஸ்த ஏவ .

ஸம்ப்ரத்யஹம்ʼ த்வயி நிதா⁴ய ப⁴ரம்ʼ ஸமஸ்தம்ʼ

யானிர்வ்ருʼணோமிகிமிதோ(அ)பி மமாபவர்கே³ .. 50 ..

காஶ்யாம்ʼ நிபாதய வபு꞉ ஶ்வபசாலயே வா

ஸ்வர்க³ம்ʼ நய த்வமபவர்க³மதோ⁴க³திம்ʼ வா .

அத்³யைவ வா குரு த³யாம்ʼ புனராயதௌ வா

க꞉ ஸம்ப்⁴ரமோ மம த⁴னே த⁴னின꞉ ப்ரமாணம் .. 51 ..

நாஹம்ʼ ஸஹே தவ கதா²ஶ்ரவணாந்தராயம்ʼ

நாஹம்ʼ ஸஹே தவ பதா³ர்சனவிச்யுதிம்ʼ வா .

மோக்ஷம்ʼ தி³ஶைதத³விருத்³த⁴மித³ம்ʼ ந சேத்யா-

ன்னைவாஸ்து மாதரபவர்க³மஹோபஸர்க³꞉ .. 52 ..

ஆசூட³மாசரணமம்ப³ தவானுவார-

மந்த꞉ஸ்மரன்பு⁴வனமங்க³லமங்க³மங்க³ம் .

ஆனந்த³ஸாக³ரதரங்க³பரம்பராபி⁴-

ராந்தோ³லிதோ ந க³ணயாமி க³தான்யஹானி .. 53 ..

பாஷாணதோ(அ)பி கடி²னே ஶிரஸி ஶ்ருதீனாம்ʼ

ப்ராய꞉ பரிக்ரமவஶாதி³வ பாடலாப⁴ம் .

அம்ப³ ஸ்மரேயமம்ருʼதார்ணவமாத²லப்³த⁴-

ஹைய்யங்க³வீனஸு குமாரமித³ம்ʼ பத³ம்ʼ தே .. 54 ..

யே நாம ஸந்தி கதிசித்³கு³ரவிஸ்த்ரிலோக்யாம்ʼ

தேஷாமபி ஸ்வயமுபேதவதா கு³ருத்வம் .

பாதே³ன மூர்த்⁴னி வித்⁴ருʼதேன வயம்ʼ தவாம்ப³

ஸம்ʼஸாரஸாக³ரமிமம்ʼ ஸுக²முத்தராம꞉ .. 55 .

ஸாதா⁴ரணே ஸ்மரஜயே நிதிலாக்ஷிஸாத்⁴யே

பா⁴கீ³ ஶிவோ ப⁴ஜது நாம யஶ꞉ ஸமக்³ரம் .

வாமாங்க்⁴ரிமாத்ரகலிதே ஜனனி த்வதீ³யே

கா வா ப்ரஸக்திரபி காலஜயே புராரே꞉ .. 56 ..

ஸ்யாத்கோமலம்ʼ யதி³ மனோ மம விஶ்வமாத꞉

தத்பாத³யோர்ம்ருʼது³லயோஸ்தவ பாது³கா(அ)ஸ்து .

ஸ்யாத்கர்கஶம்ʼ யதி³ கரக்³ரஹணே புராரே꞉

அஶ்மாதி⁴ரோபணவிதௌ⁴ ப⁴வதூபயோக³꞉ .. 57 ..

ப்ரஸ்னிக்³த⁴முக்³த⁴ருசிபாத³தலே ப⁴வத்யா

லக்³னம்ʼ த்³ருʼட⁴ம்ʼ யதி³ஹ மே ஹ்ருʼத³யாரவிந்த³ம் .

ஏஷைவ ஸாக்³ரபு⁴வனத்³விஶதீபதித்வ-

ஸாம்ராஜ்யஸூசனகரீ தவ பத்³மரேகா² .. 58 ..

அப்ராக்ருʼதம்ʼ ம்ருʼது³லதாமவிசிந்த்ய கிஞ்சி-

தா³லம்பி³தாஸி பத³யோ꞉ ஸுத்³ருʼட⁴ம்ʼ மயா யத் .

தன்மே ப⁴வார்ணவனிமஜ்ஜனகாதரஸ்ய

மாத꞉ க்ஷமஸ்வ மது⁴ரேஶ்வரி பா³லக்ருʼத்யம் .. 59 ..

யத்ரானமன்பஶுபதி꞉ ப்ரணயாபராதே⁴

மந்த³ம்ʼ கில ஸ்ப்ருʼஶதி சந்த்³ரகலாஞ்சலேன .

புஷ்பார்சனே(அ)பி ம்ருʼதி³தம்ʼ பத³யோர்யுக³ம்ʼ த-

ன்மாதஸ்துத³ன்தி ந கத²ம்ʼ பருஷா கி³ரோ மே .. 60 ..

அவ்யாஜஸுந்த³ரமனுத்தரமப்ரமேய-

மப்ராக்ருʼதம்ʼ பரமமங்க³லமங்க்⁴ரிபத்³மம் .

ஸந்த³ர்ஶயேத³பி ஸக்ருʼத்³ப⁴வதீ த³யார்த்³ரா

த்³ரஷ்டாஸ்மி கேன தத³ஹம்ʼ து விலோசனேன .. 61 ..

தி³வ்யா த்³ருʼஶோ(அ)பி தி³விஷத்³க்³ரஹணோசிதானி

வஸ்தூனி காமமவதா⁴ரயிதும்ʼ க்ஷமந்தே .

த்வன்மாத்ரவேத்³யவிப⁴வே தவ ரூபதே⁴யே

த்வத்³பா⁴வ ஏவ ஶரணம்ʼ பரிஶேஷிதோ ந꞉ .. 62 ..

அஸ்மின்மஹத்யனவதௌ⁴ கில காலசக்ரே

த⁴ன்யாஸ்து யே கதிபயே ஶுகயோகி³முக்²யா꞉ .

லீனாஸ்த்வத³ங்க்⁴ரியுக³லே பரிஶுத்³த⁴ஸத்வான்

தானாத்மனஸ்தவ நகா²னவதா⁴ரயாம꞉ .. 63 ..

ஆ ஶைஶவான்மமதயா கலிதஸ்த்வயாஸா-

வான்ருʼண்யமம்ப³ தவ லப்³து⁴மனா ம்ருʼகா³ங்க³க꞉ .

ஸ்வாத்மானமேவ நியதம்ʼ ப³ஹுதா⁴ விப⁴ஜ்ய

த்வத்பாத³யோர்வினித³தே⁴ நக²ராபதே³ஶாத் .. 64 ..

நாந்த꞉ ப்ரவேஶமயதே கிமபி ஶ்ருதம்ʼ மே

நாஸ்திக்யவாத³ஶிலயா ப்ரதிருத்⁴யமானம் .

தத்பாதயாம்யஹமிமாம்ʼ மஹதீமத⁴ஸ்தா-

த்பாதோ³த³கேன கியதா பரதே³வதாயா꞉ .. 65 ..

ஸன்னாஹிபி⁴꞉ யமப⁴டை꞉ பரிவார்யமாணே

மய்யர்ப⁴கே கருணயா ஸ்வயமாபதந்த்யா꞉ .

ஆகர்ணயேயமபி நாம விராமகாலே

மாதஸ்தவாங்க்⁴ரிமணினூபுரஶிஞ்ஜிதானி .. 66 ..

ப்³ரஹ்மேஶகேஶவமுகை²ர்ப³ஹுபி⁴꞉ குமாரை꞉

பர்யாயத꞉ பரிக்³ருʼஹீதவிமுக்ததே³ஶம் .

உத்ஸங்க³மம்ப³ தவ தா³ஸ்யஸி மே கதா³ த்வம்ʼ

மாத்ருʼப்ரியம்ʼ கில ஜட³ம்ʼ ஸுதமாமனந்தி .. 67 ..

ஊரௌ ஶிரஸ்தவ நிவேஶ்ய த³யாவிதீர்ண-

ஸம்ʼவ்யானபல்லவஸமீரவினீதகே²த³ம் .

அத்ரைவ ஜன்மனி விபோ⁴꞉ பரமோபதே³ஶ-

மாகர்ணயேயமபி கிம்ʼ மணிகர்ணிகாயாம் .. 68 ..

காஞ்சீகு³ணக்³ரதி²தகாஞ்சனசேலத்³ருʼஶ்ய-

சண்டா³தகாம்ʼஶுகவிபா⁴பரபா⁴க³ஶோபி⁴ .

பர்யங்கமண்ட³லபரிஷ்கரணம்ʼ புராரே꞉

த்⁴யாயாமி தே விபுலமம்ப³ நிதம்ப³பி³ம்ப³ம் .. 69 ..

க³ர்பே⁴ நிவேஶ்ய பு⁴வனானி சதுர்த³ஶாபி

ஸம்ʼரக்ஷிதும்ʼ கலிதனிஶ்சிதயா ப⁴வத்யா .

ப்ராகாரமேவ ரசிதம்ʼ பரிதோ(அ)பி நூன-

மூஹே ஸுவர்ணமயமேது³ரபட்டப³ன்த⁴ம் .. 70 ..

முக்தாஶ்ச க²ல்வபி யதி³ த்ரிபுரே ப⁴வத்யா꞉

ஸ்தன்யாஶயா ஸ்தனதடம்ʼ ந பரித்யஜந்தி .

அஸ்மாகமுத்³ப⁴டப⁴வஜ்வரதாபிதானா-

மார்த்³ரீப⁴வன் து வத³னானி குதோ ந ஹேதோ꞉ .. 71 ..

நஷ்டோபலப்³த⁴மதி⁴க³த்ய ஶிஶும்ʼ சிரான்மாம்ʼ

வாத்ஸல்யவித்³ருதஹ்ருʼத³꞉ பரதே³வதாயா꞉ .

க்லித்³யத்பயோத⁴ரவினி꞉ஸ்ருʼதது³க்³த⁴பி³ன்து³-

நிஷ்யந்த³பங்க்திரிவ தீ³வ்யதி ஹாரயஷ்டி꞉ .. 72 ..

யத்தத்³த⁴னுர்ஜனமனோமயமைக்ஷவம்ʼ தே

தஸ்யாஸ்து தே³வி ஹ்ருʼத³யம்ʼ மம மூலதே³ஶ꞉ .

சாபாதி⁴ரோபணவிதௌ⁴ சரணாஞ்சலேன

ஸம்பா⁴வ்யதே கில ஸமாக்ரமணம்ʼ கதா³சித் .. 73 ..

ஆஸ்தா²ய தா³ருணதரம்ʼ கமபி ஸ்வபா⁴வ-

மத்யந்தது³ஷ்க்ருʼதக்ருʼதாமபி ஶிக்ஷணாய .

க்³ருʼஹ்ணாஸி ஸாயகபதே³ குஸுமான்யமூனி

மாத꞉ ஸுதேஷு மஹதீ கில ரூக்ஷதேயம் .. 74 ..

பாஶம்ʼ ஸ்ருʼணிம்ʼ ச கரயோஸ்தவ பா⁴வயந்த꞉

ஸம்ʼஸ்தம்ப⁴யந்தி வஶயந்தி ச ஸர்வலோகான் .

சாபம்ʼ ஶரம்ʼ ச ஸக்ருʼத³ம்ப³ தவ ஸ்மரந்தோ

பூ⁴பாலதாம்ʼ த³த⁴தி போ⁴க³பதா²வதீர்ண꞉ .. 75 ..

பாஶாங்குஶௌ தவ கரே பரிசிந்த்ய ராக³-

த்³வேஷௌ ஜயந்தி பரமார்த²வித³ஸ்து த⁴ன்யா꞉ .

ஏகத்ர சாபமிதரத்ர ஶரம்ʼ ச மத்வா

வ்யாவர்தயந்தி ஹ்ருʼத³யம்ʼ விஷயாந்த⁴கூபாத் .. 76 ..

உத்க்ராந்தமாந்தரமித³ம்ʼ ஶரணம்ʼ ஜனானா-

மப்யேதி சந்த்³ரமிதி ஹே ஶ்ருதயோ வத³ன்தி .

ஆஸ்தாமித³ம்ʼ மம து தே³வி மனோ(அ)து⁴னைவ

லீனம்ʼ த்³ருʼட⁴ம்ʼ வத³னசந்த்³ரமஸி த்வதீ³யே .. 77 ..

வித்³யாத்மனோ ஜனனி தாவகத³ன்தபங்க்தே꞉

வைமல்யமீத்³ருʼகி³தி வர்ணயிதும்ʼ க்ஷம꞉ க꞉ .

தத்ஸம்ப⁴வா யத³மலா வசஸாம்ʼ ஸவித்ரீ

தன்மூலகம்ʼ கவியஶோ(அ)பி ததஸ்தராம்ʼ யத் .. 78 ..

ஸ்வச்சா²பி தே வஹதி யத்கில த³ன்தபங்க்தி꞉

ஸ்வச்ச²ன்த³னிர்த³லிததா³டி³மபீ³ஜஶோபா⁴ம் .

தன்மே ரஜோவ்யதிகராதி⁴கபாடலிம்னி

சித்தே பரம்ʼ பரிசயாதி³தி சிந்தயாமி .. 79 ..

அர்த⁴ம்ʼ ஜிதத்ரிபுரமம்ப³ தவ ஸ்மிதம்ʼ சே-

த³ர்தா⁴ன்தரேண ச ததா² ப⁴விதவ்யமேவ .

தச்சிந்தயே ஜனனி காரணஸூக்ஷ்மரூப-

ஸ்தூ²லாத்மகத்ரிபுரஶாந்திக்ருʼதே ஸ்மிதம்ʼ தே ..80 ..

மத்க்லேஶத³ர்ஶனபரித்³ரவத³ன்தரங்க³-

ஹைய்யங்க³வீ நபரிவாஹனிப⁴ம்ʼ ஜனன்யா꞉ .

அந்தஸ்தமோபஹமனுஸ்மரதாம்ʼ ஜனானாம்ʼ

மந்த³ஸ்மிதம்ʼ பு⁴வனமங்க³லமஸ்து பூ⁴த்யை .. 81 ..

ஸாம்ʼஸித்³தி⁴கானனஸரோருஹதி³வ்யக³ன்த⁴-

ஸாந்த்³ரீக்ருʼதேந்து³ஶகலாகலிதாதி⁴வாஸம் .

தாம்பூ³லஸாரமகி²லாக³மபோ³த⁴ஸாரம்ʼ

மாதர்விதே⁴ஹி மம வக்த்ரகலாசிகாயாம் .. 82 ..

நாஸாமணிஸ்தவ ஶிவே சிரஸம்ʼஸ்தவேன

ப்ரத்யாஹ்ருʼதே மனஸி பா⁴தி தபோத⁴னானாம் .

அஜ்ஞானஸந்ததினிஶாத்யயஸூசனார்த²ம்ʼ

ஆவிர்ப⁴வந்த்யஸுரதே³ஶிகதாரகேவ .. 83 ..

தாம்பூ³லக³ர்ப⁴பரிபு²ல்லகபோலலக்ஷ்ய-

தாடங்கமௌக்திகமணிப்ரதிபி³ம்ப³த³ம்பா⁴த் .

அஸ்தத்³வயவ்யதிகராமலஸத்வமாத்³யம்ʼ

வர்ணம்ʼ பி³ப⁴ர்தி ஜட²ரே தவ வக்த்ரபி³ம்ப³ம் .. 84 ..

த³த்தே ஶ்ரியம்ʼ ப³ஹுவிதா⁴ம்ʼ குஶலானி த³த்தே

த³த்தே பத³ம்ʼ ஸுரபதேரபி லீலயைவ .

ஈத்³ருʼக்³விதா⁴ம்ப³ தவ த்³ருʼஷ்டிரிதோ(அ)தி⁴கா வா

நாத்³யாபி கர்ணமதிவர்திதுமீஶ்வரீயம் .. 85 ..

பாஶாணகூடகடி²ணே ஜனது³ர்விகா³ஹே

வ்யர்த²ம்ʼ மஹத்யுபனிஷத்³விபினே ப்ரவ்ருʼத்தா .

ஸேவ்யேத கேன தவ லோசனசந்த்³ரிகேய-

மேனாம்ʼ நிபாதய ஸக்ருʼன்மயி தப்யமானே .. 86 ..

காமம்ʼ ஶிவேன ஶமிதம்ʼ புனருஜ்ஜகா³ர

த்³ருʼஷ்டிஸ்தவேதி கிமியம்ʼ ஜனனி ஸ்துதிஸ்தே .

லீலாப்ரஸூதபுருஷார்த²சதுஷ்டயாயா-

ஸ்தஸ்யா꞉ பரம்ʼ து ஸ ப⁴வத்யவயுத்யவாத³꞉ .. 87 ..

ஸோமோ ஜக³ஜ்ஜனயிதேதி யதா³ஹ வேதோ³

நேத³ம்ʼ லதாபரமிதி ப்⁴ரமிதவ்யமார்யை꞉ .

ய꞉ ஶைவவாமதனுவர்திப⁴வத்³த்³ருʼகா³த்மா

சந்த்³ரோ ஜக³த்ஸ்ருʼஜதி தத்பர ஏஷ வாத³꞉ .. 88 ..

ஸூச்யக்³ரவத்³வஸுமதீமணுவச்ச மேரும்ʼ

த்³ருʼஷ்டிர்யத³ம்ப³ தவ பஶ்யதி தா³னஶௌண்டா³ .

த்³ருʼஷ்டாஸ்த்வயா வயமபீஹ தத꞉ ஸ்மராமோ

வேஶந்தமேவ ப⁴வஸாக³ரமுத்தரங்க³ம் .. 89 ..

வாணீனிகேதனதயா க⁴னஸாரகௌ³ரா꞉

கல்ஹாரகேஸரருச꞉ கமலானுஷங்கா³த் .

மாதர்ஜயந்தி ஶரணாக³தலோகசேதோ-

மாலின்யமார்ஜனவஶாத³ஸிதா꞉ கடாக்ஷா꞉ .. 90 ..

ஆகர்ணமுல்லஸதி மாதரபாங்க³தே³ஶே

காலாஞ்ஜனேன க⁴டிதா தவ பா⁴தி ரேகா² .

ஶைவாலபங்க்திரிவஸந்ததனிர்ஜிஹான-

காருண்யபூரபத³வீகலிதானுப³ன்த⁴꞉ .. 91 ..

விஶ்வம்ʼ ஸ்ருʼஜதி ஹந்தி ச ய꞉ கடாக்ஷோ

விஶ்வஸ்யதாம்ʼ கத²மஸௌ சபலஸ்வபா⁴வ꞉ .

ஏஷோ(அ)பி யாமனுஸரல்லப⁴தே யஶாம்ʼஸி

தாமேவ விஶ்வஸிமி தே³வி தவானுகம்பாம் .. 92 ..

அர்த⁴ம்ʼ கலங்கரஹிதா கருணைவ ஶம்போ⁴-

ரர்த⁴ம்ʼ கு³ணாஸ்ததி³தரே ஸகலா꞉ ஸமேதா꞉ .

இத்யம்ப³ ஸம்ப்ரதி கில ஸ்பு²ரிதம்ʼ ரஹஸ்யம்ʼ

ஸம்பஶ்யதோ மம ப⁴வன்மயமைஶமர்த⁴ம் .. 93 ..

அம்ப³ ப்⁴ருவோஸ்தவ விசேஷ்டிதமப்ரமத்தம்ʼ

ஸம்பஶ்யதாம்ʼ நிஜனிஜார்த²னிதே³ஶஹேதோ꞉ .

தன்மூலதே³ஶனிஹிதா நிப்⁴ருʼதா ஸுராணாம்ʼ

த்³ருʼஷ்டி꞉ ப்ரயாதி ம்ருʼக³னாபி⁴விஶேஷகத்வம் .. 94 ..

ஸாரம்ʼ கணம்ʼ கணமக⁴ர்மருசாம்ʼ ஸஹஸ்ரா-

த்ஸங்க்³ருʼஹ்ய நிர்மிதமித³ம்ʼ தவ வக்த்ரபி³ம்ப³ம் .

தாவத்ஸுதா⁴கரகலங்ககுலானி பஶ்சா-

தே³கத்ர தே³வி நிஹிதானி கசாபதே³ஶாத் .. 95 ..

வின்யஸ்தமிந்த்³ரமணிகந்த³லஸுந்த³ரேஷு

கேஶேஷு தே ஸ்ப²டிகனிர்மலமிந்து³க²ண்ட³ம் .

ஆதா⁴ரஸங்க³திவஶாத³ஸிதாயமான-

மிந்தீ³வரச்ச²த³வதம்ʼஸத³ஶாம்ʼ பி³ப⁴ர்தி .. 96 ..

சிந்தாமணிஸ்த்ரிபு⁴வனேஶ்வரி கௌஸ்துப⁴ஶ்ச

க்²யாதௌ மணீ தவ க்³ருʼஹாங்க³ணகுட்டிமஸ்தௌ² .

கிம்ʼ ரத்னமன்யது³பலப்⁴ய கிரீடகோடிம்ʼ

வாசஸ்பதிப்ரப்⁴ருʼதயஸ்தவ வர்ணயந்து .. 97 ..

ப்ராது³ர்ப⁴வத்தரணிபி³ம்ப³ஶதாருணானி

பர்யாப்தஶீதகிரணாயுதஶீதலானி .

ஶ்ருʼங்கா³ரஸாரபரிவாஹமயானி மாத-

ரங்கா³னி கே(அ)பி சரமே ஜனுஷி ஸ்மரந்தி .. 98..

ப்ரத்யுக்³ரகுங்குமரஸாகலிதாங்க³ராக³ம்ʼ

ப்ரத்யங்க³த³த்தமணிபூ⁴ஷணஜாலரம்யம் .

தாம்பூ³லபூரிதமுக²ம்ʼ தருணேந்து³சூட³ம்ʼ

ஸர்வாருணம்ʼ கிமபி வஸ்து மமாவிரஸ்து .. 99 ..

அர்த⁴ம்ʼ ஸ்த்ரியஸ்த்ரிபு⁴வனே ஸசராசரே(அ)ஸ்மி-

ன்னர்த⁴ம்ʼ புமாம்ʼஸ இதி த³ர்ஶயிதும்ʼ ப⁴வத்யா .

ஸ்த்ரீபும்ʼஸலக்ஷணமித³ம்ʼ வபுராத்³ருʼதம்ʼ ய-

த்தேனாஸி தே³வி விதி³தா த்ரிஜக³ச்ச²ரீரா .. 100 ..

நிர்மாஸி ஸம்ʼஹரஸி நிர்வஹஸி த்ரிலோகீம்ʼ

வ்ருʼத்தாந்தமேதமபி வேத்தி ந வா மஹேஶ꞉ .

தஸ்யேஶ்வரஸ்ய கி³ரிஜே தவ ஸாஹசர்யா-

ஜ்ஜாத꞉ ஶ்ருதிஷ்வபி ஜக³ஜ்ஜனகத்வவாத³꞉ .. 101 ..

ஸத்தாஸ்யக²ண்ட³ஸுக²ஸம்ʼவித³ஸி த்ரிலோகீ-

ஸர்க³ஸ்தி²திப்ரதிஹதிஷ்வபினிர்வ்யபேக்ஷா .

த்வாமந்தரேண ஶிவ இத்யவஶிஷ்யதே கி-

மர்த⁴ம்ʼ ஶிவஸ்ய ப⁴வதீத்யனபி⁴ஜ்ஞவாத³꞉ .. 102 ..

நாஸ்மின்ரவிஸ்தபதி நாத்ர விவாதி வாதோ

நாஸ்ய ப்ரவ்ருʼத்திமபி வேத³ ஜக³த்ஸமஸ்தம் .

அந்த꞉புரம்ʼ ததி³த³மீத்³ருʼஶமந்தகாரே-

ரஸ்மாத்³ருʼஶாஸ்து ஸுக²மத்ர சரந்தி பா³லா꞉ .. 103 ..

த்வத்ஸன்னிதா⁴னரஹிதோ மம மாஸ்து தே³ஶ-

ஸ்த்வத்தத்த்வபோ³த⁴ரஹிதா மம மாஸ்து வித்³யா .

த்வத்பாத³ப⁴க்திரஹிதோ மம மாஸ்து வம்ʼஶ-

ஸ்த்வச்சிந்தயா விரஹிதம்ʼ மம மாஸ்து சாயு꞉ .. 104 ..

த்வம்ʼ தே³வி யாத்³ருʼக³ஸி தாத்³ருʼக³ஸி த்வமீத்³ருʼ-

கே³வேதி வக்துமபி போ³த்³து⁴மபி க்ஷம꞉ க꞉ .

மாமேவ தாவத³வித³ன்னதிபாமரோ(அ)ஹம்ʼ

மாத꞉ ஸ்துதிம்ʼ த்வயி ஸமர்பயிதும்ʼ விலஜ்ஜே .. 105 ..

காசித்க்ருʼதா க்ருʼதிரிதி த்வயி ஸா(அ)ர்பிதேதி

காபி ப்ரமோத³கணிகா ந மமாந்தரங்கே³ .

மௌட்⁴யம்ʼ மதீ³யமிஹ யத்³விதி³தம்ʼ மமைவ

கிம்ʼ த்வம்ப³ விஶ்வஸிமி தீ³னஶரண்யதாம்ʼ தே .. 106 ..

காலானபாஸ்ய விஷுவாயனஸங்க்ரமாதீ³-

நஸ்தங்க³தே ஹிமகரே ச தி³வாகரே ச .

அம்ப³ ஸ்மரேயமபி தே சரணாரவிந்த³-

மானந்த³லக்ஷணமபாஸ்தஸமஸ்தபே⁴த³ம் .. 107 ..

சதுரத்⁴யாயீரூபம்ʼ கலஹம்ʼஸவ்யஞ்ஜனம்ʼ ஜக³ன்மாது꞉ .

அபரப்³ரஹ்மமயம்ʼ வபுரந்த꞉ ஶஶிக²ண்ட³மண்ட³னமுபாஸே .. 108 ..

.. இதி ஶ்ரீ நீலகண்ட²தீ³க்ஷிதவிரசித꞉

ஶ்ரீஆனந்த³ஸாக³ரஸ்தவ꞉ ஸம்பூர்ண꞉ ..

Thursday, 18 June 2020

சித்தன் அருள் - 871 - தாவர விதி!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், சித்த மார்க்கத்திலும், சித்த மருத்துவத்திலும் சிறந்து விளங்கும் ஒரு சித்தர் அடியவரிடம் சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தேன். அவர் பகிர்ந்து கொண்ட. "தாவர விதி" என்கிற தலைப்பிலிருந்து சில முக்கியமான விஷயங்களை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

நகரத்து மனிதர் வீட்டை சுற்றியும், விலங்கினங்கள் உறையும் காட்டில் எங்கும், தாவரங்களை படைத்த இறைவனின் கைவண்ணம் எப்போதும் என்னை ஆச்சரியப் படுத்தும். மொத்தமாக ஒரு வீட்டை சுற்றி சிமெண்ட் போட்டு மூடினாலும், எங்கேனும் இருக்கும் ஒரு சிறு துளை வழியாக தாவரம் முளைத்து வருவது, ஆச்சரியமாக தோன்றும். மனிதன், எவ்வளவோ தாவரங்களை/மரங்களை அழித்து, தனக்கு இருப்பிடம், வசதிகளை செய்து கொள்ளும் பொழுது, ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறான். அது,

நம்மைப்போல், தாவரங்களுக்கும்/மரங்களுக்கும் உயிர் உண்டு, அவைகளும் ஒரு கர்மாவுக்கு உட்பட்டு இங்கு வாழ வந்தவைதான். அவைகளும் தழைத்திட ஒரு மனிதன், தன்னால் இயன்றதை செய்துவிட்டு, பின்னர் தான் வாழ வழி வகுத்துக் கொள்ள வேண்டும், என்று ஒரு பொழுதும் யோசிப்பதில்லை.

மனிதனின் கர்மா இன்னென்ன விதங்களில் வளரும் பொழுது, ஏதேனும் ஒரு சூழ்நிலையில், அல்லது காலத்தில், அவனுக்கு மருந்தாக இருக்கட்டும் என்றும், பிற உயிரினங்களுக்கு உணவாகவும், உடல் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவும்தான், இறைவன், தாவரங்களை படைத்தான்.  அவை பற்றிய அறிவை, சித்த மருத்துவம்/ஆயுர்வேத மருத்துவத்துக்குள் வைத்தான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்கிற எண்ணம் இல்லாமல், சிறியவர் முதல் பெரியவர் வரை, தோன்றியபடி எல்லாம் தாவரங்களை பறித்தும், அழித்தும் வருகிறோம். சித்த மருத்துவத்துக்கு முதுகெலும்பே, தாவரங்கள்தான். அவற்றை, மென்மையாக கையாள வேண்டும்.

மருந்துக்காக ஒரு இலையை பறிப்பதாயினும், அதற்கு ஒரு முறை உண்டு. ஒன்றும் அறியாதவர்கள் கூட, ஒரு தாவரத்தை, இலையை, மருந்துக்காக பறிப்பதற்கு முன், அந்த தாவரத்தின் முன் நின்று மனதால், போகர் சித்தரை வணங்கி, மூலிகை தேவதையை வணங்கி, வேண்டுதலை கீழ்கண்டவாறு கூறி, முதலில் சமர்ப்பிக்க வேண்டும்.

"போகர் சித்த பெருமானுக்கு வணக்கம், மூலிகை தேவதைக்கு நமஸ்காரம். உங்கள் அனுமதியுடன், இந்த தாவர மூலிகையை, இலையை, பூவை, காயை, நோய் தீர்க்கும் மருந்தாக பாவித்து எடுத்துக்கொள்கிறேன். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும்" என்று பிரார்த்தித்து, எவ்வளவு மருந்துக்கு தேவையோ, அவ்வளவே எடுக்க வேண்டும். இது மிக எளிய முறை. கூடவே, இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இலை. பூ, காய் என பறிக்கும் பொழுது, நம் கை விரல் நகம் படாமல், கிள்ளாமல், வேறு எந்த ஆயுதமும், இரும்பு, கத்தி போன்றவை படாமல் பறிக்க வேண்டும். கத்தியால் வெட்டப்பட்ட மூலிகை மருத்துவ குணத்தை இழக்கும். மனித நகம் பட்ட மூலிகையும், முழு பலன் தராது.

ஒரு செடியிலிருந்து மருந்துக்காக, இலையை பறிக்கும் பொழுது, முழுவதையும் பறித்து விடாமல், அந்த தாவரம் மேலும் துளிர/தழைத்து வளர மிச்சம் வைத்து, வழி வகுத்துத்தான், தேவையான விஷயங்களை, தேவையான அளவுக்கு, பறிக்க வேண்டும்.

அந்த செடியோ/தாவரமோ மிக சிறியதாக இருந்தால், அதை விட்டு, அதை விட பெரிய செடி எங்கு இருக்கிறது, என தேட வேண்டும். அப்படி கிடைக்கவில்லை என்றால் எப்பொழுதும் போல் பிரார்த்தனை செய்துவிட்டு, கீழே அமர்ந்து. இடது கையால் செடியின் தண்டு பாகத்தை பிடித்துக்கொண்டு, வலது கையால் தேவையான இலைகளை பறிக்கலாம். அப்படி பறிக்கும் பொழுது, அந்த செடியின் ஆணிவேர் அசையாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.

மிருகங்கள் நடந்து ஓடியும் புல் கூட துளிர்க்கும். மனிதன் நடந்தால் அந்த புல்லோ, தாவரமோ தழைக்காது. வாடிப்போகும். இதுவும், தாவர விதி.

தாவரங்களின் மொழி புரிய வேண்டும். அது புரிய, மனிதனுக்கு கனிவு இருந்து, அந்த கனிவுடன் தாவரங்கள் தழைக்க, நீர் ஊற்றி, மண் கிளறி, மேற்கூறிய விஷயங்களையும் கடைபிடித்தால், நிறைய உண்மைகளை அவைகள் உணர்த்தும்.

ஒன்றுமறியாத சிறு குழந்தைகள், இலைகளை கிள்ளிப்போடுவதை கண்டால், அவர்களுக்கு, உண்மையை உணர்த்த வேண்டும். பின்னர் அவர்கள் அப்படி செய்யாமல் இருக்க பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இந்த இயற்கை விதிக்கு முரண்பட்டு மனிதன் நடந்து கொள்ளும் பொழுது, இயற்கை பல நேரங்களில் திருப்பி அடிக்கிறது. பல தலைமுறைகளுக்கு, பல ஜென்மங்களுக்கு "தாவர, மூலிகை சாபம்" தொடர்ந்து வந்து வருத்துகிறது.

தாவரங்கள் செழிப்பாக வளருமிடங்களில், சித்தர்கள் நடமாட்டம், அருள் அதிகமிருக்கும். சற்று வாடி அசந்து இருக்கும் ஒரு செடிகூட, நன்றாக துளிர்க, சித்தர்களை வேண்டிக்கொண்டால், மறுநாள் முதல் நன்றாக மாறுகிற அதிசயத்தை ஒரு மனிதன் காண வேண்டும். இதை என்றாவது ஒருநாள் பரீட்சித்து பார்த்தால், பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம்.

ஒரு சில மூலிகைகளை தவிர, அனைத்து மூலிகைகளையும் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள்தான் பறிக்கலாம். குறிப்பிட்ட மூலிகைகளை, இரவில், அமாவாசை அல்லது பௌர்ணமியில் பறிக்கிற சித்த மருத்துவர்கள், அதற்கு முறையாக பூசை போட்டு பின்னர்தான் பறிப்பார்கள். அப்பொழுதுதான் அந்த தாவரம், தன் மருத்துவ குணத்தை, மருந்து வழி கொடுக்கும். இல்லையேல், தாவர சாபம்தான் மிஞ்சும். இது வைத்தியர்களுக்கு தெரியும்.

அதேபோல் எல்லா வருடமும் வரும் அக்னி நட்சத்திர காலத்தில் (24 நாட்கள்) எந்த ஒரு தாவரத்தையும். மரத்தையும் வெட்டுவதோ, அழிப்பதோ கூடாது. மேலும்,மேலும் நிறைய நீர் ஊற்றி, அவைகள் நலமாய் வாழ மனிதர் வழி வகுக்க வேண்டும்.

மனிதரின் அத்தனை உணர்வுகளும், தாவரங்களுக்கு உண்டு. மனிதனின் பேராசை, பிறரை அழித்து, தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற உணர்வு மட்டும் , அவைகளுக்கு இல்லை. இதில் யார் உயர்ந்தவர்?

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday, 11 June 2020

சித்தன் அருள் - 870 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


யோனி முத்திரை:-


யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு
தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்
மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்தி
மேலான அண்டமொடு புவனஞ்சித்தி
மய்யப்பா மையமென்ற சுழினைசித்தி
மாலொடு லட்சுமியும் தனங்கள்சித்தி
பையப்பா யோனி முத்திரயைப் பெற்று
பக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"

மேலே படத்தில் உள்ளவாறு ”யோனி முத்திரை”யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”றீங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.

அபான முத்திரை:-


அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"சித்தான அபான முத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்ய
வத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்தி
மகத்தான கற்பூர தீபஞ்சித்தி
வித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்தி
வேத மயமான சிவயொகஞ்சித்தி
சத்தான அபான முத்திரயினுடமகிமை
சங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே"

மேலே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்.

சுவகரண முத்திரை:-


தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

"சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு
சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்
பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி
சகலகலை சாத்திரமுஞ் சித்தி
தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி
திருவாசி ஆனதொரு வாசிசித்தி
தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி
சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே"

சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”சம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா.

முகுள முத்திரை:-


வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று. நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மனதால் சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையும். பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய் வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.

ருத்ர முத்திரை:-


பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.  இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல் வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும்.

சித்தன் அருள்................. தொடரும்!

Thursday, 4 June 2020

சித்தன் அருள் - 869 - ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் அகத்தியர் அருளால் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், என நினைக்கிறேன். இவ்வுலகில், அகத்தியர், இறைவன் அடியவர்களாக வாழ்ந்து வந்தாலே பெரும் பாக்கியம் என நினைப்பவன் அடியேன். இப்போதுள்ள ஊரடங்கு உத்தரவால், எங்கும் எந்த வேலையும் செய்யாமல், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், த்யானத்தில் அமர்ந்து அகத்தியரை தியானித்து வந்தேன். குறிப்பாக எந்த வேண்டுதலும் இல்லை, இருப்பினும் முன் போல் ஓடிச்சென்று, இறை தரிசனம் கிடைக்க அருளுங்கள் என மட்டும் வேண்டிக்கொள்வேன்.

ஒரு நாள் சித்தன் அருளை வாசிக்கும் ஒரு அகத்தியர் அடியவர், எங்கோ அகத்தியர் நாடியில் வந்து கூறிய அருள்வாக்கை, ஒலிநாடாவாக அனுப்பித்தந்தார். நல்ல விஷயங்கள் பல கூறப்பட்டாலும், அதில் குறிப்பிட்ட மூல மந்திரத்தை ஒரு நாளுக்கு 48 முறை அல்லது முடிந்தவரை ஜெபித்திட, அகத்தியப் பெருமான், சூக்ஷுமமாக தரிசனம், அருள் தந்து வழி நடத்துவேன் என குறிப்பிட்டு கூறியது மனதுள் ஒட்டி நின்றது.

"இது என்ன? இப்படி ஒரு உத்தரவு? யாரையோ தூண்டிவிட்டு ஆட்கொள்ள, அகத்தியப் பெருமான் தகவலை கூறுவது போல் உள்ளதே! சரி! என்ன இருந்தாலும் அடியேனாக இருக்காது! நம் நிலைமைக்கு கூடி போனால் ஒரு சிறு வேலையை கொடுப்பார். இது வேறு யாருக்கோ! என்னவோ தெரியவில்லை!" என்று மனதுள் நினைத்து அமைதியாகிவிட்டேன்.

ஆனால், அதுதான் விதி போலும். அந்த மூல மந்திரம் மனதுள் ஒட்டிக்கொண்டது. தியானத்தின் பொழுது மந்திரமாக மனது ஏற்றுக்கொண்டு, தானாக ஜெபிக்கத் தொடங்கியது. முதல் ஓரிரு நாட்கள் இதை அடியேன் கவனிக்க வில்லை. மூன்றாவதுநாள், த்யானம் முடித்ததும் சித்த மார்க முறைப்படி, மந்திரத்தை குருவுக்கு காணிக்கையாக கொடுக்க நினைக்கும் பொழுது, யோசித்துப் பார்த்தால், தினமும் ஜபம் செய்யும், மந்திரம் விலகி, மூல மந்திரம் ஜெபித்தது நினைவுக்கு வந்தது.

அடடா! இது என்ன செயல். நாம் அறியாமலேயே இப்படி ஒரு மாற்றமா? இன்னும் என்னவென்னலாம் நடக்கப் போகிறதோ, என்று எண்ணத்தில் பூஜை அறையில் இருக்கும் அகத்தியரை உற்று பார்த்துவிட்டு, நமஸ்காரம் செய்து குரு தக்ஷிணை கொடுத்துவிட்டேன்.

மறுநாள் த்யானத்தில் குருவின் உருவமோ, பாதமோ வருவதற்கு பதில், பூசையில் வைக்கும் ஒரு "கும்பம்" வந்தது. பின்னர் அவரின் பாதம்.

"சரிதான்! நமக்கு பயித்தியம் பிடிக்கிற வரை விடமாட்டார் போல" என தோன்றியது. வந்தது நல்ல சகுனமாயினும், அவர் என்ன நினைக்கிறார் என புரியவில்லை.

உடனேயே, "இதன் அர்த்தம், நீங்கள் நினைப்பது என்ன என்று, தெளிவாக வழி காட்டுங்கள்!" என சமர்பித்தேன்.

இரண்டு நாட்கள் தியானத்திலும், கும்பம்தான் வந்தது ஆயினும் ஜபம், மூல மந்திரம் ஆகிவிட்டது.

இரண்டு நாட்களுக்குப்பின், சித்தன் அருள் வலைப்பூ வாசகரும் அகத்தியர் அடியவருமான திரு. கல்யாண்குமார் என்பவர், அகஸ்தீஸ்வரர் கோவில் புனருத்தாரணத்திற்கு, உதவி தேவை  எனவும் அதை பற்றிய தகவலையும் தெரிவித்திருந்தார். அவர் அனுப்பி தந்த, அந்த தகவலை கீழே தருகிறேன்.

உடனேயே அனைத்தும் புரிந்தது. புனருத்தாரண, கும்பாபிஷேகத்தில், அடியேனால் இயன்றதை கொடுத்து பங்கு பெற வேண்டியதுதான் என தீர்மானித்தேன்.

அகத்தியர் அடியவர்களே! நீங்களும் பங்கு பெற விரும்பினால் கீழே தரப்பட்டிருக்கும் தகவலை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.

எல்லாம் அவர் செயல்!

சித்தன் அருள்.............. தொடரும்!

அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம்,
பாக்கம், திருநின்றவூர், ராமநாதபுரம்.

இது பலநூறு ஆண்டுகளுக்கு மேல் வெயில்,மழை என முள் புதர்களுக்கிடையே வாசம் செய்த அகத்தீஸ்வரர் பெருமான் திருக்கோவில் . திருநின்றவூரில் உள்ள பாக்கம் அடுத்த ராமநாதபுரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயத்தில் பலரும் அஞ்சி நடுங்கி பார்க்க கூட வேண்டாம் என்று அந்த வழியில் வந்தவர்கள் விரைந்து நடந்து போன காலம் போய் இன்று ஊரே வியந்து பார்க்கும் வானளவு உயர்ந்து நிற்கின்றது அகத்தீஸ்வரர் ஆலய  விமானம்.

அந்த விமானத்திற்கு வர்ணம் பூசவும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு செய்து முடிக்கப்பட வேண்டிய திருப்பணிகள் மட்டும் தற்போது எஞ்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பல அன்பர்களின் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட ஆலயப் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.தற்போது திருப்பணி நிதி பற்றாக்குறை காரணமாக கேள்வி குறியாகி உள்ளது .

"இது சித்தர்கள் பூஜிக்கும் சேத்திரம்.பதினென் சித்தர்களுக்கு தொடர்புடைய திருக்கோவிலாகும்.அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி கிட்டிய தலம். பாடல் பெற்ற தலத்திற்கு இணையான ஆலயம்.சோழ நாடு மன்னனுக்கு சம்பந்தப் பட்ட திருத்தலம் .உன்னத சக்திகள் நிரம்பப் பெற்ற  தலம்.பச்சை கதிர் வீசும் மரகதாம்பிகை உள்ள திருக்கோவில். இந்த திருக்கோவிலின் வரலாறு சோழ நாட்டில் உள்ள ஒரு ஓலை சுவடியில் உள்ளதாகவும் ,அது தக்க காலத்தில் வெளிப்படும். இந்த திருப்பணி செய்பவர்களுக்கு நந்தியம் பெருமானின் ஆசிகள் கிட்டும். குடமுழுக்கின் போது சிவபெருமான் அம்பிகையுடன், ஆடலரசன், ரிஷிகள், நவகோடி சித்தர்கள், லோபாமுத்திரையுடன் அகத்திய பெருமானும் எழுந்தருள்வார்கள். திருப்பணியில் பங்கு கொள்ளும்  லௌகிகத்திலும் உள்ளோருக்கு வேண்டியது கிட்டும் மற்றும் ஆன்மிகத்தில் உள்ளோருக்கு  முக்தி கிட்டும். போகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்கு தொடர்புடைய திருக்கோவில். தில்லைக்கு மற்றும் திருப்பட்டுருக்கும் சம்பந்தம் உள்ள கோவில்" என்று  ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவநாடியில் முருகப் பெருமானும் அகத்தியர் ஜீவநாடியில் அகத்திய பெருமானும் தெரிவித்துள்ளார்.

திருப்பணிக்காக இருகரம் ஏந்தி உங்கள் முன்பு நிற்கின்றோம். கயிலை மலையான் திருவருளால் கற்கோவில் எழும்பட்டும்.

திருப்பணியில் கலந்துக்கொள்ள தொடர்புக்கு:

என்றும் இறைபணியில்

திரு.D.கஜேந்திரன்
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமூக சேவா அறக்கட்டளை திருப்பணிக்குழு

மேலும் விவரங்களை நேரிலோ அல்லது கீ்ழ்கண்ட அலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

CELL : 9789053053

நன்கொடை வழங்குவதற்கான  வங்கி கணக்கு விபரங்கள்

Name:AGATHEESHWARAR TRUST
A/C NO:6161101002984
IFSC:CNRB0006161
MICR: 600015165
Bank:CANARA BANK,
Branch:THIRUNINRAVUR BRANCH



சித்தன் அருள் - 868 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


விரல் நுனியில் முடிவு பெறும் நரம்பு மண்டலத்தை, விதவிதமான முத்திரைகள் வழி, தூண்டிவிட்டு அதனுடன் சித்தர்கள் கூறிய மந்திரங்களை, குறிப்பிட்ட அளவு சரியான முறையில் ஜபம் பண்ண, அவர்கள் அருளிய விஷயங்கள் எளிதில் கைவல்யமாகும். தன்வந்தரி சித்தர் கூறிய முறையை பார்ப்போம்.   தன்வந்திரி சித்தர் தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்கிற நூலில் யோக முத்திரைகள் பற்றி கூறுகிறார்.

"சுத்தமுள்ள முத்திரைகள் தன்னிலேதான்
சுகமான ஆறுவகை முத்திரைகள் நன்று
பக்தியுடன் ஆறுவகை முத்திரையினாலே
பகுத்தறிந்து ஆதார தெரிசனைகள் பெற்று
வித்தான பிறவிதனை நன்றாய் நீக்கி
வேதாந்த பூரணமாய் விளங்கு முக்தி"

யோக முத்திரைகளில் பல வகை இருந்தாலும் தனித்துவமான சிறந்த முத்திரைகள் ஆறு உள்ளன. இவற்றை தவறாது செய்பவர்களுக்கு பிறவித் துன்பம் நீங்கி வேதாந்த பூரணமாய் முக்தி நிலை கிட்டும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை, வரிசை தவறாமல், பிரம்ம முகூர்த்தத்தில், ஒரு முத்திரைக்கு ஏழு நிமிடங்கள் வீதம் மொத்தமாக நாற்பத்தி இரண்டு நிமிடங்கள் செய்தல் வேண்டும். இந்த யோக முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிராதானமாக உள்ளது என்று பின்வருமாறு விளக்குகிறார்.

"முத்தியுள்ள கரத்தின் விரல் மகிமைதன்னை
முக்கியமுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
பத்தியுள்ள அங்குட்டம் பெருவிரலால் நிற்கும்
பதிவாக அடுத்த விரல் தர்ச்சினையாமைந்தா
சித்தமுள்ள நடுவிரல்தான் மத்திமையாநிற்கும்
திறமான பவுத்திரந்தான் அனாமிகையாய்நிற்கும்
சுத்தமுள்ள சுண்டுவிரல் கனுட்டிகையாய்நிற்கும்
சுகமாக இதையறிந்து முத்திரையுஞ் செய்யே"

பெருவிரலை ”அங்குட்டம்” என்றும், அதற்கு அடுத்த விரலை ”தர்ச்சினை” என்றும், நடுவிரலை ”மத்திமை” என்றும், பவுத்திர விரலை  (மோதிர விரல்) ”அனாமிகை” என்றும், சுண்டு விரலை ”கனுட்டிகை” என்றும், இவற்றை உணர்ந்து முத்திரையை செய்யவேண்டும் என்கிறார். கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது. இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார். அத்துடன் இவற்றை பிரம்ம முகூர்த்தத்தில், தூய, அமைதியான அறையினில் நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, உடலை தளர்த்தி, இரண்டு கைகளையும் முழங்கால்கள் மீது தளர்வாய் வைத்து முத்திரை பிடித்து அதற்கான மந்திரங்களை மனதில் செபித்தல் வேண்டும்.அத்துடன் இந்த முத்திரைகளை செய்ய தொடங்கும் போது...

"சித்தியுள்ள முத்திரைகள் ஆறுக்குந்தான்
சிவாயகுரு முத்திரையைச் சொல்லக் கேளு
பத்தியுடன் சொல்லுகிறேன் புருவ மத்திபதிவாக
இருகரமும் ஒன்றாய்க் கூட்டிசுத்தமுடன்
லாடவிழி கண்ணின் நேரேதொழுது மனம் 
நினைத்தபடி சுத்தமாக முக்தியுடன் வரங்கொடுக்க
வேண்டுமென்று மோனமுடன் மனோன்மணியை தியானம்பண்ணே"

சித்தி பெற செய்யும் முத்திரைகளுக்கு மூலாதாரமாய் உள்ள சிவாய குரு முத்திரையைச் செய்யவேண்டும். புருவ மத்திக்கு சமீபமாக இருகரங்களையும் ஒன்றாகக் குவித்து கண்களை மூடிக் கொண்டு "முக்தியுடன் வரங்கள் வேண்டும்" என்று மனதால் மனோன்மணி தாயை வேண்டிக் கொண்டு அந்த ஆறு முத்திரைகளையும் செய்ய தொடங்க வெண்டும் என்று சொல்கிறார்.


மோகினி முத்திரை:-

"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து
அருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றி
ஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டி
உத்தமனே மகாரமென்ற மவுனத்தேகி
காமப்பால் கானற்பால் சித்தியாகும்
கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்
வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்
மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"

இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும் (அம்மை, அப்பன்), பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும், சித்தியாகும் என்கிறார்.


சோபினி முத்திரை:-

"பாரப்பா சோபினி முத்திரையைச் செய்து
பக்தியுடன் அம்மென்று தியானஞ்செய்ய
நேரப்பா சொல்லுகிறேன் சர்வலோகம்
நிசமான ஆதாரஞ் சித்தியாகும்
மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி
மெய்யான மயேச்வரனும் மீச்வரியுஞ்சித்தி
காரப்ப சோபினி முத்திரையினாலே
கண்ணடங்கா போதசிவ யோகமாமே"

இந்த முத்திரையை இரு கைகளில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”அம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நிஜமான ஆதாரப் பொருளை உணர்வதுடன், மகேச்வரன், மகேச்வரி அருள் கிடைப்பதுடன், சிவயோகம் சித்திக்கும் என்கிறார்.

திருவினி முத்திரை:-

"காணவே திருவினி முத்திரையைக் கொண்டு
கருணையுடன் வங்கென்று தியானஞ்செய்யில்
பூணவே ருத்திரர் முதல் சகல செந்தும்
பூலோக ராசரோடு வசியமாகும்
தோணவே சந்தான சவுபாக்கியம்
சுத்தமுடம் ஐந்தறிவுஞ் சித்தியாகும்
பேணவே ருத்திரியும் சித்தியாகும்
பிலமான திருவினியால் சித்தியாமே"

மேலே படத்தில் காட்டியுள்ளவாறு திருவினி முத்திரையினை இரு கைகளிலும் அமைத்து, கண்களை மூடி, மனதினை ஒருமுகப் படுத்தி மனக்கண்ணால் புருவ மத்தியை கவனித்து பார்த்து ”வங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய ருத்திரன் முதலான அனைத்து தெய்வங்களுடன், பூலோக அரசர்களும் வசியமாவதுடன் புத்திர பாக்கியமும், ஐந்தறிவும், உருவத்தை மாற்றும் தன்மையும் சித்திக்கும் என்கிறார்.

சித்தன் அருள்...................... தொடரும்!