​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 25 June 2020

சித்தன் அருள் - 873 - தாவர விதி!


சிறு உயிரினங்கள் இல்லாமல் போனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் மனிதர்கள் மட்டும் இப்பூமியில் இல்லாமல் போய்விடுவர் என இன்றைய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறுகிறார்கள். ஆயின், இந்து மதக்கூற்றின்படி, தாவரங்களைப் படைத்த இறைவன், அவைகளின் வம்சம் தழைத்தோங்க, பிற உயிரினங்களை படைத்தார், என்பதே உண்மை.

'ஓ' என்கிற இரைச்சலுடன், மனிதன் பூமிக்கும், வானத்துக்கும் குதித்து தூரத்தை அளந்தாலும், பெருமை பட்டாலும், அவனால் ஒரு சிறு துரும்பை கூட படைக்க முடியாது. ஒரு புல்லை கூட தன் முயற்சியினால் உருவாக்க முடியாது என்பதே உண்மை. அதற்கும், பஞ்ச பூதங்களின் உதவி வேண்டும்.

மனிதனைத் தவிர, அத்தனை ஜீவன்களும், இயல்பாகவே அவற்றுள், தாவரத்தைப் பற்றிய அறிவை பெற்றுள்ளது. எப்படி? ஒரு நாய்க்கு அஜீரணம் ஏற்பட்டால், ஒரு குறிப்பிட்ட புல்லை தின்று, தன் நோவை போக்கிக்கொள்ளும். அது ஒரு பொழுதும் தாவரங்களை வைத்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதில்லை. அறிவு என்கிற கூற்றின் படி இந்த விஷயத்தில், இங்கு யார் உயர்ந்தவர்?

ஒரு தாவரத்தின் பெயர் "கருடக்கொடி". இது மிக ரகசியமான இடங்களில் பாறைகளுக்கு இடையே, மிக உயர்ந்த மலை பிரதேசங்களில் வளரும். இது கொடி வகையை சேர்ந்தது. சிறந்த அருமருந்து. உடலுக்கு உரத்தை ஏற்படுத்தும். ஆனால் மனிதர் வாசம் ஏற்பட்டால் தன்னை குறுக்கி பாறைகளுக்கு இடையில் மறைந்து கொள்ளும். அத்தனை எளிதில் கிடைக்காது. மருத்துவர்களும், அதர்வண வேதத்தினரும் இதை தேடி செல்வார்கள். மருத்துவர்கள், பூசை, பிரார்த்தனை, வேண்டுதல் போன்றவை சமர்ப்பித்து, இறைவன் அருளால் இந்த கொடி கிடைக்கப் பெறுவார். அதர்வண வேதம் தொடர்ந்து செல்பவர்கள், கண்களுக்கு இது சிக்காது என்று தெரிந்தவர்கள், வேறு குறுக்கு வழியை கையாள்வர். எப்படி?

பாறையும், மரங்கள் அடர்ந்த உயரமான மலை பகுதிக்கு சென்று, அங்கு எந்த மரத்தில் கருடன், கூடு காட்டியுள்ளது என கண்டு பிடித்து, அது உணவு தேட வெளியே சென்ற நிமிடத்தில், அதன் கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் கால்களை, சிறு கம்பியால் கட்டி விடுவார்கள். திரும்பி வந்த கருடன், தன் குஞ்சுகளுக்கு மனிதனால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என உணர்ந்து [மனித உடல் வாசனைதான் காரணம்], அவைகளை காப்பாற்ற வேண்டி, "கருடக்கொடி" இருக்கும் இடம் சென்று. ஒரு நீள கொடியை பறித்து வந்து, அதன் நுனியால், குஞ்சுகளின் காலில் கட்டப்பட்டுள்ள கம்பியை தட்ட, அவை உடைந்துவிடும். உடனேயே, தன் குஞ்சுகளை அங்கிருந்து எடுத்து சென்று விடும். குஞ்சுகளை மனிதன் தொட்டதே இதற்கு காரணம். கருடக்கொடியை அந்த கூட்டிலேயே விட்டு செல்லும் பொழுது, மனிதர் அதை எடுத்துக்கொள்வார். இங்கு யார் உயர்ந்தவர்? மனிதன்?, கருடன்? கருடக்கொடியா? எவ்வளவு பலமான இரும்பு அல்லது உருக்கு போன்றவற்றை கூட இந்த கருடக்கொடியினால் ஒரு தட்டு தட்டினால், அது இரண்டாக பிளர்ந்துவிடும். அந்த அளவுக்கு சக்தி, அந்த மூலிகைக்கு உண்டு. இது ஆச்சரியமாக இல்லை?

தேங்காயை பற்றி சொல்வதானால், அதன் பெயர், "தேவதரு" என்பதற்கேற்ப, சக்தி உடையது. தினமும் உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்டமாலை என்கிற நோய் வராது. அதனுள் இருக்கும் நீர் ஆனது, மரத்தின் வேரால் உறிஞ்சப்பட்டு அந்த காய்க்குள் சென்று விட்டால், பின்னர் அது உடையும் வரை, வெளியுலகை காண்பதில்லை. மனிதக்கண் என்கிற திருஷ்டி தோஷம் இல்லாதது. கங்கையை விட புனிதமானது. இதனால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், அப்படியே இறைவனை மயக்கிவிடலாம். அத்தனை புனிதமானது. உடலை கர்மா வருத்தும் பொழுது, ஒரு தேங்காயை, தலையை சுற்றி, பின் இரவு உறங்கும் பொழுது, வலது பக்கம் தலைமாட்டில் வைத்தால் (தேங்காயின் கண்கள் மேல்நோக்கி இருக்கும்படி), அந்த உடலுக்குள் இருக்கும் கெட்ட கர்மாக்களை, திருஷ்டி தோஷங்களை, எடுத்து, உடலுக்கு நலத்தை கொடுக்கும். நம் மக்களுக்கு, பொருக்கி தின்பதும், விதவிதமான நிறங்களில் சட்டினிக்கு எடுத்துக் கொள்ளவும்தான், தெரியும்.

தாவரங்களிலும், உயிரினங்களிலும், கலப்படம் செய்தால், பின் வரும் தலை முறை, வரண்டுபோய், சந்ததி இன்றி, இருந்தாலும் சிறப்பின்றி, உடல் குறையுடன், நோயுடன் போராடுகிற மனிதனாக வாழ்வதற்கு, இயற்கையின், தாவரங்களின், பிற உயிர்களின் சாபமே காரணம். இதை யார் கவனிக்கிறார்கள். தாவரமும், பிற உயிர்களும் எதிர்ப்பதில்லை என்பதால், அவைகளை அடக்கி ஆள்கிற உரிமையை மனிதன் தானே எடுத்துக் கொண்டுவிட்டான். அந்த அகங்காரமே,அவனுக்கு எதிராக விதி என்கிற ரூபத்தில் இன்றுவரை வேலை செய்து கொண்டிருக்கிறது.

சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள், உடலை, நோயை மட்டும் பார்த்து மருந்து கொடுப்பதில்லை. நோய் என வந்தவரின் கர்மாவையும் உற்று நோக்குவார்கள். அவர்களுக்குள் இருக்கும் தாவர சாபத்தின் அளவு என்ன? இம்மருந்து உள் வேலை பார்த்து, குணப்படுத்துமா என்றெல்லாம் பார்ப்பார்கள்.

மனிதனுக்குத்தான், தாவர சாபங்களினால் சந்ததியே இல்லாமல் போய்விடுகிறதே தவிர, எந்த மரமும்/தாவரமும் அடுத்த தலைமுறையை உருவாக்கிவிட்டுத்தான் இறைவனடியை சேரும். ஏன் என்றால், தாவரங்களுக்கு இருக்கும் கர்மாவை, அவைகளை அழித்து மனிதன் வாங்கிக் கொண்டு விடுகிறான்.

சித்தன் அருள்.................... தொடரும்!

8 comments:

 1. ஐயா வணக்கம்

  திருஷ்டி கழிக்க நாமும் நம் வீடுகளில் அகத்திய மாமுனியின் ஆசிர்வாதத்தோடு தேங்காய் உபயோகோக்கலாமா

  ஓம் லோப முத்ரா அகத்தீசாய நமஹ

  ReplyDelete
  Replies
  1. செய்யலாம். வியாழக்கிழமை திருஷ்டி கழித்து, வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோவிலில் தேங்காயை, உடைத்துவிடலாம்.

   Delete
  2. Thank You Ayya
   Om LobaMudra Sametha Agatheesaya NamaH

   Delete
 2. ayya
  thavara sabam oruvanukku irundhal athu neenga enna vazhi koorungal ayya.

  ReplyDelete
 3. OM LOBAMUDRA SAMEDHAY Agatheesaya Namaha
  OM LOBAMUDRA SAMEDHAY AGATHEESAYA NAMAHA
  OM LOBAMUDRA SAMEDHAY AGATHEESAYA NAMAHA
  OM LOBAMUDRA SAMEDHAY AGATHEESAYA NAMAHA
  OM LOBAMUDRA SAMEDHAY AGATHEESAYA NAMAHA
  OM LOBAMUDRA SAMEDHAY AGASTHEEYAR THIRUVADIGALAY SARANAM
  GOD SHOULD PROTECT ALL FROM THE CORONA VIRUS AND BLESS THE WORLD TO INVENT VACCINATION TO CONTROL THE VIRUS SPREADING
  RAMANAMAHARISHI AND SHIRDI SAI SAVED THE PEOPLE FROM CHOLERA DURING THIER LIFE TIME
  GOD SHOULD HELP US TO RECOVER FROM THIS SITUATION OF STRESS
  OM LOBAMUDRA SAMETHAY AGASTHEEYAR THIRUVIDAGALAY SARANAM
  OM MEENAKSHI AMMAN SAMEDHAY SUNDARESWARAR THIRUVADIGALAY SARANAM
  OM SESHADDRI SWAMIGAL THIRUVADIGALAY SARANAM
  OM RAMANAMAHARISHI THIRUVADIGALAY SARANAM
  OM VALLIMALAI SRI SACHIDHANANDHA SWAMIGALAY SARANAM
  OM SRI SHIRDI SAI BABAVAY SARANAM

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை
  ஓம் ஸ்ரீ சக்தி தேவி சிவபெருமான் துணை

  தாவரங்கள் சாபம் போக என்ன செய்ய வேண்டும் ஐயா

  ReplyDelete
 5. ஒம் ஈஸ்வராய நமக

  ReplyDelete
 6. ஓம் லோபமுத்திரை அன்னை சமையத அகத்திஸ்வரர் நமக!
  https://mookambigaii.blogspot.com/?m=0

  ReplyDelete