​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 4 June 2020

சித்தன் அருள் - 869 - ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் அகத்தியர் அருளால் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், என நினைக்கிறேன். இவ்வுலகில், அகத்தியர், இறைவன் அடியவர்களாக வாழ்ந்து வந்தாலே பெரும் பாக்கியம் என நினைப்பவன் அடியேன். இப்போதுள்ள ஊரடங்கு உத்தரவால், எங்கும் எந்த வேலையும் செய்யாமல், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், த்யானத்தில் அமர்ந்து அகத்தியரை தியானித்து வந்தேன். குறிப்பாக எந்த வேண்டுதலும் இல்லை, இருப்பினும் முன் போல் ஓடிச்சென்று, இறை தரிசனம் கிடைக்க அருளுங்கள் என மட்டும் வேண்டிக்கொள்வேன்.

ஒரு நாள் சித்தன் அருளை வாசிக்கும் ஒரு அகத்தியர் அடியவர், எங்கோ அகத்தியர் நாடியில் வந்து கூறிய அருள்வாக்கை, ஒலிநாடாவாக அனுப்பித்தந்தார். நல்ல விஷயங்கள் பல கூறப்பட்டாலும், அதில் குறிப்பிட்ட மூல மந்திரத்தை ஒரு நாளுக்கு 48 முறை அல்லது முடிந்தவரை ஜெபித்திட, அகத்தியப் பெருமான், சூக்ஷுமமாக தரிசனம், அருள் தந்து வழி நடத்துவேன் என குறிப்பிட்டு கூறியது மனதுள் ஒட்டி நின்றது.

"இது என்ன? இப்படி ஒரு உத்தரவு? யாரையோ தூண்டிவிட்டு ஆட்கொள்ள, அகத்தியப் பெருமான் தகவலை கூறுவது போல் உள்ளதே! சரி! என்ன இருந்தாலும் அடியேனாக இருக்காது! நம் நிலைமைக்கு கூடி போனால் ஒரு சிறு வேலையை கொடுப்பார். இது வேறு யாருக்கோ! என்னவோ தெரியவில்லை!" என்று மனதுள் நினைத்து அமைதியாகிவிட்டேன்.

ஆனால், அதுதான் விதி போலும். அந்த மூல மந்திரம் மனதுள் ஒட்டிக்கொண்டது. தியானத்தின் பொழுது மந்திரமாக மனது ஏற்றுக்கொண்டு, தானாக ஜெபிக்கத் தொடங்கியது. முதல் ஓரிரு நாட்கள் இதை அடியேன் கவனிக்க வில்லை. மூன்றாவதுநாள், த்யானம் முடித்ததும் சித்த மார்க முறைப்படி, மந்திரத்தை குருவுக்கு காணிக்கையாக கொடுக்க நினைக்கும் பொழுது, யோசித்துப் பார்த்தால், தினமும் ஜபம் செய்யும், மந்திரம் விலகி, மூல மந்திரம் ஜெபித்தது நினைவுக்கு வந்தது.

அடடா! இது என்ன செயல். நாம் அறியாமலேயே இப்படி ஒரு மாற்றமா? இன்னும் என்னவென்னலாம் நடக்கப் போகிறதோ, என்று எண்ணத்தில் பூஜை அறையில் இருக்கும் அகத்தியரை உற்று பார்த்துவிட்டு, நமஸ்காரம் செய்து குரு தக்ஷிணை கொடுத்துவிட்டேன்.

மறுநாள் த்யானத்தில் குருவின் உருவமோ, பாதமோ வருவதற்கு பதில், பூசையில் வைக்கும் ஒரு "கும்பம்" வந்தது. பின்னர் அவரின் பாதம்.

"சரிதான்! நமக்கு பயித்தியம் பிடிக்கிற வரை விடமாட்டார் போல" என தோன்றியது. வந்தது நல்ல சகுனமாயினும், அவர் என்ன நினைக்கிறார் என புரியவில்லை.

உடனேயே, "இதன் அர்த்தம், நீங்கள் நினைப்பது என்ன என்று, தெளிவாக வழி காட்டுங்கள்!" என சமர்பித்தேன்.

இரண்டு நாட்கள் தியானத்திலும், கும்பம்தான் வந்தது ஆயினும் ஜபம், மூல மந்திரம் ஆகிவிட்டது.

இரண்டு நாட்களுக்குப்பின், சித்தன் அருள் வலைப்பூ வாசகரும் அகத்தியர் அடியவருமான திரு. கல்யாண்குமார் என்பவர், அகஸ்தீஸ்வரர் கோவில் புனருத்தாரணத்திற்கு, உதவி தேவை  எனவும் அதை பற்றிய தகவலையும் தெரிவித்திருந்தார். அவர் அனுப்பி தந்த, அந்த தகவலை கீழே தருகிறேன்.

உடனேயே அனைத்தும் புரிந்தது. புனருத்தாரண, கும்பாபிஷேகத்தில், அடியேனால் இயன்றதை கொடுத்து பங்கு பெற வேண்டியதுதான் என தீர்மானித்தேன்.

அகத்தியர் அடியவர்களே! நீங்களும் பங்கு பெற விரும்பினால் கீழே தரப்பட்டிருக்கும் தகவலை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.

எல்லாம் அவர் செயல்!

சித்தன் அருள்.............. தொடரும்!

அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம்,
பாக்கம், திருநின்றவூர், ராமநாதபுரம்.

இது பலநூறு ஆண்டுகளுக்கு மேல் வெயில்,மழை என முள் புதர்களுக்கிடையே வாசம் செய்த அகத்தீஸ்வரர் பெருமான் திருக்கோவில் . திருநின்றவூரில் உள்ள பாக்கம் அடுத்த ராமநாதபுரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயத்தில் பலரும் அஞ்சி நடுங்கி பார்க்க கூட வேண்டாம் என்று அந்த வழியில் வந்தவர்கள் விரைந்து நடந்து போன காலம் போய் இன்று ஊரே வியந்து பார்க்கும் வானளவு உயர்ந்து நிற்கின்றது அகத்தீஸ்வரர் ஆலய  விமானம்.

அந்த விமானத்திற்கு வர்ணம் பூசவும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு செய்து முடிக்கப்பட வேண்டிய திருப்பணிகள் மட்டும் தற்போது எஞ்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பல அன்பர்களின் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட ஆலயப் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.தற்போது திருப்பணி நிதி பற்றாக்குறை காரணமாக கேள்வி குறியாகி உள்ளது .

"இது சித்தர்கள் பூஜிக்கும் சேத்திரம்.பதினென் சித்தர்களுக்கு தொடர்புடைய திருக்கோவிலாகும்.அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி கிட்டிய தலம். பாடல் பெற்ற தலத்திற்கு இணையான ஆலயம்.சோழ நாடு மன்னனுக்கு சம்பந்தப் பட்ட திருத்தலம் .உன்னத சக்திகள் நிரம்பப் பெற்ற  தலம்.பச்சை கதிர் வீசும் மரகதாம்பிகை உள்ள திருக்கோவில். இந்த திருக்கோவிலின் வரலாறு சோழ நாட்டில் உள்ள ஒரு ஓலை சுவடியில் உள்ளதாகவும் ,அது தக்க காலத்தில் வெளிப்படும். இந்த திருப்பணி செய்பவர்களுக்கு நந்தியம் பெருமானின் ஆசிகள் கிட்டும். குடமுழுக்கின் போது சிவபெருமான் அம்பிகையுடன், ஆடலரசன், ரிஷிகள், நவகோடி சித்தர்கள், லோபாமுத்திரையுடன் அகத்திய பெருமானும் எழுந்தருள்வார்கள். திருப்பணியில் பங்கு கொள்ளும்  லௌகிகத்திலும் உள்ளோருக்கு வேண்டியது கிட்டும் மற்றும் ஆன்மிகத்தில் உள்ளோருக்கு  முக்தி கிட்டும். போகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்கு தொடர்புடைய திருக்கோவில். தில்லைக்கு மற்றும் திருப்பட்டுருக்கும் சம்பந்தம் உள்ள கோவில்" என்று  ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவநாடியில் முருகப் பெருமானும் அகத்தியர் ஜீவநாடியில் அகத்திய பெருமானும் தெரிவித்துள்ளார்.

திருப்பணிக்காக இருகரம் ஏந்தி உங்கள் முன்பு நிற்கின்றோம். கயிலை மலையான் திருவருளால் கற்கோவில் எழும்பட்டும்.

திருப்பணியில் கலந்துக்கொள்ள தொடர்புக்கு:

என்றும் இறைபணியில்

திரு.D.கஜேந்திரன்
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமூக சேவா அறக்கட்டளை திருப்பணிக்குழு

மேலும் விவரங்களை நேரிலோ அல்லது கீ்ழ்கண்ட அலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

CELL : 9789053053

நன்கொடை வழங்குவதற்கான  வங்கி கணக்கு விபரங்கள்

Name:AGATHEESHWARAR TRUST
A/C NO:6161101002984
IFSC:CNRB0006161
MICR: 600015165
Bank:CANARA BANK,
Branch:THIRUNINRAVUR BRANCH14 comments:

 1. கண்டிப்பாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறேன். என்றும் அகத்தியர் அருளுடன் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 2. Iyya vannakkam. Athu Enna moola manthiram entrikoorinal nangalum prathanai seivom.nantri

  ReplyDelete
  Replies
  1. I posted the moola manthra in May, 2020 itself. No one noticed it. What can I do? Its here. Go and see it.

   https://siththanarul.blogspot.com/2020/05/867.html

   Delete
 3. Sir send gurunadar kalyana photo

  ReplyDelete
 4. எனக்கு ஒரு சந்தேகம் தங்கள் நிச்சயம் பதில் கூற முடியும்.ராமர் பாதம் எதை குறிக்கிறது என்று விளக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete

 5. வினை தீர்க்கும் விநாயகர் அகவல் - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை
  அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

  ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக நிறைவு பணியில் இருப்பதால் மீண்டும் பொருளுதவி கேட்டு இன்றைய பதிவில் தொடர்கின்றோம். இந்தப் பதிவில் நாம் இரண்டு வித உதவிகளை கேட்கின்றோம். ஒன்று பொருளுதவியாக வேண்டுகின்றோம். பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் தாராளமாக பொருளுதவி செய்து எம் பெருமான் அருள் பெற வேண்டுகின்றோம். இரண்டாவது உங்களிடம் அருளுதவி எதிர்பார்க்கின்றோம். இதனை நீங்கள் உங்கள் உடல் உழைப்பால் செய்யலாம். இதனை அன்பர்கள் கூட்டுப் பிரார்த்தனையாக செய்திட உங்களிடம் வேண்டுகோள் வைக்கின்றோம்.

  முதலில் கூட்டுப்பிரார்த்தனை பற்றிய செய்தியை தங்களிடம் பகிர விரும்புகின்றோம்.

  Read more - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_3.html

  நன்றி
  வணக்கம்

  ReplyDelete
 6. ஓம் அகத்தீசாய நம:🙏

  ReplyDelete
 7. Sir, Can you let us also know the moola mantra. I am very much inspired to chant, to get Agathiyar's blessing. Please provide if it is ok.

  ReplyDelete
  Replies
  1. I posted the moola manthra in May, 2020 itself. No one noticed it. What can I do? Its here. Go and see it.

   https://siththanarul.blogspot.com/2020/05/867.html

   Delete
 8. Ayya, should we inform via mail to Gajendran ayya for online transfers?

  ReplyDelete
 9. sir,namaskaram,today evening itselt Thiruvonum star4.30 onwards starting,it's correct or not pls tell me,becoz prayer for animals,for iyya instruction.

  ReplyDelete
 10. You can do it on 10/06/2020, being Wednesday.

  ReplyDelete