அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Sunday, 31 May 2020
சித்தன் அருள் - 867 - அகத்தியர் அருள் வாக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை!
ReplyDeleteஅனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளத்தின் மூலம் மாதந்தோறும் அமாவாசை அன்று மோட்ச தீப வழிபாடு, ஆயில்ய நட்சத்திரம் அன்று ஸ்ரீ அகத்தியர் வழிபாடு, உழவாரப் பணி மற்றும் அன்னசேவை செய்து வருகின்றோம். இது அனைவருக்கும் தெரிந்த செய்தி ஆகும். வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு சுமார் 10 பேர் அளவிலே நடைபெற்றது. வருகின்ற வியாழக்கிழமை அதிகாலை 05:30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை ஆயில்யம் நட்சத்திரம் வருகின்றது. வழக்கமான பூசை இம்முறை நடைபெறும்.
தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள் இன்று நாம் குறிப்பிட்ட ஆயில்ய நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின், குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி இல்லத்திலே வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.
அகத்தியம். பேச பேச திகட்டாதது. கேட்க கேட்க இனிமையானது. உண்ண உண்ண அமிர்தமானது. இன்றைய பதிவில் 2018ம் ஆண்டில் நம் தளம் கொண்டாடிய அகத்தியர் ஜெயந்தி விழாவின் துளிகளை இங்கே பகிர உள்ளோம்.
திருச்செந்தூரில் திருவிழா, பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க!, தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018), அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை பெருவிழா (26/12/2018), கும்பமுனி குருவே சரணம்! சரணம்!!, ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 7 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா, அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! என்று அகத்தியர் ஜெயந்தி அழைப்பிதழ் பதிவுகள் நம் தலத்தில் அளித்தோம். நாம் அன்றைய தினம் நம் TUT நண்பர்களோடு பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு சென்று வந்தோம்.
Read more - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html
நீங்கள் "தேடல் உள்ள தேனீக்களாய் - TUT" குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/LHBzBMo1BXp244IZ82pcLh
வணக்கம் ஐயா
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
இஷ்ட தெய்வம் உபாசனை என்றால் என்ன எப்படி செய்வது ஐயா. முருகப்பெருமானை உபாசனை செய்ய மந்திரம் தாருங்கள் ஐயா
தியானம் செய்ய துவங்கும்போது அமைதி அல்லது ஓம் என்று சொல்ல வேண்டுமா? ஐயா தங்களின் வழிகாட்டுதல் தேவை. நிறைவேற்றிக் தாருங்கள். நன்றி ஐயா
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!
Deleteவணக்கம்,
இஷ்ட தெய்வம் அல்லது வழிபட வேண்டிய தெய்வத்தை, அவரவர் ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகம் எது என்பதை வைத்து கண்டுபிடிக்க வேண்டும்.
சூரியன் ஆனால் - சிவபெருமான்
சந்திரன் ஆனால் - அம்பாளுடன் கூடிய சிவபெருமான்
செவ்வாய் ஆனால் - சுப்ரமண்யர், அம்பாள்
புதன் ஆனால் - பெருமாள்
வியாழன் ஆனால் - தக்ஷிணாமூர்த்தி (தெற்கு நோக்கிய சிவன்), அகத்தியர், ஹயக்ரீவர் போன்றோர்
சுக்கிரன் ஆனால் - விநாயகப் பெருமான், துர்கை, மஹாலக்ஷ்மி போன்றவர்கள்.
சனி ஆனால் - தாயாருடன் இருக்கும் பெருமாள், ராமர், ஆஞ்சநேயர்
ராகு ஆனால் - துர்கை,
கேது ஆனால் - விநாயகர்
ஓம் என்கிற பிரணவம் தான் எல்லாவற்றிற்கும் மூலம். அதை சற்று அதிர்வு உடலில் ஏற்படும்படி ஒரு சில நொடிகள் உச்சரிப்பதால், மனம் ஒன்று சேரும். பின்னர் பூசை செய்யலாம்.
முதலில் வெளியில் உருவ வழிபாடாக பூசை செய்து மனம் ஒன்றிய நிலையை ஒரு சில நாட்கள் அடைந்த பின், விளக்கேற்றி வைத்து உள் பூசையாக தொடரலாம். இறை உருவமோ, பாதமோ நம் மார்பினில் (ஹ்ருதயகமலம்) இருத்தி பூசை செய்து, பின்னர் சிலநாட்களில் கண்டத்தில் அமர்த்தி பூசை செய்து, அதன் பின் சுழுமுனையில் உங்கள் இஷ்ட ரூபத்தில் அமர்த்தி, நிரந்தரமாக பூசை செய்யலாம். உள்பூசைக்கு 100% பலன் உண்டு. அனைத்தும் அமைதியாகி, அடங்கிவிடும்.
அகத்தியப் பெருமான் உடனிருந்து வழிநடத்த பிரார்த்திக்கிறேன்.
ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி
ReplyDeleteஓம் ஸ்ரீ லோப முத்திரா தாய் சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ஓம் அருள்மிகு முருகப்பெருமான் துணை
கோடான கோடி நன்றிகள் ஐயா தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றிகள் ஐயா.பின்பற்றி இறை அருள் அடைகிறோம் ஐயா.
ஓம் அருள்மிகு ஸ்ரீ லோப முத்திரா தாய் சமேத ஐயா, மேல் கூறப்பட்டுள்ள தெய்வங்கள் மந்திரம்
ReplyDeleteதாருங்கள் ஐயா.
நன்றி ஐயா
Can we chant "Om aum agatheesaya namaha"
ReplyDelete108 times for 48 days?
Yes!
Deleteஓம் அம் அகத்தீசாய நமஹ. மிக்க நன்றி. அனைவருக்கும் நல்லருள் செய் ஞானக்கடலே அகத்தீசா
ReplyDelete