​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 3 May 2020

சித்தன் அருள் - 862 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


அப்படிப்பட்ட ஒரு நல்ல மாற்றத்துக்காகத்தான் அடியேனின் நண்பர் காத்திருந்தார். மூச்சின் அதிர்வலைகள், பிராணாயாமப் பயிற்சி வழி உள்ளே செலுத்தப்படும் பொழுது, அது எதிர்பார்த்த இடத்திற்கு சென்று, அந்த உடலுக்கு தேவையானபடி வேலை செய்கிறதா என்றறிய, உடலின் ஏதேனும் ஒரு திடீர் அசைவு தெரிவிக்கும். இவர் விஷயத்தில், அவர் நடந்ததை நல்ல அறிகுறியாக எடுத்துக்கொண்டு, ஒரு தீர்மானத்தை எடுத்தார், யோகா ஆச்சாரியன்.

அன்றைய தினம், சற்று நேரமெடுத்து, நிதானமாக, அவரை 80வது நிலைக்கு அழைத்து வந்து, குருவை பிரார்த்தித்து, ஆதார சக்ரங்களை, உருவேற்றி, அபான வாயுவை முடிச்சு போட்டார். உள்ளுக்குள் முடிச்சு போடப்பட்ட வாயு, உதறிக்கொண்டு தலைக்கு ஏறியது. அவருக்கு ஒருவித அவஸ்தை தொடங்கி வியர்க்க தொடங்கியது.

உச்சியில் தொட்டு பார்த்து, வாயுவின் கட்டுப்பாட்டினால் சூடு ஏறி இருப்பதை கண்டு, சந்திரக்கலையை ப்ராணாயாமத்தினால் நெருடி உடலை குளிர்விக்க தொடங்கினார். சிறிது நேரத்துக்குப்பின் அவர் சமநிலைக்கு வந்தார்.

"இனி கொஞ்ச நாட்களுக்கு நிறயவே கடினமாகத்தான் இருக்கும். இயற்கை உபாதைகள் அத்தனை எளிதாக வெளியேறாது. நிறையவே சிரமம் இருக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

ஒரு மனித உடலில், பிராணனும், அபானனும் கைகோர்த்து இருக்கும் வரை உயிருக்கு பிரச்சனை இல்லை. ஆனால், உடலைவிட்டு போய்விடுவோம், இத்தனை சிரமங்கள் எதற்கு என ஆத்மா தீர்மானிக்க, பிராணன் அதை உணர்ந்துவிட்டால், முதலில் பிராணன் செய்வது, அபானன் கூட கோர்த்த கையை விடுவித்துக் கொள்ளும். உடனேயே, அபானன் வெளியேறிவிடும், பின்னர் மற்ற வாயுக்கள் உடலை விட்டு செல்லத் தொடங்கும். இப்படிப்பட்ட நிலையில், விதி அனுமதிக்குமா என்று பார்த்துவிட்டு, முடிச்சுப்போட, ஆதார சக்கரங்களை தொட்டு எப்படி மெருகேற்றுவது என்று நன்கு தெரிந்த ஒருவரால் மட்டுமே, முடியும்.

இவர் விஷயத்தில் இறையருளால், விதி வழிவிட்டது.

முடிச்சுப்போட்டதின் வேதனையை பொறுத்துக்கொண்டே விரைவில் 90வது நிலையை தொட்டார், அவர்.

இந்த தினத்துக்காகத்தான் அடியேனின் நண்பர் காத்திருந்தார்.

அன்றைய தினம், அனைத்து ஆதார சக்கரங்களையும் திரட்டி கூட்டி, ப்ராணனில் புகுத்தி, கும்ப நிலையை உருவாக்கினார்.

"இனிமேல், என் உதவி உங்களுக்கு தேவை இல்லை. நீங்களே, இத்தனை நாட்கள் சொல்லித்தந்த பயிற்சியை தொடருங்கள். ஏதேனும் தேவை என்றால் கூப்பிடுங்கள், வருகிறேன். அல்லது நேரம் கிடைக்கும் பொழுது வருகிறேன். இனி உள்ள பயிற்சியை ஒரு மாதம் தொடர்ந்த பின், உங்களுக்கு, இனி மருத்துவம் பார்க்க முடியாது என்ற மருத்துவர் முன் சென்று உங்கள் உடலை பரிசோதிக்கச் சொல்லுங்கள். உங்கள், குடலும், இருதயமும் சரியாகிவிட்டது." என்று கூறி விடை பெற்றார் அடியேனின் நண்பர்.

இன்று, அந்த நோய் வாய்ப்பட்டிருந்தவர், தனியாக கார் ஒட்டி சென்று, விளையாட்டு மைதானத்தில் குறைந்தது ஐந்து சுற்று நடக்கிறார். தன் தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்கிறார். மெலிந்து போயிருந்த உடல், நோய் குணமானபின் சற்றே நல்ல பெருத்து, ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்.

ஒரு மாதத்துக்கு மேல் தங்க மாட்டார் என்ற மருத்துவர்களின் முடிவை மாற்றி எழுதி, இறைவன் அருளால், ஆரோக்கியமாக, தன் குடும்பத்தாருடன் அமைதியாக, கடந்த 18 மாதங்களாக இயல்பாய் வாழ்ந்து வருகிறார்.

சரி! இந்த தொகுப்பின் தலைப்புக்கும், இந்த நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கலாம். கூர்ந்து கவனியுங்கள்!

அதிர்வும், தசவாயுவும். இவை இரண்டும்தான் ஒருவரின் உடலில் உள்ள எந்த குறைவையும், வியாதியையும் குணப்படுத்தும்.

ரெய்கி என்கிற முறையில், அதிர்வுதான்.
யோகாப்யாசத்தில், சித்தர்கள் புகுத்தியதும் அதிர்வுதான்.
நாம் உச்சரிக்கும் மந்திரங்களில், அதிர்வுதான்.

ஓம் என்கிற ப்ரணவத்திலிருந்து தோன்றியதுதான் பிற மந்திரங்கள். ஆகவே, உச்சரிக்கும் மந்திரம் எதுவாயினும், மனம் ஒன்றி அதன் அதிர்வு உடலெங்கும் பரவுவதை உணர்ந்து புரிந்து கொண்டு, முடிந்த வரையில் தனிமையில் அமர்ந்து, மூல மந்திரங்களை உருப்போட்டு உங்கள் வாழ்வை மெருகேற்றுங்கள். உச்சரிப்பு சரியா, தவறா என்கிற எண்ணம் வேண்டாம்.

உங்கள் திட நம்பிக்கையை கண்டு, சரியான நேரத்துக்கு பெரியவர்கள் இறங்கி வந்து, தவறிருந்தால், திருத்தி, வழி நடத்துவார்கள்.

அவர்கள் தேடும் உன்னத ஆத்மாவாய் நீங்கள் மாறிவிடுங்கள்.

உங்கள் மனம் இறை அமருமிடமானால், சித்தர்கள் உங்களைத் தேடி வருவார்.

மேலும் சில மூல மந்திரங்கள், உங்கள் வாழ்க்கைக்காக.

அதோ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள்

1. துங்-நமசிவய - எதிரியின் நண்பர்களுக்குள் பகை உண்டாகும்.
2. ஓம்-கங்-சிவய - சக்தி அருள் உண்டாகும்.
3. ஓம்-சிங்-சிவயநம - ஸ்தம்பனம் (நிலைகுத்தல்) என்கிற சித்தி உண்டாகும்.
4. ஓம்-பங்-சிவயநம - பேசாத பிரம்ம அக்ஷரம் அறியப்படும்.
5. ஓம்-யங்-சிவயநம - சங்கடங்கள் தீரும்.
6. ஓம்-மாங்-சிவயநம - வருணன் மூலம் ஐஸ்வர்யம் உண்டாகும்.
7. ஓம்-மங்-நமசிவய - கடல்களை வற்றச் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
8. கெங்-ஓம்-நமசிவய - யாவரும் வசியமாவர்.
9. ஓம்-மங்-யங்-சிவய - விஷங்கள் பறந்தோடும்.
10. அங்-ரங்-ஓம் சிவய - கடலைத் தாண்டி வானத்தில் பறக்கலாம்.
11. ஓம்-அங்-சிங்-சிவயநம - சுவர்க்க கன்னியரைக் காணலாம்.
12. ஓம்-வங்-சிங்-சிவயநம - முக்குணத்தை வெல்லலாம்.
13. ஹிரீம் நமசிவய - விஷம் முறியும்; காணாத காட்சி காணலாம்.
14. ஐ-உம்-சிவயநம - நான்கு வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அறியலாம்.
15. வங்-சிங்-ஓம்-சிவய - தேவர்கள் தரிசனம் கிடைக்கும்.
16. சங்-சிவயநம - விஷத்தால் இறந்தவரை எழுப்பலாம்.
17. ஓம்-துங்-சிவயநம - ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவை செய்யலாம்.
18. ஹீ-வம்-ஹிரிம்-ஓம்-சிவயநம - பெரிய நிலப்பரப்புக்கு அதிபனாவான்.
19. சிங்-நமசிவய - தென்னை மரத்தை வளைக்கலாம்.
20. வங்-சிவயநம - மழையில் நனையாமல் செல்லலாம்.
21. சிவய-ஓம்-ஸ்ரீயும் - மழையை நிறுத்தலாம்.
22. கிலி-உம்-சிவ - ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
23. ஓம்-கங்-சிவ்-உம்-சிவய - கடலின் மேல் ஓடலாம்.
24. சங்-யவ்-சிமந - ஓடும் நீரை நிறுத்தி அதன்மேல் நடக்கலாம்.
25. மங்-நங்-சிங்-சிவய - பிசாசுகளையும் ராட்சஸர்களையும் அடக்கலாம்.

வாம தேவத்தைச் சார்ந்த ஒன்பது மந்திரங்கள்.

1. ஓம்-புரோம்-சிவய - அமுதத்தைச் சுவைக்கலாம்.
2. ஓம்-ஐ-உம்-சிவய - மோனத்தில் இருக்கும் முனிவர்களைத் தரிசிக்கலாம்.
3. ஐ-உம்-ஸ்ரீ-சிவய - ககன விமானம் கண்முன் தோன்றுதல்.
4. உங்-தெங்-ஓம்-சிவய - பஞ்சதரு வந்து பலன் தரும்.
5. கங்-உங்-கிங்-நசி-ஓம் - காமதேனு வந்து பலன் தரும்.
6. சங்-சிவய-நம - தேவர் அரங்கம் கண்முன் தோன்றும்.
7. மங்-சிவ-ஓம்-நம - இச்சா சக்தி முன் தோன்றி அபயம் அளிப்பாள்.
8. ஸ்ரீ-உம்-சிவய - விஷ்ணு அபயமளிப்பார்.
9. சங்-ஸ்ரீ-உம்-அங்-சிவயநம - கயிலைவளநாதர் முன் தோன்றுவார்

சித்தன் அருள்............. தொடரும்!

12 comments:

 1. அனைத்தும் குருவின் துணை கொண்டே நடக்கும்
  ஓம் அகத்திய குருவே சரணம்
  ஓம் அகத்தியர் குருவே துணை
  ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

  ReplyDelete
 2. ஐயா,
  மந்திரங்கள் வாய் விட்டு சொல்வதை விட, மனதிற்குள் சொன்னால் தான் பலன் அதிகம் என்று சொல்கிறார்கள். ஆனால், மனதிற்குள் சொன்னால், அதிர்வு உணர முடியவில்லை. எது உண்மை?
  நோய் தீர்க்கும் மந்திரம் குரு அருளால் பதிவிட முடிந்தால் சிறப்பு

  ReplyDelete
 3. ஐயா,
  மந்திரங்கள் வாய் விட்டு சொல்வதை விட, மனதிற்குள் சொன்னால் தான் பலன் அதிகம் என்று சொல்கிறார்கள். ஆனால், மனதிற்குள் சொன்னால், அதிர்வு உணர முடியவில்லை. எது உண்மை?
  நோய் தீர்க்கும் மந்திரம் குரு அருளால் பதிவிட முடிந்தால் சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். அனைத்து மந்திரங்களும் 100% பலனை மனதுள் ஜெபித்தால் தரும். முணுமுணுப்பது 50% பாலன். வாய்விட்டு சத்தமாக ஜெபித்தால் 25% பாலன் என்று பெரியவர்கள் கூறுவார்கள். நீங்கள் 50%இல் தொடங்கி முன் செல்லும் பொது மனதுள் ஒருவித அமைதியும் அதிர்வுடன் தொடர்ந்து வருவதை கவனியுங்கள். பின்னர் முழுவதும் மனதுள் ஜெபமாக செய்யும் பொழுது, அந்த அமைதி மட்டும் வரும். அங்கு அதிர்வு தேவை இல்லை. அந்த அமைதியே சாட்சியாகும். ஜபம் மனதுள் ஓடும். அதிர்வு என்பது இரண்டாவது நிலையுடன் முடிந்துவிடும்.

   Delete
 4. ஐயா வணக்கம். ஓம் அகத்தியர் பாதம் போற்றி! ஓம் அம்மா பாதம் போற்றி! ஐயா மிகப்பெரிய விஷயத்தை மிக சாதாரணமாக , மிக எளிதாக சொல்லி விட்டீர்கள். இதை புரிந்து உள் வாங்கி கொள்ள முன் பதிவுகளை திரும்ப, திரும்ப படித்து புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. மிக உயர்ந்த பதிவு ஐயா. மூல மந்திரம் எத்தனை நாள் உருவேற்றம் செய்ய வேண்டும் ஐயா. மேலும் கந்தர் சஷ்டி படித்து கொண்டு வருகிறேன் ஐயா. அதற்கும் மூல மந்திரத்தின் பலன் கிடைக்குமா ஐயா. மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. திடமான மனது, பிறவற்றிற்கு வேதனை உருவாக்காத எண்ணம், அவரவர் கர்மா, குருவருள், இறையருள், கிரக நிலைகளை பொறுத்து கால அளவு ஆளுக்கு ஆள் மாறுபடும். அவரவர், தேடி அடைய வேண்டியதுதான். கந்த சஷ்டி கவசம் மிக சிறந்த பாதுகாப்பு கவசத்தை தரும். 

   Delete
 5. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி

  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை

  பெரிய அரிய பொக்கிஷங்கள் தாங்கள் ஐயனின் அருளால் அளிக்கின்றீர்... நன்றிகள் ஐயா

  ReplyDelete
 6. இந்த மந்திரத்தை எத்தனை முறை மனதுக்குள் சொன்னால் சித்தி அடையும் ஐயா!

  M.செந்தில்குமார்,மதுரை.

  ReplyDelete
  Replies
  1. திடமான மனது, பிறவற்றிற்கு வேதனை உருவாக்காத எண்ணம், அவரவர் கர்மா, குருவருள், இறையருள், கிரக நிலைகளை பொறுத்து கால அளவு ஆளுக்கு ஆள் மாறுபடும். அவரவர், தேடி அடைய வேண்டியதுதான்.

   Delete
 7. ஐயா வணக்கம். குருவே துணை! ஐயா பெண்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படிக்க கூடாது என்கிறார்கள். அவற்றின் சுருக்க வடிவம் " ராமே... " சொல்லலாமா ஐயா அல்லது பாடல் கேட்டால் மட்டும் போதுமா ஐயா. மிக்க நன்றி ஐயா. ஜெய் ராம் !

  ReplyDelete
 8. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 9. iyya esanin irumugathirkana manthiram koorivideerkal matra moontru mugangalana thathpurusam, esanam, sathyojatham akiya mugangalukana manthirathaiyum koorinal miga arumaiyaka irukkum iyya koduththu uthavungal iyya

  ReplyDelete