​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 11 June 2020

சித்தன் அருள் - 870 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


யோனி முத்திரை:-


யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு
தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்
மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்தி
மேலான அண்டமொடு புவனஞ்சித்தி
மய்யப்பா மையமென்ற சுழினைசித்தி
மாலொடு லட்சுமியும் தனங்கள்சித்தி
பையப்பா யோனி முத்திரயைப் பெற்று
பக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"

மேலே படத்தில் உள்ளவாறு ”யோனி முத்திரை”யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”றீங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.

அபான முத்திரை:-


அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"சித்தான அபான முத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்ய
வத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்தி
மகத்தான கற்பூர தீபஞ்சித்தி
வித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்தி
வேத மயமான சிவயொகஞ்சித்தி
சத்தான அபான முத்திரயினுடமகிமை
சங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே"

மேலே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்.

சுவகரண முத்திரை:-


தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

"சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு
சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்
பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி
சகலகலை சாத்திரமுஞ் சித்தி
தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி
திருவாசி ஆனதொரு வாசிசித்தி
தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி
சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே"

சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”சம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா.

முகுள முத்திரை:-


வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று. நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மனதால் சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையும். பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய் வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.

ருத்ர முத்திரை:-


பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.  இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல் வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும்.

சித்தன் அருள்................. தொடரும்!

8 comments:

  1. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி

    ஓம் அருள்மிகு முருகப்பெருமான் ஓதியப்பர் துணை

    ஓம் ஸ்ரீ லோப முத்திரா தாய் சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    நன்றி ஐயா

    ReplyDelete
  2. Banukumar
    Om Lobamudra samedhay agatheesaya namaha
    Om Agatheeyara thiruvadigalay saranam
    Om Agatheeyar thiruvadigalay saranam

    ReplyDelete
  3. sir,
    can ladies can do these mudras with chanting in all days, is there any restriction
    Anyone can do this mudras after lighting lamp in the pooja room ie after taking bath or can they start practising this mudras immediately after rising

    ReplyDelete
    Replies
    1. தேவையான அளவு உடல் சுத்தி பண்ணிக்கொண்டு, மனசுத்தியுடன், யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இதெற்கெல்லாம் ஆண், பெண் வேறுபாட்டை சித்தர்கள் ஒரு பொழுதும் உரைத்ததில்லை.

      Delete
  4. Ayya .... Please could you clear my doubt? How to chant this "Sum" sound while doing muthrai?
    Do we have to chat sum, sum sum like that or summmmmmmmmmmmmm like that?

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
    Replies
    1. மூச்சை உள்ளிழுத்து, வெளியே விட்டு தீரும் வரை எந்த ஒருமூல மந்திரத்தையும் ஜெபிக்கலாம். நீங்கள் சொன்னது போல் நீட்டி, ஒருமுறைக்கு ஒருமூச்சு என்று கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

      Delete
    2. மிகவும் அற்புதம் நன்றிகள் ஐயா

      Delete
  5. நமஸ்காரம் ஐயா,

    இங்கு கூறப்பட்டுள்ள மந்திரங்களை உபதேசமில்லாமல் கூறினால் முத்திரையின் முழு பலனை அடைய முடியுமா என தயைகொண்டு விளக்கி ஐயத்தை போக்க வேண்டும்.

    ReplyDelete